எங்களுக்கு வரம் தாரும்.
****************************
சாந்தமுள்ள இயேசுவே,
வீண் பெருமைகளை நாடாதிருக்க எங்களுக்கு வரம்தாரும்.
உமது புகழையன்றி வேறெதுவையும் தேடாதிருக்க எங்களுக்கு வரம்தாரும்.
உம்முடைய கட்டளைகளை ஏற்று அவற்றுக்குக் கீழ்ப்படிந்து நடக்க எங்களுக்கு வரம்தாரும்.
உம் அருளால் மட்டும் வாழும் நாங்கள் உம்மீது நன்றி மறவாதிருக்க எங்களுக்கு வரம்தாரும்.
எங்களிடமே ஆயிரம் தப்புகள் இருக்கும்போது மற்றவர்களைத் தீர்ப்பிடாதிருக்க எங்களுக்கு வரம்தாரும்.
மற்றவர்கள் எங்களைப் புகழவேண்டுமென்று ஆசைப்படாதிருக்க எங்களுக்கு வரம்தாரும்.
உம்முடைய அருளுதவி இன்றி எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர எங்களுக்கு வரம்தாரும்.
உள்ளொன்றை நினைத்துக்கொண்டு வெளியொன்றைப் பேசாதிருக்க எங்களுக்கு வரம்தாரும்.
வீண் ஆடம்பரங்களை நாடாதிருக்க எங்களுக்கு வரம்தாரும்.
வீண் பிடிவாதத்திலிருந்து விடுதலை பெற எங்களுக்கு வரம்தாரும்.
நீர் தந்திருக்கும் திறமைகளை உமது புகழுக்காகவே பயன்படுத்த
எங்களுக்கு வரம்தாரும்.
எங்கள் இயலாமையைக்கண்டு நம்பிக்கை இழக்காதிருக்க எங்களுக்கு வரம்தாரும்.
எங்கள் நம்பிக்கை முழுவதையும் உம்மீதே வைத்தருள எங்களுக்கு வரம்தாரும்.
எங்கள் உள்ளும் புறமும் நீர் இருக்கிறீர் என்பதை உணர எங்களுக்கு வரம்தாரும்.
மற்றவர்களுடைய திறமைகளையும் மதித்து நடக்க எங்களுக்கு வரம்தாரும்.
எங்கள் பாவங்களுக்கு நாங்கள் பரிகாரம் செய்ய எங்களுக்கு வரம்தாரும்.
எல்லாரையும் விட உம்மை அதிகமாக நேசிக்க எங்களுக்கு வரம்தாரும்.
உமக்காக மற்ற எல்லோரையும் நேசிக்க எங்களுக்கு வரம்தாரும்.
இன்றும், என்றும் உம்முடனே இணைந்திருக்க எங்களுக்கு வரம்தாரும்.
ஆமென்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment