Monday, August 22, 2022

சுதந்திரமாக வாழ்வதும், கீழ்ப்படிந்து, வாழ்வதும்எதிர்ச் செயல்களா?

சுதந்திரமாக வாழ்வதும், கீழ்ப்படிந்து, வாழ்வதும்
எதிர்ச் செயல்களா?

"தாத்தா, கடவுள் தேர்வு செய்யவும், செயல்படவும் நமக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறீர்கள்.

தன்னுடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்றும் சொல்கிறீர்கள். 

சுதந்திரம் என்றாலே ஒருவர் தனது விருப்பப்படி செயல்படலாம் என்று தானே  பொருள்.

நமது விருப்பப்படி செயல்பட நமக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு நம்மைத் தனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று சொல்வது எப்படி என்று புரியவில்லை."

",உன்னுடைய குழப்பத்திற்கு முதல் காரணம் நம்முடைய மொழி. 

உலகைச் சார்ந்த நமது அனுபவ எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கு நாம் நமது மொழியை உருவாக்கினோம்.

 ஆனால் இறைவனைச் சார்ந்த காரியங்களை பகிர்ந்து கொள்வதற்கும் அதே மொழியை தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. 

ஆனால் மனித அனுபவங்களை புரிந்து கொள்வது போல் இறை அனுபவங்களை புரிந்து கொள்ள கூடாது. 

இறையியல் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டிய விதமாய் புரிந்து கொள்ள வேண்டும்.

அகராதியை எடுத்து ஒரு சொல்லுக்கு பொருள் பார்த்தால் அது மனித அனுபவம் சார்ந்த பொருளைத்தான் கொடுக்கும்.

அதே சொல் இறை அனுபவம் சார்ந்த விசயத்தை சொல்ல பயன்படுத்தப்பட்டிருந்தால் 

அந்த சொல்லுக்கு மனித அனுபவம் சார்ந்த பொருளைக் கொடுக்கக் கூடாது.

உதாரணத்திற்கு விசுவாசப் பிரமாணத்தில்

"கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.

இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்''

என்று  சொல்கிறோம். 

மனித அனுபவத்தில் ஒரு தாயின் வயிற்றில்  உற்பத்தி ஆன  குழந்தை உலகிற்குள் வருவதைத் தான் பிறப்பு என்ற சொல்லால் குறிக்கிறோம்.

அதுவரை இல்லாத குழந்தைதான் உற்பவித்து  பிறக்கிறது.

"என்னுடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் கழித்துதான் நான்  பிறந்தேன்"

என்று நான் சொன்னால், நான் குறிப்பிட்ட ஐந்து ஆண்டுகளும்   நான் இல்லை.

இது நமது அனுபவ எல்லைக்கு உட்பட்டது.

ஆனால் இறை அனுபவத்தில்,

"இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்''என்ற சொற்றொடருக்கு நமது அனுபவ பொருளைக் கொடுக்கக் கூடாது.

கொடுத்தால் 'பிறக்கும் வரை சுதன் இல்லை' என்ற பொருள் வரும்

ஆனால் நமது விசுவாசப்படி தந்தையைப் போலவே சுதனும் 
துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

துவக்கமும் முடிவும் இல்லாத தந்தையின் மகன்தான் துவக்கமும் முடிவும் இல்லாத இறைமகன் இயேசு.

மகன் என்பதைக் குறிக்க 'பிறந்தார்'  என்ற வார்த்தைதான் நமது மொழியில் உள்ளது.

அது இறைவனுக்கு பயன்படுத்தப்படும் போது அதை மனித அனுபவத்தில் புரிந்து கொள்ளக் கூடாது.

புரிகிறதா?"

"புரிகிறது. மனித அனுபவத்தில் தாயும் தந்தையும் இல்லாமல் குழந்தை பிறக்க முடியாது.

ஆனால் இறை அனுபவத்தில் இயேசுவுக்கு தேவ சுபாவத்தில் தாய் இல்லை. மனித சுபாவத்தில் தந்தை இல்லை.

மனித சுபாவத்தைப் 
 பொருத்தமட்டில் இயேசு அன்னை மரியாள் வயிற்றில் மனுவுரு எடுக்கும் வரை அவருக்கு மனித சுபாவம் இல்லை.

ஆனால் தேவ சுபாவத்தில் அவர் நித்தியர்.

அவர் தந்தையின் மகன் என்பதை குறிக்க மட்டுமே 'பிறந்தார்' என்ற சொல்  பயன்படுத்தப்படுகிறது, அதன் அகராதி அர்த்தத்தில் அல்ல.

இப்போது சுதந்திரம் என்ற சொல்லுக்கு வாருங்கள்."

",மனித அனுபவப்படி ஒருவனுக்கு சுதந்திரம் இருக்கிறது என்றால் அவன் தனது விருப்பப்படி நினைக்கலாம், பேசலாம், செயல்படலாம்.

அப்பா மகனைப் பார்த்து,

"இன்று உனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன்.

 உனது விருப்பப்படி எங்கே வேண்டுமானாலும் போய் வரலாம்"

 என்று கூறினால், மகன் எங்கு சென்றாலும் அவனைக் கடிந்து கொள்ள மாட்டார்.

ஆனால் இறைவன் கொடுத்திருக்கும் சுதந்திரத்திற்கு இந்த பொருள் இல்லை.

கடவுள் மனிதனை அவரை அறிந்து, நேசித்து, அவருக்கு சேவை செய்து, அவரோடு நித்திய காலம் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு படைத்தார்.

கடவுள் தனது அன்பின் விளைவாக மனிதனை ஒன்றும் இல்லாமையிலிருந்து  படைத்தார்.

மனிதன் கடவுளை அறிந்து நேசித்து அவருக்காக வாழும் வாழ்வை ஆன்மீக வாழ்வு என்கிறோம்.

 ஆன்மீக வாழ்வை ஒழுங்காக வாழ்ந்தால்தான் அவனுக்கு இறைவனோடு வாழும் பேரின்ப வாழ்வு கிடைக்கும்.

இதற்கு கடவுளின் அருள் தேவை.

நமது ஆன்மீக வாழ்வுக்கான அருளை கடவுளே நிறைய தருகிறார்.

அவ்வருளைப் பயன்படுத்தி தனது முயற்சியால் நித்திய பேரின்ப வாழ்வை ஈட்ட வேண்டும்.

ஆண்டவர் மனிதனைப் பார்த்து,

"மகனே,  நீ என்னை அறிந்து, 
என்னை நேசித்து,
எனக்கு சேவை செய்து,
 என்னோடு நித்திய காலம்  மோட்சத்தில் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் உன்னைப் படைத்திருக்கிறேன்.

நீ  என்னை நேசிக்க வேண்டும்.
அதோடு உன்னை நேசிப்பது போல உனது அயலானையும் நேசிக்க வேண்டும்.

 நீ என்னுடைய இந்த கட்டளைகளைக் கடைப் பிடித்தால்  முடிவில்லா காலம் நீ என்னோடு  பேரின்பத்தில் வாழலாம்.

கடைப் பிடிக்காவிட்டால்  நித்திய பேரின்ப வாழ்வு கிடைக்காது.

உனக்குப்  பரிபூரண சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறேன்.

உனது சுதந்திரத்தைப் பயன்படுத்தி நித்திய பேரின்ப வாழ்வை நீ தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

 நீ எனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

 நீ உனது சுதந்திரத்தை பயன்படுத்தி எனது விருப்பத்தை நிறைவேற்று.

நிறைவேற்றினால் என்றென்றும் என்னோடு வாழ்வாய்.

அந்த வாழ்வுக்குப் பெயர் மோட்சம்.

நிறைவேற்றாவிட்டால் நானில்லாமல் (without me) வாழ்வாய்.

அந்த வாழ்வுக்குப் பெயர் நரகம்."

என்கிறார்."

"இதற்குப் பெயர் தான் சுதந்திரமோ?"

(தொடரும்)

லூர்து செல்வம்

No comments:

Post a Comment