பைபிளும் பாரம்பரியமும்.
--------------------------------------------------
"ஹலோ! கொஞ்சம் நில்லுங்க."
."Good morning."
.."நான் இப்போ Good morning சொல்ற mood ல இல்ல."
."பரவாயில்லை. கொஞ்சம் உட்கார்ந்து பேசலாமா."
"உட்கார்ந்து பேசற mood ல இல்ல."
"அப்போ என்ன mood ல இருக்கிறீங்க, சாரி, நிக்கிறீங்க, சாரி, என்ன செய்றீங்க? ''
"மிஸ்டர், நான் சீரியஸா பேசிக்கிட்டிருக்கேன், நீங்க நக்கல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க."
."சாரி, வாங்க, நடந்துகொண்டே பேசுவோம்.
சொல்லுங்க. என்ன பிரச்சனை?"
"பிரச்சனை எனக்கு அல்ல, உங்களுக்குதான். "
."எனக்கு பிரச்சனைன்னா நான்ல mood out ஆகணும், நீங்க ஆகிக்கிட்டு இருக்கீங்களே! "
"உங்க எழுத்துக்களில நீங்க பைபிளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதுமாதிரி தெரியலிய."
"யார் சொன்னா? "
"நான்தான் சொல்றேன்."
"எதவச்சி சொல்றீங்க? "
"பைபிளில ஆதாரம் இல்லாத விசயத்தையெல்லாம் எழுதிக்கிட்டிருக்கீங்க? "
"கடைக்கு பொருள் வாங்க போறீங்க.."
"ஹலோ! நான் கடைக்குப் போகல! "
"Suppose, போறீங்க, பொருள் எடுத்து வச்சாச்சி. Bill போட்டாச்சி. பணம் கொடுக்கணும். பணமா கொடுப்பீங்களா? கார்டு கொடுப்பீங்களா?"
"கையில பணம் இருந்தா, பணமா கொடுப்பேன், இல்லாட்டா கார்டு கொடுப்பேன்.
இப்ப இந்த விபரம் எதற்கு?"
"சொல்றேன்.
உங்க பையன் செலவுக்குப் பணம் கேட்கிறான்.
நீங்க கொடுத்தால்தான் வாங்குவானா?
அம்மா கொடுத்தாலும் வாங்குவானா? "
"இருவரில் யார் கொடுத்தாலும் வாங்குவான்."
"இதே மாதிரியேதான் திருச்சபையின் போதனைகளுக்கு இரண்டு ஆதாரங்கள் உண்டு.
1.பைபிள்.
2.பாரம்பரியம்.
எந்த ஆதாரத்திலிருந்து போதனை எடுக்கப்பட்டிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்."
"பைபிள் இறைவனின் வார்த்தை. நற்செய்தி நூல்களில் இயேசுவே நேரடியாகப் பேசிய வார்த்தைகள் உள்ளன.
ஆனால் பாரம்பரியம் மனிதர்களாகிய அப்போஸ்தலர்களுடைய போதனைகளிடமிருந்து பிறந்ததுததானே.
பைபிள் பரிசுத்த ஆவியின் தூண்டுலால் (By the inspiration Of the Holy Spirit) எழுதப்பட்ட இறைவார்த்தை.
அதனால் பைபிள் பாரம்பரியத்தைவிட முக்கியமானது .
பைபிளில் ஆதாரம் இல்லாததைப் பற்றி எழுதக்கூடாது. புரிகிறதா?"
"ஒன்று புரிகிறது, நீங்கள் பைபிளை சரியாக வாசிப்பது இல்லை என்று புரிகிறது"
"ஹலோ! ..."
."ஹலோவ பாக்கட்ல போட்டுவிட்டு கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்க.
"ஆனால், பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது, அவரது வல்லமையைப் பெற்று யெருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்குமே நீங்கள் என் சாட்சிகளாயிருப்பீர்கள்" என்றார்."
இதைச் சொன்னது யார்?"
"இயேசு."
." 'பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது'ன்னா அர்த்தம் புரியும்னு நினைக்கிறேன்."
"ம்..சொல்லுங்க."
."பரிசுத்த ஆவியின் வல்லமையால்தான் அப்போஸ்தலர்கள் இயேசுவின்ன் சாட்சிகளாக இருந்தார்கள் என்பது புரிகிறதா?"
"புரிகிறது."
"கிறிஸ்துவின் விண்ணேற்றத்திற்குப் பின் அப்போஸ்தலர்கள் போதிக்க ஆரம்பித்தது எப்போது? "
"பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவி அப்போஸ்தலர்கள்மீது இறங்கிவந்தபோது."
"எந்த பரிசுத்த ஆவி?
பைபிள் எழுத தூண்டுதலாக இருந்தாரே, அதே பரிசுத்த ஆவி.
பைபிளின் ஆசிரியர் பரிசுத்த ஆவிதான், அதை எழுதிய மனிதர்கள் அவர் பயன்படுத்திய கருவிகள்தான்.
அதேபோல் திருச்சபையின் போதனைகளை ஆரம்பித்துவைத்தவரும், போதித்தவரும், போதிக்கிறவரும் பரிசுத்த ஆவிதான்.
அப்போஸ்தலர்களும், அவர்களின் இடத்தில் பின்வந்தவர்களும் அவரது கருவிகளே. "
"இப்போ நீங்க சொன்ன விசயம் பைபிளில இருக்கிறதுனால நம்புகிறேன். "
"பைபிளில இருக்கிறதுங்கிறத நம்பினால் மட்டும் போதாது சார், விசயத்தையும் நம்பணும்."
"அதுதான் நம்புகிறேன்னு சொல்லிட்டேனே! "
."நம்பியிருந்தால்,
'பைபிள் பரிசுத்த ஆவியின் தூண்டுலால் (By the inspiration Of the Holy Spirit) எழுதப்பட்ட இறைவார்த்தை.
:அதனால் பைபிள் பாரம்பரியத்தைவிட முக்கியமானது'ன்னு சொல்லியிருக்க மாட்டீங்க .
அப்போஸ்தலர்கள் போதிக்க ஆரம்பித்தபோது புதிய ஏற்பாடு என்ற பைபிள் பாகம் இருந்ததா?"
"இல்லை."
."கரெக்ட். அப்படியானால் நற்செய்தி நூல் இல்லாத காலத்தில் அவர்கள் அவர்கள் யாருடைய நற்செய்தியைப் போதித்தார்கள்?"
"இதென்ன கேள்வி! கிறிஸ்துவின் நற்செய்தியயைப் போதித்தார்கள்."
."மத்தேயு நற்செய்தி,
மாற்கு நற்செய்தி,
லூக்காஸ் நற்செய்தி,
அருளப்பர் நற்செய்தி
இந்த நான்கு நற்செய்திகளும்தான் புதிய ஏற்பாட்டில் இருக்கு.
'கிறிஸ்துவின் நற்செய்தி' புதிய
ஏற்பாட்டில் இல்லையே!"
"யோவ்! என்ன நக்கலா?
இந்த நாற்கு நற்செய்திகளும் கிறிஸ்துவின் நற்செய்திதான்.
கிறிஸ்து போதித்த நற்செய்தி,
எழுதிய நற்செய்தி அல்ல."
."அதாவது கிறிஸ்து நற்செய்தியை எழுதவில்லை! "
"ஆம், எழுதவில்லை."
."இன்று எமுதப்பட்ட நற்செய்தியிலிருந்து ஆதாரம் கேட்பதுபோல அன்றும் மக்கள் கேட்டிருந்தால் அப்போஸ்தலர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? "
"இதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகள் என்று அவர்களே சொன்னார்களே."
"அப்படியானால் அவர்களே ஆதாரம், அப்படித்தானே?"
"ஆமா, பிரச்சனை என்று ஒன்று வந்துவிட்டால் சாட்சிகள்தானே ஆதாரம்."
"இந்த சாட்சிகளின் போதனைதான் 'திருச்சபையின் பாரம்பரியம்'.
அப்புறம் எப்படி பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்?"
"Sorry. சிந்திக்கத் தவறிவிட்டேன்.
இப்போது சிந்திக்கிறேன்.
மத்தேயுவும், அருளப்பரும் எப்போதும் இயேசுவுடன் இருந்த அப்போஸ்தலர்கள்.
மாற்கு இயேசுவால் போதிக்க அனுப்பப்பட்ட எழுபது பேரில் ஒருவர்.
அப்போஸ்தலர் அல்ல.
லூக்காஸ் சின்னப்பரின் தோழர்.
அப்போஸ்தலர் அல்ல.
இந்த நால்வரும் இயேசுவின் போதனையை நற்செய்திநூல் வடிவில் தந்திருக்கிறார்கள்.
இராயப்பரும், யாகப்பரும், யூதாவும் வாய்மொழியோடு கடிதங்கள் மூலமும் போதித்தார்கள்.
12 பேரும் வாய் வழியாகப் பேசியுள்ளார்கள்.
சின்னப்பர் பன்னிருவரில் ஒருவராக இல்லாவிட்டாலும் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகிறார்.
இவரது கடிதங்கள் கிறிஸ்துவின் போதனைகள் நிறைந்தவை.
இவர்கள் எல்லாம் இயேசுவின் வாய்மொழிப் போதனையைத் தங்கள் வாய்மொழியால் போதித்ததோடு
எழுத்து வடிவிலும் தந்துள்ளார்கள்.
தாங்கள் போதித்தவை எல்லாவற்றையும் எழுதவில்லை.
எழுதப்பட்டவை புதிய ஏற்பாட்டு நூல்கள்.
எழுதப்படாதவை பாரம்பரியம்.
இரண்டுமே கிறிஸ்துவின் போதனைதான்.
இரண்டுமே ஒரே பரிசுத்த ஆவியின் தூண்டுலால் செய்யப்பட்டவைதான்.
அவர்கள் பேசும்போதும், எழுதும்போதும் வழிநடத்தியவர் பரிசுத்த ஆவிதான்.
இப்போது நன்கு புரிகிறது."
."இன்னொன்றையும் நினைவிற்
கொள்ள வேண்டும்.
புதிய ஏற்பாட்டு நூல்களை பைபிளின் பகுதியாக ஏற்றுக்கொண்டதே திருச்சபையின் பாரம்பரியம்தான்.
கிறிஸ்துவின் வாழ்க்கை, போதனைகள் பற்றி நிறைய நூல்கள் எழுதப்பட்டிருந்தன.
அவற்றில் நான்கு நூல்களையே திருச்சபையின் பாரம்பரியம் நற்செய்தி நூல்களாக ஏற்றுக்கொண்டது."
"அன்னைமரியின் விண்ணேற்பு பற்றி, உத்தரிக்கிற ஸ்தலம் பற்றி கொஞ்சம் விளக்கம் தேவை.
நாளை பேசுவோமா?"
"எப்போ வேண்டுமானாலும் பேசுவோம். நீங்க நல்ல mood ல இருக்கணும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment