Tuesday, June 4, 2019

"ஹலோ! " "ஹாய்."

"ஹலோ! "

"ஹாய்."
*************************-********

"ஹலோ! "

"ஹாய்."

"ஹாய்"

"ஹலோ! "

"சாப்பிட்டீங்களா? "

"கூப்பிட்டீங்ங்களா? "

"ஹலோ! சாப்பிட்டீங்களா?"

" ஹாய்!   கூப்பிட்டீங்ங்களா?"

"ஏங்க, எழுந்திருங்க. என்னாச்சி உங்களுக்கு? தூக்கத்திலே ஏதேதோ சொல்லிக்கிட்டு இருந்தீங்க. என்னாச்சி?"

"எனக்கு ஒண்ணும் ஆகல. உனக்குதான் ஏதோ ஆயிருக்கு.
Interest டான நேரத்தில எழுப்பி விட்டுட்ட."

"அதென்ன Interest டான நேரம்?
புரியல."

"உனக்குப் புரியாது.
It is Fr.Lawrence's technic  of keeping us alive during his sermon.

நீ என்ன எழுப்பிவிட்டதுனால உனக்கு ஒரு பரீட்சை."

"பரீட்சையா?  பாடமே நடத்தாமலா?"

"உனக்குத் தெரிந்த பாடம்தான்.

நீ ஏன் பிறந்தாய்?"

"அது இறைவனுடைய திட்டம்."

"ஏன் பள்ளிக்கூடத்தாருக்கு மகளாய்ப் பிறந்த? "

"அதுவும் இறைவனுடைய திட்டம்தான்."

"ஏன் கடைசிப் பிள்ளயாய்ப் பிறந்த? "

"அதுவும் இறைவனுடைய திட்டம்தான்."

"ஏன் குட்டையாய்ப் பிறந்த?"

"அதுவும் இறைவனுடைய திட்டம்தான்."

"ஏன்  பெண்ணாய்ப் பிறந்த?"

"அதுவும் இறைவனுடைய திட்டம்தான்."

"ஏன் ஆவுடையானூரில் பிறந்த?"

"அதுவும் இறைவனுடைய திட்டம்தான்.

கொஞ்சம் பொறுங்க நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.

நீங்க ஏன் செமினரிக்குப் போனவங்க சாமியாராப் போகாம திரும்பி வந்தீங்க?"

"அதுவும் இறைவனுடைய திட்டம்தான்."

."எல்லா கேள்விக்கும் ஒரே பதில்தான் வருது.

வேற பதில் வாரது மாதிரி ஒரு கேள்வி கேளுங்க."

.."நீ பிறக்கும்போதே கடவுள் ஒரு Gift கொடுத்தாரு. அது என்ன gift? "

"என்னுடைய உடல்."

.."கரெக்ட்..."

."இனிம நான்தான் கேள்வி கேட்பேன்.

உங்களுக்குக் கிடைத்த பரிசு உங்களுக்குப் பிடிச்சிருக்கா? "

.."கடவுள் கொடுத்தது பிடிக்காம இருக்குமா? பிடிச்சிருக்கு."

."தலையில முடியே இல்லையே, அது எப்படி பிடிச்சது? "

.."உன்னைக் கல்யாணம் பண்ணும்போது என் தலையில எவ்வளவு முடி இருந்தது!

நீதான் ஒண்ணுஒண்ணா முடியப்பூரா பிடுங்கி விட்டன்னு நினைக்கிறேன்."

."உண்மைதாங்க. உங்க முடி மேல அவ்வளவு ஆசை.

ஆமா, முடி முழுவதும் போனதுல வருத்தமே இல்லையா?"

.." வருத்தமா?  ரொம்ப சந்தோசமா இருக்கு.

எது நடந்தாலும் இறைவன் திட்டப்படிதான் நடக்கும்.

அதுவும் நமது நன்மைக்காககத்தான் இருக்கும்."

."இதுல என்ன நன்மை உங்களுக்கு?"

.."என்ன நன்மைங்கிறதும் கடவுளுக்குத் தெரியும்.

பாவம் தவிர,  நமது ஒவ்வொரு அசைவும் கடவுளின் திட்டப்படிதான்,  நமது நன்மைக்காகத்தான் நடக்கிறது.

நமது பாவமாகிய தீமையிலிருந்துகூட கடவுள் நமக்காக ஏதாவது நன்மையை வரவழைப்பார்.

நமக்கு கடவுள்மேல் விசுவாசம் வேண்டும்.

எனக்குத் தெரிந்தமட்டில் தலையில் முடி இல்லாததால் எண்ணெய் மிச்சம், சீப்பு மிச்சம், கண்ணாடி மிச்சம், நேரம் மிச்சம்."

."இன்னொரு சந்தேகம்,  மண்ணிலிருந்து வந்த உடல் மண்ணுக்குதான் போகப்போகிறது.

இந்த மண்ணை ஏன் பரிசாகத் தரவேண்டும்?"

.."இதை இப்படிப் பாரேன். உடல் மண்தான். ஆனால் மகத்தான தியாகசாலி. தெரியுமா?"

."அதுவே மண்ணு, அது என்ன தியாகம் செய்கிறது?"

.."என்ன தியாகம் செய்கிறதா?
அது நம்மோடு வாழ்ந்து,

நமது ஆன்மீகப் பயணத்தில் நமக்கு உதவியாய் இருந்துவிட்டு,

நம்மைப் பத்திரமாக மோட்சத்திற்கு அனுப்பிவிட்டு

அது மண்ணுக்குள் போய்விடுகிறதே,

இது தியாகம் இல்லையா?"

."நமது ஆன்மீகப் பயணத்தில் நமக்கு உதவியாய் இருக்கிறதா?

எனக்குத் தெரிந்தவரை அது நாம் பாவம் செய்யத்தான் காரணமாய் இருந்திருக்கிறது.

ஏவாளின் பாவத்திற்கு அவள் உடல்தான் காரணம்.

அவளது கண்கள் சாத்தானைக் கண்டன, கால்கள் அதை நோக்கி சென்றன,  காதுகள் அது சொன்னதைக் கேட்டன, வாய் பழத்தைத் தின்றது,  பாவம் உலகிற்குள் நுழைந்தது."

.."அடியே, Bikeஅ over speedல ஓட்டிவிட்டு, விபத்தில மாட்டிக்கிட்டு, விபத்துக்குக் காரணம் bikeன்னு சொல்லுவ போலிருக்கு!

ஓட்டுபவன்தான் காரணம், பைக் அல்ல.

நாமதான் ஆன்மா,

உடலை இயக்குவது நாமதான்,

புண்ணியங்கள் செய்ய உதவுவதற்காக கடவுள் தந்த உடலை

பாவத்திற்காக இயக்கிவிட்டு

பாவத்தை உடல் மேல போடாத.

'ஏண்டா பரீட்சையில fail ஆன'ன்னு கேட்டதற்கு 'பேனா சரி இல்லைன்னு சொன்னானாம்.

மாதாவுக்கு உடல் இருந்தது,  அது நமக்கு இரட்சகரைப் பெற்றுத் தந்தது.

இயேசுவுக்கு உடல் இருந்தது, அது நமக்கு இரட்சிப்பைத் தந்தது."

."புரியுதுங்க. நாம் வாழ்நாளில செய்யும் எல்லா நல்ல காரியங்களுக்கும் உடல்தாங்க உதவியாயிருக்கு.

இயேசு ஏற்படுத்திய தேவத்திரவிய அனுமானங்களை பெற நமக்கு உதவியாய் இருப்பது நமது உடல்.

நாம் கோவிலுக்குச் செல்ல நமக்கு உதவியாய் இருப்பது நமது உடல். (கால்கள்)

நா இறைவனை வாழ்த்த நமக்கு உதவியாய் இருப்பது நமது உடல்.(வாய்)

இறைவனை ஆராதிக்க நமக்கு உதவியாய் இருப்பது நமது உடல். (முட்டு, தலை)

திவ்ய நற்கருணையை ஆன்மீக உணவாகப் பெற நமக்கு உதவியாய் இருப்பது நமது உடல்.(வாய்)

மற்றவர்கட்கு சேவை செய்ய நமக்கு உதவியாய் இருப்பது நமது உடல்.

சுருக்கமாக நாம் செய்யும் எல்லா நல்ல காரியங்களுக்கும் உதவியாய் இருப்பது நமது உடல்தாங்க."

.."நாம் இரட்சண்யம் அடைய நமக்கு உதவியாய் இருக்க இறைவன் தந்த உடலைப் பத்திரமாகப் பேண வேண்டும்.

நமது உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 

அவருடைய ஆலயத்தை நாம் பாவம் செய்யப் பயன்படுத்தினால் அது அவருக்கு எதிராக நாம் செய்யும் துரோகம்."

."ஆமாங்க. கடவுள் நல்லவர். நமது உடல் மண்ணாய்ப் போனாலும், உலக இறுதிநாளில் அதை உயிர்ப்பிப்பார்.

நாம் இறக்கும்போது Material bodyயாக மண்ணுக்குள் சென்ற நம் உடலை இறைவன் Spiritual bodyயாக உயிர்ப்பிப்பார்.

நாம் நித்தியகாலமும் இறைவனோடு பேரின்ப நிலையில் வாழ்வோம்."

"ஹாய்! "

"ஹலோ! "

"ஹலோ! "

"ஹாய்! "

லூர்து செல்வம்.



No comments:

Post a Comment