Saturday, December 4, 2021

" இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்."(மத்.10:8)

" இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்."
(மத்.10:8)

ஆன்மாவும் உடலும் சேர்ந்தவன் மனிதன்.

நான் என்றோ, நாம் என்றோ நாம் குறிப்பிடுவது நமது ஆன்மாவைத் தான்.

நமது உடல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இறைவனால் படைக்கப்பட்ட மண்ணில் இருந்து எடுக்கப்பட்டது.

அதை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து பார்த்தால், அதில் மண்ணிலுள்ள அத்தனை தாதுப் பொருட்களும் இருக்கின்றன.

மண்ணில் உள்ள தாது பொருட்களை உண்டுதான் தாவரங்கள் வளர்கின்றன.

 தாவரங்களை உண்ணும் நமது உடலும் அதே அதே தாது பொருட்களால்தான் வளர்கிறது.

அந்த தாதுப்பொருட்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைத்தவர் இறைவன்தான்.

 ஆகவே நமது உடலையும் படைத்தவர் இறைவன்தான். 

நமது ஆன்மா நமது உடல் நமது தாயின் வயிற்றில் கருத்தரிக்கும்போது போது இறைவனால் நேரடியாக படைக்கப்பட்டது.

'நாம்' என்ற வார்த்தை நமது ஆன்மாவை குறிக்கிறது.

நமது உடலில் உள்ள அத்தனை தாதுப்பொருட்களும் இறைவனால் படைக்கப்பட்டவைதான்.

ஆனாலும் நமது ஆன்மா படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் அவற்றை படைத்து விட்டார். 

அவற்றையும் இறைவன் ஒன்றும் இல்லாமையிலிருந்துதான் படைத்தார்.

நமது ஆன்மாவையும் 
ஒன்றும் இல்லாமையிலிருந்துதான் படைத்தார்.

ஆகவே நாம் படைக்கப் படுவதற்கு முன்பு ஒன்றுமில்லாமல் இருந்தோம்.

We were nothing before we were created.

ஒன்றும் இல்லாமையிலிருந்து
படைக்கப்பட்டதால் நாம் சொந்தம் என்று உரிமை கொண்டாட நம்மிடம் எதுவுமே இல்லை.

நாம் முற்றிலும் நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே சொந்தம்.

நமது சிந்திக்கும் திறன், நினைவில் வைத்துக் கொள்ளும் திறன், செயலாற்றும் திறன் யாவையுமே இறைவனுக்கு மட்டுமே சொந்தம்.

அவருக்கு சொந்தமானவற்றை அவரது இஷ்டப்படிதான், அவருக்காக மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும்.

அவர்தான் சொல்கிறார்,

"இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்."

யாரிடம் கொடுக்க வேண்டும்?

யாரிடமிருந்து பெற்றுக் கொண்டோமோ அவரிடமே கொடுக்க வேண்டும்.

அதாவது நம்மிடம் உள்ள யாவற்றையும்  இறைவனை முழுமனதோடு நேசித்து, ஆராதித்து, அவருக்குப் பணி செய்யவே  அர்ப்பணிக்க வேண்டும்.

அவரது பணிக்கே அர்ப்பணிப்பது எப்படி?

அவரால் படைக்கப்பட்ட மக்களுக்கு பணி புரிவதுதான் அவருக்கு நாம் ஆற்றும் பணி.

அதாவது நாம் நமது அயலானுக்கு பணி புரியும்போது அவனைப் படைத்த இறைவனுக்கே பணி புரிகிறோம்.

நாம் ஆற்றும் பிறரன்பு பணிக்குதான் நமக்கு இலவசமாக கிடைத்த அத்தனை திறமைகளையும் இலவசமாக பயன்படுத்த வேண்டும்.

நமது சிந்தனை, சொல், செயல் அத்தனையையும் பிறர் அன்பு பணிக்கே செலவிட வேண்டும்.

நமது பிறரன்புப் பணியை இறைவனுக்காகவே, அவரது மகிமைக்காகவே செய்ய வேண்டும், நமது சுய பெருமைக்காக அல்ல.

நாம் பிறரன்புப் பணி செய்யும்போது பிறரிடமிருந்து பிரதிபலன் எதையும் எதிர்பார்க்கக்கூடாது.

 அதற்குரிய பலனை இறைவனே தருவார்.

இறைவன் இலவசமாக தந்த திறமைகளை 

நாம் இலவசமாக அவரது சொற்படி இலவசமாக பயன்படுத்தினால் அதற்குரிய பலனை இறைவனே தருவார். 

நமது பிறரன்பு பணியில் வியாபார தன்மை இருக்கக் கூடாது.

வியாபாரி எதையும் இலாப நோக்கோடுதான் வாங்குவான், விற்பான்.

 ஆனால் நமது பணியின் நோக்கம் அன்பு செய்வது மட்டுமே, இலாபம் அல்ல.

இறைவன் தனது அளவற்ற அன்பின் காரணமாகத்தான் மனித குலத்தை படைத்தார்.

மனிதனை தனது சாயலாகப் படைத்தார்.

அவர் எப்படி தன்னையும் அன்புசெய்து தன்னால் படைக்கப்பட்ட மனித குலத்தையும் அன்பு செய்கிறாரோ,

அதே போல நாம் இறைவனை முழுமனதோடு அன்பு செய்வதோடு,

நம்மை நாம் அன்பு செய்வது போல அவரால் படைக்கப்பட்ட மனித குலத்தையும் அன்பு செய்ய வேண்டும்.

பிறர் மீது நாம் கொண்டுள்ள அன்பு அன்பு செயல்களாக மலர வேண்டும்.

நமது அன்பு செய்யும் இயல்பு இறைவனிடமிருந்து இலவசமாக பெற்றது.

இலவசமாக பெற்ற அன்பை இலவசமாகவே கொடுப்போம்.

இறைவனும் நமக்கு விண்ணக நித்திய பேரின்ப வாழ்வை இலவசமாகவே தருவார்

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment