Sunday, April 7, 2019

சமாதானத்தின் கடவுள்.

சமாதானத்தின் கடவுள்.
"""""""''"""""""'''""''""""''""""'''"""""""""""
"Tea ready. புத்தகத்த கீழே வைத்துவிட்டு Teaயைக் குடியுங்க."

"ஏண்டி செல்வம், நான் உன்ன டீ போட்டுக் கூப்பிடுறதுனாலதான நீ என்ன டீ போட்டுக் கூப்பிட்ட?"

"நீங்க போடுறது தமிழ் டீ. நான் போட்டது English tea. பேசாம குடிங்க."

"தூய தமிழில பேசமாட்டீங்களோ?''

"நான் இப்போ அசுத்தமான தமிழிலேயா பேசினேன்?"

"பிற மொழி கலவாத தமிழைச் சொன்னேன்."

"நீங்க அணிந்திருக்கும் உடைக்கு என்ன பெயர்?"

"சட்டை."

"அது தூய தமிழா?"

"பின்ன?"

"அது English தமிழ்!"

"யார் சொன்னா?"

"ஏங்க, உங்க முன்ன நான் மட்டும்தான நிற்கிறேன்.

நான்தான் சொன்னேன்.
நீங்க அணிந்திருப்பது English shirt.

shirtஐத்தான் 'சட்டை'ன்னு தமிழாக்கி இருக்கீங்க."

"அதில என்ன தப்பு? தமிழ் ஆக்கிட்டமில்ல. இனிம அது தமிழ்தான்."

"அப்போ 'சமாதானம்' மட்டும் தமிழாகவில்லையோ? சத்தம்காட்டாம 'அமைதி' ஆக்கிட்டீங்க!

'சமாதானம்'ங்கிற வார்த்தையில முழு வேதாகமும் அடங்கி இருக்கு, தெரியுமா?"

"புரியல."

"The whole Bible is contained in the single word 'சமாதானம்!'"

"இப்போ மொழிப்பிரச்சனையை மறந்துடுங்க. இப்போ பேசப்போவது  மறையுண்மை."

"என்னடி முன்னுரை பெருசா இருக்கு! எந்த மறையுண்மை?"

"கிறிஸ்தவ மறைன்னா என்ன?"

"கிறிஸ்து ஏற்படுத்திய மறை."

"நான் யார்னு கேட்கல. என்னென்னு கேட்டேன்."

"நீயே சொல்லிவிடு."

"கிறிஸ்துவின் போதனைகளை மையமாகக்கொண்ட மறை.

கிறிஸ்துவின்போதனைள் அடங்கியுள்ளள நூல் பரிசுத்த வேதாகமம்.

சமாதானம்'ங்கிற வார்த்தையில முழு வேதாகமும் அடங்கி இருக்குன்னு சொன்னேன்.

பழைய ஏற்பாட்டில சமாதானம் போச்சி.

புதிய ஏற்பாட்டில போன சமாதானம் வந்துடிச்சி."

"எப்படி?"

"சமாதானம்னா உள்ளங்களுக்கு இடையே நிலவும் சுமூகமான உறவு.

பழைய ஏற்பாட்டில்,

கடவுள் தனது அளவு கடந்த அன்பின் காரணமாக

நமது முதல் பெற்றோரை,

தனது சாயலில்

தேவ இஸ்டப்பிரசாத நிலையில் (In the state of sanctifying grace) படைத்தார்.

ஆகவே கடவுளுக்கும், அவர்களுக்கும் இடையே சுமூகமான சமாதான உறவு இருந்தது.

ஆனால் நமது முதல் பெற்றோர்
செய்த பாவத்தினால்

தேவ இஸ்டப்பிரசாதத்தை இழந்தனர்.

இறைவனோடு இருந்த சமாதான உறவை இழந்தனர்.

ஆயினும் என்றும் மாறாத கடவுளுக்கு மனிதர் மீது இருந்த அன்பு கொஞ்சம்கூட குறையவில்லை.

தனக்கும் மனிதனுக்கும் இருந்த சமாதான உறவை மீண்டும் ஏற்படுத்த வாக்களிக்கிறார்.

இது பழைய ஏற்பாடு.

வாக்கு நிறைவேறுவது புதிய ஏற்பாடு.

ஆக பழைய ஏற்பாட்டில் இழந்த இறையுறவை அதாவது சமாதானத்தை

புதிய ஏற்பாட்டில் மனிதன் மீண்டும் பெறுகிறான்."

"இப்போதுதான் சமாதானம் அமைதி ஆகிவிட்டதே. உச்சரிக்கக்கூட இலேசாய் இருக்கிறது. அது ஏன் உனக்குப்பிடிக்கவில்லை?"

"எனக்கு அமைதி ரொம்ப பிடிக்கும்.

நான் வகுப்பிற்குள் நுழையும்போது சொல்லுகிற முதல் வார்த்தை 'அமைதி'தான்.
மாணவர்கள் அமைதியாய் இருந்தால்தானே பாடம் நடத்தமுடியும்.

நீங்க  silence ன்னு சொல்வீங்க.

ஆனால் 'சமாதானம்' தரும் செய்தியை 'அமைதி'யால் தர
முடியாது."

"அப்படி என்ன விசேசம் அதில?"

"சமாதானம் = சமம் +தானம்.
அதாவது Equal place.

மனோதத்துவ ரீதியாக (Psychologically)

இருவருக்குள் உள்ளரீதியாக சுமூகமான, பிடிப்புள்ள,  பிரிய மனம்வராத உறவு இருக்கவேண்டும் என்றால்
இருவரும் ஏதாவது ஒரு பண்பில் ஒத்திருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு இருவர் வெவ்வேறு வயதினராயும், வேவ்வேறு பணி புரிபவர்களாயும் இருந்தாலும்

இருவரும் சங்கீதப் பிரியர்களாய் இருந்தால், சங்கீதத்தை மையமாகவைத்து உறவு வளரும்.

அதாவது ஏதாவது ஒரு  பண்பிலாவது சம தானத்தில் இருக்கவேண்டும்.

அதனால்தான் கடவுள் மனிதனைத் தன் சாயலாகப் படைத்தார்.

சாயலில் சம தானம்.

மனிதன் பாவம் செய்யும் வரை சாயல் பழுது அடையாமல் கடவுள் படைத்தபடியே இருந்தது.

ஆனால் மனிதன் தன் பாவத்தால் தான் பெற்றிருந்த இறை சாயலைப் பழுதாக்கிவிட்டான்.

இறைவனை மட்டுமே நாடிய அன்பு பாவத்தையும் நாட ஆரம்பித்தது.

இறைவனைத் தேடுவதில் நாட்டமாய் இருந்த புத்தி உலகையும், பாவத்தையும் தேட ஆரம்பித்தது.

இறைவன் மட்டும் இருந்த மனதிற்குள் கண்டகண்ட குப்பைகள் விழுந்து நிரப்ப ஆரம்பித்தன.

பாவத்தினால் கடவுளைவிட்டு கீழே வெகு தூரம் விழுந்துவிட்டான்.

கடவுள் மனிதனை பாவத்திலிருந்து மீட்டு,

தன்னோடு அவனுக்கிருந்த சுமூக உறவை,

அதாவது சமாதானத்தை

மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.

மனிதனின் பாவத்தின் காரணமாக மனிதன் கடவுளோடு சம Equal  தானத்தில் place ல் இல்லை.

மனிதன் தன் சுய முயற்சியால் சம தானத்திற்கு வர முடியாது,

ஏனெனில் அவனிடம் சுய சக்தி எதுவும் கிடையாது.

ஆகவே

தானே அன்பின் மிகுதியால் மனிதனை படைத்த கடவுள்

அவனை  தன் நிலைக்கு உயர்த்த

தானே கீழே இறங்கிவர நித்திய காலமாகத் தீர்மானிக்கிறார்.

அதாவது

தானே மனிதனோடு சம நிலைக்கு,

அதாவது

சம தானத்திற்கு வரத் தீர்மானிக்கிறார்.

அதாவது தானே மனிதன் ஆகத் தீர்மானிக்கிறார்.

நம்மை மேலே உயர்த்த, அவர் இறங்கி வருகிறார்.

இறைமகன் மனுமகனாக உரு எடுக்கிறார்.

பாவத்தைத் தவிற மற்ற எல்லா  வகையிலும் அவர் நம்மைப்போலவே மனிதனாகிவிட்டார்.

இயேசுவிடம் இரண்டு சுபாவங்கள் உள்ளன,

1. பிதாவிற்கு ஈடான தேவ சுபாவம்.

2.நமக்கு ஈடான (அதாவது பாவத்தைத் தவிர) மனித சுபாவம்.

நான் ஒரு கணித ஆசிரியர் அல்ல.

ஆயினும் படிக்கும்போது படித்த ஒரு சின்ன சமன்பாடு இங்கு உதவும் என நம்புகிறேன்

S =   G
S =  M
So,
G = M

S for Son
G for God
M for Man

இறைமகன்

தேவ சுபாவத்தில் கடவுளாகவும்,
மனித சுபாவத்தில் மனிதனாகவும்  இருப்பதால்

கடவுளும், மனிதனும் சம தானத்திற்கு (சமாதானத்திற்கு)
வந்துவிட்டார்ள்.

இறைமகனாகிய மனுமகனின்

  பாடுகளின் பலனாய்,

மனிதன் பாவத்தால் இழந்த தேவஇஸ்டப்பிரசாதத்தை

  திரும்பவும் பெற்றுவிட்டமையால்

பாவத்தால் பழுதடைந்திருந்த தேவசாயல் சரியாகிவிட்டது.

அதாவது மனிதன் கடவுளோடு சமாதானமாகிவிட்டான்.

சமாதானம் என்ற சொல்லிற்குள் பொதிந்திருக்கும் இவ்வளவு விளக்கமும் அமைதிக்குள் இருக்குமா?"

"கொஞ்சம் அமைதியாய் இரு.

நீ சொன்னதை எல்லாம் எழுதிவிட்டு வரேன்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment