Wednesday, August 17, 2022

நண்பா, திருமண உடையின்றி எப்படி உள்ளே நுழைந்தாய்?"(மத்.22:12)

"நண்பா, திருமண உடையின்றி எப்படி உள்ளே நுழைந்தாய்?"
(மத்.22:12)

இயேசு விண்ணரசைத் தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்த அரசனோடு ஒப்பிடுகிறார்.

விருந்துக்கு உலகோர் அனைவரும் அழைக்கப் பட்டிருக்கின்றனர்.

ஒரு நிபந்தனை, ஞானஸ்நானம் என்ற திருமண உடை அணிந்து வரவேண்டும். 

ஞானஸ்நானத்தின்போது நமது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.

அந்த பாவம் அற்ற நிலையில் தான் விருந்துக்கு வர வேண்டும்.
பாவத்தோடு வருகிறவர்கள் திருமண உடை இன்றி வருகின்றார்கள்.

திருமண உடை இன்றி வருகின்றவர்கள் விருந்துக்கு அழைத்தவரை அவமானப்படுத்துகிறார்கள்.

அதற்குரிய விளைவை சந்திப்பார்கள்.

நாம் ஒவ்வொரு முறை திருப்பலிக்குச் செல்லும் போதும் இயேசுவால் அளிக்கப்படுகிற திருவிருந்துக்குதான் செல்கிறோம்.

செல்லும்போது ஞானஸ்தானத்தின் போது பெற்ற திருமண உடையில் தான்,

அதாவது பாவம் இல்லாத நிலையில் தான்,

செல்ல வேண்டும்.

திருமண உடை இல்லாமல் பாவத்தோடு சென்று திரு விருந்தில் கலந்து கொள்பவர்கள் திரு விருந்து அளிப்பவரைப் அவமானப்படுத்துகிறார்கள்.

திரு விருந்துக்கு அழைக்கும் இயேசு தன்னையே நமக்கு விருந்தாக அளிக்கிறார்.

நமது ஆன்மீக உணவாக அவர் நம்முள் வரும்போது நமது ஆன்மா பாவமாசு இன்றி பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

இயேசு பரிசுத்தமானவர்.

பரிசுத்தமானவர் தங்க பாவஅசுத்தம் நிறைந்த உள்ளமாகிய அறையை திறந்து விடுபவர்கள் அவரை அவமானப்படுத்துகிறார்கள்.

ஆண்டவரை பாவத்தோடு வரவேற்பதே ஒரு பாவம்.

பாவ நிலையில் உள்ளவர்கள் திருப்பலிக்கு வருமுன்னால் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து தங்களது ஆன்மாவை பரிசுத்தமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

பரிசுத்தமான இருதயத்தோடு திரு விருந்து அருந்த வேண்டும்.

பரிசுத்தமான இருதயத்தோடு திரு விருந்து அருந்துபவர்கள்

நிலை வாழ்வில் என்றென்றும் அவரோடு இணைந்து வாழ்வார்கள்.

பரிசுத்தமாய் வாழ்வோம்.

பரிசுத்தரோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment