Wednesday, December 19, 2018

'இறைவா நான் உமக்கு உதவுகிறேன்'

'இறைவா நான் உமக்கு உதவுகிறேன்'
***************************

பங்கு சுவாமியார் புது மாப்பிள்ளையிடம் சொன்னார்,  

"புது மாப்பிள்ளைட்ட ஒரு கேள்வி கேட்பேன்.

அதற்குச் சரியா பதில்  சொன்னால்தான் திருமணம். சரியா? "

"சரி, கேளுங்க"

"எதற்காகத் திருமணம் செய்யப்போறீங்க?"

"கடவுளுக்கு உதவி செய்வதற்கு."

"என்னது? கடவுளுக்கு உதவி செய்வதற்கா? அவருக்கு உங்க உதவி தேவைப் படுதா என்ன?"

"தேவைப் படுதா இல்லையாங்கிறது பிரச்சனை இல்ல.

இறைவன் ஒன்றும் இல்லாமையிலிருந்து என்னைப் படைத்தார்.

நான் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா?"

"சரி, என்ன செய்யப் போறீங்க?"

"கடவுள் ஆதாமைப் படைக்கும்போது களிமண்ணை எடுத்து ஆதாமின் உடலைப் படைத்தார்.

அவருக்கு அந்த வேலையை மிச்சப்படுத்தபப் போறேன்.

நானே என் மனைவியின் உதவியோடு இரண்டு உடல்களைச் செய்து கொடுக்கப் போகிறேன்.

அவர் இரண்டு ஆன்மாக்களைப் படைத்தால்போதும்."

"At a time? "

"No, one after one, with two years interval."

"இதத்தான் திருமணமாகிற எல்லோரும் செய்றாங்க.

நீங்க என்ன Special ஆ செய்யப் போறீங்க?"

"சுவாமி, உங்களுக்குத் தெரியும் .

ஆன்மீகவாழ்க்கையில் என்ன செய்கிறோம்கிறது முக்கியமில்லை.

எந்த நோக்கத்துக்காகச் செய்றோம் என்பதுதான் முக்கியம்.

It is our intention that decides the merit of an action.

நாம் எதைச் செய்தாலும் அதை இறைவனுக்காக, அவரது மகிமைக்காகச் செய்தால்தானே

அச்செயலுக்கு விண்ணகத்தில் சன்மானம் உண்டு.

ஆகவே குழந்தைகளை இறைவனது மகிமைக்காகப் பெறப்போகிறேன்.

சுவாமி, நீங்க கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டேன்." 

"உங்க பதில் சரிதான்.

ஆரம்பத்தில சொன்னீங்களே,

'கடவுளுக்கு உதவி செய்வதற்கு.' 

என்று.

முடியாதவர்கட்குதான் உதவி தேவை. கடவுள் சர்வ வல்லபர். அவருக்கு நீங்க உதவி செய்யப்போறீங்களா?"

"கடவுள் உலகைப் படைத்தவர். எல்லாம், நாம் உட்பட, அவருக்கே சொந்தம்.

பின் ஏன் அவருக்குச் சொந்தமானதையே எடுத்து அவருக்குக்  காணிக்கையாகக் கொடுக்கிறோம்?"

"நமது அன்பைக் காண்பிப்பதற்காக"

"அதுவும் இப்படித்தான்.

நான் பையனாக இருந்தபோது,

எனது அப்பா வயலை உழும்போது,

நான் அவர்கூடவே நடந்து,

'அப்பா, நான் உங்களுக்கு உதவி செய்யப்போறேன்'னு சொல்லி

கலப்பையை பிடித்துக்கொண்டே நடப்பேன்.

அப்பாவுக்கு ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கும்.

'என் பிள்ள. இப்படித்தான் எல்லாருக்கும் உதவி செய்யணும்'னு கூறிக்கொண்டே

எனக்கு முத்தங்கள் கொடுப்பார்.

கடவுள் நிறைவானவர். Perfect. 

What is perfect cannot be made more perfect.

அவரது புகழ் நிறைவானது.

இருந்தாலும் செய்வதை அவரது புகழுக்காகச் செய்கிறோம்.

அவரது புகழுக்காக நாம் எதைச் செய்தாலும்

அவரது புகழ் கூடப்போவதில்லை,

ஏனெனில் அது ஏற்கனவே நிறைவானது,

ஆனாலும் நமது அன்பை வெளிப்படுத்த அது உதவுகிறது.

அதனால் பயன்பெறப்போவதும் நாம்தான்.

மனித இனம் பலுகுவது இறைவன் திட்டப்படிதான்.

நாம் வெறும் கருவிகளே.

ஆயினும் நமது இனப்பெருக்கத்தின்போது

  'இறைவா நான் உமக்கு உதவுகிறேன்'

என்று கூறுவது

அப்பாவுடன் கலப்பையைப் பிடித்துக்கொண்டு, 

'நான் உதவுகிறேன்' என்று கூறுவது மாதிரிதான்,

செல்லப் பேச்சு.

கடவுள் நமது தந்தை,

அவரிடம் செல்லமாகப் பேசி

நமது அன்பைத் தெரிவித்தால்

அவர் உண்மையிலேயே மகிழ்வார்,

பரிசும் தருவார்."

"ஹலோ! இதெல்லாம்  திருமணப்பந்தத்திற்கு உள்ளேதான்.

வெளியே போய், 'உதவுகிறேன்' எனக்கூறி, எதாவது செய்தால் உதைதான் கிடைக்கும்."

"சுவாமி, என்னைப் பார்த்தா அப்படியா தெரிகிறது?"

"இல்லை.  கூறுவது என் கடமை.

சரி.You are fit for marriage.
இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்."

புது மாப்பிள்ளையின் கூற்றில் ஒரு பெரிய இறையியல் உண்மை இருக்கிறது.

சம்மனசுகளுக்கும், நமக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது.

சம்மனசுக்கள் ஒவ்வொருவரும் தனித்தனி.

ஆனால் நாம் எல்லோரும் ஒரு குடும்த்தைச் சேர்ந்தவர்கள்.

ஆதாம், ஏவாள் நமது பொதுப் பெற்றோர்.

அவர்கள் வழியாக மனித இனத்தவர் அனைவரும் இரத்த உறவு உள்ளவர்கள்.

தாய்,தந்தையின் உடல் உள்ள பாதிப்புகள் பிள்ளைகளை மட்டுமல்ல, அவர்களது சந்ததியையே பாதிக்கும்.

இறைவன் தான் ஒவ்வொருவரையும் இரண்டு  விதமாகப் பராமரிக்கிறார்.

1.நேரடியாக:

நேரடியாகப் பராமரிப்பது பராமரிக்கப்படும் நபருக்குத் தெரிந்திருக்கலாம், தெரியாமலுமிருக்கலாம்.

ஒருவர்

எந்தக் குடும்பத்தில்,

எந்த ஊரில்,

எந்தக் காலக்கட்டத்தில்

பிறக்கவேண்டும் என்று தீர்மானிப்பது இறைவன்தான்.

நம் வாழ்வின் ஒவ்வொரு வினாடியிலும்

இறைவன் பராமரிப்பில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

யாதாமொரு விபத்தில் சிக்கி

மயிரிழையில் பிரச்சனை ஏதுமின்றி உயிர்தப்பியவர்,

விசுவாசம் உள்ளவராயிருந்தால்,

தான் தப்பியது இறைவனின் பராமரிப்பினால்தான்

என்பதை உணர்ந்துகொள்வார்.

என்ன நேர்ந்தாலும் இறைவன் சித்தம் என்று பணிவுடன் ஏற்றுக்கொள்வார்.

2.அயலான் மூலம்:

நமது குடும்பத்தில் நமது தந்தை செய்யும் எல்லா
பணிகளிலும்

அவருக்குத் துணையாக, உதவியாக இருந்தால்தான் நாம் நல்ல பிள்ளைகள்.

நமது விண்ணகத் தந்தைக்கும் நாம் நல்ல பிள்ளைகளாக நடக்கவேண்டும்.

இதற்காகக் கடவுள் நமக்கு இரண்டு கட்டளைகள் கொடுத்திருக்கிறார்.

முதலாவது நாம் இறைவனை நேசிக்கவேண்டும்.

அடுத்து நம்மை நாம் நேசிப்பதுபோல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

இந்த நேசம் நற்செயல்களில் வெளிப்படவேண்டும்.

அதாவது நம் அயலானுக்கு நம்மால் இயன்ற உதவி செய்யவேண்டும்.

இவ்வுதவி இறைவன் நம் அயலானுக்குச்  செய்யும் பராமரிப்பின் பகுதியாக இருக்கும்.

உதாரணத்துக்கு,

நமது அயலானுக்குப் படிப்பிற்குப் பணம் தேவைப்படுகிறது.

அவன் உதவி கேட்டு இறைவனிடம் வேண்டுகிறான்.

இறைவன் நமது உள்ளத்தைத் தூண்டுகிறார்.

நாமும் நம்மிடம் உள்ள பணத்தைக்கொண்டு நம் அயலானின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும்.

இவ்வாறு செய்யும்போது நம்மைப் படைத்த நம் தந்தைக்கு நாம் உதவியாய் இருக்கிறோம்.

அதாவது நம் தந்தை நம் மூலமாக நம் அயலானைப் பராமரிக்கிறார்.

மனித இனத்தினர் எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவிகரமாய் இருக்கவேண்டும் என்பது இறைவனின் திருவுளம்.

நம் அயலானுக்கு நாம் எதைச் செய்தாலும் அதைத் தனக்கே செய்ததாக இயேசு கூறுகிறார்.

அதாவது நாம் இறைவனுக்கு உதவுவதாக இறைவனே கூறுகிறார்.

நாம் அயலானுக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்தாலும் அதைக் கடவுளுக்கே கொடுக்கிறோம்,

இறைவன் கொடுக்க நினைத்த தண்ணீரை நாமே கொடுக்கிறோம்.

இதனால் கடவுளின் நல்ல பிள்ளைகளாக நடக்கிறோம்.

ஒவ்வொரு மனிதனிலும் அவனைப் படைத்த இறைவனைக் காணவேண்டும்.

அவனை நேசிக்கும்போது இறைவனையே நேசிக்கிறோம்.

அவனுக்குப் பணிபுரியும்போது இறைவனுக்கே பணிபுறிகிறோம்.

அவனுக்கு உதவும்போது இறைவனுக்கே உதவுகிறோம்.

நம்மிடம் உள்ளதை

இல்லாதவனுக்குக் கொடுத்து,

எல்லாம் உள்ளவரின்

அன்பை ஈட்டுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment