சமத்துவமா? அப்படீன்னா என்ன?
**************----------------------+-
..."கிச்சினுக்குள்ள ஏதோ வாசனை கம கம வென்று அடிக்குது!"
"ஏதோ வாசனை இல்லீங்க, பட்சி வாசனை come come என்று அடிக்குது! Come in, உள்ளே வாங்க."
..."பட்சி taste super! ஆமா, இவ்வளவு ருசியா பண்டங்கள் செய்ய எங்கிருந்து கத்துக்கிட்ட?"
"உங்ககிட்ட இருந்துதான்!"
....''அப்படியா? நான்கு சொல்லித்தந்ததா ஞாபகம் இல்லையே."
"அதெப்படி ஞாபகத்தில இருக்கும்? சொல்லித்தந்தால்தானே ஞாபகத்தில் இருக்கும்!"
"ஏண்டி இப்பதாண்டி சொன்ன!"
"ஹலோ! நீங்க சொல்லித்தந்தீங்கன்னு நான் சொல்லல.
உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டேன்னுதான் சொன்னேன்."
"நான் சொல்லித்தராம எங்கிட்ட இருந்து எப்படி கத்துக்க முடியும்?"
"அது தனி கலைங்க.
ஒவ்வொரு நேரமும் நீங்க சாப்பிடும்போதும்
உங்கள் முகத்தில் தோன்றும் மாற்றங்களை வைத்து சமையலிலும் மாற்றங்கள் செய்துகொள்வேன்."
..."Very good. கற்றுக்கொள்வதில் உனக்கு நிகர் நீ தான்."
"ருசி எவ்வளவு மோசமாக இருந்தாலும் 'taste super' ன்னு சொல்லுவதில் உங்களை மிஞ்ச ஆளே கிடையாதுங்க."
"உனக்கு ஒன்று தெரியுமா? உலகில் யாரையும் மிஞ்ச யாரும் கிடையாது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விசயத்தில superஆ இருப்பாங்க.
அதாவது Each one is unique.
கடவுளுடைய படைப்பில் சமத்துவம் என்ற வார்த்தைக்கு இடம் கிடையாது."
"எல்லாம் சமமாக இருந்தால் உலகமே இயங்காதே!
மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான் உலகம்.
மேடு பள்ளங்கள் இல்லாவிட்டால் ஆறுகள் எப்படி ஓடும்?
எல்லா இடங்களிலும் ஒரே அளவு வெப்பம் இருந்தால்
காற்றழுத்த மண்டலங்கள் ஒரே மாதிரி இருக்கும்.
காற்றழுத்த மண்டலங்கள் ஒரே மாதிரி இருந்தால் காற்று எப்படி வீசும்?
காற்று வீசாவிட்டால் மழை எப்படி பெய்யும்?"
..."இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை பரிசாக கொடுக்கப் பட்டுள்ளது.
அதைப்பயன்படுத்தி ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சாதனைகள் புரிய வேண்டும்.
யாரும் யாரையும் மாதிரி இருக்கமாட்டார்கள்.
எல்லோரும் ஒரே மாதிரி, அதாவது, சமமாக இருந்தால் மனுக்குலம் இயங்காது.
நமது உடலில் வித்தியாசமான உறுப்புகள் இருப்பதால்தான் உடலால் இயங்க முடிகிறது.
ஒரு நாள் காலையில் எழவேண்டிய நேரத்தில் நமது உடலில் எல்லா உறுப்புகளும் கால்களாக மாறிவிட்டால் அன்றைய நாள் எப்படி இருக்கும்!
நாட்டில் சமத்துவம் வேண்டு மென்பதற்காக 130 கோடி இந்தியர்களையும் சம அதிகாரமுள்ள பிரததம மந்திரிகளாக மாற்றிவிட்டால்!"
"எல்லோரும் ஒரே நேரத்தில் வெளிநாட்டுக்குச் சுற்றுப்பயணம் போய்விடலாம்!"
..."நாம் மற்றவர்களுக்குச் சமமாக இல்லையே என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு
அவரவர் தகுதிக்கேற்ப அவரவர் கடமைகளை ஒழுங்காகச் செய்தால் போதும் நாடு நல்ல முன்னேற்ற மடையும்."
''ஒரு சந்தேகம்.
'உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.' (மத்.5:48)
என்று ஆண்டவர் கூறியுள்ளாரே,
வானகத் தந்தையைப்போல,
நிறைவில் அவருக்கு நிகராக ஆகமுடியுமா? "
..."நம் வானகத் தந்தை அளவற்றவர். நாம் அளவுள்ளவர்கள்.
அளவுள்ள எதுவும் அளவற்றதாக ஆகமுடியாது.
ஆனால் அளவுள்ள நமது அளவிற்கு ஏற்றபடி நிறைவாக,
அதாவது பாவங்கள், குற்றம் குறைகளை நீக்கி,
பரிசுத்தமாய் இருக்க முயலலாமே!
மோட்சத்தில் அப்படித்தானே இருப்போம்.
ஆனால் நம் வாழ்வின் இலட்சியம் நம் வானகத் தந்தையை
அடைந்து அவரோடு ஒன்றிப்பதுதானே!
(get united)
தந்தை நம்மை தன் சாயலாகப் படைத்துள்ளார்.
அந்த சாயலுக்கு பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.
நமது இவ்வுலக வாழ்வின் இறுதியில் சாயல் நிஜத்துடன் இணைய வேண்டுமென்றால்
அது மாசு, மரு அற்றதாக இருக்க வேண்டும்.
தந்தை நம்முடன் பகிர்ந்துகொண்ட அவருடைய பண்புகளான அன்பு, இரக்கம், நீதி ஆகியவற்றை மென் மேலும் வளர்க்க வேண்டும்.
தந்தையின் பண்புகளை நாம் பிரதிபலிக்க வேண்டும் என்று இயேசு ஆசிக்கிறார்.
நமது விண்ணகப் பயணம் நிறைவை நோக்கியதாக இருக்க வேண்டும்.
நமது விண்ணகப் பயணத்தின் வேகம் எல்லோருக்கும் சமமாக இருக்காது.
அன்னை மரியாளின் வேகத்தை யாராலும் எட்ட முடியாது.
எல்லா புனிதர்களும் புனிதத்துவத்தில் ஒரே அளவு இருக்கமாட்டார்கள்.
நமது வீட்டில் பெரிய அண்டா முதல் சிறிய கிண்ணம் வரை பல அளவுள்ள பாத்திரங்கள் இருப்பதுபோல்
மோட்சத்தில் உள்ளவர்களும் புனிதத்துவ அளவில் மாறுபடுவார்கள்.
அண்டாமுதல் கிண்ணம் வரை அனைத்து பாத்திரங்களையும்
தண்ணீரால் நிரப்பினால்
எல்லா பாத்திரங்களுமே நிறைவாய் இருக்கும்.
அவ்வாறேதான் மோட்சவாசிகளும் அவரவர் கொள்ளளவுக்கு ஏற்ப நிறைவாய் இருப்பர்.
விண்ணகத் தந்தை அளவற்ற விதமாய் நிறைவாய் இருப்பார்.
மோட்சவாசிகள் அவரவர் அளவுக்கு ஏற்ப நிறைவாய் இருப்பர்."
"ஆக விண்ணகத் தந்தை 'நிறைவாய்' இருப்பதுபோல
நாமும் மோட்சத்தில் 'நிறைவாய்' இருப்போம்.
தந்தை அளவற்ற விதமாய் நிறைவாய் இருப்பார்.
நாம் அளவுள்ள விதமாய் நிறைவாய் இருப்போம்."
..."Correct.
ஆண்டவர் கூறிய தாலந்து உவமைப்படி பார்த்தால்,
அவர் நம்மைப் படைக்கும்போது எல்லோருக்கும் சம அளவு திறமைகளோடு படைத்திருக்க மாட்டார்.
அவரவருக்கு அளிக்கப்பட்ட திறமைகளை முழுமையாகப் பயன்டுத்தி,
சாதனைகள் புரியவேண்டும்.
ஐந்து தாலந்து பெற்றவன் தூங்கிவிட்டால், இரண்டு தாலந்து பெற்றவன் அவனைத் தாண்டிவிடுவான்.
நாம் நமது திறமைகளை மற்றவர்ள் திறமைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்திவிட்டு முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
சமத்துவ உணர்வு அல்ல, கடமை உணர்வே வெற்றியைத் தரும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment