"தாத்தா, பெரியவன் பணியாளனாய் இருக்கட்டும்" என்று இயேசு கூறுகிறார்.
பெரியவன் என்றால் யார்?"
", இயேசு மறைநூல் அறிஞரையும், பரிசேயரையும் பற்றிப்
பேசும்போதுதான் பெரியவன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.
'அவர்கள் சொல்கிறபடி நடங்கள், நடக்கிறபடி நடக்காதீர்கள்' என்று சொல்கிறார்.
ஆகவே மற்றவர்களை வழி நடத்தும் அதிகாரத்தில் உள்ளவர்களைத்தான் இது குறிக்கும்.
அரசியலைப் பொறுத்த மட்டில் நம்மை ஆளும் அமைச்சர்கள் பெரியவர்கள்.
நிர்வாக அமைப்புகளில் நிர்வாகி பெரியவர்.
பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் பெரியவர்.
வகுப்பில் வகுப்பு ஆசிரியர் பெரியவர்.
குடும்பத்தில் பெற்றோர் பெரியவர்கள்.
நமது திருச்சபையில் நம்மை வழி நடத்தும் ஆயர்களும், குருக்களும் பெரியவர்கள்.
பணியாளன் மற்றவர்களுக்கு சேவை செய்பவன்."
"வழி நடத்தும் தலைவர் எப்படி பணியாளனாக இருக்க முடியும்?"
", நீ இப்படிக் கேட்பாய் என்று தெரிந்துதான் நம்மைப் படைத்த கடவுளே மனிதனாகப் பிறந்து, தனது வாழ்க்கை மூலம் நமக்கு முன்மாதிரிகை காண்பித்தார்.
அவர் உலகில் மனிதனாகப் பிறந்து வாழ்ந்தது 33 ஆண்டுகள்.
அதில் முதல் 30 ஆண்டுகள் தனது அன்னைக்கும், சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து நடந்தார்.
அவர் கடவுள். அவர் கீழ்ப் படிந்து நடந்தது இரண்டு மனிதர்களுக்கு.
அவர் நற்செய்தி அறிவித்த மூன்று ஆண்டுகளும் மற்றவர்களுக்கு சேவை செய்து தான் வாழ்ந்தார்.
புனித வியாழனன்று, தனது சீடர்களின் கால்களைக் கழுவினார்.
பாடுகளின் போது தன்னைத் துன்புறுத்தியவர்கள் சொன்னபடி நடந்ததோடு, அவர்கள் கொடுத்த அடிகளையும், அவமானங்களையும் எதிர்த்துப் பேசாமல் ஏற்றுக் கொண்டார்.
சிலுவையை தோளில் ஏற்றிய போது ஏற்றுக்கொண்டு கல்வாரி மலை வரை அதை சுமந்து சென்றார்.
ஆடைகளை உறிந்த போது தடுக்கவில்லை.
சிலுவையில் படு என்றவுடன் படுத்தார்.
கைகளை விரி என்றவுடன் விரித்தார்.
கைகளிலும், கால்களிலும் ஆணிகளை அறையும்போது தடுக்கவில்லை.
இறந்த அவர் உடலை சிலுவையிலிருந்து இறக்கும் வரை சிலுவையிலேயே தொங்கினார்.
மனிதனாய் உரு எடுத்த நாளிலிருந்து மரிக்கும் வரை தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு சேவை செய்துதான் வாழ்ந்தார்.
அன்பின் குணம் என்ன தெரியுமா?"
"சொல்லுங்கள்."
",அன்பு என்பது மனதில் உள்ள உருவம் இல்லாத உணர்வு.
அது வெளிப்படும் போது பணிச் செயல்களாத உருவம் எடுக்கும்.
இதை உலக அனுபவத்திலும் பார்க்கிறோம்.
ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாய் தனது அன்பினால் குழந்தைக்கு என்னவெல்லாம் செய்கிறாள் என்பதை கவனித்திருக்கிறாயா?"
"அனுபவித்தேயிருக்கிறேன்.
அதை குளிப்பாட்டுவது,
அதற்கு உணவு ஊட்டுவது,
உடை உடுத்துவது,
வெளிக்கு இருந்தால் கால் கழுவி விடுவது,
இடுப்பில் எடுத்துச் செல்வது
இது போன்ற ஆயிரக்கணக்கான பணி செயல்களை குழந்தைக்கு செய்வது தாய் தானே."
",வழி நடத்தும் தலைவர் பணியாளனாய் மாறுவது எப்படி என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.
கடவுள் எப்படிப்பட்டவர்?"
"அன்பே வடிவான சர்வ வல்லவர்."
", கடவுள்தான் அன்பு. God is love.
மனித தாய் அன்பு உள்ளவள், அன்பே உருவானவள் அல்ல.
அன்பு உள்ள மனிதத் தாய் தான் பெற்ற குழந்தைக்கு பணி செயல்கள் செய்யும்போது,
அன்பே உருவான கடவுள் தான் படைத்த மனிதர்களுக்கு எவ்வளவு சேவை செய்வார்?
படைத்த வினாடியிலிருந்து ஒவ்வொரு வினாடியும் தான் படைத்த மனிதனை,
பெற்றதாய் தன் குழந்தையை கவனிப்பதை விட,
அளவில்லாத மடங்கு அதிகமாய்,
கவனித்து வருகிறார் என்பது உனக்கு தெரியுமா?"
"நானே அவரது கவனிப்பை அனுபவித்து கொண்டு தானே இருக்கிறேன்.
தாய் எனக்கு உணவு தரலாம்.
ஆனால் உணவு என்ற ஒன்றை படைத்தவர் கடவுள் தானே.
தாய் தந்த உணவு சீரணிக்கவும்,
என் உடம்பில் சேரவும், நான் வளரவும் உதவுவது கடவுள் தானே.
எனது வாழ்வில்
என்னெள்ள நடக்க வேண்டும்,
எப்படி எப்படி நடக்க வேண்டும், எப்பெப்போ நடக்க வேண்டும்,
எங்கெங்கே நடக்க வேண்டும் என்று நித்திய காலமாய்த் திட்டமிட்டு அதன்படி என்னை வழிநடத்தி வருபவர் அவர்தானே.
பாவம் தவிர மற்றெல்லா நிகழ்வுகளையும் திட்டமிடுவர் அவர்தான்.
நான் பாவத்தில் விழுந்து விட்டால்
அதிலிருந்து என்னை மீட்கத் திட்டமிடுவர் அவர்தான்.
நம் வாழ்வில் தற்செயலாக எதுவும் நடப்பதில்லை.
கீழே விழச் செய்பவரும் அவரே, தூக்கி விடுபவரும் அவரே.
எல்லாம் நமது ஆன்மீக நன்மைக்கே.
இவை எல்லாம் ஒரு தாய் போல கடவுள் நமக்கு செய்து கொண்டிருக்கும் பணி.
அளவில்லாத அன்பின் வெளிப்பாடு."
",நமது தலைவர்களும்
அரசியலிலும் சரி,
சமூகத்திலும் சரி,
குடும்பத்திலும் சரி,
திருச்சபையிலும் சரி,
நம்மைப் படைத்தவரின்
முன் மாதிரிகையை பின்பற்றி தங்கள் அன்பை தங்கள் பொறுப்பில் உள்ளவர்களுக்கு செய்யும் சேவையில் வெளிப்படுத்த வேண்டும்.
அன்பு பணி செய்வது மட்டுமல்ல, தவறு செய்தவர்களை மன்னிக்கும்,
தலைவருக்கு உரிய அதிகாரத்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டு தங்களுக்குக் கீழ் உள்ளவர்களை பயங்காட்டிக் கொண்டிருக்காது.
நம்மைப் பொறுத்தமட்டில் நமது தலைவர்கள் சொல்படி,
அவர்கள் காட்டும் வழியில் நடக்க வேண்டும்.
மனித பலவீனத்தால் அவர்கள் ஏதாவது தவறு செய்தால் அதை நாம் பின்பற்றக் கூடாது.
இது இயேசு நமக்குக் கூறும் புத்திமதி.
சாமியார் ஞாயிற்றுக் கிழமை கோவிலில் பிரசங்கம் வைத்துக் கொண்டிருக்கும் போது சிலர் பிரசங்கத்தைக் கவனிப்பதற்குப் பதில் சாமியாரை விமர்சித்துக் கொண்டிருப்பார்கள்.
Treatment க்காக மருத்துவரிடம் செல்பவர்கள் அவர் மருத்துவ ஆலோசனை கூறும்போது ஆலோசனையைக் கவனிக்க வேண்டும்.
மருத்துவரை மனதுக்குள்ளே
விமர்சித்துக் கொண்டிருக்கக் கூடாது.
ஆலோசனையைக் கவனிக்கா விட்டால் எப்படி மருந்து சாப்பிட முடியும்? எப்படி நோய் குணமாகும்?
பிரசங்கத்தைக் கவனிக்கா விட்டால் எப்படி இறைவாக்குப்படி வாழ முடியும்?
இறைவாக்குப்படி வாழாவிட்டால் எப்படி விண்ணகம் செல்ல முடியும்?
ஆண்டவர் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருக்கும்போது சாதாரண மக்கள் நற்செய்தியை கவனித்துக் கொண்டிருப்பார்கள்.
பரிசேயரும், சதுசேயரும், மறை நூல் அறிஞர்களும் அவரது சொற்களை குறை சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.
ஆண்டவரைச் சிலுவையில் அறையக் காரணமாக இருந்தவர்களும் அவர்கள்தான்.
அவர்களது வேலையை நாம் செய்யக் கூடாது.
நம்மை வழி நடத்தும் நமது ஆன்மீகத் தலைவர்கள் நம்மிடையே ஆன்மீக பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது பணியை ஏற்று, அவர்களது சொற்படி நடப்போம்.
நிலை வாழ்வை அடைவோம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment