Sunday, February 10, 2019

யாரால் ஆபத்து அதிகம்?

யாரால் ஆபத்து அதிகம்?
***************---********-********

"தினமும் பைபிள் வாசிக்கிறாயே. ஒரு கேள்வி கேட்கலாமா? "

"கேளுங்க சார்."

" 'கோவிலுக்குப் போகும் கிறிஸ்தவர்கள் விசாரணை இன்றி கொல்லப்படுவார்கள்' என்று சட்டம் வந்தால் நீ என்ன செய்வாய்? "

"கோவிலுக்குப் போகமாட்டேன்."

"தினமும் பைபிள் வாசிக்கும் நீயா இப்படிக் கூறுகிறாய்? "

"தினமும் பைபிள் வாசிப்பதால்தான் இப்படிக் கூறுகிறேன்.

நான் பைபிளில் கூறப்பட்டபடிதான் நடப்பேன்."

"பைபிளில் இப்படியா கூறப்பட்டிருக்கிறது?"

"ஆமா. நீங்கள் பைபிளே வாசிப்பதில்லையா?

மத்தேயு 16:26 ஐ வாசியுங்கள்."

"கொஞ்சம் வாசித்துக்காண்பியேன்."

"மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும்

தம் வாழ்வையே இழப்பாரெனில்

அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?

அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?'

'வாழ்வை இழந்தால்  எந்த பயனும் இல்லை' என்று பைபிள் கூறும்போது நான் எப்படி என் வாழ்வை இழப்பேன்?

வாழ்வுக்கு ஈடானது எதுவும் இல்லை.

'அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?'' என்று பைபிள் கூறுகிறது."

      ××××××××××××××××

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன?  ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான?''

பழைய மொழிபெயர்ப்பிலுள்ள
'ஆன்மா' வை  ' வாழ்வு' என்று மாற்றியதால் ஏற்பட்ட விளைவைப் பார்த்தீர்களா?

வெளியிலுள்ள எதிரிகளைவிட உள்ளே இருப்பவர்களால்தான் ஆபத்து அதிகம்!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment