Thursday, August 25, 2022

''விழிப்பாயிருங்கள்: ஏனெனில், நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது." ( மத்.25:13)

''விழிப்பாயிருங்கள்: ஏனெனில், நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது." ( மத்.25:13)

இயேசு விண்ணரசை, மணமகனை எதிர்கொள்ளச் சென்ற பத்துக் கன்னியருக்கு  ஒப்பிடுகிறார்.

மணமகன் வந்த போது பத்து பேரில் ஐவர் தயாராக  இருந்தார்கள். ஆனால் ஐவர் தயாராக  இல்லை.

தயாராயிருந்தோர் அவருடன் மணவீட்டில் நுழைந்தனர். 

தயாராக  இல்லாதவர்கள்  மணவீட்டில் நுழைய முடியவில்லை.

மணவீடு விண்ணகம். இயேசு மணமகன். 

நாம் அவரது வருகைக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள்.

இயேசு நம்மை விண்ணகத்திற்கு அழைக்க எப்போது வருவார் என்று நமக்குத் தெரியாது.

நமது மரணம்தான் நமக்கு இயேசுவின் அழைப்பு

எப்போது மரணம்  வரும் என்று நமக்குத் தெரியாது.

வரும்போது நாம் விண்ணகம் செல்ல தயார் நிலையில் இருக்க வேண்டும்.

 அதாவது பாவம் இன்றி, புனிதமாக்கும் அருள் (Sanctifying grace) நிலையில்    இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்கள் மட்டுமே விண்ணகம் செல்வார்கள்.


சுய நினைவில் நல்ல 
சுகத்தோடு இருக்கும்போதே நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து ஆன்மாவை புனிதமாக்கி எப்போதும் புனித நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மரணம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மெத்தனமாக இருக்கக் கூடாது.

எப்போது மரணம் வரும் என்று நமக்குத் தெரியாது.

அடுத்த  வினாடியே வரலாம்.

அடுத்த  மணியில் வரலாம்.

அடுத்த  நாள் வரலாம்.

அடுத்த  வருடம் வரலாம்.

எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

ஆனால் கட்டாயம் வரும்.

ஆகவே நாம் எப்போதும் புனித நிலையில் இருக்க வேண்டும்.

மருத்துவர் ஒருவர் அவரிடம் வந்த நோயாளிக்கு ஊசி போடுவதற்காக மருந்து எடுத்துக் கொண்டிருக்கும் போது Heart attack வந்து உடனே இறந்து விட்டார்.

மருத்துவம் பார்ப்பதையே தொழிலாக கொண்ட அவருக்கு மருத்துவம் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.

நண்பர் ஒருவர் Heart attack வந்த மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மனைவி பிழைத்துக் கொண்டார்கள், ஆனால் அவர் மருத்துவமனையில் இருக்கும் போதே Heart attack வந்து
 இறந்து விட்டார்.

நாம் எப்போதும் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் நாம் மரணிக்கும் நேரத்தை நமக்கு முன் அறிவிக்கவில்லை.

எப்போதும் கடவுள் நினைவிலையே இருப்பவர்கள் மரணத்துக்கு அஞ்ச மாட்டார்கள்.

எப்போதும் புனித நிலையில் வாழ்வோம்.

இருந்தாலும் இறைவனிடமே,
இறந்தாலும் இறைவனிடமே.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment