."கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்."
(மத். 7:7)
"ஆண்டவரே!"
"சொல்லு."
"உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்."
"கொஞ்சம் அல்ல, நிறையவே பேசு.
நீ பேசுவதை கேட்பதற்காகவும் உன்னோடு பேசுவதற்காகவும்தானே நான் இரவும் பகலும் நற்கருணைபேழையில் காத்துக்கொண்டிருக்கிறேன்."
",."கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்." என்று சொன்னது நீங்கள்தானே?"
" நான்தான் சொன்னேன் இதில் உனக்கு என்ன சந்தேகம்."
"",அதில் சந்தேகமில்லை, ஆனால் நான் கேட்டதெல்லாம் கிடைக்கவில்லையே, அதனால்தான் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டேன்.
.
உங்களுக்குத் தெரியும் நான் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். அது கிடைக்க வேண்டும் என்று உங்களிடம் திரும்ப திரும்பக் கேட்டேன் ஆனால் அது இதுவரை கிடைக்கவில்லை. அதனால் தான் அப்படி ஒரு கேள்வியை கேட்டேன்."
",இப்போது அதற்கு ஒரு கதை சொல்லட்டுமா?"
"ஆசிரியர்தான் வகுப்பில் பாடம் நடத்தும்போது இடையிடையே கதை சொல்லுவார்."
",நானும் ஒரு ஆசிரியர்தான் என்பதையும் மூன்று ஆண்டுகள் நிறைய கதைகள் சொல்லி போதித்திருக்கிறேன் என்பதை மறந்து விட்டாயா?"
"மறக்கவில்லை. சொல்லுங்கள் ஆண்டவரே."
", ஒரு ஆசிரியர் வகுப்பில் ஆங்கில இலக்கண பாடம் நடத்திக்
கொண்டிருந்தார்.
நடத்த வேண்டிய பகுதியை நடத்தி முடித்தவுடன்,
" ஏதாவது சந்தேகம் இருப்பவர்கள் கேட்கலாம் என்றார்.
ஒரு பையன் எழுந்து நின்று,
"சார், ஒரு சந்தேகம்" என்றான்.
"கேள்" என்றார்.
"இந்தியாவிலிருந்து அமெரிக்கா எவ்வளவு தூரத்தில் உள்ளது?"
மற்ற மாணவர்கள் சிரித்து விட்டார்கள்.
"சார், கேள்வி கேட்பது நான். இவர்கள் ஏன் சிரிக்கிறார்கள்?"
"எனக்கும்தான் சிரிப்பு வருகிறது. நான் நடத்திக் கொண்டிருப்பது என்ன பாடம்?"
"English Grammar."
"நீ கேள்வி கேட்பது என்ன பாடம்?"
"புவியியல்."
"English Grammar நடத்தும்போது அது சம்பந்தப்பட்ட கேள்விகள் தான் கேட்க வேண்டும்."
"உங்களுக்கு புவியியல் பாடமும் தெரியுமே."
",தெரியும் என்பது வேறு விஷயம். எந்த பாடம் நடத்தப்படுகிறதோ அந்த பாடம் சம்பந்தப்பட்ட கேள்விகள் தான் கேட்கவேண்டும்.
நான் நடத்தியதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?"
"இல்லை."
"அப்போ உட்கார்."
",கதை புரிகிறதா?"
"கதை புரிகிறது. ஆனால் நான் வேலை கேட்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?"
",இறைவனாகிய நான் ஏன் மனிதனாகப் பிறந்தேன்?"
",மனிதர்களை பாவத்திலிருந்து மீட்பதற்கு."
" எனது போதனைகள் எல்லாம் எதைப்பற்றி இருந்தன?
"மனிதர்களின் மீட்பை பற்றி."
"அப்போ, "கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் என்று சொன்னபோது எதைக் கேட்க சொல்லியிருப்பேன்?"
"பாவத்திலிருந்து மீட்பு பெறுவதற்கான உதவிகளைக் கேட்கச் சொல்லியிருப்பீர்கள்."
"தேடுங்கள், கண்டடைவீர்கள்: " என்று சொன்ன போது யாரைத் தேடச் சொல்லியிருப்பேன்?"
"உங்களை."
"தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.என்று சொன்னபோது எதைத் தட்டச் சொல்லியிருப்பேன்?"
"தங்கள் இதயக்கதவை."
"திருடுவதற்காக பக்கத்து வீட்டுக்காரன் கதவைத் தட்டிக்கொண்டு என்னிடம் உதவிக்கு வரக்கூடாது!"
"நான் வேலைதானே கேட்டேன்?"
"அப்போ இன்னும் உனக்கு நான் சொன்ன கதை புரியவில்லை."
"அப்போ உலக சம்பந்தப்பட்ட எந்த உதவியும் கேட்க கூடாதா?"
"இல்லை. ஆன்மீகம் சம்பந்தப்படாத எந்த உதவியும் கேட்க கூடாது."
"அப்போ நான் சாமியாராக போக மட்டும் தான் உதவி கேட்க வேண்டுமா?"
"ஆன்மீகம் சாமியாருக்கு மட்டுமா சொந்தம்? படைக்கப்பட்ட அனைவருமே ஆன்மீகம் உரியது."
"எங்களைப் படைத்து உலகத்தில் தானே வாழவிட்டுருக்கிறீர்கள்
உலகம் ஒரு சடப்பொருள்தானே, ஆன்மீக பொருள் இல்லையே?"
"அதைப் படைத்த எனக்கு தெரியாதா?
உனக்கு ஒரு உதாரணம் கூறுகிறேன்.
அன்பு ஆன்மீகமா லௌகீகமா."
'ஆன்மா மட்டும் தான் அன்பு செய்ய முடியும். ஆகவே அன்பு ஆன்மிகம் தான்."
",நீ என்னை அன்பு செய்கிறாயா?"
"நிச்சயமாக."
",என் மீது நீ கொண்டுள்ள அன்பை காண்பிக்க என்ன செய்கிறாய்?"
"உங்களுக்கு நான் காணிக்கை கொடுக்கிறேன்."
"காணிக்கை என்ன பொருள்."
"சடப்பொருள்."
",அன்பு ஆன்மீகம் அதைக் காட்ட சடப் பொருளை பயன்படுத்துகிறாய். அதாவது ஆன்மீகத்தை காட்ட சடப் பொருளைப பயன்படத்துகிறாய்."
"ஆமா."
"நீ வாழும் இந்த உலகம் ஒரு சடப் பொருள் . அதை நீ உனது ஆன்மீகத்தை காட்ட பயன்படுத்த வேண்டும்.
பிறர்மீது கொண்டுள்ள அன்பு ஆன்மீகம், அதை நீ காட்ட சடப்பொருளைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
அதற்காகத்தான் உலகமாகிய சடப்பொருளில் உன்னை வாழ வைத்திருக்கிறேன்.
நீ உலகிற்காக வாழாமல் எனக்காக வாழ்ந்தால் உலகை எனக்காக பயன்படுத்துவாய் அது ஆன்மீகம் ஆகிவிடுகிறது."
"அதாவது சடப் பொருளை ஆன்மீக நோக்கத்திற்காக பயன்படுத்தினால் அது ஆன்மீகம் ஆகிவிடுகிறது. சரியா?"
"சரி."
"கேளுங்கள் உங்களுக்கு தரப்படும் என்ற தங்களது கூற்றுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?"
",நீ என்ன உதவியைக் கேட்டாலும் அது உன்னுடைய ஆன்மீக மீட்புக்கு உதவியாக இருந்தால் மட்டுமே தருவேன். மீட்புக்கு எதிராக இருந்தால் கேட்பதை தர மாட்டேன்.
நீ கேட்ட வேலை லஞ்சம் வாங்க தூண்டுவது.
லஞ்சம் வாங்குவது பாவம். ஆன்மீக மீட்புக்கு எதிரானது.
ஆகவே தான் அதை உனக்கு தரவில்லை, இன்னும் தரமாட்டேன்.
நீ என்ன உதவியை கேட்டு விண்ணப்பித்தாலும்,
"ஆண்டவரே இதை எனக்கு தர விருப்பம் இருந்தால் மட்டுமே தாரும் "
என்று கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
அப்போதுதான் கிடைக்காவிட்டாலும் ஏமாற்றம் இருக்காது."
"இனி அப்படியே விண்ணப்பிக்கிறேன் ஆண்டவரே.
அடியேனை ஆசீர்வதியும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment