''சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்தாய்: ஆதலால் உன்னைப் பெரியவற்றுக்கு அதிகாரியாக்குவேன்."
(மத்.25:23)
ஆண்டவர் கூறிய உவமையில்
பயணம் செல்ல இருந்த ஒருவன் தன் ஊழியரை அழைத்துத் தாலந்துகளைக் கொடுத்துச் சென்றது போல,
கடவுள் மனிதனை உலகில் படைக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான ஆன்மீக வரத்தைக் கொடுத்திருக்கிறார்.
ஒவ்வொருவரும் இறைவனால் தனக்கு தரப்பட்ட ஆன்மீக வரத்தில் வளர கடமைப்பட்டிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு, அசிசி நகர் பிரான்சிஸ்கு ஏழ்மையின் மீது பற்றைக் கொடுத்தார்.
ஏழ்மையின் மீது அவருக்கு இருந்த பற்றை வளர்த்தார்.
இந்த பற்றுதான் அன்று மக்களிடையே இருந்த பண ஆசையின் விளைவாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த திருச்சபைக்கு அவரால் நல்லது செய்ய முடிந்தது.
அன்னைத் தெரசாளுக்கு நோயாளிகளுக்கு உதவும் ஆர்வத்தைக் கொடுத்தார்.
இந்த ஆர்வத்தால்தான் தெருக்களில் தொழு நோயால் இறந்து கொண்டிருந்தவர்களுக்கு சேவை செய்து அவர்களை விண்ணக வாழ்வுக்கு அனுப்ப முடிந்தது.
சவேரியாருக்கு வேத போதக ஆர்வத்தைக் கொடுத்தார்.
கடவுள் கொடுத்த ஆர்வத்தை வளர்த்து உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவித்தார்.
இந்த வேத போதகரின் உடல் இன்று வரை அழியாமல் இந்தியாவில்தான் இருக்கிறது.
சிறுமலர் தெரெசாளுக்கு Convent compound எல்கைக்குள் இருந்து கொண்டே ஆன்மாக்களை மனந்திருப்பும் ஆர்வத்தைக் கொடுத்தார்.
சவேரியாருக்கு நிகராக தனது செபத்தின் மூலம் ஆன்மாக்களை மனம் திருப்பினார்.
பர்ண ஞானம் அல்போசாளுக்கு துன்பத்தில் கடவுளை காணும் ஆர்வத்தைக் கொடுத்தார்.
இந்த ஆர்வம் தான் அவளைப் புனிதையாக்கியது.
சுவாமி ஸ்டெய்னுக்கு ஒடுக்கப்பட்டோருக்காக உழைப்பதில் ஆர்வத்தைக் கொடுத்தார்.
இவ்வாறு உழைத்ததற்காக அவர் கைது செய்யப்பட்ட போதும் உழைப்பை கைவிடவில்லை.
அவரது மரணம் ஒரு வேத சாட்சிக்கு உள்ள மரணம்.
இதேபோன்று எல்லா மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு வரத்தைக் கொடுத்திருப்பார்.
வரத்தைப் பெற்றவர்கள் எவ்வளவு சிறிய வரமாக இருந்தாலும் அதில் வளர வேண்டும்.
ஆண்டவர் கூறிய உவமையில் ஐந்து தாலந்துகளைப் பெற்றவன் அவற்றைப் பத்தாக ஆக்கியது போலவும்,
இரண்டு தாலந்துகளைப் பெற்றவன் அவற்றைப் நான்காக ஆக்கியது போலவும்,
நமக்கு கிடைக்கும் வரங்களில் வளர வேண்டும்.
சிறியவற்றில் நாம் நம்பிக்கைக்கு உரியவர்களாக உரியவர்களாக இருந்தால்
மிகப் பெரிய விண்ணக சாம்ராஜ்யத்தில் நமக்கு இடம் கிடைக்கும்.
புனித அசிசி நகர் பிரான்சிஸ்கு
புனித கல்கத்தா தெரசா
புனித சவேரியார்
புனித சிறுமலர் தெரெசா
புனித அல்போன்ச
சுவாமி ஸ்டெய்ன்
ஆகியோருக்கு மட்டுமல்ல
நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு வரத்தை கடவுள் தந்திருக்கிறார்.
அதை அவருக்காகவே பயன்படுத்துவது நமது கடமை.
பத்து கோடிகளுக்கு அதிபதி ஒரு கோடியை ஏழைகளுக்கு கொடுத்தால் எவ்வளவு சன்மானம் கிடைக்குமோ,
அதே சன்மானம் பத்து ரூபாய் மட்டும் உள்ளவன் ஒரு ரூபாயை ஏழைகளுக்கு கொடுத்தால் கிடைக்கும்.
கொடுக்க எதுவுமே இல்லாதவன் கூட ஆறுதலாக கொடுக்கும் ஒரு வார்த்தைக்கும் விண்ணகத்தில் சன்மானம் உண்டு.
நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது என்ன பாடத்தை நன்கு படித்தால் நமக்கு அரசில் பெரிய பதவி கிடைக்கும் என்பதை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து படிக்கிறோம்.
அதே முயற்சி நமது ஆன்மீகத்திலும் இருக்க வேண்டும்.
தேவ அழைத்ததில் ஆர்வம் கொண்ட துறவிகள் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று சிறிய மாணவர்களுக்கு தங்கள் துறவற சபையைப் பற்றி கூறி மாணவர்களை அழைப்பதை பார்த்திருக்கிறோம்.
அவர்களின் அழைப்பை ஆராய்ந்து, அதற்குரிய தகுதி தங்களிடம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்து,
தகுதி இருந்தால் அதை அவர்களில். வளர்க்க வேண்டும்.
ஞானோபதேச வகுப்பில் பேசிக் கொண்டிருந்த ஒரு மாணவனை Sister அழைத்து,
"உன்னைப் பேச வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.
ஆண்டவரைப் பற்றி மட்டுமே பேசு.
உனது பேச்சுக்கு சன்மானம் உண்டு."
அன்போடு Sister சொன்ன வார்த்தைகளை மாணவன் ஏற்றுக் கொண்டான்.
அதன் பிறகு பாட நேரத்தில் பேசுவதை விட்டு விட்டான்.
மற்ற நேரங்களிலும் அரட்டை அடிப்பதை விட்டு விட்டான்.
ஆண்டவரைப் பற்றியே பேச ஆரம்பித்தான்.
இறை அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது.
எழுத ஆசை உள்ளவர்கள் கடவுளை பற்றியே எழுதுவோம்.
பாட ஆசைப்படுகிறவர்கள் கடவுளை பற்றியே பாடுவோம்.
கேட்க ஆசைப்படுகிறவர்கள் கடவுளை பற்றியே கேட்போம்.
பார்க்க முடிந்தவர்கள் இயற்கையில் இறைவனின் வல்லமையைப் பார்ப்போம்.
நமது ஐம்பொறிகளும் இலவசமாகவே நமக்கு தரப்பட்டுள்ளன. அவற்றை இறைவனுக்காகவே பயன்படுத்துவோம்.
இறைவனுக்காக மட்டுமே வாழ்வோம்.
என்றென்றும் இறைவனோடே வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment