எல்லாம் நன்மைக்கே.
*******************---********
"செல்வம், உன்னிடம் ஒரு கேள்வி, நாம் யாருக்குச் சொந்தம்?"
"திடீரென ஏன் இந்தக் கேள்வி?"
"நாம் யாரை எல்லாம் சொந்தம்னு நினைக்கிறோமோ
அவங்களெல்லாம் நம்மை விட்டுவிட்டு 'நான் ஆண்டவர்ட்ட போறேன்'னு
சொல்லிட்டு போயிடராங்களே,
அதனால்தான் இந்தச் சந்தேகம்."
"யார்ட்டப் போயிடராங்களேன்னு சொன்னீங்க?"
"ஆண்டவர்ட்ட."
"விடையை உங்ககிட்ட வச்சிக்கிட்டே எங்கிட்ட கேட்கிறீங்க.
எனக்குப் பரீட்சை வைக்கிறீங்களா? "
"இல்லைடா. மனசுல இருக்கிறத யாரோடாவது பகிர்ந்து கொள்பவன்தானே மனிதன்."
''அதுவும் சரிதான். வெறுமனே கடவுளுக்குச் சொந்தம்னு சொன்னால் போதாது.
கடவுளுக்கு மட்டும்தான் சொந்தம்னு சொல்லணும்.
"அன்புத் தந்தையே, இறைவா,
நாங்கள் உமக்குச் சொந்தம்,
உமக்கு மட்டுமே சொந்தம்."னு கடவுளிடமே சொல்லணும்."
"அது மட்டும் பற்றாது.
'கடவுளே,
நீர் எங்கள் கடவுள் என்பதற்காக மட்டுமே உம்மை நேசிக்கிறோம்,
வேறு எந்தக் காரணத்திற்காகவும் அல்ல.'ம்னும் அவரிடம் சொல்லணும்,
ஏன்னா அனேகம் பேர் தங்களுக்கு ஏதாவது உதவி வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள நேசிக்கிறாங்க.
அது உலக அன்பு. பச்சப்பிள்ளை பாலுக்காகத்தான் அம்மாவைத் தேடுகிறது.
Pocket money தரலங்கிறதுக்காக அப்பாவை வெறுக்கிற பசங்ககூட இருக்காங்க.
ஆனால் நாம் இறைவன்மேல காட்டுகிற அன்பு அப்படிப்பட்டதா இருக்கக் கூடாது.
நாம் கடவுளை கடவுள்ங்கதுக்காக மட்டுமே நேசிக்க வேண்டும்."
"அவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாதா?"
"எதிர்பார்க்க வேண்டும்.
அவரையும், அவரது அன்பையும் மட்டுமே எதிர்பார்க்க வேண்டும்"
"அப்படீன்னா அவரை
எந்த அளவு நேசிக்கவேண்டுமோ,
அந்த அளவு இன்னும் நேசிக்க வில்லைன்னுதான்னு
அருத்தம்."
"ஆமா. ஆயினும் அவரையே பற்றிக் கொண்டிருக்கிறோம்,
அவரை அதிகமாய் அறியவும்,
அதிகமாய் நேசிக்கவும்
வேண்டிய அருளை
அவரிடம்தான் கேட்கவேண்டும்."
"கடவுள் நம்மை வெறும் பொழுதுபோக்கிற்காகப் படைக்கவில்லை.
ஒரு நோக்கத்திற்காகத்தான் படைத்திருக்கிறார்.
அந்நோக்கம் நிறைவேற நம் ஒவ்வொருவருக்காகவும் ஒரு நித்திய திட்டம் வைத்திருக்கிறார்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரை அன்பு செய்வது மட்டும்தான்."
"வேறு ஒன்றும் செய்யவேண்டாமா?"
"Switch அ போட்டவுடனே வேளிச்சம் தானாகவே வந்துவிடும்.
அன்பு செய்தால், செயல் தானாகவே வந்துவிடும்.
Switch அ போட்டும் வெளிச்சம் வராவிட்டால் Switchல கோளாறுன்னு அர்த்தம்.
நான் அன்புச் செயலே செய்யாவிட்டால் 'நான் அன்பு செய்கிறேன்'னு சொல்வது பொய்யின்னு அர்த்தம்."
" 'என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்'
என்பதற்கும் இறைவன் திட்டத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?"
"பொதுவாக நாம் எப்போது நன்றி கூறுவோம்? "
"யாராவது நமக்கு நன்மை செய்யும்போது நன்றி கூறுவோம்."
"அப்படியானால்
'என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்'
என்றால்
என்ன நேர்ந்தாலும் அது நமது நன்மைக்காகத்தான் என்று அர்த்தம்."
"அதாவது, இறைவன் நமக்கென்று நித்தியமாகத் தீட்டியிருக்கும் திட்டப்படிதான் நம்மை வழிநடத்துகிறார்.
அவரது வழிநடத்துதலின்போது (Providence of God) நமக்கு என்ன நேர்ந்தாலும்
(நோய், நொடி, மரணம் உட்பட)
அது நமது ஆன்மீக நலனுக்காகத்தான் என்பதை உணர்ந்தால்
அதை நன்றியோடு ஏற்றுக்கொள்வோம்."
"சாத்தான் இறைத்திட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறானே."
"ஐயோ பாவம்! சாத்தான்!
இறைவனுக்கு எதிராகச் செய்வதாக நினைத்துக்கொண்டு,
அவருடைய வழிநடத்துதலுக்கு உதவிக் கொண்டிருக்கிறான்.
God permits evil only to draw out a greater good from it.
ஆதாம் ஏவாளைப் பாவத்தில் விழச்செய்தான்.
விளைவு?
கடவுளே மனிதனானார்.
இயேசுவைக் கொல்லத் திட்டம் தீட்டிக்கொடுத்தான்.
விளைவு?
தன் மரணத்தினாலேயே
சாத்தானால் கெடுக்கப்பட்ட மக்களுக்கு
இயேசு இரட்சண்யம் பெற்றுத் தந்தார்.
இப்போதுகூட சாத்தான் நம்மைச் சோதிக்கும் போதெல்லாம்
நாம் இறைவனைத் தஞ்சம் அடைந்தால், சாத்தானுக்குத் தோல்விதானே!
ஒரு வகையில் நம்மை இறைவனைத் தேடவைக்கிறதே இந்த சாத்தான்தான்!
உலகில் நடைபெறும் ஒவ்வொரு விசயமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
அவற்றை எல்லாம் பொது நன்மைக்கு எப்படிப் பயன்படுத்துவது என்று இறைவனுக்குத் தெரியும்."
"நமது ஒவ்வொரு செயலையும் இறைவன் கண்காணிக்கிறார்.
அதை எப்படி நமது ஆன்மீக நன்மைக்குப் பயன்படுத்துவது என்பது இறைவனுக்குத் தெரியும்.
நண்பர் ஒருவரின் அனுபவம் :
தன் நண்பரோடு Bike ல் சென்றபோது,
Bike வேறொரு Bikeகுடன் மோதியதில்
இருவருக்கும் நல்ல காயம்.
நண்பருக்குப் பயம் தொற்றிக் கொண்டது.
'நமக்கு மரணம் ஆயிருந்தால்?'
அன்றே கஷ்டப்பட்டுக் கோவிலுக்குச் சென்று,
மரணத்திலிருந்து காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி கூறியதோடு
நல்ல பாவசங்கீத்தனமும் செய்தார்.
ஒரு விபத்து அவருக்கு ஆசீர்வாதம்.
எல்லாம் இறைவன் செயல்!"
"சில சமயங்களில் நமக்கு விருப்பமான ஒரு பொருள் தொலைந்துவிட்டால்
நமக்கு பெரிய இழப்பு போல் தோன்றும்.
ஆனால் அதே இழப்பு நமது ஆன்மீக வளர்ச்சியில் உதவியது என்று எண்ணும் காலமும் வரும்.
Material loss may prove to be a spiritual gain."
"உண்மைதான். கஷ்டங்கள் வரும்போதும்,
தேவைகள்
அதிகரிக்கும்போதுதான்
ஆண்டவரை நினைக்கிறோம்.
உண்மையில் கஷ்டங்களும், தேவைகளும் ஆசீர்வாதங்கள்தான்."
"இப்பொழுது ஒரு உண்மை புரிந்திருக்கும்.
நாம் கடவுளுக்கு மட்டுமே சொந்தம்.
தனக்குச் சொந்தமான ஒரு
பொருளை அவர் கைவிடுவாரா?
அவர் நமக்கு என்ன செய்தாலும் அது நமது நன்மைக்கே என நம்புவோம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment