"Sorry, Sir.
*****************-******--***
"ஹலோ! செல்வம், உமக்கு என்ன ஆச்சி?
சரியானதையெல்லாம் தப்புன்னு சொல்லிட்டு அலையிரீங்க!"
"நான் எங்கையா அலையிரேன்? வீட்லதானையா இருக்கேன்!"
"சரி சொல்லிட்டு இருக்கீர்."
"என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்?"
"'அருள் மிகப் பெற்றவளே' என்று மாதாவை அழைப்பதிலே என்ன தப்பு?"
"நீங்க எது வரைப் படிச்சிருக்கீங்க?"
"என் கேள்விக்குப் பதில் சொல்லாம நீர் கேள்வி கேட்டால்...''
"கேட்டால் இல்ல. கேட்கிறேன்.
நீங்க எது வரைப் படிச்சிருக்கீங்க?"
"M.A. BEd."
"உங்கள 'லூர்து.B.A'ன்னு கூப்பிடலாமா? "
"ஹலோ! உங்களுக்குக் காது கேட்கல? M.A. BEd."
"லூர்து.B.A'ன்னு சொன்னதுல என்ன தப்பு.நீங்க B.A படிக்கலியா?"
"M.A. BEd முடிச்சவன B.Aன்னு கூப்பிட்டறது கௌரவக் குறைச்சல்னு தெரியாது?
கொஞ்சம் இடம் கொடுத்தால்
'லூர்து First Standard' ன்னு சொல்லிடுவ போலிருக்கு! "
"அத ஸ்டைலா லூர்துF.S ன்னு போட்டிடலாம்! "
"ஏன் சார், நான் என்ன கேள்வி கேட்டேன், நீங்க என்ன சொல்லிக்கிட்ருக்கீங்க? "
"உங்க கேள்விக்குதான் பதில் சொல்லிக்கிட்டிருக்கேன்.
M.A. BEd படிச்ச உங்கள B.Aன்னு கூப்பிட்டா கௌரவக் குறைச்சலாத் தெரியுத,
'அருள் நிறைந்த' மரியை
'அருள் மிகப்பெற்றவள்னு சொன்னா
அவங்களுக்குக்
கௌரவக் குறைச்சல் இல்ல?
மாதா கௌரவம் பார்க்க மாட்டாங்க.
நாம நம்ம அம்மாவுக்கு நம்மால் இயன்ற அளவு கௌரவம் கொடுக்க வேண்டாம்?
மாதாட்ட இருந்து நிறையக் கேட்கணும்,
நம்மால் இயன்ற அளவு குறைவாக் கொடுக்கணும்
அப்படித்தானே?
இதுதான் மாதா பக்திய வளர்க்கிற இலட்சணமாக்கும்!"
"Sorry, Sir. இனிமேல் 'அருள் நிறைந்த மரியே' என்றுததான் அழைப்பேன்."
அருள் நிறைந்த மரியே, வாழ்க.
லுர்து செல்வம்.
No comments:
Post a Comment