அன்புத் தந்தையுடன் சில வார்த்தைள்.
****************************
"ஆண்டவரே! அடியேனின் அடிமனதில்கூட புதைந்துகிடக்கும் அத்தனை எண்ணங்களும் உமக்குத் தெரியும்.
ஆயினும் வாய்திறந்து உம்மை நோக்கிச் சொல்லும் வார்த்தைகட்கு ஆசையோடு செவிசாய்க்கிறீர்.
நீர் படைப்பால் பெற்ற பிள்ளை என்ற உரிமையோடு சிறிது நேரம் பேசலாமா?"
"இதற்கு ஏன் இத்தனை முன்னுரை? நீ கட்டுரை எழுதணும். அதற்கு நான் கருத்து தரணும், அவ்வளவுதானே, கேள்."
"அளவுகடந்த அன்பின் மிகுதியால் ஆதாமைப் படைத்தீர். அவனுக்குத் துணையாக ஏவாளையும் படைத்து அவர்கட்குத் திருமணமும் செய்துவைத்தீர்.
நீர் பரிசாகக் கொடுத்த சுதந்திரத்தைத் தவறாகப் படுத்தி உமது கட்டளையை மீறி நடந்ததோடு,
'உண்ண வேண்டாமென்று நாம் உனக்கு விலக்கியிருந்த கனியைத் தின்றாயோ?'
என்று கேட்டபோது,
'எனக்குத் துணைவியாய் இருக்கும்படி நீர் எனக்குத் தந்தருளிய அந்தப் பெண்ணே அம்மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்: நானும் தின்றேன்.'
என்று பதில் சொன்னான்.
'நீர் எனக்குத் தந்தருளிய அந்தப் பெண்ணே அம்மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்:'
என்று கூறியபோது 'நீர் எனக்குத் தந்த' என்ற வார்த்தைகளால் பழியை உம்மீது போட்டான்.
அதாவது ' நீர் சரியான பெண்ணைத் தரவில்லை' என்ற பொருள்படப் பேசினான்.
உமக்குக் கோபமே வரவில்லையா? "
" கோபம் மனித இயல்பு.
அதுவும் எதிர்பாராத ஒன்றை நமக்கு எதிராகச் செய்தால் கோபம் வரும், அதுவரை இல்லாத ஒரு உணர்வு வரும். பின் மறைந்துவிடும்.
ஆனால் நான் படைக்கும் மனிதன் என் கட்டளையை மீறுவான், நான் கேட்டால் இப்படிப் பதில் சொல்வான் என்று நித்திய காலமாகத் தெரியுமே!
கோபம் என் இயல்பே இல்லை.
என் இயல்புகளெல்லாம் நித்தியமானவை,
அதாவது, துவக்கமும் முடிவும் இல்லாவை.
எனது அன்பு நித்தியமானது.
எனது இரக்கம் நித்தியமானது.
எனது ஞானம் நித்தியமானது.
எனது நீதி நித்தியமானது.
எனது பண்புகள் (Attributes) அனைத்தும் நித்தியமானவை.
கோபம் எனது பண்பே அல்ல. அதாவது என்னால் கோபப்படவே முடியாது."
"பைபிளில் சில இடங்களில் கோபப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதே, ஏன்?"
"மனிதன் அளவு உள்ளவனாக இருப்பதால் அவன் பயன்படுத்தும் அனைத்தும், (மொழி உட்பட) அளவுள்ளவை.
மனித மொழியைக் கொண்டு என்னுடைய செயல்பாடுகளை விளக்க
உருவே இல்லாத எனக்கு மனித உருக்கொடுத்து
மனித இயல்புகளையும் கொடுத்து
(கோபம் மனித இயல்பு)
மனினுக்கு விளங்கக்கூடிய விதமாக
என் செயல்களை பைபிள் ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.
(when the Bible speaks of the “wrath” of God, it is expressing in human language how much our own actions can offend God, and that when we commit such actions, we invariably experience some kind of suffering.
It is that consequence of our sinful actions that the Bible interprets as the “wrath” of God:
not that He is ever literally angry,
but that sometimes He allows us to experience the consequences of our actions in order to teach us not to disobey Him.)
ஆதியாகமத்தில்
'ஒளி உண்டாகுக என்று உரைத்தார்'
'களிமண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்..'
'அந்நாளில் ஓய்வெடுத்தார். '
'அவனுடைய விலாவெலும்புகளில் ஒன்றை எடுத்து, அவ்வாறு எடுத்த இடத்தைச் சதையினால் மூடினார்'
இவற்றில்
உரைத்தார் (வாய்)
களிமண்ணால் மனிதனை உருவாக்கி (கை)
ஊதவே (வாய்)
ஓய்வெடுத்தார். '(உடல்)
மூடினார் (கை)
இவ்வார்த்தைகளால் உரு இல்லாத எனக்கு உருக்கொடுத்து,
கை, வாய் போன்ற உறுப்புக்களையயும் கொடுத்திருக்கிறார்கள்.
அப்போதான் உங்களுக்கு விளங்கும்.
இந்த யுக்திக்கு anthropomorphism என்று பெயர்.
நான் உலகையும்,மனித குலத்தையும் படைத்தேன் என்ற செய்தி(Message) தான் நீங்கள் அறியவேண்டியது.
What is important is the message, not how it is given.
நான் உங்களோடு பேசும்போது உள்ளுணர்வுகள் (Inspirations)
மூலமாகப் பேசுகிறேன்.
அதை மற்றவர்கட்குத் தெரியப்படுத்த (Communicate) உங்கள் மொழியைத்தானே பயன்படுத்தியாக வேண்டும்.
இதைத்தான் பழைய ஏற்பாட்டின் தீர்க்கத்தரிசிகளும் செய்தார்கள்.
புதிய ஏற்பாட்டில் எனது அன்பு மகன் உன்னைப்போலவே உண்மையான சதையும், இரத்தமும் உள்ள மனிதனாகப் பிறந்து பேசினார்.
மனிதனாகப் பிறந்த அவருக்கு இரண்டு சுபாவங்கள்.
தேவ சுபாவத்தில் அவர் அரூபி.
மனித சுபாவத்தில அவருக்கு ஒரு Material bodyயும், Spiritual soulம் இருந்தன.
பழைய ஏற்பாட்டில் தீர்க்கத்தரிசிகளின் மூலமாகப் பேசியவர்
புதிய ஏற்பாட்டில் அவரே பேசினார்."
"பழைய ஏற்பாட்டின் தேவன் நீதியின் தேவன்
புதிய ஏற்பாட்டின் தேவன் அன்பின் தேவன் என்று சிலர் சொல்கிறார்களே. அது எப்படி?"
"நான் ஒரே தேவன்.
பழைய ஏற்பாட்டின் தேவனும் நான்தான்,
புதிய ஏற்பாட்டின் தேவனும் நான்தான்.
அன்பும் நானே,
நீதியும் நானே.
அன்பும், நீதியும் பின்னிப் பிணைந்த என் பண்புகள்.
எனது அன்பு நீதியுள்ளது,
நீதி அன்புள்ளது.
என் நீதி உலக நீதியைப் போன்றதன்று,
உலக நீதி குற்றவாளியைத் தண்டிக்கும்.
என் நீதி குற்றவாளியை மன்னிக்கும்.
என் மகன் பாவிகளை மன்னிப்பதற்காகவே மனிதனாய்ப் பிறந்து,
பாவிகள் செய்ய வேண்டிய பரிகாரத்தைத்
தன் உயிரைக் கொடுத்து அவரே செய்தார்.
நீதிபதியும்,
பாவிகட்காகப் பரிந்து பேசும் வக்கீலும்,
பாவிகளின் பாவங்களுக்குப்
பரிகாரம் செய்தவரும்
ஒரே ஆள்தான்,
என் மகன்தான்.
புரிகிறதா? "
"புரிகிறது. அப்பா, இன்னும் அநேக கேள்விகள் உள்ளன.
நாளை கேட்கலாமா? "
"எப்போது வேண்டுமானாலும் கேள்.
நான் எங்கும், எப்போதும் தயார்.''
"நன்றி, அப்பா! "
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment