Tuesday, October 8, 2019

"என்ன நேர்த்தாலும் நன்றிகூறுங்கள்."

"என்ன நேர்த்தாலும் நன்றிகூறுங்கள்."
*******        *******       *****

நண்பர் ஒருவர் விலை கூடிய  T.V ஒன்று வாங்கினார்.

விலை 1.5 lacs.

T.V யை வீட்டிற்குக் கொண்டுவந்தவுடன் குடும்பத்தினர் அனைவரும் சூழ்த்து நிற்க,

plug point connection கொடுத்துவிட்டு, switch on செய்து விட்டு,

T.V யையும் on செய்தார்.

T.V யோ வாங்கிவந்து வைத்தபடியே இருந்தது.

படம் ஒன்றும் தெரியவில்லை.

எல்லோருக்கும் ஏமாற்றமாய் இருந்தது.

மகன் சொன்னான்,

"T.V யுடன் கையேடு ஒன்று தந்திருப்பார்களே. அதை வாசித்துப் பார்த்துவிட்டுப் பார்த்துவிட்டுப் போடுங்கள்" என்றான்.

"நான் வாசித்துப் பார்த்துவிட்டேன். நீயும் வாசித்துப் பாரேன்."

பையனும் வாசித்துப் பார்த்துவிட்டு முயற்சி செய்தான்.

பயனில்லை.

அம்மா சொன்னாள்,

"உங்க அப்பாவைக் கடைக்காரன் ஏமாற்றிவிட்டான்."

"கடையில் வைத்துப் போட்டுக் காட்டினானே! நல்லாத்தான் தெரிந்தது. இப்போ என்ன ஆச்சி தெரியலிய! "

ஒவ்வொருவரும் ஒரு அபிப்பிராயம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

"என்ன பிரச்சனை? " என்று கேட்டுக்கொண்டே தாத்தா உள்ளே வந்தார்.

பேரன் சொன்னான்,

"கடைக்காரன் அப்பாவைச் செமயாய் ஏமாற்றிவிட்டான். பணத்தை வாங்கிக்கொண்டு ரிப்பேர் ஆன T.V யைக் கொடுத்துவிட்டான்."

தாத்தா சொன்னார்,

"தலை கீழாய் நின்றாலும் T.V ஓடாது."

"ஏன் தாத்தா?"

"இன்றைக்கு Current cut.
Current இல்லாம T.V ஓடும்?"

"ஏம்பா தாத்தாவுக்குத் தெரிந்தது உங்களுக்குத் தெரியல?"

"Current இல்லாம T.V ஓடாதுன்னு எனக்கும் தெரியும்.

Current இல்லைங்கிற விசயம் எனக்குத் தெயாது.

சரி, அதவிடு. Current வரும்போது T.V யைப் போட்டுக்கலாம்.

இப்ப நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லு.

உங்கிட்ட எத்தன உயிர் இருக்கு?"

"ஒரு ஆளுக்கு ஒரு உயிர்தான இருக்கும்?"

"நான் கேள்வி கேட்கச் சொல்லல. பதில் சொல்லு."

"தாத்தா, அப்பா கேட்கிற கேள்விக்கு நீங்கதான் பதில் சொல்லணும். சொல்லுங்க?"

"பேரப்பிள்ள, வாழ்வுக்கு ஆதாரம் உயிர்.

உயிர் போகும்போது வாழ்வு முடிந்து விடும்.

நாம் ஆள் ஒண்ணுதான், ஆனால் இரண்டு வாழ்வுகள் உள்ளன.."

"தாத்தா, இனிம நான்சொல்லி விடுகிறேன். இப்பதான் ஞானோபதேச வகுப்பில படிச்சது ஞாபகத்துக்கு வருது.

நமக்கு உடலும், ஆன்மாவும் இருக்கிறதினால

உடல் சம்பந்தப்பட்ட வாழ்வு,

ஆன்மா சம்பந்தப்பட்ட வாழ்வுன்னு இரண்டு வாழ்வுகள் உள்ளன.

உடல் சம்பந்தப்பட்ட வாழ்வு இவ்வுலகைச் சார்ந்தது.
லௌகீக வாழ்வு.

ஆன்மா சம்பந்தப்பட்ட வாழ்வு Spiritual life) மறுவுலகைச் சார்ந்தது.

ஆன்மீக வாழ்வுக்கு உயிர் தேவ இஸ்டப்பிரசாதம்.(Sanctifying grace)

நம்மில் தேவ இஸ்டப்பிரசாதம் இருந்தால்தான் நாம் செய்யும் எந்தக் காரியத்துக்கும் ஆன்மீக மதிப்பு (Spiritual value) உண்டு,
இன்றேல், இல்லை.

சரியா?"

"Super சரி."

"அதென்ன Super சரி?

தேவ இஸ்டப்பிரசாதத்துக்கும் ஆதாரமாய் இன்னொன்று இருக்கிறதே, அத மறந்திட்டீங்களா!

தேவ இஸ்டப்பிரசாதம் நமக்கும் இறைவனுக்கும் இடையே உறவை ஏற்படுத்துகிது.

அதை இழந்துவிட்டால் இறை உறவை இழந்துவிடுவோம்.

இறை உறவை இழந்த ஆன்மாவைச் செத்த ஆன்மான்னு சொல்லுவோம்.

உயிரோடு இருக்கும் ஆன்மாவைக் கொல்வது சாவான பாவம்.

செத்த ஆன்மாவுக்குத் திரும்பவும் உயிர் கொடுப்பது பாவசங்கீர்த்தனம்.

பாவசங்கீர்த்தனத்தால் பாவம் மன்னிக்கப்படுகிறது.

இழந்த தேவ இஸ்டப்பிரசாதம் திரும்பவும் கிடைக்கிறது.

இறை உறவு திரும்பவும் கிடைக்கிறது..."

"அப்பாவைப் பாருங்க தாத்தா.

எதையோ 'மறந்திட்டீங்களா'ன்னு கேட்டாங்க.

பிறகு அதையே மறந்துவிட்டு நான் சொன்னதுக்கு விளக்கம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க.

இந்த விளக்கமெல்லாம் தெரிந்ததினாலதைச் தேவஇஸ்டப்ரசாதத்தை உயிர்னு சொன்னேன்.

அவங்க மறந்தத ஞாபகப்படுத்திச்  சொல்லச் சொல்லுங்க, தாத்தா."

"அதை ஏண்டா எங்கிட்டச் சொல்லாம தாத்தாட்டச் சொல்ற?

நான் எதையும் மறக்கல.

ஒரு கருத்த  Step by stepஆ விளக்கணும்.

விளக்கி முடிச்சபின் உன் Commentsஅ சொல்லணும்.''

"சரி, விளக்குங்க."

"படிக்க ஆசைப்படுகிறவங்க முதலாவது பள்ளிக்கூடத்தைப் பற்றித் தெரிஞ்சிக்கணும்.

அப்புறம் பள்ளியில admission போடணும்.

அப்புறம்தான் ஆசிரியர், படிப்பு,  தேர்வு, result எல்லாம்.

அதே போல, ஆன்மீக வாழ்வில முதலாவது இறைவனை அறிந்து 'விசுவசிக்கணும்'.

மற்றதெல்லாம் அதற்குப் பிறகுதான்.

விசுவாசம் இல்லாதவனுனக்கு இறை உறவுன்னா என்னெனனே தெரியாது.

"விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்."
(மாற்கு.16:16)

முதலில் விசுவாசம்.

விசுவாசத்தின் மூலம் இறைவனை நம்மைப் படைத்தவராக, நமது இரட்சகராக ஏற்றுக்கொள்கிறோம்.

ஏற்றுக்கொண்ட பிறகே அவரது உறவாக முடியும்.

அடுத்து ஞானஸ்நானம்.

ஞானஸ்நானம்
பெறும்போதுதான் நமக்கு தேவஇஸ்டப்ரசாதம் கொடுக்கப்படுகிறது.

கிடைத்த தேவஇஸ்டப்ரசாதத்தை இழக்காமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது நமது கடமை.

எதனால் எது இயக்கப்படுகிறதோ அது

அதற்கு உயிர்.

மின்சாரத்தால்  T.V இயக்கப்படுகிறது.

ஆகவே மின்சாரம் T.Vக்கு உயிர்.

விசுவாசம் நமது ஆன்மீக வாழ்வை இயக்குகிறது.

ஞானஸ்நானம் பெறவைப்பது விசுவாசம்.

நமது பலகீனத்தால் பாவத்தினால்

தேவ இஸ்டப்பிரசாதத்தை இழக்கும்போது

நம்மை பாவசங்கீர்த்தனம் செய்ய வைப்பது விசுவாசம்.

(பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன்.)

விசுவாசம் இல்லாதவன் பாவசங்கீர்த்தனம் செய்ய மாட்டான்.

வாழ்வில் வரும் சிலுவைகளை ஆண்டவருக்காக ஏற்றுக்கொள்ள வைப்பது விசுவாசம்.

இறைவன் நம்மை மீட்பார் என்று நம்பவைப்பது விசுவாசம்.

இறைவனை நமது உயிருக்குமேலாக நேசிக்கவைப்பது விசுவாசம்.

இறைபணிக்காகவும், அவருக்காக பிறர்பணிக்காகவும் நம்மை அர்ப்பணிக்க வைப்பது விசுவாசம்.

விசுவாசத்திலிருந்துதான் நம்பிக்கையும், தேவ சிநேகமும்  பிறக்கின்றன.

நமது ஆன்ம வாழ்வை இயக்குவதே விசுவாசம்தான்.

இப்போ சொல்லு, ஆன்ம வாழ்வின் உயிர் எது?"

"தாத்தா, நீங்க சொல்லுங்க.
யார் சொன்னது சரி?"

"இரண்டு பேர் சொன்னதும் சரிதான். ஒரே பதில ஆளுக்குப் பாதியா பிரிச்சி சொல்லி இருக்கீங்க, அவ்வளவுதான்.

நாம் படைக்கப்பட்டதன் நோக்கம்

'இறைவனை

அறிந்து,

சிநேகித்து,

சேவித்து,

விண்ணகம் அடைவது.'

அறிவதனால் விசுவசிக்கிறோம்.

தேவ இஸ்டப்பிரசாதம் இருப்பதனால் சிநேகிக்கிறோம்.

இரண்டும் (விசுவாசமும் தேவசிநேகமும்) இருப்பதால் சேவிக்கிறோம்.

இம்மூன்றின் காரணமாக விண்ணகம் அடைகிறோம்.

இவற்றிற்கெல்லாம் காரணமாய் இருப்பவர் நம்மில் உயிராய் இருக்கும் கடவுளே.

"உயிர்ப்பும் உயிரும் நானே."
(அரு.11:25)

"நானே வழியும் உண்மையும் உயிரும்."(அரு.14:6)

இப்போ புரியுதா?"

"புரியுது, தாத்தா.

ஆனால் ஆண்டவர்,

"கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் இம்முசுக்கட்டை மரத்தை நோக்கி, "வேருடன் பெயர்ந்து கடலில் ஊன்றிக்கொள்" என்பீர்களாகில், உங்களுக்கு அது கீழ்ப்படியும்." (லூக்.17:6)

சொல்லியிருக்கிறார்.

அதைப் பார்க்கும்போது நமது அணு அளவுகூட இருக்காது போலிருக்கே!"

"உண்மைதான். விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் செய்யும் செபம்தான் மிகுந்த பலன் தரும்.

இறைவனிடம் ஏதாவது விண்ணப்பம் வைக்கும்போது

இறைவனுக்குச் சித்தம் இருந்தால் நாம் கேட்பது உறுதியாகக் கிடைக்கும்.

நாம் கேட்பது நமக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக இருந்தால்

நமது நலன் கருதி கடவுள் அதைத் தரமாட்டார்.

விசுவாசத்தோடு கேட்டது கிடைக்காவிட்டால், அதுவும் நமது நன்மைக்கே என்று விசுவசிக்க வேண்டும்.

ஆகவே கேட்டது கிடைக்காவிட்டாலும் நன்றி கூறவேண்டும்.

என்ன நேர்த்தாலும் நன்றிகூறுங்கள்.

அப்போதான் நமது விசுவாசம் உண்மையானது."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment