Wednesday, July 24, 2019

"நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்." (அரு.15:4)

"நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்." (அரு.15:4)
++++++++++++++++++++++++++

"என்னங்க....என்னங்க.....
என்னங்க....என்னாச்சி இவருக்கு? இவ்வளவு கத்துகிறேன், பதிலே இல்ல!"

"பதில் சொல்லாமல் இருக்கிறதே ஒரு பதில்தானே! Busy யா இருக்கேன், கொஞ்சம் பொறுத்து கூப்பிடுன்னு அர்த்தம்!"

"சரி.கொஞ்சம் பொறுத்து கூப்பிடுகிறேன்.

அதுவரை என்னுள்ளே இருக்கிற உங்ககூட பேசிக்கிறேன்."

..."என்னது? உன்னுள்ளே இருக்கிற என்கூடவா? புரியல."

"உங்க மனசுல நான் இருக்கேனா? இல்லையா?"

..."இருக்கிறாய்."

"அதேமாதிரி என் மனசுல நீங்க இருக்கீங்க. அந்த உங்ககூட பேசுவேன்."

..."நான்கூட Busy யா இருந்தபோது என் மனசுல இருக்கிற ஒருத்தர்கூடதான் பேசிக்கிட்டிருந்தேன்."

"நான் அத அப்பவே Guess பண்ணிட்டேன்.

செபம் சொல்லிக்கொண்டு இருந்திருப்பீங்க."

..."யாரிடம்?  Guess. பண்ணு பார்ப்போம்."

"நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்."

என்று யார் சொன்னாரோ அவர்கூட, சரியா?"

..."Correct. அதெப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்ச?"

"நீங்க பதில் சொல்லும்போது பக்கத்தில் பைபிள் திறந்தாப்ல இருந்தது,  அருளப்பர் 15ஆம் அதிகாரத்தில."

..."நீ சொன்ன வசனத்தில உனக்குப் பிடிச்ச பகுதி எது?"

"இன்னொரு சமயம் ஆண்டவர் சொன்னாரு,

'உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல்

உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக'

என்று.

இந்தக் கட்டளையில் இறைவன் 'உன் மீது அன்பு காட்டு,  அதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டு' என்று சொல்லவில்லை. ஏன்?"

...''ஏனென்றால் சுய அன்பு இயல்பானது. அதற்குக் கட்டளை தேவைஇல்லை.

பிறர் அன்புக்குக் கட்டளை தேவை.  

'உன்னை நேசிப்பதுபோல் பிறரையும் நேசி.''

"  'நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல

நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்.'

கடவுள் நம்மில் நிலைத்திருக்கிறார்.

கடவுள் நம்முள் இருக்கிறார்.

நாம் தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே

நம்மைத் தன் சிந்தனையில் அன்புடன் சுமந்து கொண்டிருந்த கடவுள்

அன்பின் காரணமாகவே நம்மைப் படைத்தார்.

கடவுள் மாறாதவர், அவரது அன்பும் மாறாதது.

கடவுள் எங்கும் இருக்கிறார், அன்பாகவே எங்கும் இருக்கிறார்.

ஆகவே கடவுள் நம்முள்ளும் இருக்கிறார்,  அன்பாகவே இருக்கிறார்.

அவரது அன்பு மாறாதது.

நாம் நல்லவர்களாக இருந்தாலும், பாவிகளாக இருந்தாலும்

தம் அன்பில் கொஞ்சங்கூட குறையாமல் நம்முள் இருக்கிறார்.

கடவுளே இல்லை என்று சொல்பவர்களுக்குள்ளும்

தம் அன்பில் கொஞ்சங்கூட குறையாமல்  இருக்கிறார்.

ஏனென்றால் எங்கும் இருப்பது அவர் இயல்பு.

அவர் நமக்குள் எப்போதும் இருக்கிறார்.

எப்போதும் இருப்பதற்குப் பெயர் நிலைத்திருப்பது.

ஆகவேதான் இயேசு

'நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல'

என்று சொல்கிறார்.

அவர் நம்மில் நிலைத்திருப்பதுபோல

நாமும் அவரில் நிலைத்திருக்க
வேண்டும்.

அதாவது

அவரைப்போலவே அன்பு குறையாமல்,

அவரைப்போலவே நேர இடைவெளி விடாமல்,

அவரைப்போலவே பாவம் இல்லாமல்,

அவரைப்போலவே தந்தையின் சித்தத்தை ஏற்று

அவரில் நிலைத்திருக்க
வேண்டும்."

..."ஒரு கேள்வி.

எங்கும் இருப்பது அவர் இயல்பு.

ஆகவே நம்முள்ளும் இருக்கிறார்.

எங்கும் இருப்பது போலவே நம்முள்ளும் இருந்தால் அதில் என்ன விசேசம் இருக்கிறது? "

"விசேசமே அதில்தான் இருக்கிறது.

கடவுள் ஆவி.

ஆவி இருக்க இடம் தேவை இல்லை.

சடப்பொருளாகிய நாம்

இடத்தை அடைத்துக் கொண்டிருப்பது போல

அவர் அடைத்துக் கொண்டிருக்கவில்லை,

அடைத்துக்கொண்டிருக்கவும் முடியாது.

Being a Spirit God does not and cannot occupy space as we, matter,  do.

கடவுள் தன்

ஞானத்தினால்,

வல்லமையால்,

அன்பினால்  எங்கும் இருக்கிறார்.

படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் அவருடைய நினைவில் இருக்கிறது,

அவருடைய நினைவில் இருப்பதால்தான் அப்பொருளே இருக்கிறது.

Suppose,

அவர் அதை மறந்தால்

அது ஒன்றுமில்லாமைக்குத் திரும்பிவிடும்,

அதாவது, இருக்காது.

(ஆனால் அவரால் மறக்கமுடியாது.

ஆனாலும்

அவர் நினைத்தால் மறக்காமலேயே எந்தப் பொருளையும் ஒன்றுமில்லாமல் ஆக்கமுடியும், ஏனெனில் அவர் சர்வ வல்லபர்)

அவர் நம்முள் இல்லாவிட்டால் நாம் ஒன்றுமில்லாமை யாகிவிடுவோம்.

அவர் இருப்பது எல்லா பொருட்களுக்கும் பொதுவானது.

அப்போ நம்மில் இருப்பதில் விசேசம் என்ன இருக்கிறது?"

"காற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

காற்று வெட்ட வெளியிலும் வீசுகிறது,  கல்மீதும் உரசிக் கொண்டு போகிறது.

அதே காற்று என் மூக்கு வழியாக என் நுரையீரலுக்குள்ளும் போகிறது.

ஆனால் அதன பணியைப் பாருங்கள்.

வெட்ட வெளியில் வீசுகிறது,

கல்மீது உரசுகிறது.

என்னை வாழவைக்கிறது.

அதேபோல்தான் நம்முள் வாழும் தேவன் நம்மை வாழவைக்கிறார்.

தன்னை நேசிப்பதுபோலவே நம்மையும் நேசிக்கிறார்.

தனது அருளால் நம்மை இயக்குகிறார்.

தனது தூண்டுதல்கள்மூலம் நம்மோடு பேசுகிறார்.

நம்மை வழிநடத்துகிறார்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்?

ஒவ்வொரு வினாடியும் நம் நினைவாகவே இருக்கும் அவரைக் கண்டு கொள்வதில்லை.

அவர் நம்மோடு பேசுவதையும் கேட்பதில்லை.

நமது ஆன்ம வளர்ச்சிக்காக அவர் தரும் அருளையும் பயன்படுத்துவதில்லை.

அவரது பராமரிப்புக்கு நன்றி கூறுவதுமில்லை.

அவரது அருளால் எதாவது நல்லது நடந்தால் அதை நமது சாதனையாக எண்ணி பீற்றிக்கொள்வோம்.

எதாவது கஷ்டம் வரும்போது மட்டும் அவர் நம்மிடம் இருப்பது ஞாபகம் வரும்.

அப்போதுதான் நமது கஷ்டத்தை நீக்க விண்ணப்பம் வைப்போம்.

கஷ்டம் தீர்ந்தவுடன் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவோம்.

ஆகவேதான் இயேசு நமக்கு அறிவுரையாகக் கூறுகிறார்,

'நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல

நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்.'

ஆண்டவர் எப்படி எப்போதும் நமக்குள் அன்புடன், நம் நினைவாகவே வாழ்கிறாரோ

அதேபோலவே நாமும் எப்போதும் அன்புடன் அவர் நினைவாகவே வாழவேண்டும்.

நாமும் அவருடைய அன்பில் நிலைத்திருக்க வேண்டும்.

அவரது சொற்களுக்கு செவிமடுக்க வேண்டும்.

துன்பத்தில் நினைப்பதுபோல் இன்பத்திலும் நினைக்க வேண்டும்.

அவரால்தான் நாம் வாழ்கிறோம் என்பதை உணரவேண்டும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம்,

  'ஆண்டவரே  நான் உம்மை நேசிக்கிறேன்'

என்று சொல்லவேண்டும்.

எப்போதும் அவர் சந்நிதியில் வாழ வேண்டும்.

அவருள் நிலைத்திருந்தால்தான் நமக்கு நிலைவாழ்வு கிட்டும்."

..."Very good.

இதில் இன்னொரு விசேசம் என்னவென்றால்

அவர் நம்முள் வாழ்வதும் நமக்காகத்தான்,

நாம் அவருள் வாழ்வதும் நமக்காகத்தான்.

அதாவது நமது பக்தி வாழ்வால் அவருக்கு ஒரு பயனும் இல்லை,

ஏனெனில் அவர் நம்மைப் படைக்குமுன்பே பரிபூரணர்.(Perfect)

ஆனால் அவர் நம்மை படைக்கு முன் நாம் ஒன்றுமில்லை.

We were nothing before we were created.

இப்போது நாம்  சொந்தம் கொண்டாடுவது எல்லாம்,நமது உயிர் உட்பட,  இறைவன் தந்தது.

இறைவனது அன்பு

நிபந்தனை அற்றது,

தன்னலம் அற்றது,

குறையாதது,

மாறாதது,

நிரந்தரமானது.

அத்தகைய அன்பிற்குள் நிலைத்து வாழ இயேசு நம்மை அழைக்கிறார்.

அழைப்பினை ஏற்போம்.

அழியா வாழ்வடைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment