Wednesday, February 13, 2019

மாற்றமா? தடுமாற்றமா?

மாற்றமா?   தடுமாற்றமா?
****-*********---************-*-***

"அண்ணாச்சி கொஞ்சம் நில்லுங்க."

"தம்பி கோபமா வர்ரது மாதிரி தெரியுது. என்ன விசயம்?"

"கோபமாகத்தான் வந்திருக்கேன்.
சில சமயங்களில நீங்க புரியாம எழுதறது மாதிரி தெரியுது."

"சொல்லு, புரிஞ்சிக்கிறேன்."

"கடவுள் எங்கே இருக்கிறார்?"

"எங்கும் இருக்கிறார்."

"இத புரிஞ்சி சொல்றீங்களா? புரியாம சொல்றீங்களா?"

"உன் கேள்விதான் புரியல."

"சரி, கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கேட்கிறேன்.எங்கும் இருக்கிற ஒரு பொருள ஒரு Side ப் பார்த்துத் தள்ள முடியுமா?"

"கடவுள்தான் எங்கும் இருக்கிறார்னு சொன்னேன். நீ பொருள் என்ற சொல்லை எந்தப் பொருளில சொல்ற?"

"அதுவும் புரியலியா. உங்களுக்கு எப்படி புரியவைக்க.  சரி நேராக விசயத்துக்கு வர்ரேன்.

இப்பெல்லாம் நீங்க எழுதும்போது மக்களிடம் நற்கருணைமேல் பக்தி குறைஞ்சிக்கிட்டே வருதுன்னு எழுதுரீங்க. ஏன் அப்படி எழுதுறீங்க?"

"நீங்க கேட்கவந்த விசயமே வேற. அத முதல்ல கேளுங்க."

சரி கேட்கிறேன்.நேரடியா கேட்கிறேன்.

கடவுள் எங்கும் இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை.

இயேசு கடவுள். அவர் எங்கும் இருக்கிறார்.

அவரை இடம் விட்டு இடம் நகர்த்தமுடியாது.

அவர் இல்லாத இடம் இருந்தால்தானே நகர்த்தலாம்.

எங்கும் இருப்பவரை எங்கு நகர்த்த முடியும்?

நீங்கள் நற்கருணைப் பேழையை பீடத்தின் மையப்பகுதியில் வைக்காமல் ஒரு Side ல் வைப்பது மரியாதைக்குறைவு என்கிறீர்கள்.

கடவுள் எங்கும் இருக்கிறார்.

நற்கருணைப் பேழையை Side ல் வைக்காவிட்டாலும்  அங்கும் இயேசு கடவுள் இருக்றார்.

ஏற்கனவே இயேசு 
இருக்கும் இடத்தில் பேழையை வைப்பது எப்படி மரியாதைக்குறைவு ஆகும்? "

"இப்போது நான் சில கேள்விகள் கேட்கலாமா?"

"எனக்கு வேண்டியது பதில். கேள்வி இல்லை."

"தம்பி, பதில் உங்களிடம் இருக்கிறது. அதை வெளியே கொண்டு வரத்தான் கேள்விகள்.

"இயேசு ஏற்கனவே
இருக்கும் எந்த இடத்திலும் பேழையை வைப்பது  மரியாதைக்குறைவு இல்லை என்கிறீர்களா?"

"ஆமாம்."

"கோவிலில் நீங்கள் வழக்கமாக உட்காரும் இடத்தில் கடவுள் இருக்கிறாரா?"

"இருக்கிறார்."

"அப்போ நற்கருணைப் பேழையை அங்கு வைத்து விடலாமா?"

"அண்ணாச்சி, நீங்கள் எனக்கு விளக்கம் கொடுப்பதுபோல் தெரியல. குழப்புவதுபோல் இருக்கு."

"உங்களிடமே விளக்கம் இருக்கிறது. கேள்விகட்குப் பதில் சொன்னால்போதும்."

"நற்கருணையில் இயேசு. இருக்கிறார்.

ஆகவே பலி பீடம் இருக்கும் பகுதியில் மட்டுமே நற்கருணையை  வைக்கவேண்டும்."

"நற்கருணையில் இயேசு இருக்கிறார்.

இயேசு கடவுள் எங்கும் இருக்கிறார்.

அப்படியானால் நற்கருணை எங்கும் இருக்கிறதா?"

"இல்லை.

பூசை நேரத்தில் பீடத்தில் இருக்கிறது.

மற்ற நேரங்களில் நற்கருணைப் பேழையில் இருக்கிறது.

நன்மை வாங்கும்போது நமக்குள்ளே இருக்கிறது."

"ஏன் எங்கும் இல்லை?"

"அதை மட்டும் கொஞ்சம் விளக்குங்கள்."

"நடுப் பூசையில் குருவானவர் வசீகர வார்த்தைகளைச் சொல்லுமுன்

அப்பமும், ரசமும், 

அப்பமும், ரசமுமாகவே உள்ளன.

ஆனால்

குரு வசீகர வார்த்தைகளைச் சொல்லும்போது

அவை உண்மையாகவே   இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறுகின்றன.

அவற்றின் வெளிக்குணங்களாகிய தோற்றம், ருசி  ஆகியவை மாறாது.

ஆனால் அவற்றின் Substance இயேசுவின்   உடலாகவும், இரத்தமாகவும் மாறுகின்றது.

தோற்றத்தில் அது அப்பம். உண்மையில் அது இயேசுவின் உடல்.

தோற்றத்தில் அது ரசம்.
உண்மையில் அது இயேசுவின் இரத்தம்."

"கொஞ்சம் விளக்கமாக, please."

"எல்லாப் பொருட்களைப்போலவே அப்பத்துக்கும், ரசத்துக்கும்

குணங்களும் (qualities),

பொருளும் (Substance)  உண்டு.

வசீகர வார்த்தைகட்குப்பின்

அவற்றின் குணம் மாறாது,

பொருள் இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும்  மாறிவிடும்.

ஆகவேதான் அப்ப, ரசக் குணங்களுக்குள் இயேசு உண்மையாகவே இருக்கிறார்.

குணத்தின்படி, அப்பமும், ரசமும் எங்கும் வியாபித்து இருக்கமுடியாது.

அதனால், ,

நற்கருணை ஏதாவது ஒரு இடத்தில்தான் இருக்கும்.

முற்காலத்தில் நற்கருணைப் பேழையை பீடத்தில் மையப்பகுதியில்  மைத்திருந்தார்கள்."

"நற்கருணைப் பேழையை பீடத்தில் ஒரு ஓரத்தில் வைப்பதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை? "

"மையத்தில் அமைப்பதால் வைப்பதனால் உனக்கு என்ன
பிரச்சினை? "

"நீங்கள் கூறும் முற்காலத்தில் பக்தி முயற்சியில் பைபிளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

இப்போது கொடுக்கப்படுகிறது.

பைபிள்  இறைவனின் வார்த்தை.

இறைவனின் வார்த்தைக்கு கொடுக்கப்படும் மமுக்கியத்துவத்தைக் குறிக்கவே

பீடத்தின் மையப்பகுதியில் பைபிளை வைத்திருக்கிறார்கள்.

இதனால் வார்த்தையானவருக்குப் பெருமைதானே! "

"உங்கள் ஆலயத்திற்கு வருவதாக போப் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் வரும்போது அவருக்கு வரவேற்பு  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறீர்கள்.

மேடையில் போப் அமர இருக்கைகள் அமைக்கிறீர்கள்.

உங்கள் கொள்கைப்படி மேடையில் போடப்பட்ட இருக்கைகளில் நடு இருக்கையில் போப்பின் கடிதத்தை வைக்கிறீர்கள்.

அதை வாசித்துக் காண்பிப்பதற்காக பங்குச் சாமியாருக்கு அடுத்த இருக்கை.

அவருக்கு உதவுவதற்காக உதவிப் பங்குச்  சாமியாருக்கு அடுத்த இருக்கை.

போப்பிற்குக் கடைசி இருக்கை.

அமைப்பு எப்படி? "
.
"என்ன, நக்கலா?'

"இல்லை..உங்கள் கொள்கைப்படி போப்பின் வார்த்தைக்குத்தானே முக்கியத்துவம்! "

"பைபிள் என்பது இறைவனின் வார்த்தைதானே?"

"யார் இல்லை என்று சொன்னது?  பைபிள் இறைவனுடைய வார்த்தைதான்.

ஆனால் எது பைபிள்? "

"கேள்வி புரியவில்லை."

"சரி. புரியும்படி கேட்கிறேன்.நாம் பேசிக்கொண்டிருக்கிறோம், எதன் உதவியோடு? "

"வாயின் உதவியோடு, அதாவது வாயிலிருந்து வரும் வார்த்தையின் உதவியோடு."

"Correct.  வார்த்தையைக் காண்பியுங்கள்."

"வார்த்தைக்கு உருவம் இல்லை.அதைப் பார்க்கமுடியாது."

"Correct. அதேபோல்தான் இறைவனுடைய வார்த்தைக்கும் உருவம் இல்லை.

அது ஒரு Concept, அன்பைப்போல.

ஆனால் பைபிள் Standக்கு உருவம்
இருக்கிறது.

உருவம் இல்லாத பைபிளை எப்படி Bible stand மேல் வைப்பீர்ள்? "

"நீங்கள் புரியாமல் கேட்கிறீர்கள்.

பைபிளுக்கு உருவம் இல்லை

உண்மைதான்.

ஆனால் அதற்கு எழுத்து உருவம் கொடுத்து,

அந்த எழுத்து உருவத்துக்கு புத்தக உருவம் கொடுத்து

அந்த புத்தகத்தைத்தான் Bible stand மேல்
வைக்கிறோம்.

இது பச்சப்புள்ளைக்குக்கூடத் தெரியும்"

"அதாவது Bible stand மேலஇருக்கிறது பைபிள் இல்ல, பைபிளின் உருவம். சரிதானே?"

"ஆமா, சரிதான்.

பீடத்தின் மேல் புனிதர்களின் உருவங்களை வைத்திருப்பது போல, பைபிளின் உருவமாஙகிய புத்தகத்தை வைத்திருக்கிறோம்.

இதில என்ன தப்பு இருக்கு."

"தப்பு அதுல இல்ல. நீங்க கொடுக்கிற முக்கியத்துவத்தில இருக்கு.

இப்போ நற்கருணைக்கு வருவோம்.
நற்கருணை இயேசுவின் உருவமா அல்லது..."

"நற்கருணை இயேசுவின் உருவம் அல்ல, நிஜம்.

நற்கருணை இயேசுதான்,

மரியாளிடம் பிறந்த அதே இயேசு,

நற்செய்தியைப் போதித்த அதே இயேசு, 

சிலுவையில் உயிர்விட்ட அதே இயேசு,

மூன்றாம் உயிர்த்த அதே இயேசு, 

நம் ஆண்டவராகிய அதே இயேசு.

நம் கடவுளாகிய அதே இயேசு

உருவம் அல்ல."

"Correct. இவ்வளவு தெளிவா பேசற நீ எப்படி  உருவத்திற்கு மத்திய இடமும் நிஜத்துக்கு ஒரு Side ல இடமும் கொடுக்கிறத ஆதரிக்கிற?

இது நிஜத்தை அவமதிக்கிறது மாதிரி இல்ல?"

"இப்போ புரியறது மாதிரி தெரியுது.

நீங்க சொல்றது உண்மைதான்.

நற்கருணைநாதர்மேல நமக்கு இருந்ந பக்தி வரவர குறைந்துகொண்டுதான் வருகிறது.

நமது மாற்றங்ளில் அநேகம் தடுமாற்றங்களாகவே உள்ள.

கடவுள்தான் நம்மைக் காப்பாற்றவேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment