" உங்களைச் சுத்திகரியுங்கள், தூய்மைப்படுத்துங்கள்."
(இசை. 1:16)
** ** ** ** ** ** ** ** ** ** **
கணக்கற்ற உங்கள் பலிகள் நமக்கு எதற்காக என்கிறார் ஆண்டவர்:11
இனி மேல் பயனில்லாக் காணிக்கைகளைக் கொணர வேண்டாம்,13
,உங்கள் அமாவாசை, திருவிழாக் கொண்டாட்டங்களையும் முழு உள்ளத்தோடு நாம் வெறுத்துத் தள்ளுகிறோம் 14
நம்மை நோக்கி நீங்கள் கைகளை உயர்த்தும் போது, உங்களிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக் கொள்கிறோம்.15
இசையாஸ் 1:11 to 15 வசனங்களை முழுவதும் வாசித்துவிட்டு
சிறிது யோசித்துவிட்டு
அப்புறம் 16 to 19 வாசித்தால் ஒரு உண்மை புலனாகும்.
16 உங்களைச் சுத்திகரியுங்கள்,
தூய்மைப்படுத்துங்கள்.
நம் கண் முன்னிருந்து உங்கள் தீச்செயலை அகற்றுங்கள்:
தீமை செய்வதை விட்டு ஓயுங்கள்:
17 நன்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்:
நீதியைத் தேடுங்கள், ஒடுக்கப்பட்டவனுக்கு உதவி செய்யுங்கள்,
திக்கற்ற பிள்ளைக்கு நீதி வழங்குங்கள்,
கைம்பெண்ணுக்காக வழக்கு நடத்துங்கள்.
18 வாருங்கள், இப்பொழுது வழக்காடுவோம் என்கிறார் ஆண்டவர்:
உங்கள் பாவங்கள் செந்தூரம் போல் இருந்தாலும், உரைந்த பனி போல வெண்மையாகும்:
இரத்த நிறமாய் அவை சிவந்திருந்தாலும், பஞ்சைப் போல் அவை வெண்மையாகும்.
19 மனமுவந்து நீங்கள் நமக்குக் கீழ்ப்படிந்தால்,
நாட்டில் விளையும் நற் கனிகளை உண்பீர்கள்.
தூய்மை இல்லாத உள்ளத்தோடு நாம் என்ன செய்தாலும் அது ஆண்டவருக்குப் பிடித்தமாக இருப்பது இல்லை.
ஒரு தட்டில் அசிங்கத்தை (சாணியை) ராவி விட்டு அதன்மேல் உணவை வைத்தால் நம்மால் உண்ண முடியுமா?
அசிங்கமான வார்த்தைகளால் நம்மை அழைத்து, நமக்கு விலை உயர்ந்த ஒரு பரிசுப் பொருளைத் தந்தால் நம்மால் ஏற்று கொள்ள முடியுமா?
சாக்கடையோடு Apple juice கலந்து தந்தால் நம்மால் குடிக்க முடியுமா?
கழிவுப் பொருட்கள் மீது அழகான பாயை விரித்தால் அதன் மேல் நம்மால் படுக்க முடியுமா?
சாதாரண மனிதர்களாகிய
நம்மாலேயே செய்ய முடியாத காரியங்களை
பரிசுத்தராகிய 'கடவுளிடமிருந்து எப்படி எதிர்பார்க்கலாம்?
பலிகளையோ, காணிக்கைகளையோ, கொண்டாட்டங்களையோ, எதிர்பார்த்து கடவுள் நம்மைப் படைக்கவில்லை.
தன்னிலே நிறைவான கடவுளுக்கு எந்தப் பொருளும் கிடைத்து ஆகப்போவது ஒன்றுமில்லை.
கோடிக்கணக்கான ரூபாய் Bank Balance உள்ள ஒருவனுக்கு 10 பைசா பரிசாகக் கொடுத்தால் அது அவனை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துமா?
கடவுள் தனது அன்பின் மிகுதியால் நம்மைப் படைத்தது
நம்மிடமிருந்து வெறுமனே காணிக்கைப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காகவா?
கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்கள் அடங்கிய மாபெரும் பிரபஞ்சத்தையே படைத்தவர் அவர்.
அவர் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது அவர் படைத்த பொருள்களை அல்ல.
நம்முடைய மாசற்ற அன்பையும்
மாசற்ற உள்ளத்தையுமே அவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.
நமது இதயம் அவர் வாழும் கோவில்.
அக்கோவிலை நாம் பரிசுத்தமாக வைத்து கொண்டாலே போதுமானது.
பரிசுத்தமான இருதயத்தைத் தான் இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறார்.
இருதயத்தை அசுத்தமாக வைத்துக்கொண்டு
அவருக்கு எந்த பலியைக் கொடுத்தாலும்,
எந்தத் காணிக்கையைக் கொடுத்தாலும் அது அவருக்கு ஏற்புடையது அல்ல.
நம்முடைய இருதயம் அவரிடமிருந்து வெகுதூரத்தில் இருந்தால்
நாம் இவ்வுலகில் வாழ்வதிலேயே அர்த்தம் இல்லை.
ஆகவே
முதலில் நமது உள்ளத்தை சுத்திகரித்து,
தூயமைப்படுத்துவோம்.
நமது பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்போம்.
பாவம அற்ற நமது உரைந்த பனி போல வெண்மையாக இருக்கும்.
தீச்செயல் செய்வதை நிறுத்துவோம்.
. நன்மை செய்யக் கற்றுக் கொள்வோம்.
நீதியைத் தேடுவோம். .
ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வோம்.
திக்கற்ற பிள்ளைக்கு நீதி வழங்குவோம்.
மனமுவந்து இறைவனது கட்டளைக்கு கீழ்ப்படிவோம்.
சுருக்கமாக சொல்வதானால் தூய்மையான உள்ளத்தோடு இறைவனுக்குக் கீழ்படிந்து,
அவருக்கு சேவை செய்வதையே நமது வாழ்வாக கொள்வோம்.
இறைப் பணியும், பிறர் பணியும் பிரிக்க முடியாதவை என்பதை உணர்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment