Saturday, August 27, 2022

''அப்போது நீ பேறுபெற்றவன். ஏனெனில், உனக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை"(லூக்.14:14)

''அப்போது நீ பேறுபெற்றவன். ஏனெனில், உனக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை"
(லூக்.14:14)

"தாத்தா,     நாம் விருந்து நடத்தும்போது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரைக் கூப்பிட வேண்டும் என்று இயேசு கூறுகிறாரே, ஏன்."

'', பதிலைத்தான் அவரே விட்டாரே, 
''ஏனெனில், நமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை"

''அதைத்தான் ஏன் என்று கேட்கிறேன். நமக்கு எதுவும் தர முடியாதவர்களை ஏன் விருந்துக்கு அழைக்க வேண்டும்?''

",ஒன்றுமில்லாமல் இருந்த நம்மை படைத்தவர் யார்?"

"கடவுள்."

'',அவர் நம்மை படைக்கும் முன் நாம் இல்லை. நம்மை முழு மனிதனாக படைத்தவர் அவர். அப்படியானால் நாம் முழுமையாக யாருக்கு சொந்தம்?"

"நாம் முழுமையாக கடவுளுக்குதான் சொந்தம்."

",அப்படியானால் நாம் யாருக்காக வாழ வேண்டும்?"

"நாம் முழுமையாக கடவுளுக்குதான் சொந்தமாக இருப்பதால் நாம் முழுமையாக கடவுளுக்காகத்தான் வாழ வேண்டும்.''

",மிக முக்கியமான வார்த்தை 'முழுமையாக'. .000001 சதவீதம் கூட அவரை தவிர வேறு யாருக்காகவும்,

 நமக்காகவும் கூட,

 வாழ நமக்கு உரிமை இல்லை.

நாம் மூச்சு விடுவது கூட அவருக்காகத் தான்.''

" நமது அயலானை நேசிக்க வேண்டும்,

 அவனுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என்று அவரே கூறியிருக்கிறாரே."

', ஆம், கூறியிருக்கிறார். பிறரை நேசிப்பதும் அவருக்காகத்தான், அவருடைய படைப்பு 
என்பதற்காகத்தான்.

''என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்று ஆண்டவரே கூறியிருக்கிறார்.

நமது கடமை கடவுளை அறிந்து, அவரை நேசித்து, அவருக்கு சேவை செய்து அவரோடு நித்திய காலம் விண்ணுலகில் வாழ்வதுதான்.

நாம் கடவுளை நேசிக்க வேண்டும், அவருக்காக நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

அவருக்கு சேவை செய்ய வேண்டும், அவருக்காக நமது அயலானுக்கும் சேவை செய்ய வேண்டும்.

நமது அயலானையும் நேசிக்கும்போது கடவுளையே நேசிக்கிறோம்.

நமது அயலானுக்கும் சேவை செய்யும்போது கடவுளுக்கே சேவை செய்கிறோம்.

கோவில் உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டு 
சாமியாரிடம் சென்று,

"நான் உண்டியலில் போட்ட காணிக்கையை திரும்பி தாருங்கள்" என்று கேட்கலாமா?"

".பைத்தியக்காரன்தான் கேட்பான்."

",நமது அயலானுக்கு சேவை செய்வது கடவுளுக்கு காணிக்கை போடுவது போல.

போட்ட காணிக்கையை திரும்பி கேட்பது,

உனது சொற்படி,

பைத்தியக்காரத்தனம்."

"இப்போது புரிகிறது. பிறருக்கு சேவை செய்வது கடவுளுக்கு சேவை செய்வது போல.

 பிறருக்கு செய்த சேவையை திரும்பவும் அவரிடமிருந்து எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்."

",பைத்தியக்காரனாக செயல்படாதே என்று தான் இயேசு சொல்கிறார்.

உனக்கு பதிலுக்கு பதில் தர முடியாதவர்களுக்கு கொடு என்று சொல்கிறார்.

கொடுப்பதை இறைவனது மகிமைக்காக கொடுக்க வேண்டும்.

பதிலுக்குப் பதில் செய்வார்கள் என்று எதிர்பார்த்து விருந்து கொடுத்தால் அதற்குப் பெயர் விருந்து அல்ல, கடன்.

நாம் வாழ்வது இறைவனது மகிமைக்காகத்தான்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment