Wednesday, February 6, 2019

உள்ளிருந்தே கொல்லும் வியாதி.

உள்ளிருந்தே கொல்லும் வியாதி.
********************************-*******

"ஹலோ, ப்ரதர், ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறது மாதிரி தெரியுது."

"தெரியுதென்ன தெரியுது.

உண்மையிலேயே மகிழ்ச்சியாத்தான் இருக்கேன்."

"அப்படியா? என்ன விசேசம்? "

"உலகத்தில இருந்து பாவம் ரொம்ப குறைஞ்சிபோச்சி தெரியுமா? "

"என்னடா சொல்ற? "

"ஆஸ்பத்திரிக்கு நோயாளியே வராட்டா யாருக்கும் நோய் இல்லேன்னுதான அருத்தம்? "

"அதுக்கும் பாவத்துக்கும் என்ன சம்பந்தம்? "

"நேற்று பாவசங்கீத்தனத் தொட்டியில சுவாமியார் அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தார்.

நான் மட்டும்தான் பாவி.

வேற யாரும் பாவசங்கீத்தனம் செய்ய வரலிய! 

ஆனால்  எல்லாரும் நன்மை வாங்கினாங்களே.

அப்படீன்னா யாரும் பாவம் செய்யலேன்னுதான அருத்தம்? "

"ஒண்ணு தெரிஞ்சிக்கோ.

உள்ளிருந்தே கொல்லும் வியாதின்னு கேள்விப்படல? 

வியாதி உடலுக்குள்ள இருக்கும்.

அத வெளியே சொன்னா கௌரவக் குறைச்சல்னு டாக்டர்ட்ட போகமாட்டாங்க.

அது போலதான் இதுவும்."

"ஆமா என்ன! இந்த மக்கள எப்படிக் காப்பாத்தறது? "

"கடவுள்ட்ட வேண்டுவோம். நம்மால்  வேறென்ன செய்ய முடியும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment