Thursday, June 20, 2019

நண்பர்களா, விரோதிகளா?

நண்பர்களா, விரோதிகளா?
----------------------------------------------

"டேய்! நில்லு. "

.."..............."

."சொல்றது காதுல விழல? நில்டா."

.."கைய விடுடா,  குடிகாரப்பயலே!"

."விடமாட்டேன். நில்லு. நான் உங்கிட்டே கொஞ்சம் பேசணும்."

.."உங்கிட்ட பேசறதுக்கு  எங்கிட்ட என்ன இருக்கு?

நான் என்ன barஆ நடத்துறேன்?"

."நான் உன்னோட Friendடுடா."

.."கண்டகண்ட குடிகாரப் பயலுக்கெல்லாம் நான் Friendஆ இருக்க முடியாது."

."பெரிய யோக்யன்,  தினமும் பைபிள் வாசிக்கிற, எதுக்கு?

பைபிள் வாசித்துவிட்டு அதன்படி நடக்காவிட்டால் வாசிக்கிறது waste of time."

.." என்ன சொன்ன? பைபிள் வாசிக்கிறது waste of timeஆ?"

."நான் அப்படிச் சொல்லல. 'பைபிள் வாசித்துவிட்டு அதன்படி நடக்காவிட்டால் வாசிக்கிறது waste of time."னுதான் சொன்னேன்."

.."நான் என்ன நடக்கல?"

."விரோதியை நேசின்னு பைபிள் சொல்லுது, நீ உன் friendஐயே வெறுக்கிற."

.."குடிகாரப் பயலுக்கெல்லாம் நான் Friendஆ இருக்க முடியாதுன்னு ஏற்கனவே சொல்லிட்டேன்"

."நான் குடிக்கத்தாண்டா செய்தேன். யூதாசப்போல இயேசுவைக் காட்டிக்கொடுக்கல."

.."யூதாஸ் ஒரு தடவைதான் இயேசுவைக் காட்டிக்கொடுத்தான்.

நீ தினமும் காட்டிக்கொடுக்கிற."

."நான் இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறேனா?"

.."ஆமா. நீ Barக்குள்ள போகிற ஒவ்வொரு முறையும் 'ஒரு கிறிஸ்தவன் குடிக்கப் போகிறான்'னு பார்க்கவங்க சொல்லுவாங்க."

."பார்க்கவங்க சொல்றது இருக்கட்டும். கிறிஸ்து பார்த்தா என்ன சொல்வாரு?"

.."உன்னைப் புகழ்வாராக்கும்?"

."புகழ மாட்டார், ஆனால் வெறுக்கமாட்டார்.

பார்த்தும் பாராததுமாதிரி போகமாட்டார்.

யூதாஸ் அவரைக் காட்டிக் கொடுப்பான்னு அவருக்கு ஏற்கனவே தெரியும்.

இருந்தாலும் அவர் நற்செய்தி  அறிவித்த மூன்று வருடமும் அவர் போகிற இடமெல்லாம் அவனையும் கூட்டிக்கொண்டுதான் போனார். அவன்கூடதான் உட்கார்ந்து சாப்பிட்டார்.

நற்செய்தியை அறிவிக்க அவனையும் அனுப்பினார்.

"1 பன்னிருவரையும் அழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் நோய்களைக் குணமாக்கவும், வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்கு அளித்தார்.

2 இறையரசைப்பற்றிச் செய்தியை அறிவிக்கவும் நோயாளிகளைக் குணமாக்கவும் அவர்களை அனுப்பினார்." (லூக்9:1,2)

பேய்களையெல்லாம் அடக்கவும் நோய்களைக் குணமாக்கவும்
அதிகாரம் கொடுத்தார்.

நற்செய்தியை அறிவித்து வந்தபின் தங்கள் அனுபவங்களை இயேசுவோடு
பகிர்ந்து கொண்டபோது யூதாசும்தான் அப்போஸ்தலர்கூட இருந்தான்.

"அப்போஸ்தலர் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தது போதித்ததெல்லாம் அவருக்குத் தெரிவித்தனர்." (மாற்கு.6:30)

அவர் இராப்போசனத்தன்று
அப்போஸ்தலர்களின்  கால்களைக் கழுவும்போது யூதாஸின் கால்களையும்தான் கழுவினார்.

கொஞ்சம் யோசித்துப்பார்.

சர்வ வல்லப கடவுள் யூதாஸின் பாதம் அளவுக்குத் தன்னைத் தாழ்த்தி,

அவனுடைய பாதங்களைக் கழுவி, இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைத்தார்!

அதுமட்டுமல்ல அவன் அவரை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்தபோது அவனை 'நண்பா' என்று அழைத்தார்.

நீ இயேசுவின் சீடன்தானே,

நான் குடிகாரப் பாவி என்றே வைத்துக்கொள்வோம்

இயேசு பாவிகளை நேசித்தார்.

பாவிகளைத் தேடித்தான் உலகிற்கு வந்தார்.

நிச்சயமாக இயேசு என்னை நேசிக்கிறார்.

அவருடைய சீடனாகிய நீ என்னை வெறுக்கலாமாடா?

நீ என் நண்பன். குடிப்பதை வெறுக்கிறாய்.

இனி நான் குடிக்க மாட்டேன்.

இது சத்.."

.."ஹலோ! நான் உன்னை நம்புகிறேன்.

உன்னை விட்டு விலகிச் சென்றமைக்கு என்னை மன்னித்துக்கொள்."

."நீயும் என்னை மன்னித்துவிடு."

.."அதோ பார்...."

."No. Barக்க மாட்டேன்! "

.."பார் என்றுதான் சொன்னேன், தமிழில். உன் மகன் வருகிறான்."

"அப்பாடா! பிரிந்தவர்கள் சேர்ந்து விட்டார்கள்."

.."சேர்ந்து விடவில்லை.

சேர்ந்துதான் இருக்கிறோம்."

"அப்போ, குடிக்க..."

"ஏல! "

"Juice வாங்கிட்டு வரட்டுமான்னு கேட்கப்போனேன்!"

"வாங்க. முதல்ல கோவிலுக்குப் போய் இயேசுவுக்கு நன்றி சொல்லிவிட்டு வருவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment