Tuesday, February 19, 2019

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."(அரு.3:17)

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."(அரு.3:17)
*****--***---****--***--*******-**

"அப்பா!"

"அடுத்த கட்டுரையை ஆரம்பிச்சாச்சா?"

"இப்போ எனக்கு ஆறுதல் நீங்களும், எழுத்தும்தானே!"

"நேற்று வலைக்குள்ள மாட்டிக்கிட்டது தெரிஞ்சிது."

"வலை(Web)க்குள்ள போனா வெளியே வரமுடியல.

ஒரு நாள் மத்தியானச் சாப்பாடு  சாப்பிட முடியாம

வலைக்குள்ள மாட்டிக்கிட்டேன்னா பாருங்களேன்."

"நேற்றைய வலை அனுபவத்தைக் கொஞ்சம் விபரியேன்."

"பழைய ஏற்பாட்டில் நீங்கள்(கடவுள்) உணர்ச்சிவசப்படுவதாகக் குறிப்பிட்டிருப்பது உருவக அணி.

'The Old-Testament depiction of God’s emotions, therefore, is to be regarded as metaphorical:

as expressing in human language a truth about God that cannot be adequately formulated in human words.'

உங்களைப் பற்றிய உண்மையை நேரடியாக விபரிக்க மனித மொழியில் வார்த்தைகள் இல்லை.

உதாரணத்திற்கு பாவம் உமக்கு விரோதமானது.

இதை மக்களிடம் சொல்லி புரியவைக்கணும்.

மனிதனுக்கு ஒரு இயல்பு உண்டு.

தனக்கு விரோதமா யாராவது நடந்தா அவனுக்குக் கோபம் வரும்.

அதாவது அவனுக்குக் கோபம் வந்தா அவனுக்கு விரோதமா ஏதோ நடந்திருக்குன்னு அருத்தம்.

பாவம் உமக்கு விரோதமானது என்பதை அவனுக்குப் புரியவைக்க

உம்மை கோபப்படக்கூடிய மனிதனாக உருவகப்படுத்தி

பாவம் செய்பர்களைப் பார்த்தவுடன் உமக்குக் கோபம் வருவதாக எழுதியுள்ளார்கள்.

அதை வாசிக்கும் மனிதன் உமக்குப் பாவம் எதிரானது என்பதைப் புரிந்து கொள்வான்.

இதற்காக கடவுளாகிய உமக்கு மனிதஉருக்கொடுத்து கோபம் என்ற மனித இயபையும் கொடுத்துள்ளார்கள்.

இதற்கு தமிழ் இலக்கணத்தில் உருவக அணின்னு பெயர்."

"இதுவிசயத்தில் உன் கருத்து என்ன?"

"ஆண்டவரே, நீர் மாறாதவர்.
எல்லாம் தெரிந்தவர்.
உணர்ச்சிவசப்பட முடியாதவர்.

You cannot be influenced by emotions, such as anger and grief.

உணர்ச்சிகள் சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும்.

மாறிக்கொண்டே இருக்கும் உணர்ச்சிகள்(Emotions)  உம்மிடம் இருக்க முடியாது.

ஏனெனில் நீர் மாறாதவர்."

"ஆமா, மாறாதவர், மாறாதவர் என்று சொல்கிறாயே, நான் செயல் அற்றவனா? கல்கூட மாறாமல் இருக்கிறது!"

"No, You are always active.

உருவகமாகச் சொல்லவேண்டுமென்றால்,

மோயீசனுக்குக் காட்சி கொடுத்தீரே,

எரியும் நெருப்பு, அதைப்போன்றவர்.

Burning with active flames."

அதுமட்டுமல்ல,

எரேமியாஸ் உமது வார்த்தையையே நெருப்புக்கு ஒப்பிடுகிறார்.

"நம்முடைய வார்த்தை நெருப்பைப் போன்றதன்றோ? "(எரேமி.23:29)

" மண்ணுலகில் தீயை மூட்டவே வந்தேன். இப்போதே அது பற்றியெரிய வேண்டுமென்று எவ்வளவோ விரும்புகிறேன்!" (லூக்.12:49)

உம் திருமகன் தன் பணியை நெருப்புக்கு ஒப்பிடுகிறார்."

"இதெல்லாம் வலைக்குள் அகப்பட்டதுதானா? "

"ஆம் ஆண்டவரே,

உம் திருமகன் வலை வீசியவரைத்தானே திருச்சபையின் தலைவராக நியமித்தார்!

ஒரு கேள்வி..

ஆண்டவரே, உம் திருமகன், 'எதிரிகளை நேசியுங்கள், உங்களுக்குத் தீமை செய்பவர்கட்கு நன்மை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

அவர் வெறும் போதனையாளர் மட்டுல்ல, போதிப்பதைச் சாதிப்பவர்.

தீமைக்கு நன்மை செய்யவேண்டும்.

நாங்கள் செய்கிற பாவம் உமக்கு எதிரான தீமை.

அப்படியானால் பாவம் செய்பவர்களுக்கு நன்மையான மோட்சத்தைத்தானே கொடுக்கவேண்டும்?

நரகம் எதற்கு?"

"ரொம்ப பேர் மனசுல நினைத்துக்கொண்டிருக்கிற
கேள்வியைத் துணிச்சலா என்னிடம் கேட்டுவிட்டாய்.

நீ ஆசிரியர். 36 வருசமா மாணவர்கட்குப் பாடம் நடத்தி,  தேர்வு நடத்தி, விடைத்தாள் மதிப்பிட்ட அனுபவத்தைச் சுருக்கமா சொல்லு."

"ஆண்டவரே, நான் மட்டுல்ல, எல்லா ஆசிரியர்களும் எல்லா மாணவர்களும் வெற்றி பெறணும்கிற நோக்கத்தோடுதான் பாடத்திட்டப்படி பாடம் நடத்துகிறோம்.

35 மதிப்பெண்களுக்குக் குறையாமல் எடுத்தவர்கள் வெற்றி பெறுபவர்கள் என்ற இலக்கோடு தேர்வு நடத்துகிறோம்.

விடைத்தாள் மதிப்பீடு செய்யும்போது இலக்குப்படி மதிப்பெண் எடுத்தவர்கள் வெற்றி பெறுவார்கள். எடுக்காதவர்கள் தோல்வி அடைவார்கள்"

"ஆசிரியர் பாடம் நடத்துகிறார்.

சிலபேர், Teaching மட்டுமல்ல  coachingகும் கொடுக்கிறார்கள்.

வெற்றி பெற வேண்டியவர்கள் மாணவர்கள்.

வெற்றி பெறாவிட்டால் அதற்குக் காரணம் மாணவர்களே, 

ஆசிரியர்கள் அல்ல.

ஆன்மீக வாழ்வுக்கு வருவோம்.

நான் படைக்கும் ஒவ்வொரு ஆன்மாவையும் நித்திய காலமாக அன்புசெய்கிறேன்.

நான் மாறாதவன், என் அன்பும் மாறாது,

என்னால் படைக்கப்பட்டவன் என்னை வெறுத்தாலும்,

எனக்கு விரோதமாக எவ்வளவு பெரிய பாவங்கள் செய்தாலும்

அவன்மீது எனக்குள்ள அன்பு மாறாது.

அவன் பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்கும் வினாடியிலேயே அவன் பாவங்களை முற்றிலும் மன்னித்து விடுவேன்.

பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்பதற்காக

என் திருமகன் மனிதனாய்ப் பிறந்து,

பாடுபட்டு சிலுவை மரத்தில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தது உனக்குத் தெரியும்.

ஒவ்வொரு ஆன்மாவும் என்னோடு நித்திய வாழ்வில் இணையவேண்டும் என்று ஆசிக்கிறேன்.

நான் சுதந்திரமாகத் தீர்மானிப்பதுபோல ஒவ்வொரு ஆன்மாவும் சுதந்திரமாகத் தீர்மானிக்கவேண்டும்.

ஆன்மா செய்யவேண்டியது ஒரே ஒரு காரியம்தான்,

என்னையும், என் மற்ற பிள்ளைகளையும் அன்பு செய்ய வேண்டும்.

அன்பு செய்வது கடினமா?

ஞானஸ்நானத்தில் சகல பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.

பாவமற்ற நிலையில் அவனுக்கு அளிக்கப்படும் தேவ இஸ்டப்பிரசாதம் (sanctifying grace) 

என்னோடு அவனுக்கு உறவை ஏற்படுத்துகிறது,

தேவ இஸ்டப்பிரசாத நிலையில் அவன் மரித்தால் என்னோடு நித்திய பேரின்ப வாழ்வில் இணைவான்.

என்னோடு இணைந்த நித்திய பேரின்ப நிலைதான் மோட்சம்.

பாவம் செய்து தேவ இஸ்டப்பிரசாதத்தை இழந்து மரித்தால் என்னோடு இணையமாட்டான்.

என்னோடு இணைய முடியாத நிலைதான் நரகம்,

தாங்கமுடியாத வேதனை நிறைந்த நிலை.

நரகம் ஒரு இடம் அல்ல,
என்னை விட்டுப் பிரிந்த வாழ்க்கை நிலை.

நான் அவனைப் பிரிக்கவில்லை,

அவன்தான் பிரிந்து செல்கிறான்.

இந்த நிலையிலும் அவன்மீது நான் கொண்டுள்ள அன்பு மாறாது.

ஆனால் நரக நிலையில் என் அன்பினால் அவனுக்குப் பயனில்லை.

நீ விடைத்தாள் திருத்தும்போது மாணவன் குறைந்த மதிப்பெண் பெற்றால் நீயா Fail ஆக்குகிறாய்?

அவன்தானே Fail ஆகிறான்

அதுபோல்தான் நான் யாரையும் நரக நிலைக்குத் தள்ளுவதில்லை.

யாரும் சுதந்திரமாக எடுத்த முடிவில் நான் குறிக்கிடுவதில்லை.

பாவி என்னை வெறுத்தாலும் நான் அவனை நேசிக்கிறேனே.

அவன் திருந்திவர அருள்வரங்களை அள்ளிப் பொழிகிறேனே,

பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டவுடன் மன்னிக்கிறேனே

அதுதான் தீமைக்குப் பதில் நன்மை.

மனிதன் சுதந்திரமாக மோட்ச நிலையைச் சம்பாதிக்க வேண்டும்.

ஆனால் அவன் நரக நிலையை அடைந்தபின் அவனை ஒன்றும் செய்ய இயலாது."

"இப்போ புரிகிறது.

மனிதன் இரட்சிக்கப்பட வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

உங்களது திருமகனும் அதற்காகத்தான் தன்னைச் சிலுவையில் பலியாக்கினார்.

அதையும் மீறி 'நரகத்துக்குதான் போவேன்' என்பவனை யாரால் என்ன செய்ய முடியும?

இருந்தாலும் உம்மை வேண்டுகிறேன்,

'மனுக்குலத்தைக் காப்பாற்றும்'."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment