Tuesday, March 31, 2020

"நானும்தீர்ப்பிடேன்." (அரு8:11)

"நானும்தீர்ப்பிடேன்." 
(அரு8:11)
*  **  **  **   ** ** **   ** **
"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே." (அரு. 3:17)


மனுக்குலம் செய்த பாவத்திற்கு ஏற்ப அதற்கு இறைவன் தீர்ப்பு அளித்திருக்க வேண்டுமென்றால் 

நமது முதல் பெற்றோர் பாவம் செய்த உடனேயே அளித்திருக்க வேண்டும்.

 ஆனால் அன்பின் தேவன் தனது நீதியை தீர்ப்பிட அல்ல,

  மனுக்குலத்தை இரட்சிக்கவே பயன்படுத்தினார்.

அதற்காகத்தான் கடவுள் தன்  ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.

இயேசு மனுவுரு எடுத்தது மனிதன் செய்த பாவத்திற்காக அவனுக்கு தீர்ப்பு அளிக்கவோ 

அவனைத் தண்டிப்பதற்காகவோ அல்ல, 

மாறாக, மனிதன் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக தன்னையே பலியிட்டு அவனை ரட்சிப்பதற்காகவே.

 விபச்சாரத்தில் பிடிபட்டு பரிசேயர்கள் அவரிடம் அழைத்து வந்த பெண்ணை நோக்கி இயேசு,

"நானும் தீர்ப்பிடேன். இனிமேல் பாவஞ்செய்யாதே, போ" 

என்றார்.

இயேசு அவருடைய பாவங்களை மன்னித்து  விட்டார்.

அவர் தண்டனையின் தேவன் அல்ல, மன்னிப்பின் தேவன்.

அவரது மன்னிப்பின் காரணமாகத்தான் மனுக்குலம் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கிறது.

கடவுள் மனுக்குலத்திற்கு அனுப்புகின்ற துன்பங்கள் அவனை தண்டிப்பதற்காக அல்ல,

 மாறாக அவனை தீய வழியில் இருந்து நல்வழியை நோக்கி திருப்புவதற்காக.

இன்றும் கூட வைரஸ் மூலமாக மனுக்குலம் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள்

 தாங்கள்  பாவங்களை நினைத்து வருந்தி இறைவனை நோக்கி திரும்புவதற்காகத்தான்.

 ஆனால் மனிதர்கள் இறைவனை நினைப்பதே 
வைரசிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கானேயன்றி

 மனம் திரும்புவதற்காக அல்ல.

நாம் கூட உலகில் வாழ வேண்டும் என்பதற்காக  தேவ திரவிய அனுமானங்களைப் பெறுவதில் இருந்துகூட நம்மை நாமே தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம்!

நமக்கு மீட்பைக் கொண்டு வந்தது இறைமகன் இயேசுவின் சிலுவைப் பலி.
(Jesus' sacrifice on the cross.)

 இன்று  நமது ஆன்மீக வாழ்விற்கு உயிர் கொடுத்து விண்ணகப் பாதையில் நம்மை

 நடத்திக் கொண்டு வருவது தினமும் நிறைவேற்றப்படும்
திருப்பலி (Holy Mass.)


  நமது ஆன்மாவிற்கு உணவாக வருவது 

இயேசு தன்னையே உணவாக அளிக்கும் தற்கருணை விருந்து.

நாம் இவ்வுலகில் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காகத்தானே

 இயேசுவின் திருப் பலியையும்  இயேசுவின் திருவிருந்தையும் தியாகம் செய்து கொண்டிருக்கிறோம்!

குருவோடு இணைந்து ஒப்புக் கொடுக்கவேண்டிய திருப்பலியை 

வேறு வழி இல்லாமல் live Streamல் வீடியோ காட்சியைப் பார்ப்பதுபோல் பார்க்கிறோம்!

அறுசுவை உணவைப் படத்தில் பார்த்து ரசித்தால் வயிறு நிறையுமா?

மருந்துச் சீட்டை பார்த்துக்கொண்டிருந்தால் வியாதி குணமாகுமா?

இயேசுவுக்காக இவ்வுலக வாழ்வை தியாகம் செய்ய வேண்டிய நிலைமாறி

 இவ்வுலக வாழ்வுக்காக இயேசுவையே தியாகம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்!

 "இந்த பரிதாப நிலையை யாரிடம்  சொல்லி அழ, இயேசுவே உம்மைத் தவிர?

இயேசுவே, தாவீதின் குமாரனே, உமது பிள்ளைகளாகிய எங்கள்மீது இரக்கம் வையும்.

குரோனா ஒழிந்து இயல்புநிலை திரும்பினால் தான் 

கோவில்களை திறப்பார்கள்.

 திருப்பலி காண அனுமதிப்பார்கள்.

 உம்மை உணவாகத் தருவார்கள்.

எங்களுக்காக என்று சொல்ல மாட்டேன், நமக்காக என்றுதான் சொல்லுவேன்.

 ஏனெனில் நாம் இணைவதைத்தான்

 இந்த வைரஸ் தடுக்கிறது,

 ஆகவே இயேசுவே, ஆண்டவரே, நாம் இணைய வேண்டும் என்றால் வைரஸ் ஒழியவேண்டும்.

 வைரஸ் ஒழிய வேண்டுமென்றால், நீர் மனம் வைக்க வேண்டும்.

 ஏனெனில் உமது அனுமதியின்றி எதுவும் உலகில்  நுழைய முடியாது.

ஆகவே சர்வவல்லவ தேவனே, 

தீர்ப்பு அளிக்க அன்று எங்களை. மீட்கவே மனிதனாகப் பிறந்த இறைமகனே,

கொரோனா விஷயத்தில் 
உமது அனுமதியை வாபஸ் பெற்றுக்கொண்டு 

வைரஸை நிரந்தரமாக அழித்தருளும்.

பாவம் செய்ய மாட்டோம் இன்று உனக்கு உறுதி அளிக்கிறோம்."

லூர்து செல்வம்.

Monday, March 30, 2020

அன்னையே வருக!

அன்னையே வருக!
*  **  **  **   ** ** **   ** **
இறைவன் நமக்கு கொடுத்த கட்டளைகள் இரண்டு.

இறைவனை நேசிக்க வேண்டும்.

நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும்  நேசிக்க வேண்டும்.

முதல் கட்டளை எவ்வளவு முக்கியமானதோ அதே போல  இரண்டாவது  கட்டளையும் முக்கியமானது.

இரண்டு கட்டளைகளையும் 
நாம் அனுசரிக்க வேண்டும்.

ஒன்றை விட்டு விட்டு   மற்றொன்றை அனுசரிக்க முடியாது.

இறைவனை நேசிக்காதவன் அயலானை நேசிக்க முடியாது.

அதேபோல அயலானை தேசிக்காதவனால்  இறைவனை நேசிக்க முடியாது.

நாம் நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

கட்டளைகளை வெறுமனே கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டால் மட்டும் 
போதாது.

செயல் அளவிலும், அதாவது, வாழ்க்கையிலும் இதை கடைபிடிக்க வேண்டும்.

 இவற்றை நமது வாழ்வாக மாற்ற வேண்டும்.

 இறை அன்பும் பிறர் அன்பும் இணைந்த அன்பு ஒன்றே நமது வாழ்வாக இருக்க வேண்டும்.

இதயத்தில் ஊற்றெடுக்கும் அன்பு சொல்லிலும் செயலிலும் பொங்கி வடிய வேண்டும்.

இறைமகன் இயேசு நமக்கு கற்பித்த ஜெபத்தில்,

"விண்ணகத்தில் உள்ள எங்கள் தந்தையே"

 என்று ஆரம்பித்து,

தனிப்பட்ட நபருக்காக மட்டுமல்ல மனுக்குலம் அனைத்திற்குமாக செபிக்க கற்றுக் கொடுத்தார்.

எங்கள் என்ற வார்த்தையில் மனுக்குலம் அனைத்தும் அடங்கும்.

அதேபோல நாம் செபிக்கும் மங்கள வார்த்தை செபத்திலும் 

"பாவிகளாக இருக்கிற எங்களுக்காக எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்," என்று செபிக்கிறோம்.

இங்கும் 'எங்களுக்காக'என்ற
 வார்த்தையில் நாம் மனுக்குலம் அனைத்திற்கும் ஆக தான் செபிக்கிறோம்.

செபிக்கிறோம், ஆனால் உணர்ந்து ஜெபிக்கிறோமா என்பதுதான் கேள்வி.

நெருக்கடியான சூழ்நிலைகளில், '

 உதாரணத்திற்கு

 இன்றைய வைரஸ் சூழ்நிலையில் 

நாம் நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் 

நம்மை விட நமது அயலானுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

 தனித்து இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவது எதற்காக?

நாம் தப்பித்துக் கொள்வதற்காக மட்டுமா?

நம் மூலமாக மற்றவர்களுக்கு வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காகவும்தான்.

இங்குதான் நம்மைப் போல பிறரையும் நேசிக்கிறோம்.

 அதாவது நாம் தப்பித்து கொள்வதோடு நமது அயலானும் தப்பிக்க உதவுகிறோம்.

ஆனாலும் இதைவிட மேலான அன்பு ஒன்று இருக்கிறது.

அது தன்னையே தியாகம் செய்து மற்றவர்களைக் காப்பாற்றக்கூடிய அன்பு.

அத்தகைய அன்புக்கு உதாரணமாக நம்மிடையே  வாழ்ந்த  புனித அன்னைத் தெரசா

 இப்போது இருந்தால் இன்றைய சூழ்நிலையில் எப்படி செயல் படுவார்கள் என்று நினைத்துப்பார்க்கிறேன்.

மற்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்துவதைத் தடுக்க மாட்டார்கள்.

ஆனால் அவர்கள் நிச்சயமாக தங்களைத் தாங்களே  தனிமை படுத்தி கொண்டு இருக்கமாட்டார்கள்.

களத்தில் இறங்கியிருப்பார்கள்.

நோயாளிகளைத் தேடிச்சென்று அவர்கள் குணமடைய   வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்திருப்பார்கள்.

இன்று மருத்துவர்களும் அதைத்தானே  செய்கிறார்கள் என்று சொல்லலாம்.

 ஆனால் கடமைக்காக செய்வது வேறு,

 அன்பினால் உந்தப்பட்டு செய்வது வேறு.

பிள்ளைகளைத் தாய்  கவனிப்பதற்கும்

 ஆயா கவனிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?

 இதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூறுவதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது.

 அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.

 அன்னைத் தெரசா அவர்கள் வாழ்நாளில் மற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தது வெறும் மருத்துவ உதவி மட்டுமல்ல,

 ஆன்மீக உதவி.

 அன்பின் வழி நின்று தன்வசம்  இருக்கிறவர்களை இறைவன்பால் திருப்பும் ஆன்மீக உதவி.

 அவர்கள் வெறும் உலக சம்பந்தப்பட்ட உதவிகள் மட்டும் செய்திருந்தால்

 இன்று அவர்கள் புனிதை நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்க  மாட்டார்கள்.

 அவர்கள் இயேசுவாக வாழ்ந்தார்கள்.

 இயேசுவின் அன்பைப் பொழிந்தார்கள்.

இன்றும் இயேசுவாக,

 இயேசுவின் பிரதிநிதிகளாக  நம்மிடையே வாழ்ந்து,

 நமது ஆன்மிக நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள, நமது ஞான தந்தையர்களிடமிருந்து

 இத்தகைய நேரடியான அன்புப் பொழிவை இந்த கஷ்ட காலத்தில் எதிர்பார்க்கிறோம்,

 அவர்களுடைய ஞான மக்கள் என்ற முறையில். 

வாழைப்பழத்தின் படத்தைக் காண்பித்தால் அதைச் சாப்பிட முடியுமா?

Vidio call மூலம் பேசிப் பழகிவிட்டோம் என்பதற்காக இறைமகன் இயேசுவை வெறும் வீடியோவில் காண்பித்தால்  நிறைவு ஏற்படுமா?

நேரடியாக திவ்ய பலியில் கலந்து கொள்ளவும்,

 உண்மையாகவே திருவிருந்தில் கலந்து கொண்டு

 இயேசுவை ஆன்மீக உணவாக உட்கொள்ளவும் ஏதாவது ஏற்பாடு செய்ய மாட்டீர்களா? 

வெறும் படத்தைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.

அன்னை தெரசா இப்போது எங்களோடு இருந்தால் இந்த ஏக்கத்தைத் தீர்க்க ஏதாவது வழி காண்பித்து இருப்பார்.

வழியில்  ஆபத்துக்களிடம் இருந்து தப்பிப்பது முக்கியம்தான்,

 அதைவிட முக்கியம் வீட்டை அடைவது. 

"இயேசுவே,

எங்கள் இரட்சகரே

 எங்கள் உணவாக எங்கள் நாவில் 

நேரடியாக வருவதற்காகவாவது 

 கொரோனாவை ஒழித்துக் கட்டுங்களேன், Please!"

லூர்து செல்வம்.

 

Thursday, March 26, 2020

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.
**  **  **  **   ** ** **   ** ** "தன் மகன் அப்பம் கேட்டால் ஒருவன் கல்லைக் கொடுப்பானா?"


'அல்லது அவன் மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பானா?"

"வானகத்திலுள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நன்மை செய்வார்!"
(மத். 7:9,10,11)

இவை இறைமகன் இயேசுவின் வல்லமை நிறைந்த வார்த்தைகள்.

இயேசு இவ்வாறு கூறுவது போல் இந்த வசனங்கள் அமைந்துள்ளன.

" மக்களே ஒன்றுமில்லாமையில் இருந்து உங்களைப் படைத்து 

எனது பண்புகளை உங்களோடு  பகிர்ந்து கொண்டதின் மூலம் உங்களுக்கு என் சாயலைக் கொடுத்தேன்.

 எனது சாயலை பெற்ற உங்களுக்கே உங்கள் பிள்ளைகள் மீது அன்பு இருக்கும் என்றால்

 உங்களை ஒன்றுமில்லாமையில் இருந்து படைத்த எனக்கு உங்கள் மேல் எவ்வளவு அன்பு இருக்கும்!

அன்பே உருவான நான் 
 அன்பின் காரணமாகத் தானே  உங்களை படைத்தேன்.

 நானே படைத்த உங்களை நானே கைவிடுவேனா?

 மக்களே, என் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள்.

 நான் உங்களுக்கு எது செய்தாலும் அது என்னுடைய அன்பின் விளைவாகவும்,

 உங்களுடைய நன்மைக்காகவும் மட்டும்தான் இருக்கும்
என்பதை உணர்ந்து

 என்ன நேர்ந்தாலும் நன்றி உணர்வோடு இருங்கள்."

சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு இன்று உலகில் வாழும்  கோடிக் கணக்கான மக்களுள் ஒருவர் கூட இருந்ததில்லை.

இன்னும் 120 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வாழும் மக்களுள் ஒருவர்கூட உலகில் இருக்கப் போவதுமில்லை.

ஆனால் உலகம் என்றும் மக்களால் நிறைந்து தான் இருக்கும்.

உலகிற்குள் வருவதும் உலகை விட்டு போவதும் இறைவனுடைய திட்டத்தின்படி தான் நடக்கும்.

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நம்மைப் பராமரித்து வருபவர் நம்மைப் படைத்த இறைவன்தான்.

இறைவனது பராமரிப்பில் நமக்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும்

 அவரது திட்டப்படியும், அனுமதியின் படியும் தான் நடக்கும்.

 அவனின்றி அணுவும் அசையாது என்பது மறுக்க முடியாத உண்மை.

 அப்படியானால் இறைவனுடைய சித்தமின்றி நம்முடைய ஒரு அணுவும் அசையாது.

 ஆகவே நமக்கு என்ன நேர்ந்தாலும் அது நமது எதிர்கால நன்மைக்காகத்தான் என்பதை உணர்ந்தோம் என்றால் 

நாம் அடிபடும் போது கூட அவருக்கு நன்றி கூறுவோம்,

 ஒரு ரோஜா செடியை தோட்டக்காரர் கத்தரித்து விடுவதே 

அச்செடி நன்கு தளிர்த்து நிறைய பூத்துக் குலுங்க வேண்டும் என்பதற்காகத்தான்.

 கத்தரித்து விடும்போது மலர்ச்செடி  மனம் வருந்துவதில் அர்த்தமில்லை.

 அது பூக்கப் போகும்  மணம் நிறைந்த மலர்களை நினைத்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்.

 அவ்வாறேதான் நமது எதிர்கால நன்மைக்காக நம் வாழ்வில் இறைவன் என்ன செய்தாலும்,

 எதிர்கால நன்மையை மனதில் கொண்டு,

 நாம் ஒவ்வொரு வினாடியும் நம்மை படைத்த தேவனுக்கு நன்றி கூறிக்கொண்டே இருக்க வேண்டும்.

கொரோனா வைரசும் கடந்துபோகும்.

இரவுக்குப் பின் பகல் வருவது உறுதி.

வரவிருக்கும் ஒளிமயமான பகலை எண்ணி மகிழ்வோடு வாழ்வோம்.



 "நன்றி நன்றி 
இயேசுவே. 

நன்றி நன்றி என்றும் உமக்கே.

கஷ்டங்கள் இன்று 
வந்தாலும்

கடந்து போகும்
உம்மருளால்.

எதிர்கால வாழ்வை
எண்ணியே 

இன்று மகிழ
வரம் தாரும்.

நன்றி உணர்வு 
என்றுமே

 எங்களோடு வாழ்ந்திட
 வரத்தைத் தாரும்,

 இயேசுவே."

லூர்து செல்வம்.



Saturday, March 21, 2020

எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்?

எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்?
**  **  **  **   ** ** **   ** ** ** **
நண்பர் ஒருவர் பைக் வாங்குவதற்காக வங்கியில் கடன் பெற்றிருந்தார்.

வாங்கிய கடனை தவணை முறையில் அடைக்க வேண்டியது அவருடைய கடமை.

முதல் மாத தவணை பணத்தை வங்கியில் கட்டி விட்டார்.

அடுத்த ஆறு மாதங்கள் அவர் தவணை முறையில் பணத்தை கட்டவில்லை.

ஏதாவது மாதத்தில் அவரது வீட்டில் உள்ள தபால் பெட்டியில் வங்கியிலிருந்து வந்த ஒரு தபால்  கிடந்தது.

அதை எடுத்து வாசித்து  விட்டு குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்.

அடுத்த மாதம் மற்றொரு தபால்

 தபால் பெட்டியில் கிடந்தது.

தபாலை பார்த்தவுடன் அவருக்கு எரிச்சல் வந்தது.

வங்கியில் இருந்து தபால் வருவதை அவர் விரும்பவில்லை.

வீட்டிலுள்ள தபால் பெட்டியில் தானே தபால்காரர்  தபாலைப் போடுகிறார்.

தபால் பெட்டியை அப்புறப்படுத்தி விட்டால் அவர் எப்படித் தபாலைப் போடுவார்?

பெட்டியை அப்புறப்படுத்தி விட்டார்.

மறு மாதம் பெட்டி கட்டப்பட்டிருந்த gate ல் தபால் சொருகி வைக்கப்பட்டிருந்தது. 

உடனே அவர் gate ஐ அப்புறப்படுத்தி விட்டார்.

மறு மாதம் தபால் அவரது வீட்டு கதவில்  சொருகி வைக்கப்பட்டிருந்தது.

நண்பருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

கதவை அப்புறப்படுத்தினால் வீட்டுக்கு பாதுகாப்பு இல்லை.

மனைவியிடம் ஆலோசனை கேட்டார்.

அவள் மகா புத்திசாலி.

"தபால்காரர் தானே தபாலை கொண்டு வருகிறார்?

நேராக அவரிடமே சொல்லிவிடுங்கள்,

" எனக்கு தபால் வந்தால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்"
என்று.

அம்பை எய்தது வங்கி.
அம்பை நொந்து என்ன பயன்?

இந்த புத்திசாலிகளை நினைத்தால் சிரிப்பு வருகிறது அல்லவா?

 நாமும் நம்மை நமது வீட்டுக் கண்ணாடியில் பார்த்து சிரித்துக் கொள்ள வேண்டியதுதான்!

கடவுள் விஷயத்திலும் நாம் அனேக சமயங்களில் இப்படித்தான் நடந்து கொள்கிறோம்.

நாம்  தவறு செய்யும்போது நம்மைத் திருத்துவதற்காக கடவுள் நமது மனசாட்சி மூலம் பேசுகிறார்.

நாம்  அதை கண்டுகொள்வது இல்லை.

கடவுள் நம்மை சிந்திக்க தூண்டுவதற்காக சில துன்பங்களை அனுப்புகிறார்.

துன்பங்கள் வரும்போது அவற்றிற்கான காரணங்களை கிறிஸ்தவர்களாகிய நாம் நமது விசுவாசக்கண்களோடு நோக்க வேண்டும்.

இறைவனுடைய சித்தம் இல்லாமலும் அனுமதி இல்லாமலும் நம்மை எதுவும் அணுகாது.

இறைவன் ஏன் நமக்கு துன்பத்தை வர விடுகிறார்? 

விசுவாச அடிப்படையில் மூன்று காரணங்கள்.

1.பாவப் பரிகாரமாக.
2. நாம் பாவ வாழ்க்கையிலிருந்து மீண்டு வர.
3. சிலுவையை சுமந்து இயேசுவின் சீடர்களாக வாழ.

"ஞானம் நிறைந்தவன் இவற்றைக் கண்டு பிடிக்கட்டும், 

புத்தியுள்ளவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்:

 ஏனெனில் ஆண்டவரின் வழிகள் நேர்மையானவை,

 நேர்மையானவர்கள் அவற்றில் நடக்கிறார்கள்:

 மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகிறார்கள்." 
(ஓசே. 14:10)

.ஆழ்ந்து தியானித்து நமது ஆன்மீக நிலையை அறிய வேண்டும்.

நமது ஆன்மா கடவுளை விட்டு எதிர்திசையில் போய்க்கொண்டு இருப்பதை கண்டுபிடித்தால் அதை திருத்தி இறைவன்பால் திருப்ப வேண்டும்.

ஓசே இறைவாக்குனர் கூறுகிறார்.

''தங்கள் துன்பத்திலே அவர்கள் நம்மைத் தேடுவார்கள். வாருங்கள் ஆண்டவரிடம் திரும்புவோம்:

2 ஏனெனில், நம்மைக் காயப்படுத்தியவர் அவரே,

 அவரே நம்மைக் குணமாக்குவார்:

 நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, 

அவரே நம் காயங்களைக் கட்டுவார்.

3 இரண்டு நாளைக்குப் பிறகு நமக்கு அவர் புத்துயிரூட்டுவார், 

மூன்றாம் நாள் அவர் நம்மை எழுப்பி விடுவார்: 

அதன் பின் அவர் முன்னிலையில் நாம் வாழ்ந்திடுவோம்.

 ஆண்டவரைப் பற்றி அறிந்திடுவோம், அவரைப் பற்றி அறிய
 முனைந்திடுவோம்:

 அவருடைய வருகை விடி வெள்ளிப் போலத் திண்ணமானது, மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்" என்றார்கள்.


6 ஏனெனில், நாம் விரும்புவது பலியை அன்று, அன்பையே நாம் விரும்புகிறோம்: தகனப் பலிகள் நமக்கு வேண்டியதில்லை, கடவுளை அறியும் அறிவே நாம் விரும்புகிறோம்.
(ஓசே .6:1-3, 6)

ஆண்டவரை நோக்கி,

"கடவுளே, பாவி என்மேல் இரக்கமாயிரும்"
(லூக். 18:13)

என்று மனறாடி செவிப்போம்.

துன்பத்திலிருந்து விடுபட  ஆசிப்பதில் தவறு இல்லை.

அதற்கான முயற்சிகள் செய்வதிலும் தவறு இல்லை. 

முதலில் இறைவனை மன்றாடி நமது பாவங்களுக்கு மன்னிப்பு  பெறுவோம்.

அடுத்து துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்க இறைவனை வேண்டுவோம்.

இறைவனுடைய உதவியின்றி நம்முடைய எந்த முயற்சியும் வெற்றி பெறாது.

அம்பை  எய்திருப்பவர் இறைவன்.

அவரையே சரணடைவோம்.

''அவனன்றி அணுவும் அசையாது."

இறைவன் அருள் கிடைத்தால் மலை போல் வரும் துன்பம் புகை போல் மறைந்துவிடும்.

இறைவனின் அருளைத் தேடுவோம்.

பாவத்திலிருந்தும், துன்பத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும்.

"இயேசுவே எங்கள் மேல் இரக்கமாய் இரும்."

லூர்து செல்வம்.




Friday, March 20, 2020

"உன் அக்கிரமத்தினாலேயே நீ வீழ்ச்சியுற்றாய்,"(ஓசே. 14:2)

"உன் அக்கிரமத்தினாலேயே நீ வீழ்ச்சியுற்றாய்,"
(ஓசே. 14:2)
**  **  **  **   ** ** **   ** ** ** **
ஆண்டவர் கூறுகிறார்,

"இஸ்ராயேலே, உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா, 

ஏனெனில் உன் அக்கிரமத்தினாலேயே நீ வீழ்ச்சியுற்றாய்,"


திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றிருந்தோம்.

என் பேரன் என்னிடம் வந்து,

"தாத்தா, ஒரு பத்து ரூபாய் கொடுங்கள்." 

என்றான்.

நான் எதற்கு என்று கேட்கவில்லை.

கொடுத்துவிட்டேன்.

பொதுவாக அப்பாவிடம் சென்று ஏதாவது கேட்டால் காரணம் கேட்பார்.

தாத்தா காரணம் எல்லாம் கேட்க மாட்டார்.

'தா' என்று இருமுறை கேட்கும்போது எப்படி கொடாமல் இருப்பார்?

நானும் தாத்தா தானே.


கேட்டவுடன் கொடுத்துவிட்டேன்.

அன்று இரவு பேரனுக்கு 
wheezing பிரச்சினை.

மறு நாள் டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போனோம். 

அவர் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு,

"Ice cream சாப்பிட்டாயா?"

"நேற்று மதியம் தாத்தா வாங்கித் தந்தார்கள். சாப்பிட்டேன்."

"ஏன் சார் பையனுக்கு சாப்பிடக் கூடாததை வாங்கிக் கொடுத்தீங்க?"

நான் பதில் எதுவும் கூறவில்லை.


வெளியே வந்த பின்,

"ஏண்டா, நானா உனக்கு Ice cream வாங்கித் தந்தேன்?"

"நீங்க தந்த 10 ரூபாய்க்குத் தானே Ice cream வாங்கினேன்.

நீங்க தந்திருக்காவிட்டால் வாங்கியிருக்க மாட்டேன்."

எல்லோருடைய குடும்பங்களிலும் இதே மாதிரியான நிகழ்வுகளுக்குப் பஞ்சமே இருக்காது.


School fees கட்ட தகப்பனார் பணம் கொடுத்திருப்பார்.

பையன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போய்விடுவான்.

தகப்பனாரை குறை சொல்ல முடியுமா?

நமது விண்ணகத் தந்தை நம்மை படைக்கும் முன்பே

 இந்த பிரபஞ்சத்தையும்

 நாம் வாழும் உலகத்தையும்

 அதில் உள்ள தாவரங்கள், ஊர்வன, நடப்பன, பறப்பன போன்ற பிராணிகளையும்

 நமது உபயோகத்திற்கு என்று படைத்தார். 

நாம் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி

 விண்ணகம் செல்ல வேண்டும் என்பது அவரது திட்டம்.

ஒரு அடிப்படை உண்மையை மனதில் நன்கு புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நன்கு என்று சொன்னால் சரியாக என்று பொருள்.

சிலர் தவறாகப் புரிந்து கொண்டதை சரியாகப் புரிந்து கொண்டதாக நம்பிக் கொள்வார்கள்.

ஒரு முறை ஒரு ஆசிரியர் வகுப்பிற்கு ஒரு பாட்டிலில் சாராயம் கொண்டு வந்தார்.

ஒரு சிறிய தட்டில் ஒரு  சிறு 
புழுவையும் கொண்டுவந்தார்.

மாணவர்களை நோக்கி 

"நான் செய்வதைக் கவனியுங்கள்"

 என்றார்.

புழுவை  எடுத்து சாராயத்திற்குள் போட்டார்.

மாணவர்கள் முன்னிலையில் அந்த புழு துடிதுடித்து செத்தது.


"இந்த பரிசோதனையில் இருந்து என்ன புரிந்து கொள்கிறீர்கள்?"

ஒரு பையனை எழுப்பி விட்டார்.

"சாராயத்திற்கு புழுக்களை கொல்லும் சக்தி இருக்கிறது."

அடுத்த பையனை எழுப்பி விட்டார்.

"சாராயம் குடிப்பது  உடம்பிற்கு நல்லது. 

ஏனெனில், அது உடலில் உள்ள வேண்டாத புழுக்களைக் கொன்றுவிடும்."

இந்த மாணவன் புரிந்துகொண்ட லட்சணத்தை பார்த்தீர்களா?

ஒருநாள் வீட்டுப்பாடம் கொடுத்து விட்டு ஆசிரியர் சொன்னார்,

"வீட்டுப்பாடம் படிக்காமல் வகுப்பிற்கு வரக்கூடாது."

மறுநாள் காலையில் ஒரு மாணவன் அவனுடைய அப்பாவிடம் கூறினான்,

"அப்பா நான் இன்று பள்ளிக்கூடம் போகவில்லை."

"ஏன்?"

"ஆசிரியர் அனுமதி. கொடுத்திருக்கிறார்."

"என்ன உளறுகிறாய்?"

"உளறவில்லை. உண்மையைத்தான் கூறுகிறேன். சந்தேகம் இருந்தால்  ஆசிரியரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்."

அன்றே தகப்பனார் பள்ளிக்கூடத்திற்குச் சென்று ஆசிரியரிடம் விளக்கம் கேட்டார். 

"நான் அனுமதி எதுவும் கொடுக்க வில்லை.

 வீட்டுப் பாடம் படிக்காதவர்கள் பள்ளிக்கூடம் வரவேண்டாம் என்று மட்டும் சொன்னேன்.

 புத்திசாலியான உங்கள் மகன் அதை அனுமதியாக எடுத்துக் கொண்டு வீட்டுப்பாடம் படியாமல் இருந்திருக்கலாம்."

இப்படிப்பட்ட புத்திசாலிகள் நம்மிடம் நிறைய இருக்கிறார்கள்.

நாம் தெரிந்துகொள்ளவேண்டிய அடிப்படை உண்மை:

"கடவுள் தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கினார். அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன."

இது வேத வாக்கு.

உலகில் உள்ள எல்லா பொருட்களும்

 உயிறற்றவையும், உயிருள்ளவையும் இறைவனாலேயே  படைக்கப்பட்டன.

 படைக்கப்பட்டவை எல்லாம்,

மிகச்சிறிய ஒரு செல்  நுண்ணுயிரிலிருந்து யானை போன்ற பெரிய மிருகங்கள் வரை,

 நமது பயன்பாட்டிற்காகவே படைக்கப்பட்டன.

நமக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.

அப்படியானால் குரானோ வைரஸ்?

"எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன."

 என்ற வேத வாக்கில் அவையும் அடங்கும்.

ஒரு ஒப்புமை:

சமையலுக்கு வேண்டிய எல்லா பொருட்களையும் மனைவி கொடுத்த லிஸ்ட் படி கணவன் வாங்கி வந்து விட்டான்.

அவற்றைப் பயன்படுத்தி  மனைவி சமையல் செய்தாள்.

சமையல் ருசியாக இருந்தாலும்

 ருசியாக இல்லாவிட்டாலும்

 முழு பொறுப்பு ஏற்க வேண்டியது மனைவி மட்டுமே, கணவன் அல்ல.

கடவுள் படைத்த  நல்ல பொருள்களைத் தன் விருப்பப்படி பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் பொருள்களை நாம் உண்டாக்கினால் அதற்கு முழுப் பொறுப்பு நாமே, கடவுள் அல்ல.

உதாரணம்: 

கடவுள் படைத்த அணு..

நாம் தயாரித்த அணுக்குண்டு.

இன்றைய நமது  துன்பங்களுக்குக் காரணம் நம்மால் உண்டாக்கப்பட்ட பொருள்கள்தான்.

நமக்கே தெரியும் நமது செயற்கை உணவுகளால் நாம் படும் அவதிகள் பற்றி.


மற்றொரு ஒப்புமை:

நான் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர்.

பணிக்காலத்தில்
வகுப்பிற்குள் நுழையும் போதெல்லாம் ஒரு கையில் புத்தகம் இருக்கும் 

மற்றொரு  கையில் பிரம்பு இருக்கும்.

 புத்தகம் மாணவர்களுக்கு பாடம் நடத்த,

 பிரம்பு  மாணவர்களை படிக்க வைக்க.

எனக்குத் தெரியும்,

 மாணவர்கள் பிரம்பை விரும்ப மாட்டார்கள் என்றும்,

 அதற்குப் பயப்படுவார்கள் என்றும்.


 ஆனாலும் மாணவர்களது நன்மைக்காகவே பிரம்பைப் படுத்தினேன்.

மாணவன் வகுப்பில் வேறு வழி இல்லாமல் ஆசிரியர் சொல்வதைக் கேட்கிறான்.

அவர் கையில் இருக்கும் பிரம்புக்குப் பயந்து ஆசிரியர் சொல்வதை படிக்கிறான்.

 இது நடைமுறை உண்மை.

ஆசிரியர் மாணவனைத் திருத்த பிரம்பைப் பயன்படுத்துவது போல 

இறைவனும் நம்மை  திருத்த அவரால் படைக்கப்பட்ட சில பொருள்களைப் பயன்படுத்துகிறார்.

நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, சுனாமி போன்ற 

இயற்கை நிகழ்வுகள் மனிதனை திருத்துவதற்காக இறைவன் பயன்படுத்தபடுபவை.

மனிதனுக்கு வரும் நோய் நொடிகளும்,

பிற துன்பங்களும் கூட

 நாம் திருந்துவதற்காகவே இறைவனால் அனுமதிக்கப்படுகின்றன.

இப்போது அந்த லிஸ்டில் கொரோனா வைரசும்
சேர்ந்துகொண்டது.

இது ஒரு நுண்ணியிர்.

இறைவனால் படைக்கப்பட்ட ஒரு நல்லுயிர்.

இதை மறுப்பவர்கள் 

இறைவனையே மறுக்கிறார்கள்.

இறைவனை விட்டு எதிர்த் திசையில் வெகு தூரம் சென்றுவிட்ட நம்மைத்
திருத்துவதற்காக

 இறைவனால் பயன்படுத்தப்படும் ஒரு உயிர்,

 இதனால் ஏற்படும் துன்பங்களைக் கண்டு

 நாம் மனம் திரும்ப வேண்டும்.

 இறைவனிடம் திரும்பி வர வேண்டும்.

 நாம் இறைவனுக்கு எதிராக செய்த பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

வைரசிடமிருந்து தப்பிக்க வழி தேடலாம், தப்பில்லை.

ஆனால் அதற்கு முன்பாக இறைவனிடம் திரும்பி வர வேண்டும்.

மனுக்குலம் இதை  உணர வேண்டும்.

மனுக்குலம் மனம்  திரும்பவும் வைரஸின்  பிடியிலிருந்து தப்பிக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

நமது அக்கிரமத்தினாலேயே  வீழ்ச்சியுற்ற நாம் அதிலிருந்து எழுந்துவர நமக்கு உதவ இறைவனை வேண்டுவோம். 

லூர்து செல்வம்.




'

Thursday, March 19, 2020

தந்தைக்குப் பிடித்தமான பலி.

தந்தைக்குப் பிடித்தமான பலி.

**  **  **  **   ** ** **   ** ** ** **
இறைவன் நிறைவானவர்.

God is perfect.

நாம் நிறைவு அற்றவர்கள். நமது பண்புகளில் அளவுள்ளவர்கள்.

நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னும் அதிக மகிழ்ச்சியை அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஒரு மாணவன் எண்பது சதவீத மதிப்பெண் பெற்றதால் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.

தொந்நூறு சதவீத மதிப்பெண் பெற்றால் இன்னும் அதிகமாக மகிழ்ச்சி  அடைவான்.

100 சதவீத மதிப்பெண் பெற்றால் அதைவிட அதிகமாக மகிழ்ச்சி அடைவான்.

அதற்காக அவனுக்குப் பரிசு கொடுத்தால் அதைவிட அதிகமாக மகிழ்ச்சி அடைவான்.

அவனுடைய மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இறைவனைப் பொறுத்தமட்டில் மகிழ்ச்சியில் பரிபூரணமானவர்.

எந்த வெளி நிகழ்ச்சியாலும் அவரது மகிழ்ச்சியை அதிகரிக்க முடியாது.

நமது பாவங்களால் அவரது மகிழ்ச்சியைக் குறைக்க முடியாது,

நமது புண்ணியங்களால் அவரது மகிழ்ச்சியைக் கூட்டவும் முடியாது.

நாம் அவரைப் புகழ்வதாலும், வாழ்த்துவதாலும்,

அவருக்குப் பலி ஒப்புக் கொடுப்பதாலும்

அவரது மகிழ்ச்சியையோ,

மகிமையையோ நம்மால் இம்மி அளவு கூட அதிகரிக்க முடியாது.

அப்படியானால் நாம் ஏன் அவரது அதிமிக மகிமைக்காக நல்ல செயல்களைச் செய்கிறோம்?

ஒரு குழந்தை சாப்பிட மறுக்கிறது.

அதன் தாய் அதைப்பார்த்து

" என் கண்ணுல்ல!

பொன்னுல்ல!

செல்வமில்ல!

அம்மாவுக்காக கொஞ்சம் சாப்பிடு!

அப்பாவுக்காக கொஞ்சம் சாப்பிடு!"

என்று கொஞ்சும்போது குழந்தை அம்மாவை மகிழ்ச்சிப்படுத்தும்  பொருட்டு சாப்பிடுகிறது.

குழந்தை சாப்பிடுவதால் பயன் அடைவது யார்?

அம்மாவா? குழந்தையா?

அம்மா மனிதப் பிறவியாகையால்  அவளது மகிழ்ச்சி அதிகரிக்கலாம்.

ஆனால் உண்மையில் பயன்பெறுவது குழந்தைதான்.

குழந்தையின் வயிறுதான் நிறைகிறது,

குழந்தைதான் வளர்கிறது.

அதேபோல இறைவனது மகிமைக்காகவும்,

மகிழ்ச்சிக்காகவும்

நாம் செய்யும் ஒவ்வொரு செயலாலும் பயன்பெறுவது நாம்தான்,

இறைவன் அல்ல.

அவர் நம்மைப்  படைத்ததால்

பயன்பெறுவது நாம்தான்.

அவரது அன்பினால் பயன்பெறுவது நாம்தான்.

அவர் மனிதனாக பிறந்ததால்
பயன்பெறுவது நாம்தான்.

அவர் அறிவித்த நற்செய்தியால் பயன்பெறுவது நாம்தான்.

அவரது பாடுகளால் பயன்பெறுவது நாம்தான்.

அவரது சிலுவை மரணத்தால்
பயன்பெறுவது நாம்தான்.

அவரது உயிர்ப்பினால்
பயன்பெறுவது நாம்தான்.

அவர் நிறுவிய திருச்சபையால் பயன் பெறுவது நாம்தான்.

திவ்ய நற்கருணையால் பயன்பெறுவது நாம்தான்.

நமது நல்ல கிறிஸ்தவ வாழ்வினால் பயன்பெறுவது நாம்தான்.

நாம் ஒவ்வொரு நாளும் திருப்பலி ஒப்புக்கொடுக்கும்போது பயன்பெறுவது நாம்தான்.

நாம் விண்ணகம் ஏகும்போது இறைவன் தமது பேரின்பத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

இதனால் அவரது பேரின்பம் இம்மிகூட குறைவது இல்லை.

நாம் இவ்வுலகில்  வாழும் வாழ்விற்கு ஏற்ப நமது பேரின்பத்தின் அளவு இருக்கும்.

ஆனாலும் ஒவ்வொருவருக்கும் அவரது அளவிற்கு ஏற்ப பேரின்பம் முழுமையாக இருக்கும்.

வெவ்வேறு கொள்ளளவு உள்ள பல பாத்திரங்களைத் தண்ணீரால் நிறப்பினால்

ஒவ்வொன்றிலும் வெவ்வேறு அளவுள்ள தண்ணீர் இருக்கும்.

ஆனால் ஒவ்வொரு பாத்திரமும் நிறைவாக இருக்கும்.

நமது விண்ணகப் பேரின்பம் அதிகமாக இருக்கவேண்டுமென்றால்

இவ்வுலகில் வாழும் போதே

நமது ஆன்மாவின் கொள்ளளவை

நமது புண்ணியங்களால் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

நமது ஆன்மாவின் கொள்ளளவை அதிகரிப்பதற்காகத்தான்

நாம் ஜெப வாழ்வு வாழ்கிறோம்,

அதாவது இறைவனுக்காக வாழ்கிறோம்.

இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரமாக தன்னையே சிலுவை மரத்தில் பலியாக்கினார்.

நாமும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தினமும் பலி ஒப்புக்கொடுக்க வேண்டும்.

தந்தை இறைவனுக்குப் பிடித்தமான பலி எது?

இறைவனுக்காக எதைச் செய்தாலும்

அதை நமக்காகத்தான் செய்கிறோம்.

ஏனெனில்  பயன்பெறப்போவது நாம்தானே!

ஆகையால் இந்த கேள்வியை சிறிது மாற்றி கேட்போம்.

தந்தை இறைவனுக்கு எந்த பலியை ஒப்புக் கொடுத்தால் அது நமக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும்?

நாம் இயேசுவின் சீடர்களாக இருப்பதால்

அவர் ஒப்புக்கொடுத்த பலியையே

நாமும் ஒப்புக்கொடுத்தால்

அது தந்தை இறைவனுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும்,

அதோடு நமது ஆன்மாவிற்கும் மிக பயன் உள்ளதாக இருக்கும்.

இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே ஒப்புக்கொடுத்தார்.

ஆகவே நாமும் இறை மகனாகிய இயேசுவையே அவருடைய தந்தைக்கு பலியாக ஒப்புக்  கொடுப்போம்.

தினமும் திருப்பலி  கண்டு இறைமகனை இறைத் தந்தைக்கு பலியாக ஒப்புக் கொடுப்பது ஒரு வகை.

தினமும் திருப்பலி காண்பது தந்தை இறைவனுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

தினமும் திருப்பலி காண்பதும்,

திருவிருந்து அருந்துவதும்

நமது விண்ணக பேரின்பத்தின் அளவை அதிகரிக்கும்.

ஆனால் தினமும் திருப்பலி காண்பது அநேகருக்கு இயலாத காரியமாக இருக்கலாம்.

அவர்கள் கோயிலே இல்லாத ஊர்களில் குடியிருப்பவர்களாக இருக்கலாம்.

கோவில் இருந்தாலும் குருக்களின் பற்றாக்குறை காரணமாக

மாதம் ஒரு முறையோ இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ திருப்பலி கிடைப்பவர்களாக   இருக்கலாம்.

அவர்களுக்கும் ஆன்மா இருக்கிறது,

இறைவனுக்கு பலிகொடுக்க

ஆசையும் இருக்கிறது,

விண்ணகம் செல்லவும்
ஆசை  இருக்கிறது.

அவர்கள் என்ன செய்ய?

கொரோனா வைரசுக்குப் பயந்து நாம் இப்போது என்ன செய்கிறோமோ

அதையே செய்யலாமே ஆர்வத்துடன்!

ஞானஸ்நானம் பெற்ற
நாமும்

இயேசுவின் அரசு குருத்துவத் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தானே!
(1 இராய. 2:9)

Reflecting particularly on the conciliar constitutions Lumen gentium and Gaudium et spes,

Pope Francis says those documents state that

lay people “participate, in their own way, in the priestly, prophetic, and royal function of Christ himself.”

கோவிலில் குருவானவர் திருப்பலி நிறைவேற்றும் போது நாமும் அவரோடு இணைந்து திருப்பலி நிறைவேற்றுகிறோம்.

குருவானவரோடு இணைந்து திருப்பலி நிறைவேற்ற 'முடியாதபோது'

நாமே நமது உள்ளத்தில் எழும் ஆசையை கொண்டு

குருவானவர் வழியாக ஒப்புக்கொடுத்த அதே இயேசுவை

அதே இறைத் தந்தைக்கு மனதளவில் பலியாக ஒப்புக்கொள்ளலாம்.

"விண்ணகத் தந்தையே, நாங்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக

உமக்கு அளவில்லாத வகையில் பிரியமான

உமது மகனையே 
உமக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கிறோம்.

எங்களுக்காகத் தன்னையே 

பலியாக ஒப்புக்கொடுத்த உமது திருமகனின் முகத்தைப் பார்த்து எங்கள் பலியை அன்புடன் ஏற்றுக் கொள்ளும்."

நற்கருணை வாங்க முடியாதபோது ஆசை நன்மை வாங்குவது போல

இந்த 'ஆசைப் பலியை' எத்தனை முறை வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் ஒப்புக் கொடுக்கலாமே!

நமக்குப் பிரியமானவர்களை நேருக்கு நேர் பார்க்க முடியாதபோது

அவர்களை நமது உள்ளத்தில் நினைத்து அன்பை வெளிப்படுத்துவதில்லை?

அதேபோல்தான் குருவானவரோடு இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுக்க முடியாதபோது

நாம் நமது உள்ளத்தில் இயேசுவையே நினைத்து

அவரை அவரது தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுத்தால்

விண்ணகத்தில் நாம் அனுபவிக்க விருக்கும்  பேரின்பத்தின் அளவு

கூடிக் கொண்டே இருக்கும்.

நமது உள்ளத்தை நோக்கும் இறைவன்  நமது பலியை அன்புடன் ஏற்றுக்கொள்வார்.

இறைத் தந்தைக்கு ஏற்ற பலி அவரது திருமகன் தான்!

லூர்து செல்வம்.

Wednesday, March 18, 2020

"ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்குபவன் எவனும், ஏற்கெனவே தன்னுள்ளத்தில் அவளோடு விபசாரம் செய்தாயிற்று." (மத். 5:28)

"ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்குபவன் எவனும், ஏற்கெனவே தன்னுள்ளத்தில் அவளோடு விபசாரம் செய்தாயிற்று." (மத். 5:28)
**  **  **  **   ** ** **   ** ** ** **

"ஆதியிலே வார்த்தை இருந்தார்: அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்." (அரு. 1:1)

"அவர்வழியாகவே அனைத்தும் உண்டாயின:"(3)

ஒரே இறைவன்

நித்திய காலமாக சிந்திக்கிறார். சிந்தனையில் பிறந்தவர் (நித்திய காலமாக)
வார்த்தை. (சிந்தனை, சொல்)

அவர்வழியாகவே அனைத்தும் உண்டாயின. (செயல்)

சிந்திக்கிறவர்- தந்தை
சிந்தனை         - மகன்
செயல்    .          - அன்பு

இறைவன் தன் அன்பைப் பகிர்ந்து கொள்ளவே நம்மைப் படைத்தார்.



சிந்தனை, சொல், செயல் - 
இம்மூன்றும் இறைவனுக்கு உரியவை.

இறைவன் மனிதனை தன் சாயலில் படைத்தார்.

ஆகவேதான் நாம் 

சிந்திக்கிறோம்.

சிந்தனையை வார்த்தை (சொல்) மூலம் வெளியிடுகிறோம்.

சிந்தனையையும், வார்த்தையையும் செயலில் காட்டுகிறோம்.

இறைவன் சிந்திக்கிறதைத்தான் சொல்கிறார். (இறைவார்த்தை-பைபிள்)

சொற்படியே செயல்படுகிறார்.

சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருப்பது சத்தியம்.

"நானே வழியும் உண்மையும்
                               -------------------
 உயிரும்." இயேசு

உண்மை என்றால் சத்தியம்.

உள் + மெய்= உண்மை

நினைப்பும், செயலும் ஒன்றாய் இருப்பதுதான் உண்மை, அதாவது, சத்தியம்.


நமது சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருந்தால்தான் 

நம்மிடம் இருக்கும் இறைவனின் சாயலை பத்திரமாகப் பாதுகாக்கிறோம்.

ஆனால் நமது பாவத்தினால் நம்மிடம் இருக்கும் இறைவனின் சாயலைப் பழுதுபடுத்திவிட்டோம்.


அதனால்தான் அநேக சமயங்களில் நமது சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒத்துப்போவதில்லை.

நினைப்பதை நினைத்தபடி பேசுவதில்லை.

பேசியபடி செய்வதில்லை.

Many a times our thought, word and action don't tally with one another.


நாம் செயல் படாமலும் பேசாமலும் இருந்தாலும்கூட சிந்தனை ஓய்வதில்லை.

நமது உள்ளம் சதா சிந்தித்துக்கொண்டே இருக்கிறது.

நமது சிந்தனை ஓட்டத்திலிருந்தே நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நமது வாழ்க்கையின் தரத்தை தீர்மானிப்பது நமது சிந்தனையே.

இயல்பாக நாம் சிந்தித்ததையே செயல்படுத்துகிறோம்.

நல்ல சிந்தனை உள்ளவர்கள் நல்லதையே பேசுவார்கள்,
 நல்லதையே செய்வார்கள்.

இது இயல்பானது.

ஆனால் சிந்திக்கும் போதே நமது சிந்தனையை பேச்சிலும் செயலிலும் காட்டக்கூடாது என்று சிந்தித்து செயல்படுபவர்கள்

வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்.

உள்ளே அழுகிக் கொண்டிருக்கும் பிணம்.

வெளியே அழகாக வெள்ளை அடிக்கப்பட்ட தோற்றம்.


இப்படிப்பட்டவர்களை  hypocrites,  வெளிவேடக்காரர்கள் என்று அழைப்போம்.

இயேசுவுக்கு இவர்களைப் பிடிக்காது.

மனதிலே கெட்ட எண்ணத்தை வைத்துக்கொண்டு

 நல்லவன் போல் பேசினாலோ நடித்தாலும் அவன் வெளிவேடக்காரன்.

நமது சொற்களுக்கும் செயல்களுக்கும் சிந்தனையே காரணமாக இருப்பதால்

 நமது புண்ணியங்களும் சரி,

 பாவங்களும் சரி

 சிந்தனையிலேயே  ஆரம்பிக்கின்றன.

 பக்தியுள்ளவன் எப்பொழுதும் இறைவனைச் சார்ந்த காரியங்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பான்.

 அவனது சிந்தனையிலிருந்துதான்   அவனுடைய நற்பேச்சும்,
நற்செயலும் பிறக்கின்றன.

 அதேபோல் பாவம் செய்பவனும் பாவத்தை தனது சிந்தனையில் தான் ஆரம்பிக்கிறான்.

திருடுபவன் திருட வேண்டும் என்ற திட்டத்தைத் தன் சிந்தனையில்தான் வகுக்கிறான்.

திட்டம் வகுத்த பின்  அவனால் திருட முடியாவிட்டாலும் கூட  அவன் திருட்டு என்ற பாவத்தைச் செய்து விட்டான்.


 இயேசு கூறுகிறார் 

"ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்குபவன் எவனும், ஏற்கெனவே தன்னுள்ளத்தில் அவளோடு விபசாரம் செய்தாயிற்று."(மத். 5:28)



"மனிதனுள்ளிருந்து, வருவதே அவனை மாசுபடுத்தும்.

21 ஏனெனில், மனிதர் உள்ளத்தினின்றே தீய எண்ணம், மோகம்,

22 களவு, கொலை, விபசாரம், ஃ பேராசை, தீச்செயல், கபடு, கெட்ட நடத்தை, பொறாமை, பழிச்சொல், செருக்கு, மதிகேடு ஆகியவை வெளிவரும்.

23 இத்தீயவை யாவும் உள்ளத்திலிருந்து வந்து மனிதனை மாசுபடுத்தும்" என்றார்." (மாற்கு.7:20-23)

ஆகவே நாம் நமது உள்ளத்தை எப்போதும் தூய்மையாக  வைத்துக் கொள்ள வேண்டும்.

 நமது எண்ணங்கள் யாவும் இறைவனைச்    சார்ந்தனவாகவே இருக்க வேண்டும்.

அப்போதுதான் நமது பேச்சும் செயலும் இறைவனைச் சார்ந்ததாகவே இருக்கும்.

சோம்பல் பசாசின் பட்டறை என்பார்கள்.

சோம்பேறியின் உள்ளத்தில் தேவையில்லாத கெட்ட எண்ணங்களே உதிக்கும்.

ஆகவே ஒரு வேலையும் இல்லாவிட்டால் நமது உள்ளத்தை நல்ல எண்ணங்களால்  நிரப்பும் வேலையைச் செய்ய வேண்டும்.

ஞான வாசகம், தியானம், ஜெபம், தவம், பிறர் சிநேக வேலைகள் போன்றவை இதற்கு உதவும்.

நம்மால் மற்றவர்களுடைய
பேச்சைக்  கேட்க முடியும்,

 செயலைப் பார்க்க முடியும், ஆனால் எண்ணங்களை அறிய முடியாது.

ஆகவே ஒருவனுடைய பேச்சையும், செயலையும் மட்டும் வைத்து அவனுடைய குணத்தை அறிய  முடியாது.

ஆகவேதான் யாரையும் நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ தீர்ப்பிட நமக்கு எந்த உரிமையும் இல்லை.

 ஆனால் இறைவன் நமது உள்ளத்தை முழுவதும் அறிவார்.

நமது பேச்சாலும் செயலாலும் மனிதரை ஏமாற்றலாம்,

 ஆனால் இறைவனை ஏமாற்ற முடியாது.

அவர் நமது உள்ளத்தின் ஆழத்தையும் அறிவார்.

God knows even our innermost thoughts.

நாம் வாழ்வது இறைவனுக்காக,

 வாழப்போவது இறைவனோடு.

நாம் திருப்திப்படுத்த வேண்டியது இறைவனை மட்டுமே.

நமது உள்ளத்தை முற்றிலுமாக இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.

நமது சொல்லும் செயலும் அர்ப்பணிக்கப்பட்ட உள்ளத்தைப் பின்பற்றும்.

நமது உள்ளம் இறைவன் வாழும் ஆலயம்.

அங்கு வாழ வேண்டியது இறைவன் மட்டுமே.

நாம் சொந்தமாக இருக்க வேண்டியது அவருக்கு மட்டுமே.

லூர்து செல்வம்.

Tuesday, March 17, 2020

மன்னியுங்கள், மன்னிக்கப்படுவீர்கள்

மன்னியுங்கள், மன்னிக்கப்படுவீர்கள்
**  **  **  **   ** ** **   ** ** ** **
To err is human, to forgive is divine.

தவறுவது மனிதம்,
 மன்னிப்பது தெய்வீகம்.

இறைவன் நம்மைத் தன் சாயலாகப் படைத்தபோது,

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்புகளுள் மிக முக்கியமானவை:

அன்பு, இரக்கம், மன்னிக்கும் குணம்.

இம்மூன்றுமே தெய்வீகப் பண்புகள்.

கடவுள் தனது பண்புகளை நம்முடன் பகிர்ந்து  கொண்டதன்  மூலம் 

தனது தாராள குணத்தை வெளிப்படுத்தினார்.

நாமும் அவற்றைத் தாராளமாகப் பயன்படுத்துவதன் மூலம்

 அவரது தாராள குணத்தை நம்மில் பிரதிபலிக்க வேண்டும்.

இலவசமாகப் பெற்றுக்கொண்டதை 
இலவசமாகக் கொடுப்போம்.

தாராளமாகப் பெற்றுக்கொண்டதை தாராளமாகக் கொடுப்போம்.

தாராளமாக அன்பு செய்வோம்.

தாராளமாக இரக்கம் கொள்வோம்.

தாராளமாக மன்னிப்போம்.

நாம் பாவத்தில் விழும்போது கடவுளை அன்பு செய்ய மறுக்கிறோம்.

ஆனாலும் கடவுள் நம்மைத் தொடர்ந்து அன்பு செய்கிறார்.

அந்த அன்பு தான் நம்மை நமது பாவத்திலிருந்து மீட்கிறது.

 நம்மை அன்பு செய்யாதவர்களையும் அன்பு செய்வோம்.

நம்மீது இரக்கமாக இல்லாதவர்கள் மீதும் நாம் இரக்கமாக இருப்போம்.

நமக்குக் கெடுதி செய்கின்ற அனைவரையும் மன்னிப்போம்.

தீபம் இருக்கும் இடத்தில் ஒளி இருக்கும்.


ஒளி இல்லாவிட்டால் தீபம் இல்லை என்பதுதான் உண்மை.

அன்பு இருக்கும் இடத்தில் உறுதியாக இரக்கம் இருக்கும்.

இரக்கம் இருக்கும் இடத்தில்
உறுதியாக மன்னிக்கும்  பண்பும் இருக்கும்.

ஆகவே மன்னிக்க முடியாதவன் 

"நான் அன்பு உள்ளவன்"

 என்று சொன்னால் அவன் பொய்யன்.

எத்தனை முறை ஒருவனை மன்னிக்கலாம்?

அவன்மீது அன்பு இருக்கும் வரை அவனை மன்னிக்கலாம்.

உண்மையான அன்பு நிரந்தரமானது.

 ஆகவே மன்னிப்பும் நிரந்தரமானது.

ஆகவே எத்தனை  முறை மன்னிக்கலாம் என்ற கேள்விக்கு இடமில்லை.

எத்தனை முறை தவறு செய்தாலும் அத்தனை முறையும் மன்னிக்க வேண்டும்.

நாம் அனைவரும் தவறு செய்ய கூடியவர்கள்.

மன்னிப்பு பெறவும் வேண்டியவர்கள்.

நாம் மன்னிப்பு பெறவேண்டுமென்றால் மற்றவர்களை நாம் மன்னிக்க வேண்டும்.

மன்னிக்க தெரியாதவன் மனிதனே இல்லை.

"விண்ணகத் தந்தையே,

நீர் எங்களுக்குக் கட்டளை இட்டபடியே

 நாங்கள் எங்களுக்கு விரோதமாகக் குற்றம் செய்தவர்களை மன்னிக்கிறோம். 

 தந்தையே, நாங்கள் உமக்கு விரோதமாக செய்கிற குற்றங்களை அன்புகூர்ந்து  மன்னியும்."

லூர்து செல்வம்.

Monday, March 16, 2020

இறைவனை மறந்து உலகிற்காக வாழ்பவர்கள்.

இறைவனை மறந்து உலகிற்காக வாழ்பவர்கள்.  
**  **  **  **   ** ** **   ** ** ** **
ஒரு running race.

நடத்துகின்றவர் இறைவன்.

Starting point ம் அவர்தான்,  finishing point ம் அவர்தான்!

அவரே நம்முடனும் ஓடியும் வருவார்!

நாம் செய்ய வேண்டியதெல்லாம் track மாறாமல் ஓட வேண்டும், அவ்வளவுதான்.

வேகமாகவும் ஓடலாம், மெதுவாகவும் ஓடலாம்.

நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

We must keep moving.

நம்மோடு போட்டிக்கு வேறு ஆள் இல்லை.

நாம் வேகமாக ஓடுகிறோமா, மெதுவாக ஓடுகி றோமா என்பதைவிட 

track மாறாமல்
ஓடுகிறோமா, finishing point ஐ அடைகிறோமா   என்பது தான் முக்கியம்.

இன்னும் ஒரு முக்கியமான point

start பண்ணும்போதும், ஒடும் போதும் நம்மோடு இருக்கும் கடவுள் நமது கண்ணுக்குத் தெரியமாட்டார்.

ஆனால் நமது  ஓட்டத்தில் நமக்கு உதவி செய்துகொண்டே இருப்பார். 

finishing point ஐ அடையும்போது நம்மை முகத்துக்கு முகம் (face to face) சந்தித்து, இறுக்க அரவணைத்துக் கொள்வார்.

இதுதாங்க நமது வாழ்க்கை.

இதை விட இலேசான, இனிமையான வேறு வாழ்க்கை இருக்க முடியுமா?

ஆனால் இறைவனிடமிருந்து பந்தயத்தை ஆரம்பித்த சிலர்,

 அவர் தங்களோடு வருவதைப் பற்றி அக்கரை கொள்ளாமல்,

 track மாறி வேறு எங்கேயோ போய் மாட்டிக் கொண்டு,

finishing point ஐ அடையாமலே போய்விடுகிறார்கள்!

நமது வாழ்வின்   அடிப்படைத் தத்துவமே

 நாம் எதை அடைய வேண்டுமோ 

அதை  அடைய நமக்கு ஆசை வர வேண்டும்,

ஆசையே இல்லாத பொருளை  அடைய நாம் முயற்சி செய்யவும் மாட்டோம்,

 அடையவும் மாட்டோம்.

 நமது வாழ்வில் குறிக்கோளாகிய இறைவன் மேல் நமக்கு   ஆசை இருந்தால்தான் 

அவரை அடையும் முயற்சியில் இறங்குவோம்.


உலக வாழ்வின் மேல் நமக்கு முழு ஆசை வருமானால் 

நாம் உலக  வாழ்வையே சதமாக நினைத்து வாழ்வோம்.

விளைவு?

 விண்ணக வாழ்வைத் தொலைத்து விடுவோம்.


ஒரு ஊழியன் இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய இயலாது.

ஒரே நேரத்தில் கடவுளுக்கும் உலகத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது.

நண்பர் ஒருவர் வினா ஒன்றை எழுப்பினார்.

"கடவுள் தானே நம்மை படைத்து இந்த உலகில் வைத்தார்.

 அவர் தந்த உலகை அனுபவித்தால் என்ன தவறு?

உலக இன்பங்களும் அவரால் தானே படைக்கப்பட்டன.

அவர் தந்ததை அனுபவித்தால் அதை எப்படி தவறு என்று அவரே கூறுவார்?"

பதில் :

தனது சாயலாக மனிதனைப் படைத்த கடவுள் அவன் உலகை

 "ஆளக்கடவன"

என்றுதான் சொன்னார்.

இயேசு ஊழியம் செய்ய சொன்னது 

அவரது சாயலாக படைக்கப் பட்ட  நமது அயலானுக்கு,

உலக இன்பங்களுக்கு அல்ல.

உலக இன்பங்களை ஏன் படைத்தார்?

வாழ்வதற்காக  உணவைப் படைத்த கடவுள் உண்ணும்போது அனுபவிக்க ருசியைப் படைத்தார்.

வாழ்வதற்காக உண்ணும்போது ருசியை அனுபவிக்கலாம், தப்பே இல்லை.

ஆனால், ருசிக்காக மட்டும் உண்பதும், 

உண்பதற்காக மட்டும் வாழ்வதும்தான் தப்பு.

வாழ்வதற்காக உண்பவன் அளவோடு உண்பான்.

அளவோடு உண்பது 'மட்ட சனம்' (Temperance) என்னும் புண்ணியம். (Virtue)

உண்பதற்காக வாழ்பவன் அளவுக்கு மீறி உண்பான். அவன் போசனப் பிரியன். (glutton)

.gluttony பாவம். (ஏழு தலையான பாவங்களுள் ஒன்று)

இல்லற இன்பம் புண்ணியம்.

அதே இன்பத்தை இல்லறத்திற்கு வெளியே அனுபவிப்பது பாவம்.

பணத்தைச் சரியான வழிகளில் பயன்படுத்துவது புண்ணியம்.

தவறாகப் பயன்படுத்துவது பாவம்.

சுருக்கமாக சொல்வதானால் இந்த உலகத்தை பயன்படுத்தி விண்ணகம் செல்ல வேண்டும்.

அழியப்போகும்  உலக சிற்றின்பத்தை அனுபவிப்பதற்காக விண்ணக பேரின்பத்தைத் தியாகம் செய்துவிட வேண்டாம், please.

லூர்து செல்வம்

Saturday, March 14, 2020

"அவன் நீரருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பானவன்."(ஏரேமி..17:8)

"அவன் நீரருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பானவன்."
(ஏரேமி..17:8)
**  **  **  **   ** ** **   ** ** ** **"
"எல்லோரும் என் இரண்டு கைகளையும் பாருங்க.

என்ன வைத்திருக்கிறேன், தெரிகிறதா?

"தெரிகிறது சார். இரண்டு இலைகள் வைத்திருக்கிறீர்கள், சார்."

"லூர்துசாமி, சொல்லு, இரண்டு இலைகளுக்கு இடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கா?"

"இரண்டு இலைகளுக்கு இடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கா?"

"நீங்க சொல்லச் சொன்னதச் சொல்லிட்டான், சார்!"

"பரவாயில்லை. நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு"

"நீங்க இன்றைக்கு நடத்தப்போகும் பாடங்களுக்கு  உபகரணங்களாக இரண்டு இலைகளைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

ஒரு இலை மிகவும் பசுமையாக இருக்கிறது. மற்றது அவ்வளவு பசுமையாக இல்லை."

"செல்வராஜ் எழுந்திரு.

 பசுமைக்கும், பசுமை இன்மைக்கும் காரணம் புரிகிறதா?"


"பசுமையான இலை நீர் செழிப்பு அதிகமுள்ள இடத்தில் வளரும் மரத்தில் இருந்து பறிக்கப்பட்டது.

 பசுமை அற்ற இலை வறண்ட
இடத்தில் வளரும் மரத்தில் இருந்து பறிக்கப்பட்டது"

"கரெக்ட்.

 பசுமையான இலை நமது ஊருக்கு அருகில்  ஓடும் ஆற்றின் கரையில் வளரும் மரத்திலிருந்து பறிக்கப்பட்டது.

  பசுமை அற்ற இலை நமது ஊர் நடுவில் உள்ள மைதானத்தில் வளரும் மரத்தில் இருந்து பறிக்கப்பட்டது."

"சார், இப்போது புரிந்துவிட்டது, நீங்கள் நடத்தப்போகும் பாடம் எதைப் பற்றியது என்று.

"அவன் நீரருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பானவன்."

என்ற பைபிள்  வசனத்திற்கு விளக்கமாக இந்த இலைகள் கொண்டு வர பட்டிருக்கின்றன.

நான் இன்று காலை இந்த வசனத்தை வாசித்தேன்."

"வாசிக்க மட்டும் செய்தாயா அல்லது...."

"வாசித்து அதைப்பற்றி சிறிது நேரம் தியானித்தேன், சார்."

"எங்கே, நீ தியானித்ததை  எங்களோடு கொஞ்சம்
 பகிர்ந்து கொள் பார்ப்போம்."

"மனிதர்களில் இரண்டு வகையினர் உண்டு.

ஒரு வகையினர் எப்போதும் கடவுளின் சந்நிதானத்தில் வாழ்பவர்கள்.

இன்னொரு வகையினர் கடவுளைப் பற்றி நினையாமல்
இந்த உலகத்தை பற்றியே நினைத்து கொண்டிருப்பவர்கள்.

ஆற்றங்கரையில் வளரும் மரத்தின் வேர் எப்பொழுதும் தண்ணீரில் நனைந்து கொண்டிருக்கும்.

ஆற்றுத் தண்ணீர் மலையில் இருந்து வருவதால் அங்குள்ள மூலிகைச் சத்து நிறைந்ததாக வரும்.

 சத்து நிறைந்த தண்ணீரைக் குடித்து மரம் செழுமையாக வளரும்.

கடவுள் தனது அருளால் பொங்கி வடிபவர்.

God is always overflowing with grace.

அவரோடு, அவரில் வாழ்பவர்கள் அவருடைய அருள் வரங்களில் சதா நனைந்து கொண்டிருப்பார்கள்.

அவர்கள் உலகில் வாழ்ந்தாலும் உலகைச் சாராமல், இறைவனை மட்டும் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் இறைவனது அருளால் உயிர்வாழ்வதால் இறைவனுக்காக மட்டுமே வாழ்வார்கள்.

இறைவனுக்காக மட்டுமே வாழ்பவர்களை இறைவனுக்கு எதிரான எதுவும் அண்டாது.

அவர்களது ஆன்மீகம் இறையருளால் செழித்து வளர்வதால், பாவமோ அதன் விளைவுகளோ அவர்களை அண்டாது."

"கொஞ்சம் பொறு. ஒரு கேள்வி. 

ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் விளைவாகத்தான் துன்பமும் மரணமும் பூமிக்குள் நுழைந்தது.

அப்படியானால் பாவம் செய்யாமல் வாழ்பவர்களுக்குத் துன்பமும்  மரணமும் வராதா?"

"துன்பத்தையும் மரணத்தையும் பாவம் செய்கிறவர்கள் எந்த கண்ணோக்கில் பார்க்கிறார்களோ 

அந்த கண்ணோக்கில் மீட்கப்பட்டவர்கள் பார்ப்பது இல்லை.

இறைமகன் இயேசு தனது பாடுகளாலும், சிலுவை மரணத்தாலும் பாவத்தை வென்று  விட்டதால், 
 பாவத்தின் விளைவுகளையும் வென்று விட்டார்.

 அதாவது    மீட்பின் சக்தியால்
 துன்பங்களும் மரணமும் ஆசீர்வாதங்களாக மாறிவிட்டன.

துன்பத்தைச் சிலுவையாக மாற்றிவிட்டார் இறைமகன் இயேசு.

சிலுவை நமது இரட்சண்யத்தின் காரணியாக மாறிவிட்டதுபோல,

நமது துன்பங்களும், அதாவது, சிலுவைகளும், நமது நித்திய பேரின்பத்தின் காரணிகளாக மாறிவிட்டன.

அதாவது நாம் இயேசுவுக்காக அனுபவிக்கும் துன்பங்கள் நித்திய பேரின்பத்தைப் பெற்றுத் தரும் ஆசீர்வாதங்கள்.

Sufferings are no more  pains, they are blessings, as they bless us with everlasting bliss.

இயேசு தனது சிலுவை மரணத்தால், பாவத்தின் சம்பளமான மரணத்தை மோட்சத்தின் வாசலாக மாற்றிவிட்டார்."

"Correct. இறையருளால் ஆளப்படுபவன் எப்படி இருப்பான்?"

"எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான்.

இறைவன் மகிழ்ச்சியின் ஊற்று.

அந்த ஊற்று தண்ணீரில் குளிப்பவன் மகிழ்ச்சியாக இருப்பதை தவிர வேறு எப்படி இருக்க முடியும்?

கொரோனஸ் வைரஸால் கூட அவனது மகிழ்ச்சியை அழிக்க
 முடியாது.

மகிழ்ச்சி இன்மைக்கு முக்கியமான காரணம் பயம்.

நம்மை நோய்  தொற்றிக்கொள்ளுமோ  என்று சதா பயந்துகொண்டு இருப்பவர்களால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

நாம் இறைவன் கையில் இருக்கிறோம்.

 ஒவ்வொரு வினாடியும் நம்மை வழி நடத்திக் கொண்டிருப்பவர் அவரே.

 சர்வ வல்லபர் கையில் 
 இருக்கும்போது நாம் எதற்கு அஞ்ச வேண்டும்?

Why should we fear when we are in the hands of the Almighty?

 "நீ அஞ்சாதே, ஏனெனில் நாம் உன்னோடிருக்கிறோம்."

"Do not be afraid, for I am with you." (இசை. 41.10)

என்று நம்மைப் படைத்தவர் கூறுகிறார்.

இறைவனைப் பற்றிய அடிப்படை உண்மையை புரிந்துகொண்டால் நாம்  பயப்படவே மாட்டோம்.

 இறைவன் எங்கும் இருக்கிறார்.

 மண்ணுலகிலும இருக்கிறார், விண்ணுலகிலும் இருக்கிறார்.

 நாம் மண்ணுலகில் இருக்கும் போதும் அவரோடுதான்  இருக்கிறோம்.

 விண்ணுக்குச் செல்லும்போதும் அவருடன் தான் இருப்போம்.

 அப்படியானால் நாம் எங்கிருந்தால் என்ன?
 

 மரணத்தால் நம்மை இறைவனோடு சேர்க்கத்தான் முடியுமேயொழிய 

பிரிக்க முடியாது. 

பின் ஏன் அதைக் கண்டு பயப்பட வேண்டும்?"

"பாக்கியராஜ், இறைவனை மறந்து உலகிற்காக வாழ்பவர்களைப் பற்றி ஏதாவது கூற முடியுமா?"

(தொடரும்)

லூர்து செல்வம்.

Thursday, March 12, 2020

"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்"(மத். 20:27)

"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்"
(மத். 20:27)
**  **  **  **   ** ** **   ** ** ** **
இயேசு யெருசலேமை நோக்கிப் போகையில்

 பன்னிரு சீடரையும் தனியே அழைத்து அவர்களிடம்,

தான் படப்போகும் பாடுகளை பற்றி கூறுகிறார்.

செபெதேயுவின் மக்களும் (யாகப்பர், அருளப்பர்) அதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஆனால் அவர்களுஅவர்களுடய அம்மா அங்கு இல்லை.

அவளுக்கு ஒரு ஆசை,

அவளது மக்கள்  இருவரும் இயேசுவின் அரசில், ஒருவர்  அவரது வலப்பக்கமும், மற்றவர் அவரது இடப்பக்கமும் அமர வேண்டும்.

அதாவது முக்கிய பதவிகள் வகிக்க வேண்டும்.

அவளது நினைப்பு இயேசு உலகில் ஒரு பெரிய அரசை நிருவப் போகிறார் என்பதாக இருந்திருக்கும்.

அந்தச் சமயத்திய யூதர்களுக்கு அப்படிப்பட்ட  எண்ணம் இருந்தது.

அதாவது மெசியா யூதர்களை ரோமர்களின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு ஒரு சுதந்திர அரசை நிறுவுவார் என்று யூதர்கள் நினைத்திருந்தார்கள்.

ஆனால் இயேசுவோ தான் துன்புறும் மெசியா (Suffering Messiah) என்பதைப் பன்னிரு சீடர்களுக்கும்  விளக்கி இருந்தார்.

அவரது அரசு இவ்வுலகைச் சார்ந்தது அல்ல, விண்ணுலகைச் சார்ந்தது.

இது செபெதேயுவின் மனைவிக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

 ஆனால் அவரின் மக்களுக்கு எப்படி தெரியாமல் போனது?
'. மனுமகன் தலைமைக்குருக்களிடமும் மறைநூல் அறிஞரிடமும் கையளிக்கப்படுவார். அவர்கள் அவருக்குக் கொலைத் தீர்ப்பிட்டு,

 அவரை எள்ளி நகையாடவும் சாட்டையால் அடிக்கவும் சிலுவையில் அறையவும் புறவினத்தாரிடம் கையளிப்பர். அவரோ மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்" 

என்று பன்னிரு சீடர்களிடமும் இயேசு சொல்லியிருந்தார். 

அப்படி இருக்கும்போது தங்களுக்கு உயர் பதவி கேட்டு அம்மா வரும்போது எப்படி அவளுடன் வந்தார்கள் என்பது விளங்கவில்லை!

இந்த சூழ்நிலையில்தான் இயேசு தனது சீடர்களிடம் கூறினார்:

"எவன் உங்களுக்குள் பெரியவனாக விரும்புகிறானோ அவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.

 எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்."

இயேசு தாழ்ச்சி என்னும் புண்ணியத்தை தனது சீடர்களுக்கு விளக்க விரும்புகிறார்.

 தாழ்ச்சி புண்ணியங்களின் அரசி.

இப்போது ஒரு கேள்வி எழலாம்.

 ஊழியனாய் இருக்கிறவன்  எப்படி முதல்வன் ஆவான்?

இயேசுவின் வார்த்தைகளுக்கு சரியான பொருள் தெரிந்தவர்களுக்கு இந்த கேள்வி எழாது.

"எனக்காகத் தன் உயிரை இழந்தவனோ அதைக் கண்டடைவான்."(மத்.10:39)

இதுவும் இயேசுவின் கூற்றுதான்.

 இங்கே இயேசு உயிர் என்ற வார்த்தையை இரண்டு பொருட்களில் பயன்படுத்துகிறார்.

1.இவ்வுலகில் நமது உடலில் உள்ள உயிர்.

2. விண்ணக வாழ்வு.

இயேசுவின் கூற்றின் பொருள்.

"எனக்காக இவ்வுலகில் மரணம் அடைபவன் விண்ணக நிலை வாழ்வை அடைவான்."

வேதசாட்சிகள் எல்லோரும் இவ்வுலகில் இயேசுவுக்காகத் தங்கள்  உயிரை கொடுத்தார்கள்.

 அதன் பலனாக விண்ணகத்தில் நித்திய பேரின்ப வாழ்வை அடைந்தார்கள்.


"Dying, he conquered death; "
(Catechism 638)

By His physical death on the Cross, Jesus conquered our spiritual death.


இயேசு தன் மரணத்தால் மரணத்தை வென்றார்.

 இங்கு மரணம் என்ற வார்த்தை இரு பொருள்களில் பயன்படுத்த படுகிறது.

1.இவ்வுலகில் நாம் அடையும் மரணம். (physical death)

2.பாவத்தினால் நாம் அடையும் ஆன்மீக மரணம். (spiritual death)

இயேசு தான் அடைந்த தனது சிலுவை மரணத்தினால் 

நமது ஆன்மாவை நித்திய மரணத்தில் இருந்து மீட்டார்.

அதாவது தனது மரணத்தினால் 

நமக்கு நித்திய பேரின்ப விண்ணக வாழ்வை தந்தார்.

சாவான பாவத்தினால் நமது ஆன்மா மரிக்கிறது. (Spiritual death.)

நாம் பாவத்திற்காக வருந்தி பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது

 நமது பாவம் மன்னிக்கப்பட்டு

 ஆன்மீக உயிர் பெறுகிறோம்.

இது இயேசு நம்மை மீட்டதால் நமக்குக் கிடைத்த பலன். 



இப்போது ஒன்று புரிந்திருக்கும்.

நாம் பயன்படுத்தும் இவ்வுலக சொல்லிற்கு  மறுஉலகப் பொருளும் உண்டு.


"முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்"

இந்த வசனத்தை வாசித்தவுடன் நமக்கு என்ன தோன்றும்?

இவ்வுலகில் நாம் ஊழியனாக இருந்தால் அதாவது வேலைக்காரனாக இருந்தால்,

 முதல்வன் ஆகிவிடலாம் அதாவது முதலாளி ஆகிவிடலாம் என்றுதானே தோன்றும்?

அதுமட்டுமல்ல நாம் முதலாளி ஆவதற்கே வேலைக்காரனாக இருக்க வேண்டும் என்றும் தோன்றும்.

முதலாளி ஆவதற்காகவே வேலைக்காரனாக  இருந்தால் அங்கே தாழ்ச்சி எங்கே இருக்கிறது?

லாபம் அடைவதற்காகவே நட்டப்படுதில்

 business mindedness தானே இருக்கிறது?

இயேசு ஒரு  Businessman அல்ல.

கடவுள்.

அவர் பூமியில் மனிதனாகப் பிறந்தது நம்மை விண்ணக வாழ்விற்கு தயாரித்து, அழைத்து செல்ல.

 ஆகவே அவர் சொல்லும் ஒவ்வொரு வசனத்திலும் ஆன்மீகம் இருக்கும்,

 ஆன்மீகம் மட்டும்தான் இருக்கும்.

 ஆண்டவரின் வசனங்களை உலக வசதிக்காக மாற்றி பொருள் கொள்ள கூடாது. 

கடவுள் நம்மைப் படைத்தது அவரை அறிந்து நேசித்து சேவித்து விண்ணகம் அடைவதற்காக.

அறிவது நேசிப்பதற்காக,

 நேசிப்பது சேவிப்பதற்காக,

சேவிப்பது விண்ணகம் அடைவதற்காக.

ஊழியனாய் (சேவிப்பவனாய்) 

அதாவது, பிறருக்குப் பணிபரிபவனாய் வாழ்ந்தால்தான் விண்ணகம் அடைய முடியும்.

நமது ஊழியத்தின் தன்மையை பொறுத்து விண்ணகத்தில் நமது மேன்மை நிர்ணயிக்கப்படும்.


நாம் சாதாரணமாகச் செய்யும் சேவையையும், அன்னை தெரசா செய்த சேவையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழியத்தின் தன்மையின் வேறுபாடு தெரியும்.


இவ்வுலகில் எந்த அளவிற்கு நாம் ஊழியனாய் வாழ்கின்றோமோ அந்த அளவிற்கு விண்ணகத்தில் நமது மேன்மை இருக்கும்.

தன்னுடைய உலக வருகையை பற்றி குறிப்பிட்ட இயேசு இவ்வாறு கூறுகிறார்: 

"மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று,

 பணிவிடை புரியவும்,

 பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்."

இறைமகனே பணிவிடை செய்யவே உலகிற்கு வந்தார் என்றால்

 நாம் எதற்காகப் படைக்கப்பட்டு இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நாமும் பணிவிடை செய்யவே படைக்கப்பட்டிருக்கிறோம்.

அன்னை மரியாள் இறைப் பணிக்காக தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக்கொண்டார்.

ஆகவேதான் அவள் விண்ணகத்தின் அரசியாக விளங்குகிறாள்.

நாமும் விண்ணக்த்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்க வேண்டுமென்றால் நல்ல அர்ப்பணமுள்ள ஊழியனாய் வாழ வேண்டும்.

இவ்வுலகில் வாழ்வோம் ஊழியனாய்.

மறுவுலகில் வாழ்வோம் மேன்மையாய்.

லூர்து செல்வம்.

Wednesday, March 11, 2020

" உங்களைச் சுத்திகரியுங்கள், தூய்மைப்படுத்துங்கள்."(இசை. 1:16)

" உங்களைச் சுத்திகரியுங்கள், தூய்மைப்படுத்துங்கள்."
(இசை. 1:16)
**  **  **  **   ** ** **   ** ** ** **

கணக்கற்ற உங்கள் பலிகள் நமக்கு எதற்காக என்கிறார் ஆண்டவர்:11

இனி மேல் பயனில்லாக் காணிக்கைகளைக் கொணர வேண்டாம்,13

,உங்கள் அமாவாசை, திருவிழாக் கொண்டாட்டங்களையும் முழு உள்ளத்தோடு நாம் வெறுத்துத் தள்ளுகிறோம் 14

நம்மை நோக்கி நீங்கள் கைகளை உயர்த்தும் போது, உங்களிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக் கொள்கிறோம்.15

இசையாஸ் 1:11 to 15 வசனங்களை முழுவதும் வாசித்துவிட்டு

சிறிது யோசித்துவிட்டு

அப்புறம் 16 to 19 வாசித்தால் ஒரு உண்மை புலனாகும்.


16 உங்களைச் சுத்திகரியுங்கள்,

 தூய்மைப்படுத்துங்கள். 

நம் கண் முன்னிருந்து உங்கள் தீச்செயலை அகற்றுங்கள்:

 தீமை செய்வதை விட்டு ஓயுங்கள்:

17 நன்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்:

 நீதியைத் தேடுங்கள், ஒடுக்கப்பட்டவனுக்கு உதவி செய்யுங்கள்,

 திக்கற்ற பிள்ளைக்கு நீதி வழங்குங்கள்,

 கைம்பெண்ணுக்காக வழக்கு நடத்துங்கள்.

18 வாருங்கள், இப்பொழுது வழக்காடுவோம் என்கிறார் ஆண்டவர்:

 உங்கள் பாவங்கள் செந்தூரம் போல் இருந்தாலும், உரைந்த பனி போல வெண்மையாகும்:

 இரத்த நிறமாய் அவை சிவந்திருந்தாலும், பஞ்சைப் போல் அவை வெண்மையாகும்.

19 மனமுவந்து நீங்கள் நமக்குக் கீழ்ப்படிந்தால்,

 நாட்டில் விளையும் நற் கனிகளை உண்பீர்கள்.



தூய்மை இல்லாத உள்ளத்தோடு நாம் என்ன செய்தாலும் அது ஆண்டவருக்குப் பிடித்தமாக இருப்பது இல்லை.


ஒரு தட்டில்  அசிங்கத்தை (சாணியை) ராவி விட்டு அதன்மேல் உணவை வைத்தால் நம்மால் உண்ண முடியுமா?

அசிங்கமான வார்த்தைகளால் நம்மை அழைத்து, நமக்கு விலை உயர்ந்த  ஒரு பரிசுப் பொருளைத் தந்தால் நம்மால் ஏற்று கொள்ள முடியுமா?

சாக்கடையோடு Apple juice கலந்து தந்தால் நம்மால் குடிக்க முடியுமா?

கழிவுப் பொருட்கள் மீது அழகான பாயை விரித்தால் அதன் மேல் நம்மால் படுக்க முடியுமா?

சாதாரண மனிதர்களாகிய

நம்மாலேயே செய்ய முடியாத காரியங்களை

 பரிசுத்தராகிய 'கடவுளிடமிருந்து எப்படி எதிர்பார்க்கலாம்?

பலிகளையோ, காணிக்கைகளையோ, கொண்டாட்டங்களையோ, எதிர்பார்த்து கடவுள் நம்மைப் படைக்கவில்லை.

தன்னிலே நிறைவான கடவுளுக்கு எந்தப் பொருளும்  கிடைத்து ஆகப்போவது ஒன்றுமில்லை.


கோடிக்கணக்கான ரூபாய் Bank Balance உள்ள ஒருவனுக்கு 10 பைசா பரிசாகக் கொடுத்தால் அது அவனை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துமா?


கடவுள் தனது அன்பின் மிகுதியால் நம்மைப் படைத்தது 


நம்மிடமிருந்து வெறுமனே காணிக்கைப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காகவா? 

கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்கள் அடங்கிய மாபெரும் பிரபஞ்சத்தையே  படைத்தவர் அவர்.

அவர் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது அவர் படைத்த பொருள்களை அல்ல.

நம்முடைய மாசற்ற அன்பையும் 

மாசற்ற உள்ளத்தையுமே அவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

நமது இதயம் அவர் வாழும் கோவில்.

அக்கோவிலை நாம் பரிசுத்தமாக  வைத்து கொண்டாலே போதுமானது.

பரிசுத்தமான இருதயத்தைத் தான் இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறார்.

இருதயத்தை அசுத்தமாக வைத்துக்கொண்டு 

அவருக்கு எந்த பலியைக் கொடுத்தாலும்,

 எந்தத் காணிக்கையைக் கொடுத்தாலும் அது அவருக்கு ஏற்புடையது அல்ல.

நம்முடைய  இருதயம் அவரிடமிருந்து வெகுதூரத்தில் இருந்தால்

 நாம் இவ்வுலகில் வாழ்வதிலேயே  அர்த்தம் இல்லை.

ஆகவே


முதலில் நமது உள்ளத்தை சுத்திகரித்து,

 தூயமைப்படுத்துவோம்.

நமது பாவங்களுக்காக  வருந்தி மன்னிப்புக் கேட்போம்.

பாவம அற்ற நமது உரைந்த பனி போல வெண்மையாக இருக்கும்.

 தீச்செயல் செய்வதை நிறுத்துவோம். 

. நன்மை செய்யக் கற்றுக் கொள்வோம். 

 நீதியைத் தேடுவோம்.  .

 ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வோம். 

 திக்கற்ற பிள்ளைக்கு நீதி வழங்குவோம். 

 மனமுவந்து இறைவனது கட்டளைக்கு கீழ்ப்படிவோம். 

சுருக்கமாக சொல்வதானால் தூய்மையான உள்ளத்தோடு இறைவனுக்குக் கீழ்படிந்து,

 அவருக்கு சேவை செய்வதையே நமது வாழ்வாக கொள்வோம்.

இறைப் பணியும், பிறர் பணியும் பிரிக்க முடியாதவை என்பதை உணர்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, March 10, 2020

"தீர்ப்பிடாதீர்கள், நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்."(லூக்.6:37)

"தீர்ப்பிடாதீர்கள், நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்."
(லூக்.6:37)
**  **  **  **   ** ** **   ** ** ** **
"உங்களுக்குப் பிறர் என்னென்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ,

 அவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்."(மத். 7:12)

"Therefore, all things whatsoever that you wish that men would do to you,

 do so also to them."


நாம் மற்றவர்களிடம் இருந்து நல்லதையே எதிர்பார்க்கிறோம்.

அப்படியானால் நாமும் மற்றவர்களுக்கு நல்லதையே செய்ய வேண்டும்.


நாம் மற்றவர்களிடம் இருந்து உதவியையே எதிர்பார்க்கிறோம்.

அப்படியானால் நாமும் மற்றவர்களுக்கு உதவியையே செய்ய வேண்டும்.


மற்றவர்கள் நம்மோடு அன்பாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அப்படியானால் நாமும் மற்றவர்களோடு அன்பாக இருக்கவேண்டும்.



மற்றவர்கள் நம்மைப் பற்றி  கெடுத்துப் பேசுவதை நாம் விரும்புவது இல்லை.

அப்படியானால் நாமும் மற்றவர்களைப் பற்றி கெடுத்துப் பேசக் கூடாது.

மற்றவர்கள் நம்மை தீர்ப்பிட விரும்புவதில்லை.

நாமும் மற்றவர்களை தீர்ப்பிடக் கூடாது.

 
"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."
(அரு. 3:17)

ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது கடவுள் அவர்களை உரிய வகையில் தீர்ப்பிட்டிருந்தால் மனுக்குலம் அவர்களோடு  முடிந்து போயிருக்கும்.
 
ஆனால் அன்பே உருவான கடவுள் மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்டு, இரட்சிக்க இரட்சகரை அனுப்ப வாக்களிக்கிறார்.

தன் ஒரே மகனையே இரட்சகராக அனுப்புகிறார்.

நாம் பாவிகள்.

நாமே இரட்சிக்கப்பட வேண்டியவர்கள்.

மற்றவர்களைப் பற்றி தீர்ப்பு   சொல்ல நமக்கு எந்த உரிமையோ, அதிகாரமோ இல்லை.


நமது இரட்சண்யத்துக்காக உழைப்பதோடு,

மற்றவர்களையும் இரட்சண்ய வளையத்திற்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

நாம் இபேசுவின் நற்செய்திப்படி வாழ்வதோடு,

 மற்றவர்கட்கும் நற்செய்தியை  அறிவிக்க வேண்டும்.

நற்செய்திப்படி வாழ்வோம்,

நற்செய்தியை மற்றவர்கட்கும்
அறிவிப்போம்.

அனைவரும் மீட்படைவோம்.

லூர்து செல்வம்.




Monday, March 9, 2020

"நீர் விரும்பினால் உமக்கு ஒன்றும், மோயீசனுக்கு ஒன்றும், எலியாசுக்கு ஒன்றுமாக இங்குக் கூடாரம் மூன்று அமைப்பேன்" (மத்.17:4)

"நீர் விரும்பினால் உமக்கு ஒன்றும், மோயீசனுக்கு ஒன்றும், எலியாசுக்கு ஒன்றுமாக இங்குக் கூடாரம் மூன்று அமைப்பேன்" 
(மத்.17:4)
**  **  **  **   ** ** **   ** ** ** **/
இயேசு இராயப்பரையும் யாகப்பரையும், அவர் சகோதரர் அருளப்பரையும் அழைத்து,

 ஓர் உயர்ந்த மலைக்கு ஒதுக்கமாய்க் கூட்டிக்கொண்டு போகிறார்.

அங்கே

மோயீசனும் எலியாசும்  தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள் .

அங்கே இருப்பவர்கள்:

இயேசு,
மோயீசன்,
எலியாஸ்,
இராயப்பர்,
யாகப்பர்,
அருளப்பர்

ஆக ஆறு பேர்.


இப்பொழுது இராயப்பர் இயேசுவிடம் ஒரு செப விண்ணப்பம் வைக்கிறார்.


நமது செபம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இராயப்பரது செபம் ஒரு முன்னுதாரணம்.

செபத்தை

 'நீர் விரும்பினால்' 

என்ற முன்னுரையோடு  ஆரம்பிக்கிறார்.

'இது என்னுடைய ஆசை, ஆனால் நீர் விரும்பினால் மட்டுமே இது நடக்கட்டும்'

 என்று தன் செபத்தை இயேசுவின் விருப்பத்திற்கு விட்டு  விடுகிறார்.



அடுத்து

'உமக்கு ஒன்றும்,

 மோயீசனுக்கு ஒன்றும்,

 எலியாசுக்கு ஒன்றுமாக

 இங்குக் கூடாரம் மூன்று அமைப்பேன்'

என்கிறார்.

இராயப்பர் தனக்காக செபிக்கவில்லை.

இயேசுவுக்கும், மோயீசனுக்கும், எலியாசுக்குமாக மூன்று கூடாரங்கள் அமைக்க அனுமதி கேட்கிறார்.

தனக்கும், யாகப்பருக்கும், அருளப்பருக்கும் எதுவும் கேட்கவில்லை.

அவரது செபத்தில் தன்னலம் இல்லை.

இயேசுவுக்கும், மோயீசனுக்கும், எலியாசுக்குமாக

ஒரு கூடாரம் அமைக்க அல்ல, மூன்று கூடாரங்கள் அமைக்க அனுமதி கேட்கிறார்.

மூவரும் ஒரே கூடாரத்தில் தங்கினால், நெருக்கடியாக இருக்கும்,

மூன்று கூடாரங்களில்  தங்கினால் சௌகர்யமாக இருக்கும் என்று எண்ணுகிறார்.

நமது ஜெபம் எப்படி?

நமது செபத்தில் நாம் யாருக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்?

கடவுளுக்குக் கூட நாம் முன்னுரிமை கொடுப்பது இல்லை.

இராயப்பர் இயேசுவிடம் வேண்டும்போது

" நீர் விரும்பினால்"

 என்று ஆரம்பிக்கிறார்.

 அதாவது 

"நான் கேட்கிறேன் உமக்கு விருப்பம் இருந்தால் கொடும்,

 விருப்பம் இல்லாவிட்டால் கொடுக்க வேண்டாம்"

 என்று .

அதாவது அவர் முற்றிலும் இறைவனுடைய சித்தத்திற்கு கட்டுபடுகின்றார். 

ஆனால் நாமோ இறைவனிடம் விண்ணப்பம் வைக்கும்பொழுது 

நமது விண்ணப்பம் கேட்கப்பட வேண்டும் என்பதில் தான் குறியாக இருக்கிறோமே தவிர இறைவனுடைய சித்தத்தைப் பற்றி கவலை படுவது இல்லை.

அது  மட்டுமல்ல நாம் மற்றவர்களுக்காக வேண்டுவதை விட நமக்காக வேண்டுவதே அதிகம்.

மற்றவர்களுக்காக வேண்டும் போது கூட அந்த வேண்டலில்  நமக்கும் ஒரு பங்கு இருக்கும்.

"ஆண்டவரே, எனக்கு நல்ல சுகத்தை தாரும்."
(எனக்காக.)

"இயேசுவே, என் மகனுக்கு நல்ல சுகத்தை தாரும்."
(எனது மகனுக்காக)

நமது வழக்கமான விண்ணப்பங்கள் 

ஒன்று நமக்காக இருக்கும்,

 அல்லது நம்மை சார்ந்தவர்களுக்காக  இருக்கும்,

 அல்லது நாம் சம்பந்தப்பட்ட நபர்களுக்காக இருக்கும்,

 அல்லது நாம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்காக இருக்கும்.

"நீ உன்னை  நேசிப்பது போல உன் அயலானையும் நேசி"

 என்பது இயேசுவின் கட்டளை.

"நமது அயலான் யார்?"

என்ற கேள்விக்கு விடையாக ஆண்டவர் நல்ல சமாரித்தன் உவமையைக் கூறினார்.

நமக்காக வேண்ட வேண்டாம் என்று ஆண்டவர் கூறவில்லை.

ஆனாலும் நமது விண்ணப்பங்களில் மற்றவர்களையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, March 8, 2020

ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48)

"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48)

**  **  **  **   ** ** **   ** ** ** **
நிறைவு (Perfection) இறைவனுக்கு மட்டுமே உரியது.

அவர் மட்டுமே அளவற்றவர்.

அவர் நமமைப் படைத்தபோது தன் சாயலாகப் படைத்தார்.

அதாவது அவரது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அன்பு, நீதி, ஞானம், சுதந்திரம் போன்ற அவரது பண்புகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

ஆயினும் நாம் அளவுள்ளவர்களே.

எந்தப் பண்பிலும் நம்மால் முழுமையாக , நிறைவாக இருக்க முடியாது.

இறைவனால் வளர்ச்சி அடைய முடியாது.

நிறைவு அதிக நிறைவாக முடியாது.

Perfection cannot become more perfect.

அளவுள்ள நாம் வளர முடியும்.
வளர வேண்டும்.

தளரவும் முடியும்.
தளரக்கூடாது.

நாம் எவ்வளவுதான் வளர்ந்தாலும் நிறைவை அடையமுடியாது.

ஏனென்றால் நிறைவு இறைவனுக்கு மட்டுமே உரிய பண்பு.

ஆயினும் இயேசு நம்மிடம்

"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்"

என்கிறார்.


மனிதர்களாகிய நாம் இறைத் தந்தையைப் போல் நிறைவு உள்ளவர்களாக ஆக இருக்க முடியாது என்று இயேசுவுக்குத் தெரியும்.

 ஆனாலும் நமது ஆன்மீகப் பயணம் நிறைவை நோக்கி,

அதாவது,

நிறைவானவராகிய இறைத் தந்தையை நோக்கியே இருக்க வேண்டும் என்பதே இயேசுவின் விரும்பம்.

Perfection must be our aim.

ஒரு கப் தண்ணீர் ஒரு கடல் தண்ணீராக முடியாது.

ஆனால் அதைக் கடல் நீரில் ஊற்றி விட்டால், அது கடலோடு இரண்டறக் கலந்து விடும்.

அவ்வாறே நிறைவற்ற நாமும் நமது வாழ்வின் இறுதியில் நிறைவோடு,

அதாவது நிறைவாக இருக்கின்ற இறைவனோடு கலக்க  வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.

It is Jesus' desire that we who are imperfect must get united with God, who is perfect, in heaven, at the end of our life in this world.

இயேசுவின் சித்தத்தை நிறைவேற்றுவதே நம் வாழ்வின் இலட்சியம்.

இயேசுவே, உமது சித்தம் எமது பாக்கியம்.

லூர்து செல்வம்.

Saturday, March 7, 2020

"யோனாசிலும் மேலானது இதோ! இங்குள்ளது."(லூக். 11:32)

"யோனாசிலும் மேலானது இதோ! இங்குள்ளது."
(லூக். 11:32)
**  **  **  **   ** ** **   ** ** ** **
பாவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நினிவே நகரத்து மக்கள் 

யோனாஸ் தீர்க்கத்தரிசியின்
 சொற்களை கேட்டு 

மனம் திரும்பி தங்கள் பாவங்களுக்குப்  பரிகாரமாக தவம் செய்ய ஆரம்பித்தார்கள்.

பிழைத்தார்கள்.

  மனம் திரும்புங்கள் என்று கூறிய இயேசு நம்முடனே இருக்கின்றார்.

கன்னி  மரியின் வயிற்றில் மனிதனாக கருத்தரித்த அதே இயேசு,

யூதேயா நாடெங்கும் சுற்றிவந்து நற்செய்தியை அறிவித்த  அதே  இயேசு,

சென்றவிடமெல்லாம் புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்கிய அதே இயேசு, 

மரித்தோர்க்கு உயிர் கொடுத்த அதே இயேசு,

நமக்காக பாடுகள் பட்டு,

 சிலுவையில் அறையுண்டு,

 தன்னைத் தானே பலியாக ஒப்புக்கொடுத்த அதே இயேசு

மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த அதே இயேசு

இன்று நம்மிடையே இருக்கிறார்.

திவ்ய நற்கருணையில் 24 மணி நேரமும் நமக்காகக் காத்திருப்பதோடு 

திருவிருந்தின்போது  நம்மை முகத்துக்கு முகம் சந்திக்க  நம்மிடம் வருகிறார்.

இன்றைய உலகம் நினிவே நகரத்தைவிட மோசமான நிலையில் உள்ளது.  

நினிவே யோனாசின் மூலம் கொடுக்கப்பட்ட இறை வார்த்தையைக் கேட்டது.

பிழைத்தது.

நம்மோடு இறைவனே இருக்கிறார்.

அவர் வார்த்தையைக் கேட்டால் பிழைப்போம்.

கேட்போமா?

லூர்து செல்வம்.

Tuesday, March 3, 2020

."உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக"(மாற்கு 12:31)

."உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக"
(மாற்கு 12:31)
**  **  **  **   ** ** **   ** ** ** **
இறைவன் நம்மோடு  பகிர்ந்து கொண்ட அவருடைய பண்புகளுள் மிக முக்கியமானது அன்பு.

தன்னிடம் இருப்பதைத் தான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும்.

அவர் அன்பு மயமானவர்.

அவர் நித்திய காலமாகவே அன்பு செய்து கொண்டிருக்கிறார்.

யாரை அன்பு செய்து கொண்டிருக்கிறார்?

சம்மனசுக்கள் படைக்கப்படுவதற்கு முன்னாலேயே,


அதாவது கடவுளைத் தவிற வேறு யாரும் இல்லாத காலத்திலேயே

கடவுள் அன்பு செய்து கொண்டிருந்தார்.

யாரை ?

தன்னை.

தன்னைத் தானே அன்பு செய்வது இறை இயல்பு.

இந்த இயல்பையும் இறைவன் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

By nature God loves Himself.

We too love ourselves by nature, as per God's plan.

இந்த இயல்பிலிருந்துதான் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கட்டளை பிறக்கிறது.

இறைவன் தன்னைத் தானே அன்பு செய்கிறது போலவே தனது படைப்பாகிய நம்மையும் அன்பு செய்கிறார்.

நாமும் நம்மை அன்பு செய்வது போல நம் அயலானையும் அன்பு செய்ய வேண்டும்.

நம்மை நாம் நேசிப்பது போல நம்  அயலானையும் நேசிக்க வேண்டும் என்று சொன்ன இறைவன் 

'உன்னை நீ நேசிப்பது போல என்னையும் நேசி' 

என்று சொல்ல வில்லை.

மாறாக,

 "என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்."
(மத்.10:37)

என்கிறார்.

இதன் உட்பொருள் நாம் நம்மை நேசிப்பதை விட அதிகமாக இறைவனை நேசிக்க வேண்டும்.

இறைவன் தான் அன்பின் ஊற்று, நாம் அல்ல.

 இறைவனிடமிருந்து நமக்கு வரும் அன்பை 

நாம் இறைவனுக்கும் அயலானுக்கும் கொடுக்க வேண்டும்.

இதைப்பற்றி ஒரு நாத்திக நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது  அவர் தன்னை அறிவாளி என்று காட்டிக் கொள்வதற்காக ஒரு கேள்வி கேட்டார்,

"நம்மிடம் இருப்பதற்கு அதிகமாக நாம் எப்படி மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்?

 நம்மிடம் ஆயிரம் ரூபாய் இருந்தால் அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் மட்டும்தானே கொடுக்க முடியும்!"

இது விளக்கம் கிடைப்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி அல்ல. நக்கலுக்காக  கேட்கப்பட்ட கேள்வி.

ஆனாலும் நமக்கு விளக்கம் தேவை.

ஜடப் பொருள்களை அளப்பது போல பண்புகளை அளக்க முடியாது.

 ஒரு படி அரிசி என்று சொல்லலாம், ஒரு படி அன்பு என்று சொல்ல முடியாது.

 ஒரு கிலோ சர்க்கரை என்று சொல்லலாம்,  ஒரு கிலோ இரக்கம் என்று சொல்ல முடியாது.

 ஏனெனில் பண்புகள் சடப்பொருட்கள் அல்ல, அவை 
நமது ஆன்மாவிற்கு உரியவை. ஆகவே, ஆன்மீகம் சம்பந்தப்பட்டவை. 

அவற்றின் அளவை குறிக்க
தீவிரம் (intensity) என்ற
வார்த்தையைப் பயன் படுத்தலாம்.

Our love for God must be more intense than our love for ourselves.

நம்மிடம் இருக்கும் பண்பை அதிக தீவிரமாக்குவதோ

அல்லது தீவிரத்தைக்
குறைப்பதோ நமது கையில் தான் இருக்கிறது.

'கோபம்'  என்ற பண்பு நமது பாவத்தின் விளைவு.

(அதாவது இறைவனிடமிருந்து வந்ததல்ல. கோபப்படுவது இறைவனின் சுபாவம் அல்ல. )


ஏதாவது ஒரு சூழ்நிலையில் நம்மிடம் ஏற்படும் கோபம் சூழ்நிலை மாறும் போது அதிகரிப்பதையும், குறைவதையும் நாமே நமது அனுபவத்தில் பார்த்திருக்கிறோம்.

நாம் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அன்பும் அத்தகையதுதான்.

 கடவுள் நம் மீது கொண்டுள்ள அன்பையும், அக்கரையையும் நாம் அறிய அறிய  நமது அன்பின் intensityயும் அதிகரித்துக் கொண்டே போகும்.

நாம் கடவுளை மனிதர் யாரையும் விட அதிகமாக நேசிக்க வேண்டும் என்றால்

 அவரைப் பற்றி அதிகம் அறிய வேண்டும்.

ஆகையினால்தான் சின்னக் குறிப்பிடம் சொல்கிறது:

 சர்வேசுரன் மனிதர்களை 
எதற்காகப் படைத்தார்?

தம்மை அறியவும், நேசிக்கவும், சேவிக்கவும், அதனால் மோட்சத்தை அடையவும் உண்டாக்கினார்.


'அறியவும், நேசிக்கவும்'- இறைவனை எவ்வளவுக் கெவ்வளவு அறிகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நேசத்தின் அளவும் கூடும்.

நமதுபெற்றோரை அறிந்திருக்கிறோம்.

 ஆகவே அவர்களை நேசிக்கிறோம்.

பெற்றோரை அறிந்திருப்பதைவிட இறைவனைப்பற்றி அதிகமாக அறிந்திருக்கிறோமா? 

அறிந்திருந்தால் நமது பெற்றோரை நேசிப்பதை விட இறைவனை அதிகம் நேசிப்போம்.

ஆகவே இயேசு

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்."

என்று சொல்லும்போது


"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன்

தன் தந்தையையும் தாயையும் அறிந்துள்ள அளவு அவர்களைப் படைத்த என்னை அறியவில்லை" 

என்பதுதானே  பொருள்!

 உணவை விரும்புகிற அளவிற்கு அதை நமக்குத தருகிற அம்மாவை விரும்பவில்லை என்றால் நாம் எப்படிப்பட்டவர்கள்?

படைக்கப்பட்ட பொருளை அறிந்திருக்கும் அளவிற்கு படைத்தவரை நாம் அறியவில்லை என்றால் நம்மைவிட பெரிய அறிவிலிகள் யாரும் இல்லை.


ஆகவே 

நம்மையும் நமது அயலானையும் நேசிக்கும் நாம் 

நம் எல்லோரையும் படைத்த இறைவனை

 மிக அதிகமாக நேசிக்க வேண்டும்.

இது இறைவன் நமக்கு தந்த முதல் கட்டளை.



நம்மை நாமே நேசிக்கும் அன்பின் இன்றைய நிலை என்ன?


வானத்திலிருந்து மழை விழும் போது விழுவது சுத்தமான தண்ணீர்.

 ஆனால் அது பூமியில் விழுந்தவுடன் பூமியிலுள்ள  அழுக்குகளோடு சேர்ந்து அழுக்கு தண்ணீராக மாறி விடுகிறது.

 தண்ணீரை குடிக்க வேண்டுமென்றால் முதலில் அழுக்கு தண்ணீரை சுத்தமான தண்ணீராக மாற்ற வேண்டும், 

அதாவது அழுக்கை நீக்க வேண்டும்.

இறைவன் நம்மைப் படைக்கும்போது பரிசுத்தமான அன்புடன் படைத்தார்.

அன்பு 
அன்பு செய்யப்படுவோரின்  நலனில் நாட்டம் கொள்ளும்.

நமது வாழ்வின் ஒரே நலம் நாம் எதற்காக படைக்கப்பட்டோமோ அதை அடைவதுதான், 

அதாவது இறைவனை அடைவதுதான்.

ஆகவே நாம் நம் மீது கொண்டுள்ள அன்பு உண்மையானதாக இருந்தால்

 அது நம்மை இறைவன் வழிநடத்தி 

அவரிடமே அழைத்து செல்லும்.

இறைவனை அடைவதற்கு எதிரான எந்த நாட்டத்தையும் நம்மை அண்ட  விடாது,

 அதாவது நம்மை இறைவனது கட்டளைகளை மீற விடாது,

 அதாவது நம்மை பாவம் செய்ய விடாது.

நாம் பாவம் செய்கிறோம் என்றாலே 

நம்மீது நாம் கொண்ட அன்பு உண்மையான அன்பு  அல்ல,

அதாவது இறைவன் நம்முடன் பகிர்ந்துகொண்ட பரிசுத்தமான அன்பு அல்ல

என்பதுதானே பொருள்.

நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவாக

 அதாவது நமது ஜென்ம பாவத்தின் விளைவாக நமது உண்மையான அன்பு கறை பட்டிருக்கிறது.

 அக்கறை நீங்கவே நாம் திரு முழுக்கு பெறுகிறோம்.

திருமுழுக்கு நமது அன்பை பரிசுத்தம் ஆக்கிய பின் அதே பரிசுத்தத் தனத்தில் நீடிக்க வேண்டும். 

இந்த பரிசுத்தமான அன்போடு நாம் எப்படி நம்மை நேசிக்கிறோமோ அப்படியே நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

அதாவது, நாம் நம் அயலான் மீது வைக்கும்  அன்பு அவனையும் இறைவழி நடக்க உதவும் அன்பாக இருக்கும்.

இந்த பிறரன்பும், அதன் விளைவாக நாம் செய்யும் நற்செயல்களும் நமது அயலானையும் இறைவனிடம் அழைத்து வர வேண்டும்.

மாறாக நாம் நமது அயலானை பாவம் செய்ய தூண்டினால்

 நாம் நம்மை எப்படி  நேசிக்க வேண்டுமோ 

அதே போல நம் அயலானையும் நேசிக்கவில்லை என்றுதான் பொருள். 

இன்றைய நிலையில் நாமே நம்மை உண்மையான அன்புடன் நேசிக்கவில்லை.
 
நாம் நம்மை உண்மையிலேயே நேசித்தால்

 அதாவது எப்படி நேசிக்க வேண்டுமோ அப்படி நேசித்தால் 

நாம் நம்மையே  பாவ குழியை நோக்கி அழைத்துச் செல்வோமா?

"உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசி" என்று இறைவன்சொல்லும்போது

"உன்னை நான் படைத்தபோது
நீ உன்னை எப்படி நேசிக்க வேண்டும் என்று விரும்பினேனோ அதேபடி உன் அயலானை நேசி"
என்பது தான் பொருள்.

 அத்தகைய அன்புடன் நமது அயலானை  அன்பு செய்தால், அவனையும் இறை அன்பில் வளர்க்க முயற்சி செய்வோம்.

மாறாக  நாம் நம்மீது கொண்டுள்ள அன்பு நம்மை பாவத்திற்கு வழி நடத்திச் சென்றால்

 அதையே நமது அயலானுக்கும்  செய்வோம்.

நமது வீழ்ந்த இயல்பின்
(fallen nature) காரணமாக நமது நாட்டங்கள் பாவ நாட்டங்களாய் மாறி விட்டன.

நாம் நம்மை உண்மையிலேயே அன்பு செய்தால்

 நமது பாவ நாட்டங்களிலிருந்து விடுதலைபெற்று ஆன்மிகத்தில் வளர விரும்புவோம்.

நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவாக நமது இயல்பே கெட்டு விட்டது.

ஆகவேதான் நமது கெட்டுப்போன இயல்பினால் நாமும் பாவத்தில் விழுந்து மற்றவர்களையும் விழ வைக்கிறோம்.

நமது நல்ல நடத்தையால் பிறருக்கு நன் மாதிரிகை காட்டுவதற்கு பதிலாக

 நமது துர்நடத்தையால் மற்றவர்களுக்கு துர்மாதிரிகை காட்டுகிறோம்.

அநேக குடும்பங்களில் பெற்றோருடைய கெட்ட நடத்தை காரணமாக பிள்ளைகளும் கெட்டு போகிறார்கள்.

தகப்பனார் திருடியே சொத்து சேர்த்தவராக இருந்தால் மகன் எப்படி இருப்பான்?

தகப்பனார் லஞ்சம் வாங்குபவராக இருந்தால் மகனும் அதைத்தானே செய்வான்.

கணவனும் மனைவியும் சதா சண்டை போட்டுக் கொண்டிருந்தால் பிள்ளைகள் வேறு என்ன செய்வார்கள்?

நிலைமை திருந்த வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் நம்மை நாமே பரிசோதித்துப் பார்க்க வேண்டும். 

நம்மீது நாம் கொண்டுள்ள அன்பு பரிசுத்தம் ஆனதா?

அது நம்மை பரிசுத்தத் தனத்தில்  வழிநடத்துகிறதா?

என்பதை ஆய்ந்து பார்த்து , நம்மை முதலில் பரிசுத்தமாக்கிக் கொண்டு,

அதே பரிசுத்தத் தனத்தோடு மற்றவர்களை நேசிப்போம்.

அந்த நேசத்தினால் அனைவரையும் இறைவன்பால் ஈர்ப்போம்.

நமது விண்ணகப் பயணம் நாம் தனித்துச் செல்வதல்ல, ஒரு கூட்டுப் பயணம்.

தனியே அல்ல, எல்லோரும் இணைந்தே இறைவனிடம் செல்வோம்.

லூர்து செல்வம்.

Monday, March 2, 2020

ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்க.

ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்க.
**  **  **  **   ** ** **   ** ** ** **
ஒரு கற்பனை.

வகுப்ல பாடம் நடந்து கொண்டிருக்கும்போது

யாராவது தூங்கிக்கொண்டு இருந்தாங்கள்னா

(வகுப்ல, வீட்ல இல்ல )

அவங்கள எழுப்ப ஒரு குறுக்குவழி இருக்கு :

"ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்க." ன்னு

சொன்னால் போதும்.

வேகமா எழுந்துவிடுவார்கள்.

பாட்டிக்கு அவ்வளவு சக்தி.

பாட்டி வடை சுட்டு விற்ற கதையை முதல் வகுப்பில் டீச்சர் சொன்னத கேட்டிருக்கிறோம்.

ஆனால் நம்ம பாட்டி வடைப் பாட்டி அல்ல ,

பரோபகாரப் பாட்டி.

சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு இரக்க குணம் அதிகம்.

தன்னுடைய வாழ் நாள் முழுவதையுமே மற்றவர்களுக்கு உதவி செய்வதையே

 தனது கடமையாக செய்து வாழ்ந்தவர்கள்.

உதவி பெறுவதைவிட செய்வதையே பெருமையாக நினைத்தவர்கள்.

யாரை பார்த்தாலும் தான் செய்து கொண்டிருந்த உதவிகளைப் பற்றி பெருமையாகப் பேசுவதோடு

 எப்பொழுது வேண்டுமானாலும் தன்னிடம் வேண்டிய உதவியை கேட்கும்படி உற்சாக படுத்துவார்கள்.

ஆகவேதான் யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் பாட்டியிடம் தான் வருவார்கள்.

பரம்பரைச் சொத்து நிறைய இருந்தது.

அதை எல்லாம் பிறருக்கு உதவியை செய்வதிலேயே  செலவழித்தார்கள்.

எல்லோரும் அவர்களை பரோபகாரப் பாட்டி என்றுதான் அழைப்பார்கள்.

அவர்களுடைய உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது.

அப்படிப்பட்ட நல்ல பாட்டி ஒரு நாள் இறைவனடி சேர்ந்தார்கள்.

அவர்கள் இறக்கும் முன்  


நான் இவ்வுலகில் உதவி செய்வதற்காக செலவழித்ததை விட

 பன்மடங்கு அதிகமாக விண்ணகத்தில் தனக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்று பெருமையாகச் சொன்னார்கள்.

தனது மண்ணுடலை  மண்ணுக்கே அனுப்பிவிட்டு விண்ணகம் ஏகிய அவர்கள்

  மோட்ச வாசலில் இராயப்பர்  நின்றுகொண்டு

 வருவோரை   வரவேற்று மோட்சத்திற்குள் அனுப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள்.

அவர்களுக்கு முன்னால் ஒரு நீண்ட வரிசையே நின்று கொண்டிருந்தது.

சிறு வயதிலிருந்து முதியோர் வரை பல வயதினரும் நின்று கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொருவரும் இராயப்பர் முன்னால் போய் நின்றவுடன் ஒரு பெட்டி தோன்றியது.

இராயப்பர் பெட்டியைத் திறந்து 

உள்ளேயிருந்து பூக்களை எடுத்து 

எண்ணி வேறொரு பெட்டிக்குள்  போட்டுக் கொண்டிருந்தார்.

எண்ணி முடித்தவுடன் அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு  சம்மனசுவிடம் இராயப்பர் ஏதோ சொன்னார்.

சம்மனசு அங்கு நின்று கொண்டிருந்த ஆன்மாவை அழைத்துக்கொண்டு மோட்சத்திற்குள் சென்றார்.

இப்படியாக ஒவ்வொருவருக்கும் நடந்து கொண்டிருந்தது.

பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.

யாரிடம் விவரம் கேட்பது என்றும் தெரியவில்லை.

விவரம் கேட்க ஆசைப்பட்டவுடன் அவரருகில் ஒரு சம்மனசு  தோன்றினார்.

அவரிடம் பாட்டி,

" இராயப்பர் என்ன செய்து கொண்டிருக்கிறார்"

 என்று கேட்டார்.

அப்போது அந்த சம்மனசு பாட்டியைப் பார்த்து, 

"பாட்டி, ஒவ்வொருவர் முன்னும் தோன்றுவது அவர்களுடைய பரோபகாரப் பெட்டி.

ஒவ்வொரு மனிதரும்  பிறந்தவுடன் மோட்சத்தில் இப்பெட்டி வைக்கப்படும்.

அதன்மேல் அவருடைய பெயரும் பிறந்த தேதியும்  எழுதப்பட்டிருக்கும்.

அந்த நபர் உலகத்தில் வாழும்போது மற்றவர்களுக்கு உதவி செய்யும்போதெல்லாம் அதற்குள் ஒரு பூ விழும்.


உதவிகளின் எண்ணிக்கையை பொறுத்து பூக்களின் எண்ணிக்கையும் இருக்கும்.

சிறு வயது பையன் மற்றொரு பையனுக்கு ஒரு மிட்டாய் கொடுத்து உதவினாலும் அவன்  பெயரில் பெட்டியில் ஒரு பூ விழும்.

ஒரு ஆள் இறந்தவுடன் அவர்  சம்பந்தப்பட்ட பெட்டி இராயப்பர் முன்னால் வரும். 

சம்பந்தப்பட்ட ஆள் முன்னால் வைத்தே இராயப்பர் பெட்டியைத் திறந்து பூக்களை எண்ணுவார்.

எண்ணிக்கைக்கு ஏற்றபடி அந்த ஆளின் மோட்ச பேரின்பத்தின் அளவு இருக்கும்.

நீங்கள் இராயப்பர் முன்னால் போய் நின்றவுடன் உங்கள் பெட்டி அங்கே வரும்.

வரிசை நகர்கிறது.  செல்லுங்கள்."

பாட்டிக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

அவள் செய்த உதவிகளுக்கு கணக்கே இல்லை.

 அவளுடைய பெட்டி மிகவும் பெரியதாக இருக்கும்.

இராயப்பர் பூக்களை எண்ணுவதற்கு வெகு நேரம் பிடிக்கும்.

 ''பரவாயில்லை.

 நாம்தான் மோட்சத்திற்கு வந்துவிட்டோமே.

 நேரம் அதிகம் ஆனால்  என்ன.

 நமக்கு கிடைக்கும் பேரின்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்."

 நினைத்துக்கொண்டே பாட்டி இராயப்பர் முன் வந்து நின்றாள்.

அவள் முன் ஒரு பெட்டி வந்து அமர்ந்தது.

அவள் பெட்டியைப் பார்த்துக்கொண்டே நின்றாள்.

இராயப்பர்,

"பாட்டி, என்னைப் பாருங்கள். இப்பொழுது நான் உங்களது பரோபகாரப் பெட்டியைத் திறந்து பூக்களை எண்ணப்  போகிறேன். கூர்ந்து கவனியுங்கள்."

பாட்டி,

" இராயப்பரே, எனது பெட்டி நான் நினைத்தபடி பெரியதாக இல்லையே.

இது வேறொருவர் பெட்டியாக இருந்தாலும் இருக்கலாம்.

 தயவுசெய்து இது என் பெட்டி தானா  என்பதை முதலில் Check பண்ணுங்கள்."

"பாட்டி, இது மோட்சம்.

 இங்கே தவறு நடக்க வாய்ப்பே இல்லை.

 இதோ பாருங்கள்.

 பெட்டி மேல்  உங்கள் பெயரும் நீங்கள் பிறந்த தேதியும் இறந்த நேரமும்  எழுதப்பட்டிருக்கிறது. பார்த்தீர்களா? திருப்தியா?"

"சரி ஐயா. பெட்டியை திறந்து பூக்களை எண்ணி என்னை மோட்சத்திற்கு அனுப்புங்கள்."

இராயப்பர் பெட்டியைத் திறந்தார்.

பாட்டி பெட்டிக்குள் கூர்ந்து பார்த்தாள்.

அவள் கண்களையே அவளால் நம்ப  முடியவில்லை.

உள்ளே ஒரே ஒரு பூ மட்டும் கிடந்தது.

"இராயப்பரே,  நான் பிறந்த நாள் முதல் இறக்கும் நேரம்வரை ஆயிரக்கணக்கான உதவிகள் செய்திருக்கிறேன்.

ஒவ்வொரு உதவிக்கும் ஒரு பூ என்றால் இந்தப் பெட்டியை விட பெரியபட்டி நிறைய பூக்கள் இருக்கும்.

ஆனால் இந்த சிறிய பெட்டிக்குள்  ஒரே ஒரு பூ தானே இருக்கிறது.

 மோட்சத்தில் தவறு நடக்காது.

 ஆனால் வேறு எங்கோ தப்பு நடந்திருக்கிறது.

 அதை கண்டு பிடியுங்கள்."

அவள் சொல்லி  முடிக்குமுன் வேறொரு பெட்டி அவள் முன் வந்து இறங்கியது.

 அதன் மேலும் அவளுடைய பெயரும், பிறந்த, இறந்த தேதிகளும் குறிக்கப்பட்டிருந்தன. 

 பாட்டி இராயப்பரை நோக்கி,

" ஐயா இந்தப் பெட்டியைத் திறந்து பாருங்கள், உள்ளே நிறைய பூக்கள் இருக்கும்."

இராயப்பர் பெட்டியைத் திறந்தார்.

பெட்டி நிறைய பூக்கள் இருந்தன. ஆனால் அனைத்தும் வாடி வதங்கிப் போய் கிடந்தன.

"இராயப்பரே,  என்ன இது? பூக்கள் அனைத்தும் வாடிக் கிடைக்கின்றன?"

"பாட்டி, முதலில் பார்த்தது பரோபகாரப் பெட்டி.

இப்பொழுது பார்ப்பது  பரோபகாரம் மறைந்த பெட்டி.


நீங்கள் நல்ல காரியம், உதவி செய்யும்போதெல்லாம் முதல் பெட்டிக்குள் ஒரு மணம் நிறைந்த  பூ விழும்.

அதை ஆண்டவரது மகிமைக்காக ஒப்புக்கொடுத்தால் அந்த பூ அங்கே தங்கும்.

ஆனால் அதற்காக  நீங்கள் தற்பெருமை பாராட்டி மகிழ்ந்தால் அந்தப் பூ வாடி அடுத்த பெட்டிக்குள் போய்விடும்.

 இப்பொழுது நமக்கு தெரிவது,

 நீங்கள் ஆயிரக்கணக்கான உதவிகள் செய்திருப்பது உண்மை.

 ஆனால் நீங்கள் அதற்காக தற்பெருமை பாராட்டி மகிழ்ந்த போதெல்லாம் 

விழுந்த பூக்கள் எல்லாம் வாடி வதங்கி அடுத்த பெட்டிக்குள் போய் விட்டன.

 இப்போது உங்களது மோட்ச பேரின்பத்திற்கு  உதவியாய் இருப்பது 

நீங்கள் தற்பெருமை பாராட்டாமல்  செய்த ஒரே ஒரு உதவிதான்.

பரவாயில்லை. மோட்சம் கிடைத்ததற்காக மகிழ்ந்து உள்ளே போங்கள்.

 நீங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சம்மனசு கூட்டிக்கொண்டு போவார்."

கதை என்னமோ கற்பனைக் கதைதான்.

ஆனாலும் இதிலிருந்து ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

என்ன நற்செயல் செய்தாலும் அதை ஆண்டவரது அதிமிக மகிமைக்காகவே செய்ய வேண்டும்.

அவர் அதன் பயனை நமக்குத் தருவார்.

நமது மகிமைக்காக செய்தால் அதற்குரிய பலன் பூமியிலேயே கிடைத்து அங்கேயே மறைந்துவிடும். 

எதைச்செய்தாலும் ஆண்டவரின் அதிமிக மகிமைக்காகவே செய்வோம்.

லூர்து செல்வம்.