Wednesday, June 5, 2019

நம்மையே பிட்போம், கொடுப்போம்.

நம்மையே பிட்போம், கொடுப்போம்.
*********************************

"மேலும் அப்பத்தை எடுத்து,

நன்றிகூறி,

பிட்டு,

அவர்களுக்கு அளித்து, "

இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல். "

."ஏங்க, என்ன இது,  திடீர்னு பூசை வைக்க ஆரம்பிச்சிட்டீங்க?"

.."ஏண்டி, பூசை நடுப் பூசையிலிருந்தா ஆரம்பிக்கும்?

இன்றைக்கு சாமியார் பூசையின்போது வைத்த பிரசங்கத்தை நினைச்சுப் பார்த்தேன்."

."பிரசங்கம் சூப்பர்ல? "

.."உண்மையிலேயே சூப்பர். வசீகர வார்த்தைகளை ஒவ்வொரு பூசையிலும்தான் கேட்கிறோம்.

அவ்வார்த்தைகளுள் இவ்வளவு ஆழமான பொருள் இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை."

."உண்மைதாங்க.

இயேசு

நாம் நமது அர்ப்பண வாழ்வில்

அவராகவே மாறவேண்டும்,

அவரைப் போலவே நாமும் பலிப்பொருளாக மாறவேண்டும்

என்று ஆசிக்கிறார் என்று நமக்குத் தெரியும்.

அந்த ஆசையைத்

தான் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தியபோது

பயன்படுத்திய வசீகர வார்த்தைகளுக்குள் பொதிந்து வைத்துள்ளார்

என்று நமக்கு இப்போதுதான்
தெரிகிறது.

முதற்பொருள்:

சீடரகளுக்குக் கொடுப்பதற்கு முன்பே அப்பம் இயேசுவின் உடலாக மாறிவிட்டது.

அதாவது

அப்பத்தை எடுத்து, நன்றி கூறும்போதே அது அவரது உடலாக மாறிவிட்டது.

அதைப் பிட்டு,  தன் சீடர்களுக்குக் கொடுத்தார்.

பொதிந்துள்ள பொருள்:

நாமும் அப்பம்.

நம்மை அர்ப்பண வாழ்வுக்காக இயேசுவே தேர்ந்தெடுக்கிறார்.

நாம் தேர்ந்தெடுக்கப் பட்டமைக்காக இறைவனுக்கு நன்றிகூறவேண்டும்.

இறைவனுக்கு மட்டுமல்ல,

யாருக்கு சேவை செய்வதின்மூலம் தனக்கு சேவை செய்ய இறைவன் நம்மைத்  தேர்ந்தெடுத்திருக்கிறாறோ அவர்களுக்கும்,

அதாவது நமது சக மனிதர்களுக்கும்

நன்றி கூறவேண்டும்,

நல்ல வார்த்தைகள் கூறவேண்டும்,

வாழ்த்துக்கள் கூறவேண்டும்.

சக மனிதர்களுக்கு சேவை செய்யும் அர்ப்பண வாழ்வின் முதற்படி

அவர்களோடு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதற்காகத்தான் நன்றி கூறல், வாழ்த்துதல்.

அடுத்தபடி, இயேசு சிலுவை மரத்தில்  உடைபட்டது போல, பிட்கப்பட்டதுபோல

(இயேசுவின் உயிர் அவரிடமிருந்து பிரிந்ததுதான் இயேசு பிட்கப்படுதல். இதுதான் அவரது சிலுவைப்பலியின் உச்சக்கட்டம், Climax)

நாமும் உடைபடண்டும், பிட்கப்படவேண்டும்.

நம்மிடமிருந்து நமது சுயநலம் பிட்கப்பட வேண்டும்.

சுயநலம் பிட்கப்படாவிட்டால் பிறர் நலம் பேணமுடியாது.

உதாரணத்திற்கு,

நாம் உழைக்கிறோம், சம்பளம் வாங்குகிறோம்.

நாம் வாங்கும் சம்பளம் நமது சுயதேவைகளை பூர்த்தி செய்வதற்கு சரியாக இருக்கும்.

அர்ப்பண வாழ்வில் பிறரது தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டுமானால் நமது தேவைகளில் சில தியாகம் செய்யப்பட வேண்டும்.

அதாவது பிட்கப்பட வேண்டும்.

இயேசு அப்பத்தை எடுத்து பிட்டபின்தான் சீடர்களுக்குக் கொடுத்தார்.

நாமும் நமது தேவைகளை,

அவை உடையாய் இருக்கலாம், உணவாய் இருக்கலாம், நேரமாய் இருக்கலாம், தூக்கமாய் இருக்கலாம்,

பிட்டு, தியாகம் செய்தபின்தான் மற்றவர்கட்கு கொடுக்கவேண்டும்.

ஒரு ஆசிரியர் காலை 9.30 முதல் மாலை 5.00 வரை பாடம் போதிப்பதற்கே சம்பளம் வாங்குகிறார்.

மாலை 5 to 6 special class வைக்க வேண்டும் என்றால் தனது சொந்த உபயோகத்துக்கு உரிய ஒரு மணி நேரத்தைத் தியாகம் செய்ய வேண்டும்.

இதுதான் பிட்டல். தன் நேரத்தைப் பிட்டு மாணவர்களுக்குக் கொடுக்கிறார்.

ஏங்க கவனிக்கீங்களா? தூங்கரீங்களா?"

.."நீ பேசுகிறது தாலாட்டுதது மாதிரி இருக்குதடி."

."தொட்டில் கட்டிப் போடட்டுமா? "

.."இப்போதே உன் வார்த்தை என்னும் தொட்டிலில்தான் படுத்திருக்கிறேன்."

."சரி, சரி. எழுந்திருங்கள். மீதியை நீங்க சொல்லுங்க."

.."ஏண்டி, புருசன்தான் மனைவிக்கு மீதி வைக்கணும்.  நீ எனக்கு மீதி வச்சிட்டுப் போய்ட்ட! "

."கண்ணத் துடைங்க. நான் ஒரு பக்கமும் போகல. உங்ககிட்டதான்  பேசிக்கிட்டிருக்கேன்.

'தன் சீடர்களுக்குக் கொடுத்தார்',  விளக்குங்க."

.." இங்கே ஒரு நயத்தைக் கவனிச்சியா?

இயேசு பிட்டுக் கொடுத்தார், ஆனால் முழுமையாகக் கொடுத்தார்.

இறை மனித உறவிலே ஒரு Beauty இதுதான்.

கடவுள் கோடிக்கணக்கான மனிதர்களைப் படைத்திருந்தாலும்

ஒவ்வொருவர் மீதும் தன் முழுக்கவனத்தையும் செலுத்துகிறார்,

ஒவ்வொருவருக்கும் தன்னை முழுமையாகக் கொடுக்கிறார்.

இயேசு அப்பத்தைப் பிட்டு தன் சீடர்களுக்கு அளித்தபோது ஒவ்வொருவருக்கும் தன்னில் 12ல் ஒரு பங்கையா கொடுத்தார்?

இல்லை.   ஒவ்வொருவருக்கும் தன்னை முழுமையாகக் கொடுத்தார்.

உலகில் தினமும் கோடிக்கணக்கான பேர் நற்கருணை வாங்குகிறார்கள்.

ஒவ்வொருவரும் முழு இயேசுவை வாங்குகிறார்கள்.

சாமியார் நன்மை கொடுக்கும்போது பீடச்சிறுவன் நமது வாயின் கீழ் ஒரு தட்டைப் பிடித்துக் கொண்டிருக்கிறானே,  எதற்கு? "

."நற்கருணையிலிருந்து விழும் சிறு துகள்கள் தரையில் விழாதிருப்பதற்காக. ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கிறார். யார் காலாலும் மிதிபட்டுவிடக்கூடாது."

.."நற்கருணையை கையில் வாங்கும்பொது துகள்கள் எங்கே விழும்?"

."கையில் விழும்."

.."கையிலிருந்து?"

."தரையில் விழும்."

.."தரையில் விழுந்து? "

."போவோர் வருவோரிடம்........"

.."இயேசு பாடுகள்படும்போதுதான்
கொலைகாரப் பாவிகளிடம் மிதி வாங்கினார், நமக்காக.

இப்பவும் நம்மிடம் மிதி வாங்கவேண்டுமா?

இது ஏன் நன்மை கொடுப்பவருக்கும் தெரியவில்லை,

வாங்குபவருக்கும் தெரியவில்லை?"

."இவர்களது நவீனம் எனக்குப் புரியவில்லை.

சரி விடுங்க. Come to our point."

.."Sorry.   பேச எடுத்துக் கொண்ட விசயத்துக்கு வருவோம்.

இயேசு எவ்வாறு தன்னைப் பிட்டு, முழுமையாக சீடர்களுக்குக் கொடுத்தாரோ,

அதேபோல நாமும் நம்மையே பிட்டு, முழுமையாக அர்ப்பண வாழ்வில் ஈடுபட வேண்டும்.

அர்ப்பணம் என்றாலே முழுமையாகக் கொடுத்தல் என்பதுதான் பொருள்.

உலக வழக்கில் கொடுப்பவனுக்குக் குறையும், பெறுபவனுக்கு நிறையும்.

ஆனால் ஆன்மீக வழக்கில்
கொடுப்பவனுக்கும் நிறையும், பெறுபவனுக்கும் நிறையும்.

10,000ரூபாய் சம்பளம் வாங்குபவன் 5,000 ரூபாயை ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனது உலகக்கணக்கில் 5000 குறையும்.

ஆனால் அவனது விண் கணக்கில் அவனது நித்திய சன்மானம் அதிகமாகும்.

மண்ணில் கொடுக்கக் கொடுக்க விண்ணில் அதிகமாகிக்கொண்டே  இருக்கும்.

' "ஆகையால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள். அது உங்களைக் கைவிடும்பொழுது, இவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்.'
(லூக்.16:9)

மண்ணில் நாம் கொடுப்பதற்கு ஏற்றபடி, விண்ணில் நண்பர்கள் அதிகரிப்பார்கள், செல்வமும் அதிகரிக்கும்.

புரிகிறதா? "

." புரிகிறது."

.."எங்கே நான் சொன்னவற்றை ரத்தின சுருக்கமாக, தெளிவாகச்
சொல்லு பார்ப்போம்"

."இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம்

இறைவனுக்கும், நம் அயலானுக்கும் நன்றிகூறி

நம்மையே தியாகம் செய்து,

முழுமையாகப் பிறர் பணிக்கு அர்ப்பணிப்போம்."

.."இன்னும் சுருக்கமாக!"

."இயேசு தன்னையே நமக்காக பலியாக்கியதுபோல,

அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் நம்மையே நம் அயலானுக்காகப் பலியாக்குவோம்."

.."நாலே வார்த்தையில்! ''

."இயேசு பலியானார்.

நாமும் பலியாவோம்."

.."இரண்டே வார்த்தையில்!"

."இயேசுவாக மாறுவோம்."

லூர்து செல்வம்.

.

No comments:

Post a Comment