Sunday, December 9, 2018

"ஹலோ! கொஞ்சம் நில்லுங்க"

"ஹலோ! கொஞ்சம் நில்லுங்க"

"ம். சொல்லுங்க."

"சென்மப் பாவ மாசின்றி உற்பவிக்கும் வரத்தை மரியாளுக்குக் கொடுத்தது யார் ?"

"இறைவன்."

"ஆதாம் ஏவாளுக்கு  சிந்திக்க, தேர்வு செய்ய, செயல்படுத்த சுதந்திரம் இருந்தது. "

"ஆதாம் ஏவாளுக்கு மட்டுமல்ல,

மனிதர்கள் எல்லோருக்குமே அந்த சுதந்திரம் இருக்கிறது.

அது இறைவன் கொடுத்த சுதந்திரம்."

"ஆனால் அன்னை மரியாளுக்கு அந்தச் சுதந்திரம் இருந்ததாகத் தெரியவில்லையே."

"எதை வைத்து அப்படிச் சொல்றீங்க?"

"அவங்கள பாவமே செய்ய முடியாதபடி படைத்துவிட்டாரே.

மனித குலத்தில் எல்லோரும் சென்மப் பாவத்தோடுதான் உற்பவிக்கிறோம்,

ஆனால் மாதாமட்டும் சென்மப் பாவம் இல்லாமல் உற்பவித்தார்கள்.

அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாவமே செய்யவில்லை.

இது மனித முயற்சியால் முடியாது.

ஆகவே இறைவன் அவர்களுக்குச் சுதந்திரம் அளிக்கவில்லை என்றுதானே அருத்தம்?"

"இல்லை. மாதாவிற்கு முழுச் சுதந்திரம் இருந்தது.

'இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது'

என்று மாதா சம்மதம் அளித்த பின்னரே

இயேசு அவளது வயிற்றில் மனிதனாக
உற்பவித்தார்."

"அது மாதாவுக்கு 14 வயது முடிந்தபின்.

ஆனால் மாதா சென்மப்பாவம் இன்றி உற்பவித்தது 14 ஆண்டுகட்கு முன்.

அதாவது மாதா சம்மதம் அளிக்குமுன்னரே இயேசு அவளைத் தன் தாயாகத் தேர்ந்தெடுத்துவிட்டார்.

அப்போ சுதந்திரம் எங்கே இருக்கிறது? "

"Just 14 ஆண்டுகட்கு முன்மட்டுமல்ல நித்திய காலமாகவே மரியாளைத் தன் தாயாகத் தேர்ந்தெடுத்துவிட்டார்."

"அதாவது மரியாளின் சம்மதமின்றி.  சரியா? "

"இல்லை, முழுச் சம்மதத்தோடு. "

"ஏன் சார் இப்படிக் குழப்புறீங்க?

மரியாள் நித்திய காலமாகவா இருந்தார்?"

"நான் குழப்பவில்லை. நீங்களாகவே குழம்பிக் கொள்கிறீர்கள்.

ஒரு உதாரணத்தோடு விளக்குகிறேன்.

ஒரு அப்பா,  அவருக்கு ஒரு மகன்.

அப்பா மகனுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

திருமண விசயத்தில்கூட பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக்கூட கொடுத்திருக்கிறார்.

இப்படியிருக்க.

ஒருநாள் மகனோடு எந்த ஆலோசனையும் செய்யாமல்

ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காண்பித்து

'இந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்' என்கிறார்.

அவனும்  முழுச் சம்மதத்தைத் தெரிவிக்கிறான்."

"ஹலோ! நீங்க லூர்து செல்வமா? குழப்ப செல்வமா?

அதெப்படி   தன் மகனுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்துவிட்டு

அவனை ஆலோசிக்காமல்

ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்கலாம்?"

"ஒரு நிமிடம் யோசியுங்கள்.
குழப்பம் தீரும்."

"அதெற்கெல்லாம் நேரமில்லை.  குழப்பியவர்தான்  குழப்பத்தைத் தீர்த்துவைக்க வேண்டும்."

"Very simple.

பையன் முழுச் சுதந்திரத்தோடு ஒரு பெண்ணைக் காதலிதான்.

இது அப்பாவுக்குத் தெரியவந்தது.

அவரும் மகனை ஆலோசனை செய்யாமல்
அவன் விரும்பிய பெண்ணையே

அவனுக்குத் திருமணம் செய்துவைத்தார்."

"இப்போ புரிகிறது "

"என்ன புரிகிறது?"

"இறைவன் அளவற்ற ஞானமுள்ளவர்.

முக்காலமும் அறிந்தவர்.

அவருக்கு எல்லாம் தெரியும்.

கபிரியேல் தூதர் தூதுரைக்கும்போது

மரியாள் சம்மதிப்பாள் என்று கடவுளுக்கு நித்திய காலமாகவே தெரியும்.

ஆகவே நித்திய காலமாகவே

அவள் சம்மதத்தோடுதான்

அவளைத் தன் தாயாகத் தேர்வுசெய்து,

தன் பாடுகளின் பாவப் பரிகாரப்பலனுக்கு

முன்செயல்பாடு கொடுத்து,

அவளைச் சென்மப் பாவத்திலிருந்து காப்பாற்றினார்.
Correct?"

"Super correct.

பாவம் செய்யாமலிருக்க நம் எல்லோருக்கும் அருள் தருகிரார்.

அவர் தரும் அருளைப் பயன்படுத்தினால் பாவம் செய்யமாட்டோம்.

பயன்படுத்தாட்டால் பாவத்தில் வீழ்வோம்.

இயேசு தன் தாயை அருளால் நிரப்பினார்.

ஆகவே அவள் அருள் நிறைந்தவள்.

நிறைந்த அருளைப் பயன்படுத்தி

  முழுச் சுதந்திரத்தோடு

எந்நப் பாவமும் செய்யாமல்

இறைவனுக்குச் சேவை செய்தாள்."

"இப்போ நன்கு புரிகிறது.

மற்ற புனிதர்கள் அருள் மிகுந்தவர்கள்.

மரியன்னை மட்டுமே அருள் நிறைந்தவள்."

''அருள் நிறைந்த மரியே வாழ்க."

லூர்து செல்வம்

No comments:

Post a Comment