Saturday, June 22, 2019

நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்."
--------------------------------------------

."செல்வம், சாப்பாடு ரெடியா?"

." நீங்க சாப்பிட ரெடியா?"

"ரெடி."

"சாப்பாடு வந்தாச்சி."

.."வா, சாப்பிட்டுக் கொண்டே  பேசுவோம்."

."பேசிக்கொண்டே சாப்பிட்டால்தான்  நன்கு சீரணம் ஆகும்னு சொல்லுவாங்க."

.."சரி, அப்போ பேசிக்கொண்டே  சாப்பிடுவோம்.

முதல்ல சாப்பாட்ட வை."

."முதல்ல சாப்பாட்டைப் பற்றி ஒரு சந்தேகம் கேட்க வேண்டியிருக்கு."

.."சரி, கேளு."

."இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு வயிறார உண்ணக் கொடுத்தார்.

இயேசு சர்வ வல்லபர்.

நம்மை  ஒன்றுமில்லாமை யிலிருந்துதான்  படைத்தவர்.

அவர் நினைத்திருந்தால் ஒன்றுமில்லாமையிலிருந்து உணவை உண்டாக்கிக் கொடுத்திருக்கலாமே.

எதற்காக ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பயன்படுத்தினார்?

.."என்னடி கேள்வி இது?

அவர் நினைத்திருந்தால் நம் எல்லோரையும் மோட்சத்திலேயே படைத்திருக்கலாம்.

அவர் நினைத்திருந்தால் யாரையும் படைக்காமலேயே இருந்திருக்கலாம். அவர் பாடுபடவேண்டிய அவசியமே இருந்திருக்காது.

ஏண்டி, அவர் நினைக்காததை எல்லாம் 'அவர் நினைத்திருந்தால்'னு கேட்டால் நான் என்னடி பதில் சொல்லுவேன்?

ஒண்ணு செய்வோம். நான் முதல்ல மோட்சத்துக்குப் போனா நானே ஆண்டவர்ட்ட கேட்டு அவர் பதிலை உங்கிட்ட சொல்றேன். நீ முதல்ல போனா நீ கேட்டுச் சொல்லு."

."என்ன சொல்றீங்க நீங்க? நீங்க சொல்றதப் பார்த்தா, பைபிளையே மோட்சத்திலே போய் வாசிப்போம்னு சொல்லிடூவீங்க போலிருக்கு.

"தந்தை என் பெயரால் அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியான துணையாளரும் உங்களுக்கு எல்லாம் அறிவுறுத்துவார்."ன்னு இயேசுவே சொல்லியிருக்காரு.

நாம் ஞானஸ்நானம் பெறும்போது நம்மிடம் வந்த பரிசுத்த ஆவி இப்போவும் நம்மோடுதான் இருக்காரு.

பைபிள் வசனத்தை வாசித்து,
பரிசுத்த ஆவியை நினைத்து தியானித்தால் அவர் நமக்கு அதன் பொருளை அறிவுறுத்துவார்."

"அதை நீயே செய்திருக்க வேண்டியதுதானே,

'ஒரு சந்தேகம் கேட்க வேண்டியிருக்கு.'ன்னு எங்கிட்ட ஏன் கேட்ட?"

."ஹலோ! அதுக்கு 'இரண்டு பேரும் தியானிப்போம்'னு அர்த்தம்."

."சரி, முதலில் உனக்கு ஒரு டெஸ்ட்.

ஏவாளை ஏமாற்றிய அந்த சாத்தான் யாரை விழுங்கலாம் என்று உலகெங்கும் சுற்றித் திரிகிறது.

நம்மிடமே மாறுவேடத்தில் வந்து ஏமாற்றும்.

தியானத்தின்போது நம்மிடம் பேசுவது பரிசுத்த ஆவியா அல்லது சாத்தானா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?"

."அது ரொம்ப எளிது.

நமக்கு உணர்த்தப்படும் கருத்து தாய்த் திருச்சபையின் போதனைக்கு ஒத்திருந்தால்
அது பரிசுத்த ஆவியால் உணர்த்தப்படுவது.

எதிராயிருந்தால் சாத்தானால்
உணர்த்தப்படுவது. சரியா? "

.."Very good!  Testல் pass!  கூட்டுத் தியானத்தை ஆரம்பிப்போமா?

ஆண்டவர் சீடர்களிடம் சொன்னார்,

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று.

அவர்களோ, "எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்தான் உண்டு. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான்  முடியும்" என்றனர்

உணவு கொடுக்கப் போவது ஆண்டவர்.

ஏன் சீடர்ளிடம்,

'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்று சொன்னார்?"

."இந்தப்புதுமை

மறுநாள் இயேசு

தன் உடலையும், இரத்தத்தையும் நமக்கு  உணவாகத் தரவிருப்பதை

அறிவிப்பதற்கு முன்னோட்டம்.

அந்த அறிவிப்பு பெரிய வியாழனன்று திவ்ய நற்கருணையை ஏற்படுத்துவற்கு முன்னோட்டம்.

சரியா? "

.."correct.  இந்தப் புதுமையில் பயன்படுத்தப்படுவது அப்பம்.

பெரிய வியாழனன்று பயன்படுத்தப்படுவதும் அப்பம்.

பெரிய வியாழனன்று,
"இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்று சீடர்களிடம் கூறுகிறார்.

அதாவது

சீடர்கள்தான் உலகம் முடியும் வரை

அப்ப ரசக் குணங்களுக்குள் இயேசுவை வரவழைத்து,

அவரை உணவாக மக்களுக்குத் தரவேண்டும்.

ஆகவேதான்

நற்கருணைத் திருவிருந்துக்கு முன்னோட்டமான

'ஐயாயிரம் பேருக்கு உணவுகொடுக்கும்' செயலையும்

சீடர்கள்தான் செய்ய வேண்டும்.

இயேசு இப்படிச் சொல்வதாக கற்பனை செய்து பாருங்கள்:

"சீடர்களே,

நான் சிலுவையில் மரணம் அடையுமுன்,

உலகம் முடியுமட்டும் உங்களோடு இருப்பதற்காக,

திவ்யநற்கருணையை ஏற்படுத்தி,

உங்களுக்கு என் உடலையும், இரத்தத்தையும்

உணவாகத் தருவேன்.

நான் என்னையே உங்களுக்கு உணவாகத் தருவதுபோல

நீங்கள் உலகம் முடியும்வரை என் மக்களுக்கு என்னை உணவாகத் தர வேண்டும்.

அதற்காக உங்களுக்கு குருப்பட்டம் கொடுப்பேன்.

நீங்கள் என்னை விருந்தாக என் மக்களுக்குத் தரவிருப்பதற்கு முன்னோட்டம்தான்

இந்த ஐயாயிரம் பேருக்கான இன்றைய விருந்து.

நீங்கள்தான் உணவைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

ஆகவே

நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.''

சரியா? "

.."Correct. இயேசுவின் இன்றைய சீடர்கள்தான் நமது குருக்ள்.

இப்போது ஆரம்பத்தில் நீ கேட்ட கேள்விக்கு விடைகிடைத்து விட்டதா?"

."அதாவது

'அவர் நினைத்திருந்தால் ஒன்றுமில்லாமை யிலிருந்து உணவை உண்டாக்கிக் கொடுத்திருக்கலாமே.

எதற்காக ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பயன்படுத்தினார்?'

என்ற கேள்விக்கு."

.."ஆமா."

."சீடர்கள் இயேசுவின் கட்டளைப்படி 'அப்பம் பிட்பது'தான் நற்கருணை.

அதற்கு முன் அடையாளமாகத்தான் இயேசு ஐந்து 'அப்பங்களை' ஐயாயிரம் பேருக்கு உணவாகக் கொடுத்தார்!

கரெக்டா?

.."கரெக்ட்."

."திருச்சபையின் போதனைக்கு எதிராக ஒன்றும் சொல்லிவிட வில்லையே?"

.."இல்லை."

."பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி.

ஆமா, சாப்பிடவில்லையா?"

.."ஆமா. சாப்பாடு நம்மையே பார்த்துக் கொண்டிருக்கிறது. வா, சாப்பிடுவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment