இயேசுவின் மரணத்தின் சாதனைகள்
*************-***************
"செல்வம், கொஞ்சம் நில்லு."
"இந்தா பாருங்க, இப்போ கிச்சின்ல கொஞ்சம் வேலை இருக்கு. வேலைய முடிச்சிட்டு வர்ரேன், உட்கார்ந்து பேசுவோம்."
"சரி, நானே கிச்சினுக்கு வாரேன். ஒரு நிமிடம்தான் நின்னுக்கிட்டே பேசுவோம்.
நேற்று நீ ஒரு கேள்வி கேட்டல்லா, எப்படி இயேசு தன் மரணத்தினாலும், உயர்ப்பினாலும் மரணத்தை வென்றார்னு..."
"ஹலோ! கேள்விய நான் கேட்கல, நீங்க கேட்டிய நான் பதில் சொன்னேன்."
"கரெக்ட். நான்தான் கேட்டேன், நீதான் பதில் சொன்ன. ஆனால் உன் பதிலில முக்கியமான Pointஅ விட்டிட்டிய."
"நான் விட்டத விடியவிடிய தூங்காம தேடி கண்டு பிடிச்சியளாங்கும். சரி கண்டுபிடிச்சத சொல்லுங்க."
"இயேசு தனது மரணத்தினால் நமது இறப்பை பிறப்பாக மாற்றினார். அதாவது ...."
"அதாவது, இவ்வுலகத்தில் நமது இறப்பு, மறுவுலகில் நமது பிறப்பாக மாறுகிறது.
இவ்வுலகின் நமது வாழ்வின் முடிவு மறுவுலக வாழ்வின்ஆரம்பமாகிறது.
அநித்ய துன்பம் நித்ய இன்பமாக மாறுகிறது.
சிற்றின்பத்தைத் தியாகம் செய்தவர்கட்கு பேரின்பம் பரிசாகக் கிடைக்கிறது.
இவ்வுலகில் அழுதுகொண்டே பிறந்த நாம் மறுவுலகில் சிரித்துக்கொண்டே பிறப்போம்.
நமது மண்(உடல்) மண்ணுக்குத் திரும்பும், நமது ஆவி பரிசுத்த ஆவியோடு கலக்கும்.
இவை எல்லாம் இயேசுவின் மரணத்தின் சாதனைகள்."
"இதை எல்லாம் நேற்று ஏண்டி சொல்லல?"
"மூணு பிள்ளைகளையும் ஒரே நேரத்தில் பெறமுடியுமா? அததன் காலத்தில்தான் பிறக்கும்."
"அதுவும் சரிதான். சூப்பர் கதை ஒண்ணு வச்சிருக்கேன். சாப்பிட்ட பின் சொல்லுகிறேன்"
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment