Wednesday, June 12, 2019

"பெரியவர்கட்கு ஆலோசனை கூறுமளவிற்கு எனக்குத் தகுதி இல்லை."

"பெரியவர்கட்கு ஆலோசனை கூறுமளவிற்கு எனக்குத் தகுதி இல்லை."
****-***********************

"அண்ணே! வணக்கம்! "

"தம்பி! வணக்கம்! நல்லா இருக்கியா? "

"சூப்பரா இருக்கேன்!"

"என் பார்வைக்கு நீ நிக்கது மாதிரி தெரியுது! "

"நின்னா நிக்கது மாதிரிதாண்ணே தெரியும்! "

"நிக்கியா? இருக்கியா? "

"என்னாச்சி உங்களுக்கு? "

"எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. சொல்றத நினைக்கிறோமா?
அல்லது நினைக்கிறத சொல்றோமா? "

"இரண்டும் ஒரே கேள்விதானண்ணே? "

"இல்ல.

முதல் கேள்வி. யோசிச்சி பேசுறோமா?

இரண்டாம் கேள்வி. உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுகிறோமா? "

"இந்த சந்தேகங்களுக்குக் காரணம்? "

"நாம்தான் காரணம். நமது செயல்பாடுகள்தான் காரணம்.

நமது உண்மை, வாய்மை, மெய்மை மூன்றும் ஒன்றாக இருக்க வேண்டும்."

."என்ன மை போட்டு பேசரீங்க?
தத்துவம் பேசாம புரியரது மாதிரி பேசுங்க."

.."புரிஞ்சும் புரியாதது மாதிரி நடிக்கக் கூடாது."

."நான் நடிக்கலேண்ணே. உண்மையிலேயே புரியலண்ணே! "

.."நேற்று நீதான உன் மகனுக்குப் புத்திமதி சொன்ன, 'உள்ளத்தில உள்ளத பேசு, பேசியபடி செய்'னு."

."இப்போ புரியுது.
உள்ளத்தில் உள்ளது உண்மை,
வாயினால் பேசுவது வாய்மை. மெய்யினால் செய்வது மெய்மை.

அதாவது நமது உள்ளத்துக்கும், வாய்க்கும், நடத்தைக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றீங்க."

."அப்போ நாம விசுவசிக்கிறபடி நடக்கலியா?"

.."ஆமா, அதில என்ன சந்தேகம்?"

."என்ன சந்தேகம்?"

.."அதில என்ன சந்தேகம்னா சந்தேகமே இல்லைன்னு  அர்த்தம்."

."மற்றவங்களைப் பற்றி வேண்டாம்.

நான் விசுவாசப்படி நடக்கிறேனா?"

.."என் கேள்விகளுக்குப் பதில் சொல்லு.

திவ்ய நற்கருணையில இயேசு இருக்கிறார் என்று விசுவசிக்கிறாயா?"

."சத்தியமா விசுவசிக்கிறேன்"

.."இயேசு யார்? "

."கடவுள். இப்பிரபஞ்சத்தையே படைத்த சர்வ வல்லப கடவுள்.

நம்மை அளவில்லாமல் அன்பு செய்கிற கடவுள்.

மனிதனாய்ப் பிறந்து,

பாடுகள் பட்டு,

யூதர்களால் அவமானப் படுத்தப்பட்டு,

சிலுவையில் அறையப்பட்டு,

தன்னையே பலியாக்கி

தம்மை இரட்சித்த அன்பின் தெய்வம்."

.."உள்ளத்தில் இருப்பதைத்தான் பேசுகிறாயா?"

."உள்ளத்தில் இருப்பதைத்தான் பேசுகிறேன்."

.."ஆனால் உன் செயல்பாடு பேச்சோடு ஒத்துவரலியே?"

."எந்த செயல்பாடு ஒத்துவரவில்லை?"

.."யூதர்கள் இயேசுவை அவமானப் படுத்தினார்கள்.

அவரைக் கசையால் அடித்தார்கள்.

காலால் மிதித்தார்கள்.

நீயும் அதைத்தானே செய்கிறாய்"

."நான் எப்போ மிதித்தேன், அண்ணே, வீண்பழி போடக்கூடாது. நிரூபிக்கவேண்டும்."

.."சரி. சாமியார் நன்மை கொடுக்கும்போது ஒரு பையன் நன்மை வாங்குபவன்  வாய்க்குக்கீழே ஒரு தட்டை ஏந்திக்கொண்டே நிற்கிறான், ஏன்?"

."நற்கருணை சாமியார் கையிலிருந்து விசுவாசியிடம் போகும்போது நற்கருணையிலிருந்து விழும் துகள்கள் தரையில் விழுந்துவிடாதபடி தட்டை ஏந்துகிறான்."

.."தரையில் விழுந்தால் என்ன?"

.''ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கிறார்.

துகள், அதாவது இயேசு, தரையில் விழுந்தால் போவோர் வருவோரிடம் மிதிபட நேரிடும்.

இது அவமான மில்லையா?"

.."நீ நன்மையை நாவினால் வாங்குகிறாயா? கையில் வாங்குகிறாயா? "

."கையில்."

.."கையில் நன்மையை வைக்கும்போது அதன் துகள்கள் கையில் விழ வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? "

."இருக்கிறது."

.." நற்கருணையை உன் காயாலேயே எடுத்து நாவில் வைத்துவிடுவாய்.

அப்புறம் விரல்களில் ஒட்டியுள்ள,  உள்ளங்கையிலுள்ள துகள்களை என்ன செய்வாய்? "

."..............."

.."சொல்லு, என்ன செய்வாய்?"

."மன்னிச்சிக்கிடுங்க அண்ணே. துகள்கள் தரையில் விழும், மிதிபடும். இது இயேசுக்கு நாம் செய்யும் அவமானம்தான்."

.."இயேசுவை அவமதிக்கத்தான் ஸ்டைலா ட்ரஸ் பண்ணிக்கிட்டு கோவிலுக்கு வருகிறாயா?"

."மன்னிச்சிடுங்க அண்ணே, சத்தியமா இனிமே கையில் வாங்கமாட்டேன்.

நாவில்தான் வாங்குவேன். தெரிஞ்சோ, தெரியாமலோ செய்த அவமானங்களுக்கு இயேசுவிடம் மன்னிப்பு கேள்."

."இயேசுவே மன்னியும். இனி நாவினாலேயே உம்மை வாங்குவேன்."

"ஆமென்."

"இந்த விசயத்த சாமியார் யாராவது பிரசங்கத்தில சொல்லி யிருக்காங்களா?"

"இல்லை."

"இதுபற்றி எந்தச் சாமியாரிடமாவது  பேசினீங்களா?"

"பெரியவர்கட்கு ஆலோசனை கூறுமளவிற்கு எனக்குத் தகுதி இல்லை."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment