Monday, April 1, 2019

ஆண்டவருக்காகவே செய்வோம்.

ஆண்டவருக்காகவே
செய்வோம்.
************************

"நீங்கள் எந்த வேலை செய்தாலும்

மனிதருக்காகச் செய்வதுபோல் செய்யாமல்,

ஆண்டவருக்காகவே செய்வதுபோல

நெஞ்சாரச் செய்யுங்கள்."
(கொலோ.3:23)

"உங்களை நீங்கள் நேசியுங்கள்"

என்று  எந்தக் கட்டளையையும் இறைவன் கொடுக்கவில்லை.

"உன்னை நீ நேசிப்பதுபோல உன் அயலானையும் நேசி" என்ற கட்டளையிலிருந்து

நம்மை நேசிப்பது இயல்பானது, அதற்குக் கட்டளை தேவை இல்லை என்பது புரிகிறது.

"நீ காற்றை சுவாசி" என்று நமக்குக் கட்டளை இடத் தேவை இல்லை. நாம் பிறந்தவுடன் யாரும் சொல்லாமல் நாம் செய்யும் முதல் காரியம் அதுதான்.

  நம்மை    இயல்பாகவே நேசிக்கும் நாம்,

நம் அயலானை நாம் நம்மை நேசிப்பதுபோல நேசிக்கவேண்டும்.

நாம் நம்மை  இயல்பாகவே நேசிப்பது நாம் பெற்றிருக்கும் இறைவனின் சாயல்,

ஏனெனில் இறைவன் தன்னை நித்திய காலமாக நேசிக்கிறார்.

அவரே நேசம்,

நேசிப்பது அவர் இயல்பு,

அவரது சிந்தனையிலும்,

சொல்லிலும் (வார்த்தை),

செயலிலும்

அவர் நேசிக்கமட்டும் செய்கிறார்.

ஆகையினால் அவர் பைபிளாகிய வார்த்தையை அன்பு என்ற கோணத்திலிருந்து மட்டுமே

(Only from the point of view of  Love)

நோக்கவேண்டும்.

" உன்னைப் போல் உன் அயலானை நேசி" என்று சொன்ன கடவுள்

"உன்னைப் போல் என்னை நேசி" என்று சொல்லவில்லை.

ஏனெனில் நாம் நம்மை நேசிப்பதைவிடவும்,

நம் அயலானையும் நேசிப்பதைவிடவும்,

அதிகமாக கடவுளை நேசிக்கவேண்டும்.

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன்."
(மத்.10:37)

நாம் நம்மையும், நம் அயலானையும் கடவுளுக்காகவே நேசிக்க வேண்டும்.

இறையன்பு இல்லாத சுயஅன்பாலும், பிறர் அன்பாலும் ஆன்மீகரீதியாக எந்தப் பயனும் இல்லை.

உண்மையில் இறையன்பு இல்லாத சுய அன்பும், பிறர் அன்பும் பாவத்திற்கு இட்டுச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

உதாரணத்திற்கு,

பிற சமயத்தைச் சேர்ந்த ஒரு பெண்

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளமாட்டாள்

என உறுதியாகத் தெரிந்தும்

அவளை உயிருக்கு உயிராகக் காதலிக்கும்

ஒரு கத்தோலிக்க ஆண்மகன் கிறிஸ்துவை விட்டு விலகிப் போய்க்கொண்டிருக்கிறான்.

பிற சமயத்தைச் சேர்ந்த   ஒரு பெண்ணைக் காதலிக்க விரும்பினால்,

அவள் கத்தோலிக்க சமயத்துக்கு மாறுவாளா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

நமது சிந்தனையும், சொல்லும்,  செயலும் இயேசுவின் அன்பிற்கு மாறாய் போய்விடக்கூடாது.

இயேசுவிற்குப் பிடிக்காத ஒன்றை இயேசுவுக்காகச் செய்யமுடியுமா?

"நீங்கள் எந்த வேலை செய்தாலும்

மனிதருக்காகச் செய்வதுபோல் செய்யாமல்,

ஆண்டவருக்காகவே செய்வதுபோல

நெஞ்சாரச் செய்யுங்கள்."

புனித சின்னனப்பருடைய இந்த வார்த்தைகள்தான் Constitution of our life. நமது வாழ்வு   சட்டம்.

நமது வாழ்வில் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,

ஒரே ஒரு நிபந்தனை.

செய்வதைக் கடவுளுக்காகச் செய்தால் எப்படிச் செய்வோமோ அப்படிச் செய்ய வேண்டும்.

நாம் செய்யும் செயல் கடவுளுக்குத் திருப்தி அளித்தால் போதுமானது.

மற்றவர்கள் நமது செயலைப்பற்றி என்ன கருத்து சொல்வார்கள் என்று கவலைப்படத் தேவையில்லை.

ஏனெனில் நாம் மற்றவர்களுக்காக எதையும்
செய்யவில்லை.

நமது செயல் இறைவனது சித்தப்படி இருக்கிறதா?

என்று மட்டுமே பார்க்கவேண்டும்.

இறைவன் சித்தத்திற்கு ஏற்றபடி இருந்தால்  அதை முழு மனதோடு செய்யவேண்டும்.

கடவுளுக்காகச் செய்யும் செயலையும் முழுமனதோடு செய்யவேண்டும்.

சிலர் தங்களுக்கு நேரடியாகப் பயன் தரக்கூடிய செயலாயிருந்தால் மிக கவனம் செலுத்தி அக்கரையோடு செய்வார்கள்.

தங்களுக்கு நேரடியாகப் பயன் தராத, பொது நன்மைக்கான, அந்தஸ்தின் கடமைகளைக்கூட ஒப்புக்காகச் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

இது கடமை தவறிய குற்றம்.

ஒரு முதலாளி  தன்னுடைய காண்ட்ராக்டரிடம் ஒரு வீட்டிற்கான வரைபடத்தைக் கொடுத்து,

"இந்த வீட்டை நல்ல முறையில்
கட்டி முடிக்கவும். செலவைப்பற்றி கவலைப்பட வேண்டாம்." என்றார்.

காண்ட்ராக்டர் பணத்தில் பாதியை ஒதுக்கிவிட்டு ஒப்புக்காக பலம் இல்லாத, பார்வை மட்டும் உள்ள வீட்டைக் கட்டினார்.

கட்டிமுடிந்ததும்,

வீட்டிற்கான சாவியை முதலாளியிடம் கொடுக்கச் சென்றபோது,

அவர்,

"இந்த வீடு உங்களுக்கு என் அன்புப் பரிசு.

சாவியை வைத்து கொள்ளுங்கள்." என்றார்.

காண்ட்ராக்டரின் முகம் செத்துவிட்டது.

"ஐய்யய்யோ! என் தலையில் நானே மண்ணைஅள்ளிப் போட்டுக்கொண்டேனே!

வீடு எனக்கென்று தெரிந்திருந்தால் வீட்டைப் பார்த்துப்  பாரர்த்துக் கட்டியிருப்பேனே!"

என்று தன்னையே நொந்துகொண்டார்.

யார் கண்டா,

நாம் மோட்சத்திற்குச் செல்லும்போது

நம் வீட்டில் பிச்சை எடுத்தவன்

தான் பிச்சை எடுக்க அலைந்ததை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து,

நம்மை விட உயர்ந்த இடத்தில் இருதாலும் இருப்பான்!

விண்ணகத்தில் நமது சன்மானம் மிகுதியாய் இருக்க வேண்டுமென்றால்

நமது ஒவ்வொரு செயலையும்,

தூங்குவது உட்பட,

இறைவனுக்காக,

இறைவனது மகிமைக்காக

முழுமனதோடு செய்வோம்.

எல்லாம் இறைவனது அதிமிக மகிமைக்கே!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment