Monday, February 11, 2019

Minimum marks. வாங்கி Pass பண்ணினால் போதுமா?

Minimum marks. வாங்கி Pass பண்ணினால் போதுமா?
*********************************

"சார் ஒரு சந்தேகம்."

"சரி, கேளு."

"நம் ஆண்டவர் நமக்கு செபிக்கக் கற்றுத் தந்தபோது

'விண்ணகத்திலிருக்கும் எங்கள் தந்தையே ' என்று

தந்தையோடு நேரடியாகத்தான் செபிக்கக் கற்றுக்கொடுத்தார்.

மேலும்,

'உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் தந்தையிடம் எதைக் கேட்டாலும், அதை என் பெயரால்
உங்களுக்குத் தருவார்.' (அரு.16:23)

என்று இயேசுவே கூறியிருக்கிறார்.

நாம் ஏன் மரியன்னை வழியாகவும், மற்ற புனிதர்கள் வழியாகவும் இறைவனிடம் கேட்கிறோம்? "

"இப்பொ நான் ஒரு கேள்வி கேட்கிறேன்."

"என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு அப்புறம் கேள்வி கேளுங்களேன்."

"உன் கேள்விக்குப் பதில் உனக்கே தெரியும்.அதை ஞாபகப்படுத்தவே
.என் கேள்வி."

"சரி கேளுங்க."

"இரண்டு, மூன்று பேர்என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."ன்னு சொன்னது யாரு? "

"ஆண்டவர்தான்."

"அப்போ நீ தனியா இருக்கும்போது உங்கூட இருக்க மாட்டாரா? "

"நீ தனியா இருக்கும்போது உங்கூட இருக்க மாட்டேன்னு அவர் சொல்லவே இல்லையே."

"மாதா மற்றும் புனிதர்கள் மூலமா  செபிக்கக்கூடாதுன்னும் அவர் சொல்லவே இல்லையே."

"சார்,  நீங்க. கேள்விக்குப் பதில் சொல்றது மாதிரி தெரியல. ஒரு கேள்வியை இன்னொரு கேள்வி கொண்டு மடக்கிறது மாதிரி இருக்கு."

"இல்லை. உனக்குப் புரிய வைக்கதான் பதில்கேள்வி.

நாம் தனியா இருக்கும்போதே நம்மிடம் இருக்கும் இயேசு

ஏன் 'இரண்டு, மூன்று பேர்என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."ன்னு சொன்னாறு? "

"நாம் தனிப்பிராணி இல்லை, சமூகப்பிராணி என்பதை உணர்த்ததான்."

"அதாவது? "

"கடவுள் கோடிக்கணக்கான சம்மனசுக்களைப் படைத்திருந்தாலும், ஒரு சம்மனசுக்கும் இன்னொரு  சம்மனசுக்கும் இடையில் தொடர்பு இல்லை.

ஆனால் முதல் முதல்ல இரண்டு பேரைப் படைக்கும்போது குடும்பமா படைச்சாரு.

அவர்களை இணைத்துப் படைத்தார்.

தான் இணைத்தத யாரும்  பிரிக்கக்கூடாதுன்னுவேற சொல்லியிருக்காரு.

அவங்கமட்டுமல்ல அவங்க வயித்துலயிருந்து பிறந்த மனித இனம் முழுவதும் ஒரே குடும்பம்தான்.

இரத்த உறவுள்ள குடும்பம்.

மனித இனம்னு  சொல்லும்போது ஆதாம் ஏவாளிலிருந்து உலக முடிவுவரை உள்ள வரைக்கும் உள்ள அனைவரையும் குறிக்கும்.

மனித இனம் முழுவதும்  ஒரே குடும்பம் என்பதால்தான் எல்லோரும் ஒருவரை ஒருவர் நேசிக்கவும்,

ஒருவருக்கொருவர் உதவி செய்யவும்,

ஒருவருக்காக ஒருவர் செபிக்கவும், "

"திரும்பம் சொல்லு."

"ஒருவருக்காக ஒருவர் செபிக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.

இயேசுகூட மனித சுபாவத்தில் நமது குடும்பம்தான்.

நமது இரத்த உறவுதான்.

அதனால்தான் நமக்காகத் தந்தையிடம் செபித்தார்,

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தன் உயிரையே பலியாகக் கொடுத்தார்.

இந்தக் குடும்ப உணர்வை உணர்த்தவே

'இரண்டு, மூன்று பேர்என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்'

எஎன்றார்.

ஒரே நிபந்தனை 'அவர்பெயரால்' கூடியிருக்கவேண்டும்."

"மோட்சத்தில உள்ளவங்க யார் குடும்பம்?"

"அவங்களும் ஆதாம் ஏவாள் பிள்ளைகள்தானே. அவர்களோடு உத்தரிக்கிற ஆன்மாக்களும் நமது குடும்பம்தான்.

அதனால்தான் நாம் அவர்களுக்காக செபிக்கிறோம், அவர்கள் நமக்காக செபிக்கிறார்கள்."

"மோட்சத்தில் உள்ளவர்கட்காக நாம் செபிக்கலாமா? "

"அவங்கதான் மோட்சத்துக்குப் போய்ட்டாங்களே, நம்ம உதவி அவங்களுக்கு எதுக்கு.

ஆனால் அவங்க நமக்காக செபிக்கலாம்."

"அவங்கன்னா?"

"மோட்சத்தில உள்ளவங்க."

"அவங்க நமக்காக என்ன செய்யலாம்?"

"அவங்க நமக்காக செபிக்கலாம்."

"இப்ப என் கேள்விக்குப் பதில் சொல்லு.

நாம் ஏன் மரியன்னை வழியாகவும், மற்ற புனிதர்கள் வழியாகவும் இறைவனிடம் கேட்கிறோம்?"

"ஏன்னா அவங்க நம்ம குடும்பத்தச் சேர்ந்தவங்க.

அவங்க நமக்காக செபிக்கலாம்.

சார், இந்த கேள்வியைத்தான நான் உங்ககிட்டே கேட்டேன்!

பதில எங்கிட்ட வச்சிக்கிட்டே உங்ககிட்ட கேட்டிருக்கேன் பார்த்திங்களா, நான் எவ்வளவு பெரிய .........Fill in the blank yourself!"

"இப்ப நான் கேட்கிற கேள்விகளுக்கு நீ பதில் சொல்லணும்.

கடவுள் நாம கேளாமலேயே ஏன் நம்மைப் படைத்தார்?"

"கேட்கதுக்கு நாம் இல்லையே,  அதுதான் கேளாமலே படைத்தார்."

"இப்போ ஏன் 'கேளுங்கள் தரப்படும்'  என்கிறார்? "

"கொடுக்கதுக்கு அவர்ட்ட நிறைய அன்பு இருக்கு,  அருள் இருக்கு, கேட்கதுக்கு நாம இருக்கோம். அதுதான் கேட்கச் சொல்றாறு."

"நம்ம கேட்காமலேயே  படைத்த அவர் நாம்  கேட்காமலேயே ஏன் தரக்கூடாது? ''

"இந்தக் கேள்வியை நானே கேட்கணும்னு பார்த்தேன். நீங்க கேட்டிட்டீங்க. பரவாயில்லை. பதிலையும் நீங்களே சொல்லிடுங்களேன்."

"உதவி கேட்கும்போதுதான் உறவு வளர்கிறது. இது இயற்கையின் நியதி.

பிறந்த பிள்ளைக்குத் தாயின் பால் தேவைப்படுவதாலும், அதற்காக அழுவதாலும்தான் தாய், பிள்ளை உறவு வளர்கிறது.

தாய்ப்பால் இல்லாமலேயே குழந்தை வளரமுடியுமானால் அது தாயையே தேடாது.

பிள்ளைகள் தங்கள் தேவைகளை நிவர்த்தி செய்யவே பெற்றோரைத் தேடுகின்றனர்.

பெற்றோர் உதவி இன்றியே பிள்ளைகட்கு வேண்டியது கிடைத்தால் எந்த பிள்ளைப் பெற்றோரைத் தேடும்?

ஆசிரியர், மாணவர் உறவு வளரவேண்டுமானால் மாணவர்க்கு ஆசிரியர் உதவி தேவைப்படவேண்டும்.

நாமும்கூட இறைவனுடைய உதவி தேவைப்படும்போதுதானே அவரைத் தேடுகிறோம்.

கஷ்ட காலங்களில்தானே கடவுளையே நினைக்கிறோம்.

நமக்கு வேண்டியதை இறைவனிடமிருந்துதான் பெறமுடியும் என்ற நிலையில்தான் நாமும்   கேட்போம், அவரும் தருவார்.

நமது ஒவ்வொரு வினாடி வாழ்வும் இறைவன் கையில்தான்  இருக்கிறது.

ஆகவே ஒவ்வொரு வினாடி வாழ்வும் செப வாழ்வாகவே இருக்கவேண்டும்.

செபவாழ்வில் நமக்குத் துணையாய் இருப்பவர்கள் புனிதர்கள்.

நாம் புனிதர்களை வேண்டும்போதும், அவர்கள் நமக்காக வேண்டும்போதும் நமது குடும்ப உறவை நாம் வெளிப்படுத்துகிறோம்.

இவ்வாறு நமது குடும்ப உறவை நாம் வெளிப்படுத்தும்போது அதற்கான சம்பாவனை விண்ணகத்தில் காத்திருக்கும்.

இறைவனைப் பொறுத்தமட்டில் அவர் யாரையும் நம்பி நம்மைப் படைக்கவில்லை.

யாரும் நமக்காக வேண்டாவிட்டாலும் அவர் நம்மைக் காப்பாற்றுவார்.

நாம் அவரது கட்டளைகளை மீறாமல் நடந்தால் நமக்கு விண்ணக வாழ்வையும் தருவார்.

இவ்வுலகில் எந்தஅளவுக்கு அவரோடு உள்ள நெருக்கத்தை (intimacy) அதிகரிக்கிறோமோ அந்த அளவுக்கு விண்ணகத்தில் நமது சம்பாவனையின் அளவும் அதிகரிக்கும்.

இந்த நெருக்கத்தை அதிகரிக்க உதவுபவர்கள் மரியன்னையும், மற்ற புனிதர்களும்.

நாம் அவர்களிடம் வேண்டும்போது நமது மனப்பக்குவம் அதிகரிக்கிறது, சம்பாவனையும் அதிகரிக்கிறது.

Minimum marks. வாங்கி Pass பண்ணினால் போதும் என்பவர்கட்கு அவர்களது பாவமற்ற வாழ்க்கையே போதும்.

நிறைய மதிப்பெண்கள் பெற புனிதர்கள் தங்கள் வேண்டுதலால் உதவுவார்கள்.

மாதா பக்தி உள்ளவன் மாதாவைப் போலவே வாழ முயல்வான்.

அந்த முயற்சிக்கும் விண்ணகத்தில் பலன் உண்டு.

புரியுதா? "

"புரியுது."

"Just pass பண்ணி விண்ணகம் போன ஒரு ஆள் சொல்லு பார்ப்போம்."

"நல்ல கள்ளன்!"

"Very good! சாகப்போற நேரத்தில மோட்சத்துக்குள்ள நுழைந்து விட்டான்.

ஆண்டவரது இரக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டான்.

நாம் புனிதர்களைப் பின்பற்றி அவர்களைப்போல் வாழ்ந்து  மோட்சத்திற்குள் போகவேண்டும்."

"சரி, சார்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment