Friday, April 12, 2019

இயேசு ஏன் சிலுவையில் மரித்தார்?

இயேசு ஏன் சிலுவையில் மரித்தார்?
*********************************
High school ல் படித்துக் கொண்டிருக்கும்போது

எங்கள் விஞ்ஞான ஆசிரியர் நெம்புகோல் தத்துவம் பற்றி கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.

"மிகக் குறைந்த சக்தியைக்கொண்டு மிகப்பெரிய பாறைகளை நகர்தத்தலாம்"

கிணற்றில் தண்ணீர் எடுக்கப்பயன்படும் வட்டுகூட ஒரு நெம்புகோல்தான்.

குறைந்த சக்தியைப் பயன் நிறைய தண்ணீர் எடுக்க பயன்படும்.

நாம் பயன் படுத்தும் அநேக கருவிகள் நெம்புகோல் தத்துவத்தை அடிப்படையாய்க் கொண்டவைதான்.

மனிதன் குறைந்த சக்தியைப் பயன்படுத்தி  நிறைய வேலையை முடிக்க  ஆசிக்கிறான்.

கடைகளில் வழக்கமாக காணப்படும் கவர்ச்சிகரமான அறிவிப்பு:

குறைந்த விலை அதிக இலாபம்.

நமது சுபாவம்

நம்ம ஊர்ல 500  ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு பொருள்

பக்கத்து ஊர்ல 200 ரூபாய்க்குக் கிடைத்தால்

உடனே என்ன கஸ்டப்பட்டாவது பக்கத்து ஊருக்குப் போய்

வாங்கிக்கொண்டு வந்துவிடுவோம்.

என் நண்பன் ஒருவன் தன் மனைவிக்குப் பிறந்த நாள் பரிசு வாங்குவற்காக

100 கடைகளில் ஏறி இறங்கி,

100 வது கடையில்

குறைந்த விலைக்குப் பரிசுப் பொருள் வாங்கி வந்தான்.

முதல் கடையில் 1000ரூபாய் விலை சொன்ன அதேபொருள் கடைசிக் கடையில் 500 ரூபாய்க்குக் கிடைத்தது.

ஆனால் இந்த சுபாவத்திற்கு மாறான சுபாவம் உள்ள மன்னர் ஒருவர் இருந்தார்.

ஒரு பெரிய நாட்டிற்கே அரசர்.

ஒரு நாள் அவரது மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சேலை ஒன்று வாங்க கடைக்குச் சென்றார்.

நல்ல சேலை ஒன்று தேர்வு செய்தார்.

10,000 ரூபாய் விலை.

அவரைப் பொறுத்தமட்டில் அது குறைந்த விலை.

குறைந்த விலைக்கு பரிசு வாங்க மனம் வரவில்லை.

அடுத்த கடைக்குச் சென்றார்.

அதே சேலை. விலை 20,000ரூ.

அடுத்த கடைக்குச் சென்றார்.

அதே சேலை. விலை 30,000ரூ.

அடுத்த கடைக்குச் சென்றார்.

அதே சேலை. விலை 40,000ரூ.

இப்படிக் கடை கடையாய் ஏறி இறங்கி, கடைசிக் கடையில் அதே சேலையை ரூ.10,00,000 விலை கொடுத்து வாங்கினார்.

அதாவது பத்தாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கவிருந்த சேலையை பத்து இலட்சம் கொடுத்து வாங்கினார்.

மனைவி கேட்டாள், "ஏங்க, ஏன் குறைந்த விலைச் சேலையை அதிக விலை கொடுத்து வாங்கினீங்க.

இப்படி பணத்தை Waste செய்யலாமா?"

அதற்கு அரசன்,

"அடியே, என் ஆருயிர் மனைவிக்கு என் அன்பைக் காட்ட விரும்பினேன்.

அன்பின் அளவை எப்படிக் காட்டுவது?

அதிக விலை கொடுத்து சேலையை வாங்கியது என் அன்பின் ஆழத்தைக் காட்ட.

அதை விட அதிக விலை கேட்க வேறு கடைகள் இல்லை.

இருந்திருந்தால் என் நாட்டையே கேட்டாலும் கொடுத்திருப்பேன்.

என் அன்பு பசிபிக்கடலைவிட ஆழமானது!  தெரியுமா? "

"தெரியும். ஆனால் உங்களுக்குத் தெரியுமா?

இன்னொரு அரசர்,  நாட்டுக்கு மட்டுமல்ல, உலகிற்கே!

அவர் தன் சகோதர, சகோதரிகளை ஒரு ஆபத்திலிருந்து மீட்க 

தன்னையே விலையாகக் கொடுத்தார், தெரியுமா? "

"ஏண்டி,

நம்மை மீட்கத்

தன்னையே

சிலுவையில் பலியாகக் கொடுத்த

இறைமகன் இயேசுவையா தெரியுமா

என்று கேட்கிறாய்?

ஆனால் அவரைப் பற்றி உனக்குத் தெரியாத விசயம் ஒன்று  இருக்கிறது, தெரியுமா?"

"எனக்குத் தெரியாத விசயம்னு சொல்லிட்டீங்க, அப்புறம் தெரியுமான்னு கேட்கிறீங்க? சொல்லுங்க."

"இயேசு கடவுள். 

சர்வ வல்லபர்.

அளவில்லா அன்பு கொண்டவர்.

அளவில்லா இரக்கம் உள்ளவர்.

அளவில்லா நீதியுள்ளவர்.

அளவில்லா ஞானமுள்ளவர்.

அவருடைய ஒவ்வொரு பண்பும் அளவில்லாதது.

அளவில்லா கடவுளாகிய அவருக்கு எதிராக நாம் செய்த பாவத்திற்கான பரிகாரமும் அளவில்லாததாய் இருக்க வேண்டும்.

பாவம் செய்தது மனிதன்,  பரிகாரம் செய்யவேண்டியதும் மனிதன்தான்.

ஆனால் அளவுள்ள மனிதனால் அளவில்லா பரிகாரம் செய்ய முடியாது.

ஆகவே அளவில்லா கடவுளே தனக்கு எதிராகச் செய்யப்பட்ட பாவத்திற்குப் தானே பரிகாரம் செய்ய மனிதனாய்ப் பிறந்தார்.

மனிதனாய் பிறந்த தேவ ஆளாகிய இயேசுவுக்கு இரண்டு சுபாவங்கள்.

தேவசுபாவம்.

மனித சுபாவம்.

மனித சுபாவத்தில்தான் பரிகாரம் செய்தார்.

மனித சுபாவத்தில் பரிகாரம் செய்த இயேசு ஒரு தேவ ஆள்,

அதாவது  பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆள்.

இங்கு கூர்ந்து கவனிக்கவேண்டும்.

இயேசு தேவ ஆளாகையால் அவர் செய்த ஒவ்வொரு சிறிய செயலுக்கும் அளவற்ற பலன் உண்டு.

உதாரணத்திற்கு

உலகப் பாவங்களுக்கு பரிகாரம் என்ற கருத்துடன் (Intention)

அவரே கீழே விழுந்து

முட்டில் ஒரு சிறு காயம் ஏற்படுத்தியிருந்தாலே போதும்,

அதற்கு அளவில்லா பலன் இருப்பதால்

அதனாலேயே மனுக்குலம் இரட்சிக்கப்பட்டிருக்கும்.

முட்டுக் காயம்கூடத் தேவை இல்லை.

ஒரு ஊசி குத்தும்போது ஏற்படும் வலியே போதும்.

அவர் அவமான சிலுவை மரணம் அடைந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

அவர்தானே கடவுள்.

அவர்தானே திருப்தி அடைய வேண்டும்.

அவரே முட்டுக் காயத்தில் திருப்தி அடைந்திருக்ககலாமே!"

"ஆண்டவரே, பின் ஏன் சுவாமி அவமான சிலுவை மரணத்தைத் தேர்ந்தெடுத்தீர்?"

"திடீரென்று செபத்தில் இறங்கிவிட்டாய்!"

"பின்ன ஏங்க அவர் வேதனை மிகுந்த சிலுவை மரணத்தைத் தேர்ந்தெடுத்தார்?

அளவு கடந்த வேதனை மட்டுமா? எவ்வளவு அவமானம், பைசாவிற்குப் பெறாத சின்னப் பயல்களால்! "

"நான் ஏன் பத்தாயிரம் பெறுமான சேலையைப் பத்து இலட்சம் கொடுத்து வாங்கி வந்தேன்? 

உன்மேல் எனக்கிருக்கும் ஆழமான அன்பைக் காட்டத்தானே?

இயேசுவும் மனுக்குலத்தின்மீது தனக்கு இருக்கும் அளவிடமுடியாத அன்பைக்காட்டவே

அளவில்லா வேதனையும், அவமானமும் நிறைந்த

சிலுவை மரணத்தைத் தேர்ந்தெடுத்தார்.

அளவில்லா வேதனை நிறைந்த சாவுதான் தன் அளவற்ற அன்பைக் காட்டும் என்றுதான்

சிலுவை மரணத்தைத் தேர்ந்தெடுத்தார்.

அவர்பட்ட துன்பங்கள் மூலம் நமது துன்பங்களை ஆசீர்வாதங்களாக மாற்றினார்.

அவருக்கு ஏற்பட்ட துன்பங்களைவிட நமக்கு அதிக துன்பங்கள் வராது.

அவர் மீது நமக்கு இருக்கும் விசுவாசத்தை எண்பிக்க நாம் துன்பப்பட நேரும்போது,

அவர் பட்ட துன்பங்கள் நமக்கு முன் உதாரணமாய் இருக்கும்.

தனது பாடுகள் மூலம் தனது போதனைகளை சாதனைகளாக மாற்றினார்.

எதிரிகளை நேசிக்கச் சொன்னார்,

அவருக்கெதிராக பாவங்கள் புரிந்த பாவிகளை நேசித்தது மட்டுமல்ல 

அவர்கள் செய்த, செய்கிற, செய்யவிருக்கின்ற பாவங்களுக்கும் அவரே பரிகாரப் பலியானார்.

தீமைக்கு நன்மை செய்யச் சொன்னார்.

தன் சாவுக்குக் காரணமானவர்களை மன்னிக்க தன் தந்தையிடம் வேண்டினார்.

தன் உயிரைக் கொடுத்து நமக்கு நிலை வாழ்வைப் பெற்றுத் தந்தார்.

நாம் வாழ்வு பெற, அவர் மரித்தார்.

நம்மீது அவருக்கு இருந்த அளவற்ற. அன்பைக் காட்டவே அவர்  சிலுவை மரணத்தைத் தேர்ந்தெடுத்தார்."

"நாம் நமது அன்பைக் காட்ட என்ன செய்யயவேண்டும்?"

"நமக்கு வரும் சிலுவையைப் பொறுமையாகச் சுமக்கவேண்டும்.

சிலுவையைத் தேடிக்கொண்டு போகவேண்டிய அவசியம் இல்லை.

கடவுளே அனுப்பும் சிலுவையைச் சுமந்தாலே போதும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment