Monday, June 10, 2019

வார்த்தையின் வார்த்தை.

வார்த்தையின் வார்த்தை.
*********************************
" ஆதியிலே வார்த்தை இருந்தார். அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்."

"வார்த்தை மனுவுருவானார்: நம்மிடையே குடிகொண்டார்."

மனித வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட இறைவன்

மனித வார்த்தைகள் (human language) மூலமாகவே தன்னை வெளிப்படுத்துகிறார்.

வார்த்தை என்ற வார்த்தையை மூன்று பொருளில் பயன்படுத்துகிறோம்.

வார்த்தை -  இறைமகன் இயேசு.(Person)

வார்த்தை  - நற்செய்தி.(message.)

வார்த்தை - மொழி.(medium of communication)

இறைமகன் இயேசு

நற்செய்தியை

மனித மொழியில் அறிவிக்கிறார்,
நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.

தினமும் பைபிள் வாசிக்கிறோம். அதாவது ஆதியிலே இருந்த  வார்த்தையை வாசிக்கிறோம்.

பைபிளில் இயேசுவைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

இயேசு போதித்த செய்திகளும் உள்ளன.

ஆனால் நாம் வாசிப்பது இறைமகனாகிய இயேசுவை.

இயேசுவைப் பற்றி வாசிக்கவில்லை,

இயேசுவை வாசிக்கிறோம்.

தேர்வு எழுதி சான்றிதள் பெற விரும்புபவர்கள், சொற்பொழிவு ஆற்ற வேண்டியவர்கள், கேள்வி பதில் போட்டியில் கலந்து கொள்பவர்கள் இயேசுவைப் பற்றி வாசிக்கலாம்.

ஆனால் வாழ விரும்புகிறவர்கள் இயேசுவை வாசிக்கவேண்டும்.

இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

பத்து மாதம் வயிற்றில் சுமந்த குழந்தையை, அது பிறந்தவுடன்
தாய் அதை உற்று நோக்குகிறாள், அணு அணுவாக.

அகன்று  திறந்த, பூரிப்பைக் கொட்டிக்  கொண்டிருக்கும் கண்களால், பார்க்கவில்லை, விழுங்குகிறாள்!

அப்பொழுது நாம் அவளது முகத்தைப் பார்க்க வேண்டும்!

ஆனந்தப் பரவசத்தில் மிதந்து கொண்டிருக்கும்!

நாம் வார்த்தையாம் இயேசுவைப் பார்க்கும்போது,

நமது முகம் பக்திப் பரவசத்தில் மிதக்கவேண்டும்!

கண்களால் விழுங்கி, கருத்தினில் பதிக்கவேண்டும்.

அவர் அங்கிருந்து நம்மை இயக்க வேண்டும். 

உதாரணத்திற்கு இன்றைய (11-06-19) வார்த்தை:

"விண்ணரசு நெருங்கியுள்ளது."

சொல்வது விண்ணரசராம் இயேசு!

கருத்தில் பதியவேண்டியவர் இயேசு அரசரோடு நாம்.

இன்றைக்கு நாம் எதைச் செய்தாலும்,

நமது எண்ணத்தில்

" விண்ணரசு நெருங்கிவிட்டது.

இவ்வுலகு நிரந்தரமல்ல.

நானே நிரந்தரம்! "

என்று இயேசு கூறிக்கொண்டே இருக்க இருக்கவேண்டும்.

நாமும் விண்ணகம் ஏகத் தயாராகிக் கொண்டேயிருப்போம்.

மரணத்திற்குக்கூட அஞ்சமாட்டோம்.

விண்ணகத்திற்கு வாசல்கூட மரணம்தான்!

வீட்டின் வாசலுக்கு வந்துவிட்டால்

மகிழ்வோமா? அஞ்சுவோமா?

பைபிள் வாசிப்போம்

அறிவை வளர்க்க அல்ல,  ஆன்மீகத்தில் வளர.

போட்டிகளில் கலந்துகொள்ள அல்ல, 
ஆன்மாவுக்குப் போசனமாக.

மனப்பாடம் பண்ண அல்ல,  மனதிலே இயேசுவைக் குடியேற்ற.

வார்த்தயை வாழ்வோம்,
வான்வீடு நமக்கே.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment