Tuesday, October 1, 2019

Idea எப்படி!

               Idea எப்படி!
               *************            

"அப்பா, எனக்கொரு சந்தேகம்."

..."Englishலயா, Social Science பாடத்திலா?"

"இரண்டிலுமே இல்ல. நம்ம திருச்சபையின் நடைமுறையில!"

..."அதைக் கவனிக்க பாப்பரசர் இருக்கிறார், ஆயர்கள் இருக்காங்க, குருக்கள் இருக்காங்க,

உனக்கு என்ன பிரச்சனை?"

"கடவுள் முன் எல்லோரும் சமம்தானே?"

"'சமம்'ங்கிற வார்த்தைக்கு அநேகம் பேருக்கு பொருள் தெரியல.

இந்த அறியாமைதான் பெரிய பிரச்சனை.

இப்போ நீயும் அதில மாட்டிக்கிட்ட."

"சமம்னா Equal தான?"

..."'பொருள்'ங்கிற வார்த்தைக்கே உனக்குப் பொருள் தெரியல.

பொருள்னா மொழிபெயர்ப்புன்னு அர்த்தமா?

'சமத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு 'Equal'. அவ்வளவுதான்."

"அப்போ நீங்களே பொருளைக் கூறுங்கள்."

..."'சமம்' என்றால் ஒரே 'மதிப்பு'.

உதாரணத்துக்கு (5+5) ம் 10ம் ஒரே மதிப்பு உடையவை.

5+5 = 10 என்பது ஒரு சமன்பாடு."

"அப்பா, நான் கணக்கு படிச்சிருக்கேன். 'சமன்பாடு'ன்னா என்னென்று எனக்குத் தெரியும்.

இப்போ அது இல்ல பிரச்சனை.

என் கேள்வி கடவுள் முன் அனைவரும் சமமா?  இல்லையா?"

"இப்போ நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதில் பதில் சொல்லிட்டா உன் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.

தூங்குவது சரியா? தப்பா? "

"சரிதான்."

..."அப்போ சரியான காரியத்தைச் செய்த உன் மாணவியை ஏன் அடிச்ச?"

"எப்போ?"

..."நேற்று, வகுப்பில? "

"புரியும்படியா சொல்லுங்க."

..."தூங்குவது தப்பு இல்லைன்னா வகுப்பில் பாடம் நடந்துகொண்டிருந்தபோது தூங்கிய மாணவியை ஏன் அடித்தாய்?"

"உங்க கேள்வியே தப்பு.

' வகுப்பில் பாடம் நடக்கும்போது தூங்குவது சரியா?  தவறா?' ன்னு  கேட்டிருக்கணும்."

..."இப்போ உன் கேள்விய கொஞ்சம் யோசித்துப் பாரு."

"'கடவுள் முன் எல்லோரும் சமம்தானே.'

இப்போ புரியுது.

எந்தெந்த விசயங்களில சமம்னு கேட்டிருக்கணும்.

இப்போ கேட்க வந்த கேள்வியை நேரடியாகவே கேட்டுவிடுகிறேன்.

நான் சாமியாராகலாமா?"

..."முடியாது."

"ஏன் முடியாது?"

..."ஏனென்றால் நீ ஒரு பொம்பளப்பிள்ளை."

"பொம்ளைன்னா குறைந்தவளா?  அவளிடம் எந்த தகுதி இல்லை?"

"அம்மாஆ, பெண் குறைந்தவள்னு நான் சொல்லவே இல்லையே.

இங்க குறைந்தவள், நிறைந்தவள் என்ற பேச்சுக்கே இடமில்லை.

உலகிலேயே அருளால் நிறைந்தவள் மாதா மட்டும்தான்.

அவள் குருத்துவ அந்தஸ்து கேட்கலியே!

ஆதாமும் ஏவாளும் மனிதர் என்ற விசயத்தில் சரிநிகரானவர்கள்தான்.

ஆனால் கடவுள் கொடுத்த பொறுப்புக்கள் வெவ்வேறானவை.

பொறுப்புக்கள் சமமானவை அல்ல, வெவ்வேறானவை.

அப்பா ஆவது ஆதாம் பொறுப்பு.

அம்மா ஆவது ஏவாள் பொறுப்பு.

ஆதாம் அம்மா ஆகமுடியாது.

ஏவாள் அப்பா ஆகமுடியாது.

இது இறைவன் வகுத்த நியதி. இதை மாற்ற மனிதனுக்கு அதிகாரம் இல்லை."

"எல்லா ஆண்களும் அப்பா ஆகணும்னு கட்டாயம் இல்லையே.

அதே போல் எல்லா பெண்களும் அம்மா ஆகணும்னு கட்டாயம் இல்லையே.

பின் ஏன் பொறுப்புங்கிறீங்க?"

..."ஆதாமும், ஏவாளும் திருமணமானவங்க. கணவன், மனைவி பொறுப்புகளைச் சொன்னேன்.

திருமணம் ஆகாதவங்களுக்கு அந்த பொறுப்புகள் இல்லை.

ஆனால் ஒன்றை உறுதியாகச் சொல்லலாம்.

ஆணுக்கு மட்டும்தான் அப்பாவாகும் சக்தி இருக்கிறது.

பெண்ணுக்கு மட்டும்தான் அம்மாவாகும் சக்தி இருக்கிறது."

"நான் அதைப்பற்றிப் பேசவே இல்லையே.

பெண்கள் ஏன் குருக்கள் ஆகக்கூடாது?

பெண்களுக்கு ஏன் குருக்கள் ஆகும் உரிமை இல்லை "

..."இது ஒரு சமூகப் பிரச்சனை அல்ல. 

உரிமைப் பிரச்சனையும் அல்ல.

ஆன்மீகப் பிரச்சனை. 

சொல்லப்போனால் இது ஒரு
பிரச்சனையே அல்ல.

ஆன்மீகத்தில் உரிமைப் போராட்டங்கள் எதுவும் கிடையாது.

இறைவனின் அன்பில், அவரது பராமரிப்பில் வாழ்வதுதான் ஆன்மீகம்.

நம்மைப் படைத்தவர், இரட்சிக்கிறவர், வழிநடத்துபவர் எல்லாம் கிறிஸ்துவே.

அரூபியான கடவுள் மனுவுரு எடுத்தது ஆணாகத்தான்.(Male)

அவரைப் பெற்றவள் ஒரு பெண்.

அவரது போதனை வாழ்வின்போது

தேவைப்படும்போது அவருக்கு உணவு கொடுத்து உதவியவர்களில்

பெண்களும் இருக்கிறார்கள்.

ஆனால் அவர் அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்து

குருப்பட்டம்
கொடுத்தது ஆண்களுக்கு மட்டும்தான்.

திருச்சபையை ஏற்படுத்தியவரும்,

அதன் நிரந்தரத் தலைவருமான

இயேசுவின் வழி நடத்துதலின்  பேரில்தான் திருச்சபை ஆண்களுக்குமட்டும் குருப்பட்டம் கொடுக்கிறது.

உனக்கு விருப்பமானால் குருக்களுக்கு அம்மாவாக இருக்கலாம்.

சகோதரியாக இருந்து குருக்களுக்கு உதவலாம்.

நீ குருவாக விரும்புவது இயேசுவின் விருப்பத்துக்கு மாறானது.

இயேசு கடவுள்.

'பெண்கள் ஏன் குருக்கள் ஆக முடியாது?' என்று கேள்வியெல்லாம் கேட்க முடியாது.

'உமது சித்தம், எமது பாக்கியம்' எனப் பணிவதுதான் நமது கடமை."

"இயேசு ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாரோ?"

..." இல்லவே இல்லை.
ஆணும், பெண்ணும் அவரின் அன்புப் படைப்புகள்.

அவரவருக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் கடமையை அவரவர் செய்ய வேண்டும்.

கொடுக்கப்படாத கடமையை

'எனது'  உரிமை என்று போராடிக் கொண்டிருக்கக்கூடாது.

அன்னை மரியாள் 'இதோ ஆண்டவருடைய அடிமை' என்று தன்னையே தாழ்த்தி,

அடிமை எப்படி எஜமானனின் சித்தத்தை நிறைவேற்றுவாளோ,

அதேபோல கடவுளின் சித்தத்தை நிறைவேற்றினாள்.

அவள் குருப்பட்டம் பெறவில்லையேதவிர அனைத்துக் குருக்களுக்கும் அவளே பாதுகாவலி, அவளே தாய்.

நான் வாசித்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு பத்து வயது பெண்பிள்ளை

புதிதாகப் பட்டம் பெற்ற ஒரு குருவானவரைத்

தன் மகனாகத் தத்து எடுத்திருக்கிறாள்.

(My oldest adopted a newly-ordained priest and thus he and I affectionately call her his “littlest spiritual mother.”)

அவருக்காகத் தினமும் செபிப்பதோடு, தனக்குக் கிடைக்கும் pocket money யையும் மிச்சம் பிடித்து, அந்த 'குரு மகனுக்கு' அனுப்புகிறாளாம்.

நீயும் அந்தச் சிறுமியைப் பின்பற்றலாமே!"

"நான் என்ன, எல்லோருமே பின்பற்றலாம்.

ஒவ்வொரு விசுவாசியும் ஒரு குருவை அல்லது குருமாணவரை தத்து எடுத்துக்கொள்ளலாமே!

Idea எப்படி!"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment