Thursday, July 4, 2019

மரியாள் கடவுளின் தாய்.

மரியாள் கடவுளின் தாய்.
----------++--------+----------------

பைபிள் வாசிக்கிறவர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள்.

முதல் வகையினர்,  திறந்த மனதோடு வாசிக்கிறவர்கள்.

இவர்கள் விசுவாசத்தோடு வாசித்து, 

கிடைக்கும்  செய்தியை அப்படியே ஏற்றுக்கொண்டு,

அதை வாழ்வாக்குகிறவர்கள்..

இரண்டாவது வகையினர்

செய்தியை தாங்களே உருவாக்கிக்கொண்டு  (Preconceive)

அதுக்கு Support ஆக வசனங்களைத் தேடுபவர்கள்.

இவர்கள் வார்த்தையை வாசிப்பது வாழ்வதற்கல்ல, வழக்காடுவற்கு.

ஆகவே தங்கள் தேவைக்கு ஏற்றபடி வசனங்களை Twist செய்துகொள்வார்கள்.

முதல் வகையினர் இறைவனைத் தேடி சரணடைவதற்காக இறை வார்த்தையை வாசிக்கின்றார்கள்.

இரண்டாம் வகையினர் தங்களை நிலை நிறுத்துவதற்காக,

இறைவனை Support க்கு அழைப்பதற்காக இறைவார்த்தையை வாசிக்கிறார்கள்.

சில சமயங்களில் அவருக்கு எதிராகப் பேசுவதற்கே அவரது
Support ஐத் தேடுவார்கள்.

முதல் வகையினர் பற்றி நாம் Comments ஏதும் கூறவேண்டியதில்லை,

அவர்கள் நமது Commentsஐ  எதிர்பார்த்து வாசிப்பதில்லை.

நமது பிரிவினை சகோதரர்கள் ஒருவருக்கொருவர் கொள்கை வேறுபாடு உடையவர்கள்.

அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி பைபிள் வசனங்களுக்கு அவரவர்களே விளக்கங்கள் வைத்திருப்பதே அதற்குக் காரணம்.

எத்தனை விளக்கங்களோ அத்தனை சபைகள் இருக்கும்.

ஆனால் ஒரு விசயத்தில் எல்லோருமே ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

தேவ மாதாவை வெறுப்பதில் பயங்கர ஒற்றுமை.

ஒரு நண்பர் ஒரு முறை கேட்டார்,

"நீங்கள் ஏன் மாதாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?"

"ஏனெனில் அவள் நமது இரட்சகரின் தாய்."

"அவள் இயேசுவின் தாயாக இருக்கலாம். ஆனால் அவளும் நம்மைப் போல ஒரு மனுசிதானே.

இயேசு கடவுள். அவருக்குக் கொடுக்கிற மரியாதையை மரியாளுக்கும், அதாவது ஒரு சாதாரண பெண்ணுக்கும் கொடுக்கிறீர்கள்?"

"தவறாகச் சொல்கிறீர்கள்.

இயேசுவுக்குக் கொடுப்பது ஆராதனை.

ஆராதனை கடவுளுக்கு மட்டுமே உரியது.

மாதாவுக்குக் கொடுப்பது வணக்கம்.

மற்ற புனிதர்களுக்குக் கொடுக்கும் வணக்கத்தைவிட மேலான வணக்கம்."

"அதென்ன மேலான வணக்கம் அவளுக்கு மட்டும்?"

"ஏனெனில் மரியாள் கடவுளின் தாய்!"

"ஹலோ! இயேசுவின் தாய், கடவுளின் தாய் அல்ல."

"அப்படியானால் இயேசுவை கடவுள் இல்லை  என்கிறீர்களா?"

"இயேசு கடவுள். ஆனால் மாதா அவரது மனித சுபாவத்துக்கு மட்டும்தான் தாய்."

"உமது மகனுக்கு அப்பா யார்? "

"இதென்னையா மடத்தனமான கேள்வி. என் மகனுக்கு அப்பா நான்தான்."

"தப்பு. உமது மகனுக்கு அப்பா நீங்க இல்லை."

"ஹலோ! ..."

"கத்த வேண்டாம். நீங்க உங்க
மகனின் உடலுக்கு மட்டும்தான் அப்பா.

அவனுடைய ஆன்மாவை நீங்கள்  படைக்கவில்லை.

அதற்கு நீங்க அப்பா இல்லை."

"இங்கே பாருங்க மிஸ்டர், என் மகனின் உடலும், ஆன்மாவும் சேர்ந்து ஒரே ஆள்தான்.

அந்த ஆளைத்தான் நான் பெற்றேன்.

உடல் உற்பத்தி ஆகும் நேரத்திலேயே ஆன்மா அதோடு இணைந்துவிடும்.

உடலும் ஆன்மாவும் இணைந்த ஆள்தான் என் மனைவியின் வயிற்றில் பத்து மாதம் இருந்து பிறந்தது.

அதுக்குதான் நான் அப்பா.

பைத்தியக்காரன்கூட என் மகனின் உடலுக்கு மட்டும்தான்   நான் அப்பான்னு சொல்ல மாட்டான்."

"Super, sir.

இப்போ கவனிங்க.
விளங்கும்.

தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

மனித அவதாரம் எடுக்குமுன் அவர் ஒரே சுபாவம் (தேவ சுபாவம்) உள்ள ஒரு ஆள்.

மனித அவதாரம் எடுத்த பின் 
இரண்டு சுபாவம், ஒரு ஆள்.

ஆள் ஒன்று,
சுபாவம் இரண்டு,
தேவ சுபாவம், மனித சுபாவம்.

இயேசு தேவ சுபாவமும், மனித சுபாவமும் உள்ள ஒரு ஆள், தேவ ஆள்.

மாதா மனித சுபாவத்தை மட்டும்தான் கருத்தரித்தாள்.

ஆனால் மனித உருவான இயேசு தேவ சுபாவமும், மனித சுபாவமும் உள்ள ஒரு தேவ ஆள்.

அந்த ஒரு ஆள்தான் மனிதனாகப் பிறந்தார்.

எந்த ஒரு ஆள்? "

"தேவஆள்."

"அப்போ மாதா பெற்றது? "

"தேவஆள்."

"தேவ ஆளைப் பெற்றவள்? "

"தேவமாதா."

"தேவமாதான்னாலும், கடவுளின் தாயின்னாலும் ஒரே அர்த்தம்தான்.

புரியுதா?"

"யோவ்,  நான் என்ன சின்னப் பையனா?

ஒண்ணாங் கிளாஸ்கு பாடம் எடுக்கிறது மாதிரி எடுக்கிறீங்க."

இப்படித்தான் சிலர் நம்மை வம்புக்கு இழுப்பதற்காகவே கேள்வி கேட்பார்கள்.

அவர்கட்கும் மாதாபக்தி இருக்கும்.

மாதாபக்தியை அனுமதித்தால் எங்கே நம்மிடம் வந்துவிடுவார்களோ எனப் பயந்துபோய்தான்

அவர்களை வழி நடத்துபவர்கள் மாதாவை நெருங்கவிடாமல்

அவர்களைத் தடுத்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு பாஸ்டர் சொன்னார்,

"மரியாள் இரட்சகரின் தாய் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் மாதாவுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறீர்களோ என்று பயமாய் இருக்கிறது. "

"உங்கள் பயம் அர்த்தம் அற்றது.
நீங்க டில்லிக்குப் போயிருக்கீங்களா? "

"போயிருக்கிறேன். நண்பர் வீட்டுத் திருமணம்."

"கல்யாண வீட்டில் எவ்வளவு நேரம் இருந்திருப்பீங்க? "

"ஒருநாள்."

"போக வர?"

"போக ஒருநாள்,  வர ஒருநாள்."

"பொண்ண ஆசீர்வதிக்க கால்மணி நேரம்தான்.

அதற்காக, போக ஒருநாள், தங்க ஒருநாள்,  வர ஒருநாள்

மூணு நாள் வேஸ்டா தெரியல? "

" அது எப்படிங்க வேஸ்டாகும்?

மூணு நாளுமே கல்யாண மகிழ்ச்சிதான்."

"ஒரு வீட்டுக்குப் போனா அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மக்கள்னு பல பேர் இருப்பாங்க.

முக்கியமான விசயமா அப்பாவிடம்தான் பேசப் போயிருப்போம்.

ஆனால் வீட்ல எல்லோருடனும் பேசுவோம்.

சிலசமயங்களில மற்ற எல்லோரையும் அப்பாவிடம் சிபாரிசுகூடச் செய்யச் சொல்லுவோம்.

கணக்குப் பார்த்தால் அப்பாவைவிட மற்றவர்களிடம்தான் அதிகம் பேசியிருப்போம்.

அதற்காக அப்பா கோபமெல்லாம் படமாட்டார்.

அவருக்கு வேண்டியவர்களிடம் நாம் மகிழ்ச்சியாய் இருந்தால் அவர் அதற்காக மகிழ்வார்.

இயேசுவைத் தரிசிக்க கோவிலுக்குப் போனா, அவருடைய அம்மாவைப் பார்க்கக்கூடாதுன்னு அவர் சொல்லுவாரா?

உங்க வீட்டுக்கு நான் வருகிறேன்.

உங்க அம்மா வழியில நிற்கிறாங்க.

"அம்மா, உங்க மகனத்தான்  பார்க்க வந்தேன்.

உங்களைப் பார்த்து நேரத்தை Waste பண்ணிரக்கக் கூடாது, தள்ளுங்க"ன்னு சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்?"

"நான் ஒரு பாஸ்டர். எனக்கு இதெல்லாம் தெரியாததுமாதிரி பேசுறீங்க? "

"உங்ளுக்குத் தெரியுமுன்னு எனக்குத் தெரியும் என்ற விசயம்  உங்களுக்குத் தெரியும்..."

"என்று எல்லோருக்கும் தெரியும். 
எனக்கு இன்னொரு விசயமும் தெரியும்.

நீங்க மாதாவிடம் வேண்டும்போது,

"உமது திருமகன் இயேசுவிடம் எங்களுக்காக மன்றாடுங்கள்"

என்றுதான் செபிக்கிறீர்கள்."

"பின் ஏன் மாதா பக்தியைப்பற்றி குறைவாகப் பேசுகிறீர்கள்? "

"ஏனென்றால் நான்  Protestant pastor."

"மார்ட்டீன் லூத்தர்கூட ஒரு மாதா பக்தர்
தெரியுமா உங்களுக்கு?"

"தெரியுமே!"

"தெரிந்தால் மட்டும் போதாது.

தாயிடம் வாருங்கள்.

தாய்த் திருச்சபைக்குள் வாருங்கள்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment