Thursday, February 21, 2019

வாழ்வே செபம்.

வாழ்வே செபம்.
***********************-****

"செல்வம், இங்க வா, உட்கார்."

"ஏங்க, மணி 11,

இராத்திரி 11 மணி,

தூங்கவேண்டிய நேரம்,

இப்ப கையில Cell phone அ வச்சிக்கிட்டு உட்காரச் சொல்றீங்க.

படுங்க, நாளைக்குப் பகலில எழுதிக்கொள்ளலாம்."

"அடியே, கொஞ்ச நேரம்தான். நான் கேட்கிற கேள்விகட்குப் பதில் சொல்லிட்டு அப்புறம் படுத்துக்கோ."

"சரி, கேளுங்க. "

"Escapism ங்கிற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கியா?"

"கேள்விப்பட்டிருக்கனே! "

"எப்போ? எங்கே?"

"இப்போ, உங்க வாயிலிருந்துதான்."

"ஏடி, நக்கலா?"

"உண்மைதாங்க.  Escape. கேள்விப்பட்டிருக்கேன். Escapism இப்போதான் முதல் தடவை.

Escapeன்னா தப்பிச்சிறுன்னு அர்த்தம். இப்போ எதுக்கு அதப்பற்றி கேட்கிறீங்க?"

"காரணம் இருக்கு. சாத்தான் யாரை விழுங்கலாம்னு சுத்திக்கிட்டே இருக்கான்."

"அவங்கிட்ட இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கு.

Prayer. செபத்தின் வழியே ஆண்டவரிடம் திரும்பிப் பார்க்காம ஓடீரணும்."

"கொஞ்சம் விளக்கமாச் சொல்லேன்."

"சாத்தான் நம்ம விழுங்க செய்ற செயல்களில

முதல் படி நடிப்பு.

சாத்தான் ஏவாளை ஏமாற்றியபோது பாம்பு உருவத்தில்.

நம்மை ஏமாற்ற எந்த உருவத்திலும், யார்உருவத்திலும் வரும்.

இரண்டாவது படி பொய்.

பொய்யை உண்மை மாதிரி சொல்வதில் சாத்தான் கில்லாடி.

மூன்றாவது படி கவர்ச்சி.."

"கொஞ்சம் பொறு,  சாத்தான் என்னமோ நாடகம் போட்டுக்கிட்டு வர்ரத மாதிரி பேசற."

"மாதிரி இல்லீங்க,  உண்மையே அதுதாங்க. உதாரணத்திற்கு எங்கேயும் போகவேண்டாம்.

இன்று இரவு செபம் சொல்லக் கூப்பிட்டபோது என்ன சொன்னீங்க?"

"இந்த சீரியல் முடிந்ததும் சொல்வோம்னு சொன்னேன்."

"கொஞ்சம் யோசித்துப் பாருங்க

நம்முடைய  செப நேரத்த எந்த அளவு சாத்தான் சீரியல் மூலமா திருடிட்டுப் போயிருக்கான்னு புரியும்."

"நூற்றுக்கு நூறு உண்மை. இந்த சோதனையிலிருந்து தப்பிக்க ஒரேவழி செபம்தான். நமது மனதை ஆண்டவரைநோக்கி திருப்பவேண்டும்."

"இந்தச் சோதனையில் மட்டுமல்ல எந்தப் பாவத்திற்காகச் சோதனை வந்தாலும் தப்பிக்க ஒரே வழி செபம்தான்!"

"செபம் என்றால் என்ன?"

"அதை வார்த்தைகளால் புரியவைக்க முடியுமான்னு தெரியல.

ஒரு பட்டணவாசி கிராமத்திற்கு வந்தான்.

அவன்  காபி, டீ தயாரிக்க சீனி பயன்படுத்துவது வழக்கம்.

கிராமத்திலுள்ளவர்கள் 'நாங்கள் கருப்பட்டிதான் பயன்படுத்துவோம்' என்றிருக்கிறார்கள்.

பட்டணத்தான், 'கருப்பட்டியா?  அது எப்படி இருக்கும்?'

ஒரு வயதான பாட்டி ஒரு கருப்பட்டித் துண்டை எடுத்துவந்து, அவன் வாயைத் திறக்கச் சொல்லி உள்ளே போட்டுவிட்டாள்.

அவன் அதை ருசித்துவிட்டு, 'ரொம்ப நல்லா இருக்கு' என்றான்.

செபம் என்றால் என்பதை வார்த்தைகளால் விளக்குவதைவிட

புனிதர்களது செபவாழ்வு எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும்."

"புனிதர்களைப் பார்க்குமுன் நமது இயேசு ஆண்டவரின் செபவாழ்வைப் பற்றி பார்க்லாமா?"

"இயேசு இறைவன்.
Jesus is God.

இயேசு அன்பு.
Jesus is love.

இயேசு செபம்.
Jesus is prayer. "

இயேசு இறைவன்-சரி.
இயேசு அன்பு.       -சரி.

அதெப்படி இயேசு செபம், விளங்விலையே! "

"Prayer is union with God.
இறைவனோடு ஒன்றித்திருப்பதே செபம்.

Jesus is one with the Father and with the Holy Spirit in the Most Holy Trinity.

இயேசு தந்தையோடும், பரிசுத்த ஆவியோடும் ஒன்றித்திருக்கிறார்.

ஒன்றிப்பிலான பரிசுத்த தமதிரித்துவம் ஒரே கடவுள்.

நீர் ஒருவரே தூயவர்

'நீர் ஒருவரே ஆண்டவர்,

நீர் ஒருவரே உன்னதர்

பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின் மாட்சியில் உள்ளவர் நீரே!

'நீர் ஒருவரே ஆண்டவர்',

என்று சொல்லும்போது இயேசுவை மட்டுமா குறிப்பிடுகிறோம்?

அவரோடு இணைந்து ஒரே கடவுளான பிதாவையும், பரிசுத்த ஆவியையும் சேர்த்துதானே குறிக்கிறோம்.

அந்த இணைப்புதான்செபம்.

Union with God is prayer.

God Himself is Union.

Union of three Persons.

உள்ளபடியே இணைந்திருக்கும் கடவுளோடு நாம் உள்ளத்தால் இணைவதே செபம்.

எல்லா புனிதர்களும் வாழ்ந்தது செபவாழ்வு.

இறைவனுக்காக வாழப்படும் வாழ்வே செபவாழ்வு.

செபவாழ்வு வாழும் அனைவரும் புனிதர்களே!

மரியன்னை தன் மகனுக்காகவே வாழ்ந்தாள்.

'இதோ ஆண்டவரின் அடிமை' என்று கூறியதன்மூலம் தன் வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியும் கடவுளுக்காகவே வாழ்ந்தார்.

புனித சூசையப்பர் மனிதனாய்ப் பிறந்த இறைமகனை வளர்ப்பதற்காகவே கற்புக்கரசியான கன்னிமரியைத் தன் மனைவியாக ஏற்றுக்கொண்டவர்.

இறைவனிடமிருந்து உத்தரவுகள் கனவுகள் மூலம் வந்தபோதும் எதிர்க்கேள்வி கேட்காமல் கீழ்ப்படிந்தவர்.

சர்வ வல்லபக் கடவுளாகிய இயேசுவே தன் பாதுகாப்பை இவரிடம் ஒப்படைந்திருந்தார்.

இயேசுவின் திருமடியில் தலைவைத்து மரணிக்க வரம் பெற்ற ஒரே புனிதர்.

ஆகவே நல்மரணத்தின் பாது காவலராக விளங்குகிறார்.

இயேசுவின் நற்செய்தியை உலகெங்கும் பரப்பிய சீடர்கள் அனைவரும்

இயேசுவுக்காகவே வாழ்ந்தார்கள். அது செபவாழ்வு."

"கொஞ்சம் பொறு.

ஒவ்வொருவராகப் பெயர்  சொல்லி 'கடவுளுக்காக வாழ்ந்தார்கள்' என்று சொல்லிக்கொண்டே போவடைவிட

மொத்தமாக 'கடவுளுக்காக வாழ்பவர்கள் அனைவரும் செப வாழ்வு வாழ்கிறார்கள்' என்று சொல்லி விடலாமே!"

"சொல்லி விடலாம். ஆனால் எல்லோரும் ஒரே மாதிரி வாழவில்லை.

மரியாள் இயேசுவைப் பெற்றாள்.

சூசையப்பர் அவரை வளர்த்தார்.

சீடர்கள் நற் செய்தியை உலகெங்கும் பரப்பினர்.

இந்த தனித்துவத்தை குறிப்பிடவே ஒவ்வொருவராகச் சொன்னேன்.

புனித சவேரியார் ஒவ்வொரு நாடாக, நடந்தோ, நீர் வழியாகவோ சென்று மறைபணியைச் செய்தார்.

புனித சிறுமலர்த் தெரசம்மாள் அதே மறைப்பணியை மடத்தை விட்டு வெளியே போகாமலே தியான செபம் மூலம் செய்தாள்.

நமது காலத்தில் புனித கல்கத்தா தெரெசம்மாள் (Mother Theresa) ஏழைகட்கும்,

மரிக்கும் தருவாயிலுள்ள வயோதியர்கட்கும்,

தொழுநோயாளிகட்கும்,

சேரிகளில் வாழும் மக்களுக்கும்

பணிசெய்வதன்மூலம் இறைப்பணியாற்றினார்.

இதன்மூலம் என்ன தெரிகிறது?"

"வாய் மொழிமூலம் இறைவனிடம் நமக்கு வேண்டிய உதவிகளைக் கேட்பது,

செபக்கூட்டங்களுக்குச் சென்று வியாதிகள் சுகமடைய வேண்டுவது மட்டும் செபமல்ல.

நற்செய்தியைப் பரப்புவதும்,

ஏழைகட்கு உதவுவதும்,

நோயாளிகளைச் சந்திப்பதும், 

மற்றும் பிறர்சிநேகச் செயல்ளும்

வாழ்க்கையையே செபமாக மாற்றிவிடும்..

கதைகளில் படித்திருக்கிறோம்

மந்திரவாதி மந்திரக் கோலைக் கூழாங்கல்  மேல்காட்டும்போது

கூழாங்கல் தங்கக் கட்டியாக மாறி விடுகிறது.

அதைவிட பெரிய அதிசயத்தை ஆண்டவர் நம் வாழ்க்கையில் நிகழ்த்துகிறார்.

இரவில் நாம் இயல்பாகத் தூங்கப் போகும்போது,

'இறைவா, இன்றைய தூக்கதை என் பேரன்மார் நன்கு படிப்பதற்காக ஒப்புக்கொடுக்கிறேன்'

என்று செபித்தால் தூக்கம் சக்திவாய்ந்த செபமாக மாறிவிடும்.

பாவம் கலவாத எல்லாச் செயல்களையும் இவ்வாறு செபமாக மாற்றிவிடலாம்."

"Very good.  சுயநலம் கேட்டு செபிப்பதை விட அயலானுக்கு உதவுவது எவ்வளவோ மேல்."

"ஆனால் தியான செபத்தை மறந்துவிடக் கூடாது.

காலை, மதியம், இரவு  வாய்வழி செபத்தையும்,

திருப்பலியையும்

மறந்துவிடக்கூடாது.

அதையும் ஒழுங்காகச் செய்தால்தான்

செயல்வழி செபம் பலன் தரும்.

சுருக்கமாக

நினைவு,

வார்த்தை,

செயல்

மூன்றையுமே செபவாழ்வாக மாற்ற வேண்டும்."

"சிலுவையில் தொங்கிய இயேசு

தாகமாய் இருக்கிறேன் என்றார்.

அது ஆன்ம தாகம்.

அந்த தாகத்தை தணிக்க வேண்டுமா?

நம்மோடு கஸ்டப்படும் ஏழைகளின் தாகத்தை

அன்பு என்னும் நீரால் தணிக்க வேண்டும்.

இதுவே மிகச் சிறந்த செபம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment