Thursday, July 18, 2019

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்."

"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்."
+++++++++++++++++++++++++

..."ஏண்டா, மூஞ்ச 'உம்'முன்னு வச்சிக்கிட்டிருக்க?  கொஞ்சம் சிரிச்சா குறஞ்சா போயிடுவ?"

"காரணம் இல்லாம சிரிச்சா பைத்தியம்னு சொல்லுவாங்க."

..."யார் சொல்லுவாங்க? வீட்ல மொத்தம் 5 பேர்தான் இருக்கோம்.

உன்னப் பைத்தியம்னு சொல்றதுக்கு எங்களுக்குப் பைத்தியமா?"

."யாருக்குப் பைத்தியம்? நல்லாத்தான இருந்தீங்க! "

..."ஏண்டி, பிள்ளையா வளர்த்திருக்க? எப்ப பார்த்தாலும் மூஞ்சிய உம்முன்னு வச்சிக்கிட்டிருக்கான்!"

.."ஏம்மா, நீயே சொல்லு,  பிள்ள ஆசையோடு கேட்கிறத வாங்கிக் கொடுக்கணுமா, இல்லையா? கொடுக்காவிட்டால் மூஞ்சி வேறு எப்படி இருக்கும்?" 

"நீ என்ன கேட்டு அவர் உனக்கு வாங்கித்தரல? "

.."ஒரு மாதமா Smart phone கேட்டுக்கிட்டிருக்கேன். அசைய மாட்டேங்கிறாரு.

இதில

'கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்'னு

பைபிள் வசன Stickerஅ room கதவுல ஒட்டி வச்சிருக்கிறாரு.

நான் கேட்கத இவர் தரல,  இவர் கேட்டு கடவுள் எப்படிக் கொடுப்பாரு?"

"இங்க பாருடா ராசா, உன்னக் கேட்டா உன்னைப் பெற்றோம்?

பிள்ளைகள் நல்லா இருக்கணும்னுதான் எல்லாப் பெற்றோரும் ஆசைப்படுவாங்க.

உனக்கு எது நல்லதோ அதத்தான் உனக்கு அப்பா வாங்கித் தருவாரு.

இப்போ உன் கையில Smart phone இருந்தா அது உனக்குக் கேடுதான் விளைவிக்கும்.

உன் படிப்பை அது கெடுத்துரும். பக்தியையும் கெடுத்திடும்.

அம்மா சொல்றதக் கேளு. இப்போ அது உனக்கு வேண்டாம் ராசா."

."அப்போ 'கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்'கிற Stickerஅ தூரக் கிழிக்கச் சொல்லு."

.."அப்படிச் சொல்லாதடா. அது இறைவனுடைய வாக்கு. நமக்கு வாழ்வு தருவதே இறைவாக்குதான்.

அதுக்கு அர்த்தம் தெரியாட்டா கேளு,  சொல்லித்தாரேன். மறந்துங்கூட அதக்கிழின்னு சொல்லிராத."

"சரி. அர்த்தமாவது சொல்லுங்க."

"இங்க பாரு. கொஞ்சம் பொறுமையா கேளு.

இரண்டு பேருக்கு இடையில உறவு வளரணும்னா இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் நேசிக்கணும்.

நேசம் இருதயத்தில இருக்கும்.

ஆனால் அங்கே மட்டும் இருந்தால் போதாது.

அது பொங்கி நம்ம வார்த்தைகளிலும், செயல்களிலும் வெளிப்படணும்."

"அம்மா அதெல்லாம் எனக்குத் தெரியும்.

'கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்'கிற வாக்கியத்துக்கு அர்த்தம் சொல்லுங்க."

"ஏண்டா உங்க ஸ்கூலில கட்டுரை எதுவும் எழுதச் சொல்லுவாங்களா?"

"சொல்லுவாங்க."

"கட்டுரைய எப்படி ஆரம்பிக்கணும்?"

"முதல்ல தலைப்பு எழுதணும். அப்புறம் முன்னுரை எழுதணும்."

"அதத்தான் இவ்வளவு நேரமும் எழுதிக்கொண்டிருந்தேன்.

இனிம நான் மட்டும் எழுதினா சரிவராது. இரண்டு பேரும் சேர்ந்தே எழுதுவோம்."

..."அப்போ நான்? "

"சரி, மூணுபேரும்.

இருவருக்குள் உறவு வளர அடிப்படையா என்ன வேணும்?"

"அன்பு,  இதயத்திலும், வார்த்தையிலும், செயலிலும்."

"Very good. நீ என்னை நேசிக்கிறாயா?"

"இதென்ன கேள்வி.

நீங்கள் என்னைப் பெற்றவர்கள்.

உங்களை எப்படி நேசிக்காம இருக்க முடியும்?

நான் உங்களை நேசிக்கிறேன்.

I love you. போதுமா?"

"பெற்றதுக்காக மட்டுமா என்ன
நேசிக்கிற?"

"எனக்கு வேணும்கிறதத் தந்து வளர்த்து ஆளாக்குது நீங்கதானே! "

"வேணுங்கிறத நீ கேட்டுத் தந்தேனா?
கேளாமல் தந்தேனா?"

"கேளாமலும் தந்திருக்கீங்க, கேட்டும் தந்திருக்கீங்க."

"'வேணுங்கிறதக் கேளு, தருகிறேன்'னு யார் சொல்லுவா?"

'' தெருவுல போறவங்களா
சொல்லுவாங்க?

என் மேல பாசம் வச்சிருக்கவங்கதான் சொல்லுவாங்க."

"இயேசு நம்மைப் பார்த்து, 'கேளுங்கள்'னு சொன்னா என்ன அர்த்தம்?"
,
"நம் மேல பாசம் வச்சிருகார்னு அர்த்தம்."

"முழு வாக்கியமா சொல்லு."

"இயேசு நம்மைப் பார்த்து, 'கேளுங்கள்'னு சொன்னா நம் மேல பாசம் வச்சிருகார்னு அர்த்தம்."

" 'சரி. அர்த்தமாவது சொல்லுங்க'ன்னு கேட்டியே, இப்போ நீயே சொல்லிட்ட பார்த்தியா! "

"ஏம்மா, இத அப்பவே நீயே சொல்லியிருந்தா இத்தனை வார்த்தைகளை Waste பண்ணியிருக்க வேண்டாம்."

"நானே சொல்றதவிட உன்னச் சொல்ல வைக்கிறதுதான் உனக்குப் பயன்படும்.

உனக்கு ஒண்ணு தெரியுமா?

Education என்ற ஆங்கில வார்த்தைக்கு Latin root 'educere'.

அதற்கு  'to draw out' அதாவது 'உள்ளே இருப்பதை வெளியே கொண்டுவா'ன்னு அர்த்தம்.

உண்மையான கல்வி

ஆசிரியர் தனது அறிவை மாணவனுக்குள் திணிப்பது அல்ல,

மாணவனுக்குள் உள்ள திறமையை வெளியே கொண்டுவருவதுதான்."

..."வெளியே கொண்டுவந்து பயன்பட வைப்பது."

"சரிசரி. இரண்டு பேரும் Teachersங்கது புரியுது.

விசயத்துக்கு வருவோம்.

இயேசு நம்மீது பாசம் உள்ளவர்.

உங்க Drawing out அ தொடருங்க."

..."இப்போ அப்பா கேட்கிறேன்.

பாசம் உள்ள இடத்தில அதோடு சம்பந்தப்பட்ட வேற என்ன இருக்கும்?"

"அதன் பிள்ளையான பரிவு இருக்கும்.

யார் மேல் பரிவு உள்ளதோ அவர்மேல் அக்கரை இருக்கும்

யார் மேல்  அக்கரைஉள்ளதோ அவர்மேல் கவனிப்பு இருக்கும்.

யார் மேல் கவனிப்பு உள்ளதோ அவர் நல்லா இருப்பார்."

"கவனிப்பு இருப்பவர் எப்படி நல்லா இருப்பார்?"

"கவனிப்பவர்

கவனிக்கப்படுபவர் வாழ்வில்

அவரது நல் வாழ்வுக்குச் சாதகமானவை மட்டுமே

நடக்கும்படி பார்த்துக் கொள்வார்."

"அதாவது, பாதகமானவை எதுவும்....."

"நடக்காதபடி பார்த்துக் கொள்வார்."

"அதாவது கவனிக்கப்படுவர் வாழ்வில்....."

"என்ன நடந்தாலும் அவரது நன்மைக்காகவே இருக்கும்."

"Very good. இப்போ கவனி.
கடவுளின் இந்த கவனிப்புக்கு பராமரிப்பு (Providence) என்று பெயர்.

இப்போ இதுவரை நீ சொன்ன பதில்களை வைத்து கடவுளின் பராமரிப்பு பற்றி கூறு."

"கடவுள் நம்மீது அளவுகடந்த பாசம் உள்ளவர்.

பாசத்தின் காரணமாக நம்மீது பரிவு கொண்டவர்.

அவருக்கு நம் நலனில் அளவுகடந்த அக்கரை உண்டு.

அக்கரை காரணமாக நம்மை நன்கு கவனித்துக்கொள்கிறார்.

அவருடைய கவனிப்பு காரணமாக நம் வாழ்வில் நடப்பவை எல்லாம்

நமது நன்மைக்காகவே நடக்கும்.

அவரது இந்தக் கவனிப்பை இறைவனின் பராமரிப்பு என்கிறோம்."

..."Very good.

இப்போ ஒரு சின்ன Test.

ஒரெ ஒரு கேள்வி.  நூறு மதிப்பெண்கள்.

குறிப்பு வரைக:

"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்."

"நம்மைப் படைத்து பராமரித்துவரும் நம் ஆண்டவர் இயேசு நம்மை நோக்கி கூறும் வார்த்தைகள் இவை.

ஒரு குழந்தை தன் வளர்ச்சிக்குத் தன் தாயைச் சார்ந்திருப்பதுபோல

நாம் நமது ஆன்மீக வளர்ச்சிக்கு நம் ஆண்டவரையே சார்ந்திருக்கிறோம்.

குழந்தைத் தனக்கு வேண்டியதை எப்படித் தாயிடம் கேட்டுப் பெற்றுக் கொள்கிறதோ

அதேபோல் நாமும் நமக்கு வேண்டியதை இயேசுவிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம்.

ஆனால் நாம் கேட்பது நமது ஆன்மீக நலனுக்கு ஏற்றதாய் இருந்தால்,

நாம் கேட்டதைத், தரவேண்டிய நேரத்தில் தருவார்.

நாம் கேட்பது நமது ஆன்மீக நலனுக்குப் பாதகமாய் இருந்தால் நிச்சயம் தரமாட்டார்.

Smart phone கேட்டால் நிச்சயம் தரமாட்டார்.

ஆனாலும் நாம் கேட்டது வீண்போகாது.

நமது ஆன்மீக நலனுக்கு ஏற்ற வேறொன்றைத் தருவார்.

ஆகவே கேட்கவேண்டியதைக் கேட்டு பெறவேண்டியதைப் பெறுவோம்."

..."Very good.  100 மதிப்பெண்கள்.

பரிசாக Shoolக்குப் போக ஒரு புது bicycle."

"ரொம்ப நன்றிப்பா!"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment