Friday, July 19, 2019

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத்.12:7)

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத்.12:7)
++++++++++++++++++++++++++

"அப்பா! நீங்க தினமும் காலையில பூசைக்குப் போறீங்களே, பூசைன்னா  திருப்பலிதானே? "

"ஆமா. அதில என்ன திடீர் சந்தேகம்?"

"எனக்குச்  சந்தேகம் ஒண்ணுமில்ல. உங்க மேலதான் சந்தேகமா இருக்கு."

"ஏண்டா, திடீர்னு என்மேல சந்தேகம்?"

"சந்தேகங்கூட இல்ல, உறுதியா சொல்லுகிறேன். நீங்க இயேசுவின் விருப்பத்திற்கு எதிரா போய்க்கிட்டிருக்கீங்க."

"நான்  இயேசுவின் விருப்பத்திற்கு எதிரா போய்க்கிட்டிருக்கேனா?

கொஞ்சம் புரியும்படியா சொல்லு."

"பலியை நான் விரும்பவில்லை என்று இயேசுவே சொல்லியிருக்காரே."

"உங்கிட்ட வந்து இரகசியமா சொன்னாரா?"

"பைபிள் வாசிக்கும்போது இறைவன் நம்மோடு பேசுகிறார்னு நீங்கதானே சொன்னீங்க."

"ஆமா."

"இன்றைக்கு காலையில பைபிள் வாசிக்கும்போது இறைவன் உங்ககூட பேசல?"

..."பேசினார்."

"அவர் பேசினது உங்க காதில விழல? "

"சொல்ல வந்தத நேரடியா சொல்லு."

'‘I desire  not sacrifice ன்னு இயேசு சொல்லல?"

"சொல்லல.

‘I desire mercy, and not sacrifice'

ன்னுதான் சொன்னாரு.

ஏண்டா, சொல்றத அரைகுறையா கேட்டிட்டு அத முழு உண்மைன்னு சொல்ற! "

"அப்பா நீங்க English Teacher..."

"Wait,  I am not an  English Teacher. (I am not a teacher from England.)

I am a   teacher of English  (a teacher who teaches  English.)"

"சரி.teacher of English.

The verb desire has two objects,

mercy

and

not sacrifice.

I took the second object for consideration.

Am I wrong?"

"Surely. Both the objects must be taken together."

"இங்கே என்ன ஆங்கில வகுப்பு நடந்துகிட்டிருக்கு? தமிழில பேசுங்க. என்ன பிரச்சனை?"

"அம்மா ஆண்டவர் விரும்புவது இரக்கத்தையா, பலியையா?"

"ஓஹோ! இன்றைய வாசகம்தான் உங்க கையில இந்த பாடு படுதோ?

இப்போ அம்மா ஒரு கேள்வி கேட்கிறேன்.

நீ விரும்புவது சாப்பாட்டையா அதன் ருசியையா? 

இதை ஆண்டவர் சொன்னது மாதிரியே சொல்லணும். சொல்லு."

"நான் விரும்புவது ருசியை,
சாப்பாட்டையல்ல."

..."இப்போ அம்மாட்ட வசமா மாட்டிக்கிட்ட. ஏண்டி காலையில இவனுக்குச் சாப்பாடு கொடுத்தியா?"

"ஆமா. நல்லா ருசிச்சி சாப்பிட்டான? "

"அப்படின்னா அவன் அவனது விருப்பத்திற்கு எதிரால்லா போய்க்கிட்டிருக்கான்!"

"அப்படின்னா?"

...."பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்'

என்ற இன்றைய வாசகத்தை மனைசுல வச்சிக்கிட்டு  உன் மகன் சொல்றான்,

'அப்பா,  இயேசு பலிய விரும்பல,  இரக்கத்தை மட்டுமே விரும்புகிறார்.

ஆகையினால திருப்பலிக்குப் போறது இயேசுவின் விருப்பத்துக்கு விரோதமானது'ங்கிறான்.

இப்ப அவனே மாட்டிக்கிட்டான்.

அவன் விரும்புவது ருசியை மட்டும்தான,

எதுக்கு அவனுக்கு சாப்பாடு கொடுத்த?"

"டேய்! அப்படிச் சொன்னியா? "

"சொன்னேன். அது தப்புன்னு நீங்க புரிய வச்சிட்டீங்களே! "

"எப்படிப் புரிஞ்சது? சொல்லேன்."

"உங்க பாணியிலதான் சொல்லணும், வினா விடை பாணி."

"சரி, கேளு."

"இயேசு எதற்காக மனிதன் ஆனார்? "

"நமது பாவங்களுக்குப் பரிகாரம்  செய்து நம்மைப் பாவத்திலிருந்து மீட்க."

"எப்படி பரிகாரம் செய்தார்? "

"பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பலியாக்கினார்."

"அவர் தன்னையே பலியாக்க காரணமாய் இருந்தது எது?"

"அவர் நம்மீது கொண்டிருக்கும் இரக்கம்."

"அவருக்கு இரக்கம் இருந்திருக்காவிட்டால்.....''

"அவரது பலியும் இருந்திருக்காது."

"ஆகவே, இரக்கத்தையும் பலியையும்...."

"பிரிக்கமுடியாது."

"இரக்கமே உருவான இறைவன் இரக்கத்தின் காரணமாகவே தன்னைப் பலியாக்கிவிட்டு,

'நான் விரும்புவது இரக்கத்தையே, பலியை அல்ல' என்று ஏன் கூறுகிறார்?"

"இயேசுவின் பிறப்பிற்கு முன் மக்கள்  இறைவனுக்கு மிருகங்களைப் பலி கொடுத்து வந்தார்கள்.

.
ஆனால் இயேசு நம்மீதுள்ள இரக்கத்தால் நம்மை மீட்க தன்னையே பலியாக்கினார்.

தன்னையே தன் தந்தைக்குப் பலியாகக்  கொடுத்தார்.

இனி மிருகப் பலிகள் தேவை இல்லை.

இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது நமது இரக்கச் செயல்களைத்தான்.

இயேசு நம்மீது இரங்கியதுபோல. நாமும் நம் அயலான்மீது இரங்க வேண்டும்.

நமது இறுதித் தீர்ப்பு நாம் நம் அயலானுக்குச் செய்த இரக்கச் செயல்களின் அடிப்படையில்தான் இருக்கும்.

இயேசு விரும்புவது  நாம் அயலானுக்குச் செய்யும் இரக்கச் செயல்களைத்தான்.

ஏனெனில் நாம் அயலானுக்குச் செய்யும் ஒவ்வொரு செயலையும் இயேசுவுக்கே செய்கிறோம்.

அயலானை அடித்தால் இயேசுவையே அடிக்கிறோம்.

அயலானை அரவணைத்தால் இயேசுவையே அரவணைக்கிறோம்.

அயலானுக்குக் கொடுத்தால் இயேசுவுக்கே கொடுக்கிறோம்."

"அம்மா! Well done!  உங்களுக்கு ஒரு பரிசு கன்னத்தில் ஒரு முத்தம்."

"ஆகா! எவ்வளவு பெரிய பரிசு!"

"அடேய்!  நான் திருப்பலிக்குப் போகலாமா?"

"தாராளமாகப் போகலாம்.

திருப்பலியின் மூலமே இயேசு நம் மீது கொண்ட இரக்கமே!

இயேசுவின் இரக்கத்தை திருப்பலிமூலம் பெற்று நாலு பேருக்கு பங்குவச்சிட்டு வாங்க! "

"ஏலே! அப்பனுக்கு மகன் கொடுக்கும் Advice!

ம்ம்! காலம் மாறிப்போச்சி! "

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment