இறைவனைக் கண்டும் காணாதது மாதிரி போகிறோமா?
++++++++++++++++++++++++++
."செல்வம், உனக்கு ஒரு கதை தெரியுமா? "
"ஒரு கதை தெரியுமாவா? ஓராயிரம் கதை தெரியுமுங்க.
ஒண்ணாங்கிளாஸ் டீச்சர் ஒரு கதை சொல்லித்தானே முதல் க்ளாஸையே ஆரம்பிச்சாங்க."
.."காக்கா நரி கதைதானே? "
."ஆமா. ஆனால் அதைச் சொல்லச் சொல்லாதீங்க.
வேறொரு கதை வேணும்னா சொல்றேன்."
"நான் ஒரு கதை சொல்லலாம்னு நினைத்தேன்.
பரவாயில்லை, நீயே சொல்லு."
."First class
கதைங்க!..."
..."ஒண்ணாங்கிளாஸ் கதைதானா? என்ன சின்னப் பிள்ளன்னு நினைச்சியா? "
"ஹலோ! First classன்னா 'முதல் தரமான'ன்னு அர்த்தம்."
..."அப்போ சரிதான், சொல்லு."
"ஒரு ஊர்ல ஒரு ஆள்."
..." ஒரே ஒரு ஆள் இருந்தா அது ஊரே இல்லை."
''இங்க பாருங்க சொல்லுக்குச் சொல் Comment அடிச்சிக்கிட்டே இருந்தா கதை நகராது.
நான் ஏதாவது கேட்டா பதில் சொன்னால் போதும்."
..."சரி. சொல்லு."
"அந்த ஊர் பேரு செருசலேம்.
அந்த ஆள் ஒரு நாள் ஒரு விசயமா 'செரிக்கோ'ங்கிற ஊருக்குப் போக வேண்டியிருந்தது.
அப்போ Busல்லாம் கிடையாது.
நடந்துதான் போகணும்.
போகிறவழியில திருடங்க கையில மாட்டிக்கிட்டாரு.
அவர் கையில பணம் இருக்கும்னு நினைச்சி திருடங்க அவர மடக்கியிருக்காங்க.
ஆனால் பணம் இல்லை.
ஆகையினால அவன் சட்டைய கழற்றிவிட்டு,
தாங்கள் ஏமாந்த கோபத்தில அவன நல்லாஅடிச்சி குற்றுயிரும் கொலவுயிருமா ஆக்கிப் போட்டுட்டுப் போய்ட்டாங்க.
அவர் ரத்த வெள்ளத்தில மிதந்துகிட்டு கிடக்கிறாரு.
யாரும் காப்பாற்ற வரமாடாங்களான்னு ஏங்கிக்கிட்டு கிடக்கிறாரு."
..."ஏண்டி, இது நம்ம ஆண்டவர் சொன்ன கதைதான? ஏதோ புதுசா சொல்லப்போறதா பில்டப் கொடுத்த."
"ஆமா, புதுசாத்தான் சொல்லப் போறேன்."
"புதுசான்னா? ஆண்டவர் சொல்லாதத கதையில மிக்ஸ் பண்ணப் போறியா? "
"இல்ல. எனக்கு மிக்ஸ் பண்ணத் தெரியாது.
கதையை முடிச்சபிறகு புதுச பாருங்க.
இப்ப அந்த வழியே யார் வருவா?"
..."யூத குரு ஒருவர் வருவார்."
"கரெக்ட். அவர் வீட்ல இருந்து புறப்பட்டு கோவில் பணிக்குப் போய்க்கிட்டிருக்கிறார்.
கோவில் பணிங்கிறது இறைப்பணி.
இறைப்பணி செய்யப்போகிறவர் வழியிலேயே இறைவனைப் பார்க்கிறார்.
ஆனால் பார்த்தும் பார்க்காதது மாதிரி இறைவனைக் கடந்து போகிறார்."
..."ஏண்டி புதுக்கதை விடுற.
வழியிலேயே இறைவனைப் பார்க்கிறார் என்கிற.
பார்த்தும் பார்க்காதது மாதிரி இறைவனைக் கடந்து
போகிறார்ங்கிற.
இது உன் சொந்தக் கதையா? "
" ஏங்க 'ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தவில்லை'ன்னு சொன்னது யாரு?"
...''இயேசு."
"இப்போ இறுதி நாளில் சொல்லபோகிற வார்த்தைகளின்படி
அங்கே அடிபட்டு ஆடையின்றி இருக்கது யாரு?"
"..."கரெக்ட். இயேசுதான். அவர் இறைவன்.
குருதான் இறைவனைக் கண்டும் காணாதது மாதிரி போகிறார்"
"அடுத்து அந்த வழியே வருவது யார்? "
..."லேவியன். இறைனின் ஆலயப் பணியாளர்தான்.
அவரும் இறைவனைக் கண்டும் காணாதது மாதிரி போகிறார்."
"இருவரும் யாரை வழிபடப் போகிறார்களோ அவரைக் கண்டும் காணாதது மாதிரிப் போகிறார்கள்.
இப்போ அடுத்து வருவது யார்?"
..."சமாரியன் யூதமும் அஞ்ஞானமும் கலந்த பிறவி.
(a Jew/Gentile mongrel)
அந்தக் காலக்கட்டத்தில் யூதர்களும் சமாரியர்களும் ஒருவருக் கொருவர் விரரோதிகள்.
அடிபட்டுக் கிடப்பவன் யூதன், அவ்வழியே வருபவன் சமாரியன், அதாவது விரோதி.
அவன் அடிபட்டுக் கிடப்பவனைக் கண்டு மனமிரங்கினான்.
இரக்கம் அன்பின் பிள்ளை.
சமாரியன் யூதனை நேசிக்கிறான்.
வெறும் வார்த்தையில் மட்டும் அல்ல, செயலிலும்.
அவனை அணுகி
எண்ணெயும் திராட்சை இரசமும் வார்த்து,
அவன் காயங்களைக் கட்டித்
தன் சொந்த வாகனத்தில் ஏற்றி,
ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவனைக் கண்காணித்தான்.
மறுநாள் இரு வெள்ளிக்காசுகளை எடுத்துச் சாவடிக்காரனிடம் கொடுத்து,
"இவனைக் கண்காணித்துக் கொள். இதற்குமேல் செலவானால் திரும்பி வரும்போது கொடுத்துவிடுவேன்" என்றான்.
"பழிக்குப் பழி வாங்கத் தேடாதே. உன் மக்கள் உனக்கு அநீதி செய்தாலும், மனத்தில் பொறாமை கொள்ளாதே. உனக்கு அன்பு செய்வது போல் உன் அயலானுக்கும் அன்பு செய். நாம் ஆண்டவர்."
(லேவி.19:18)
என்ற இறைவார்த்தைப்படி தன் அயலானாகிய யூதனை அன்பு செய்கிறான்.
இறைக்கொள்கையும், இனவேறுபாடும் அவனது இரக்கத்துக்கும், உதவிக்கும் குறுக்கே நிற்கவில்லை.
அவனைப் பொறுத்தமட்டில் உதவி தேவைப்படுபவன் சகமனிதன். (a fellow human being)
உதவாதவர்களைக் காரணம் கேட்டால் சொல்லியிருப்பார்கள்
ஆலயப்பணிக்கு பிந்தக்கூடாது என்று.
அயலானுக்கு உதவுவதே இறைவனுக்குச் செய்யும் சேவை என்பதுதானே இயேசுவின் போதனை.
"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்."(மத்.25:40)
இயேசுவின் போதனைப்படி வழியில் அடிபட்டுக்கிடந்தவன் இயேசுவின் சகோதரன்.
இயேசு ஒருயூதர்.
குருவும், லேவியனும் யூதர்கள்.
இயேசு இனம் சார்ந்து பேசவில்லை,
இறைசார்ந்து பேசுகிறார்,
ஏனெனில் அவர் இறைவன்.
விரோதியையும் நேசிக்க வேண்டும் என்பது இயேசுவின் போதனை.
இயேசுவைப் பொறுத்தமட்டில்
யூதர்களாக இருந்தாலும் சரி,
சமாரியர்களாய் இருந்தாலும் சரி,
வேறு எந்த இன அல்லது மதத்தவர்களாக இருந்தாலும் சரி
எல்லோரும் அவரால் படைக்கப்பட்டவர்கள் ஆகவே அவரது பிள்ளைகள்.
எல்லோருமே எல்லோராலும் அன்பு செய்யப்பட வேண்டியவர்கள்.
நாம் அன்பு செய்யும்போதுதான் அன்பு செய்யப்படுவோரின் அயலானாக செயல்படுகிறோம்.
ஆகவேதான்.
"என் அயலான் யார்?"
அனக் கேட்ட சட்ட வல்லுநரிடம் 'நல்ல சமாரித்தன்' உவமையைக்கூறி
"கள்வர்கையில் அகப்பட்டவனுக்கு இம்மூவருள் எவன் அயலான் என்று உமக்குத் தோன்றுகிறது ?" என்றார்.
அதற்கு அவர், "அவனுக்கு இரக்கம் காட்டியவன்தான்" என்றார்.
இயேசு, " நீரும் போய் அவ்வாறே செய்யும்" என்று கூறினார்."
..."பெற்றால் மட்டும் தந்தை என்ற பெயர் கிடைத்து விடாது,
வளர்த்தால்தான் கிடைக்கும்.
School ல் admission கிடைத்தவுடனே மாணவன் ஆகிவிடமுடியாது, படித்தால்தான் மாணவன்.
ஞானஸ்நானம் பெற்றால் மட்டும் போதாது, வாழ்ந்தால்தான் கிறிஸ்தவன்.
நண்பனாயினும், எதிரியாயினும் உதவுபவன் மட்டும்தான் அயலான் என்று அழைக்கப்படத் தகுந்தவன் .
உன் அயலானை நேசி என்றால் அவனுக்கு அன்புடன் உதவி செய் என்பதுதான் பொருள்.
No lip service alone, real service, please. ''
..."ஏதோ 'புதுசாத்தான் சொல்லப் போறேன்'ன,
புதுசா ஒண்ணும் சொல்லலிய! "
"இப்போ சொன்னத எழுதித் தாரேன்.
இரண்டு முறை வாசிங்க.
புதுசா சொன்னது தெரியும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment