"இதுக்கு பைபிள்ல ஆதாரம் இருக்கா?
****************************
ஒரு முறை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்போது அவர் அடிக்கடி,
"இதுக்கு பைபிள்ல ஆதாரம் இருக்கா?"ன்னு கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆகவே அவருடன் 'பைபிள் ஆதாரம்' பற்றிக் கொஞ்சம் பேசவேண்டியிருந்தது.
"எதைச் சொன்னாலும், 'பைபிளில ஆதாரம் இருக்கா?" ன்னு கேட்கிறீங்கள. பைபிள்னா என்ன? "
"கடவுளின் வார்த்தை."
"யார் சொன்னா?"
"இதென்ன கேள்வி? நீங்க கிறிஸ்டியன்தான?"
"அதுல உங்களுக்கென்ன சந்தேகம்? நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க."
"ஹலோ! உண்மையான கிறிஸ்தவன்
பைபிள் கடவுளின் வார்த்தைன்னு
யார் சொன்னான்னு கேட்கமாட்டான்."
"நான் கேட்ட கேள்வியை வேற்று மதத்தவர் கேட்டிருந்தா என்ன பதில் சொல்லியிருப்பீங்க?"
"'பைபிளை இறைவன் வார்த்தைன்னு ஏற்றுக் கொண்டிருக்கிறோம்' என்பேன்."
"அவன் நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதற்கு ஆதாரம் கேட்பானே. என்ன சொல்வீங்க?"
"அவன் கேட்கமாட்டான். அவனுக்கு பைபிள் கிறிஸ்தவர்களின் மதநூல்னு தெரியும். இத கேட்கது நீங்க."
"யார் கேட்டான்ன. பதில் சொல்லுங்க."
"உங்களுக்கு விசுவாசம் இருக்கா?"
"இருக்கு."
"எனக்கு சந்தேகமாயிருக்கு.
விசுவாசம் இருந்தா இந்தக் கேள்வியைக் கேட்கமாட்டீங்க."
"என் கேள்விக்குப் பதில் உண்டா? இல்லையா? "
"நீங்களே சொல்லிருங்க."
"அப்போ கவனிச்சிக் கேளுங்க.
பைபிள் இறைவனின் வார்த்தை.
இதைத் தாய்த் திருச்சபை சொல்வதால்
அதை விசுவசித்து ஏற்றுக்கொள்கிறோம்.
நமது விசுவாசம் இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட திருச்சபை மேல்.
(அதைவிட்டுப் பிரிந்துபோன சபைமேல் அல்ல)"
"ஹலோ! "
"கொஞ்சம் பொறுங்க. சொல்ல வந்தத சொன்னபின் கேள்வி இருந்தா கேளுங்க.
இயேசுவால் நிறுவப்பட்ட,
அவரது அப்போஸ்தலர்களின் வழி வந்த
கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறோம்.
திருச்சபை பைபிளை இறைவனின் வார்த்தை என்று கூறுவதால்,
அதை விசுவசித்து ஏற்றுக்கொள்கிறோம்.
ஏதாவது கேள்வி?"
"பைபிள் சொல்வதால்
இயேசுவை ஏற்றுக்கொள்கிறீர்களா?
அப்போஸ்தலர்கள் சொல்வதால்
இயேசுவை ஏற்றுக்கொள்கிறீர்களா?"
"பெந்தகோஸ்தே நாளிலேயே அப்போஸ்தலர்களின் போதனை ஆரம்பமாகிவிட்டது.
நற்செய்தி நூல்கள் பின்னால்தான் எழுதப்பட்டன.
அப்போஸ்தலர்கள்தான் முதலில் இயேசுவைபப் பற்றிப் போதித்தார்கள்.
அப்போஸ்தலர்கள்வழித் திருச்சபைதான் நற்செய்தி நூல்களை உருவாக்கியது.
நற்செய்தி நூல்கள் திருச்சபையை உருவாக்கவில்லை."
"அப்போ பைபிளில் ஆதாரம் இல்லையா? "
"யார் சொன்னது?
எங்கிட்ட Money purse இருக்கு,
purseக்குள்ள money இருக்கு.
இப்போ money எங்க இருக்கு?
எங்கிட்ட இருக்கிற purseலதான.
அதேபோல,
இறைவார்த்தை பைபிள்ல இருக்கு.
பைபிள் கத்தோலிக்க திருச்சபைட்ட இருக்கு.
அப்போ, இறைவார்த்தை
திருச்சபையிடம் இருக்கிற
பைபிள்ல இருக்கு.
பைபிள்ல மட்டுல்ல,
திருச்சபையின் பாரம்பரியத்திலும் ஆதாரம் இருக்கு.
அதாவது,
திருச்சபை விசுவசிக்க வேண்டிய விசயங்களைச் சொல்லும்போது
பாரம்பரியமும்,பைபிளும் அதனிடம் இருப்பதால்
ஆதாரம் இல்லாமல் சொல்லாது."
"ஹலோ! நாங்கள் உங்கள் பாரம்பரிய ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம்."
"பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பைபிளையும் ஏற்க முடியாது.
ஏனெனில் பாரம்பரியம் பெற்றதுதான் பைபிள்.
ஆதாம் ஏவாள் பைபிளில் இருக்கிறார்கள்.
ஆனால் ஆதாம்ஏவாளிடம் பைபிள் இல்லையே.
மோசஸ்தான் ஆதியாகமத்தை எழுதினார்.
மோசஸ் வரை இருந்தது பாரம்பரியம்.
அதை பைபிள் ஆக்கினார் மோசஸ்."
கி. பி 350 ம் ஆண்டுதான் நற்செய்தி நூல்கள் தொகுக்கப்பட்டன.
அந்த ஆண்டுக்கு முன்
இயேசுவின் சீடர்களோ,
அவர்கட்குப் பின்வந்தவர்களோ
இயேசுவின் நற்செய்தியைப் போதிக்கும்போது
நம்ம நண்பரைப்போன்ற ஒருவர் எழுந்து,
"நீங்க சொன்னதுக்கு பைபிளில ஆதாரம் இருக்கா" கேட்டா,
பாவம், அவர் என்ன சொல்லியிருப்பார்?
"இயேசுதான் ஆதாரம். அவர் சொன்னதைத்தான் போதிக்கிறோம்." என்று சொல்லியிருப்பார்.
"இயேசு செய்தவை வேறு பல உண்டு.
அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால்,
எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது
என்று கருதுகிறேன்."
இதைச் சொன்னவர் நற்செய்தியாளர் அருளப்பர்.
அவர் எழுதாத விசயங்களை
கட்டாயம் வாய்மொழி வழியே போதித்திருப்பார்.
அவை எல்லாம் பாரம்பரியம் வழியே பிற்கால மக்களுக்கு வந்து சேர்ந்நதிருக்கும் அல்லவா?
இவை எல்லாம் ஆதாரம்
இல்லையா?
நமக்கு விசுவாசம் இருக்கு.
விசுவாசம் இல்லாலாதவர்கள்தான் ஆதாரங்களைத் தேடி அலைவார்கள்.
விசுவாசம் உள்ள நமக்குத்
திருச்சபையின்
பாரம்பரியமும் வேண்டும்,
பைபிளும் வேண்டும்.
மிக முக்கியமான உண்மை:
விசுவாசம் இறைவன் கொடுத்த வரம்.
Our Faith is a gift of God.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment