Saturday, July 21, 2018

செபிப்போம். விண்ணவனின் அருளைப் பெறுவோம்.

செபிப்போம்.

விண்ணவனின் அருளைப் பெறுவோம்.
************************---******

"வணக்கம், சார்."

"வாங்க. வணக்கம். நல்லா இருக்கீங்களா? "

"நல்லா இருக்கோம். ஆனால் .."

"ஆனால்?"

"ஒரு சின்ன சந்தேகம்."

"நீங்க நல்லா இருக்கீங்களாங்கிறதிலேயே சந்தேகமா? "

"அதில சந்தேகம் ஏதும் இல்லை.

நேரே விசயத்துக்கு வர்ரேன்.

இயேசு ஏன் 'கேளுங்கள், கொடுக்கப்படும்'ன்னு சொன்னாரு? 

நமக்கு என்ன தேவைன்னு அவருக்கு நம்மைவிட நல்லாகவே தெரியும்.

நாம் கேட்காமலேயே  அவர் நமக்குத் தருவார்.

பின் ஏன் கேட்கச் சொன்னார்?

'மரம் வச்சவரு தண்ணீ ஊற்றமாட்டாரு?'

பின் ஏன் நாம் செபிக்க வேண்டும்?"

"நான் ஒரு கேள்வி கேட்கலாமா?"

"முதலில் என் சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள். அப்புறம் கேள்வி கேளுங்கள்."

"என் கேள்விக்கூப் பதில் சொன்னால் உங்களுக்கு வேண்டிய பதில் தானே வந்துவிடும்."

"சரி. கேளுங்கள்."

"கேள்வி கேட்பதற்கு முன்னால்,

மற்றொரு உண்மையையும் சொல்லிவிடுகிறேன்.

கடவுள் நிறைவானவர்.

God is perfect.

தன்னிடமிருக்கும் அளவற்ற செல்வங்களை

நம்மோடு  பகிர்ந்து கொள்வாரேதவிர,

நம்மிடமிருந்து  எதையும் பெறவேண்டிய அவசியம்
அவருக்கு இல்லை.

சரி.

செபம் செய்யாமல் என்ன செய்ய உத்தேசம்?"

"என் வேலையைச் செய்வேன்.''

"என்ன வேலையை?''

''உழைப்பேன்னு சொன்னேன்.''

"நீங்க   ஏன் உழைக்கணும்?

'மரம் வச்சவரு தண்ணீ ஊற்றமாட்டாரு?' ''

''நான் சொன்னதையே சொல்லிக்காண்பிக்கிறீங்க?''

''ஆமா.

அம்மா சாப்பாடு ரெடி பண்ணிட்டாங்க.

Kitchen ல சாப்பாடு இருக்கு.

நீங்க எடுத்துச் சாப்பிடுவீங்களா? 

அம்மாவைக் கேட்பீங்களா? ''

''கேட்கத்தான் செய்வேன்.

அம்மாட்ட கேட்டு,  வாங்கி சாப்பிடுரதில தனி ருசி இருக்குங்க.

முதல்ல அம்மாவைக் கூப்பிடுரதிலேயே தனிச் சுகம் இருக்கு.

அம்மாவைக் கூப்பிடும்போதெல்லாம் அவங்களுக்கும் மகிழ்ச்சி.

அம்மாவையே சார்ந்து வாழ்வதிலுள்ள மகிழ்ச்சி, தனித்து வாழ்வதிலே கிடையாதுங்க.

நாம அள்ளிச் சாப்பிடும் உணவைவிட அம்மா ஊட்டிவிடும் உணவு ரொம்ப ருசியா இருக்குமுங்க.

ஒரு விசயம் தெரியுமா?

நான் ஏன் நற்கருணையை நாவினால் வாங்குகிறேன் தெரியுமா?

நாவில் வாங்கும்போது இயேசுவே தன்னை எனக்கு ஊட்டிவிடுவதாக உணர்கிறேன்.

அந்த உறவு நெருக்கம் கையில் வாங்குபவர்கட்கு இருக்காது.

சார், இப்போ ஒரு உண்மை புரிகிறது.

கடவுள் நம் அம்மா மாதிரி,  மாதிரி என்ன,  அம்மாவேதான்.

நமக்கு அம்மாவும் அவர்தான், அப்பாவும் அவர்தான்.

அவரை அப்பா,  தந்தையே என்று அழைப்பதற்காகவாவது அவரிடம் ஏதாவது கேட்கணும்போல இருக்கு.

இப்போ புரியுது, சார், நல்லா புரியுது.

நாம் இறைவனை அழைக்க வேண்டும்,

அவரோடு பேசவேண்டும்,

அந்த இன்பத்தை நாம் அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவே

'கேளுங்கள்' என்று இயேசு சொல்லியிருப்பார்.

சார், என்ன அமைதியாயிட்டீங்க!''

''உங்க 'அம்மா' வெள்ளத்தில நான் மூழ்கியே போயிட்டேன்.

நீங்க கேட்ட கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிட்டீங்க.

ஆனாலும் நானும் கொஞ்சம் பேசலாமா?''

''நீங்களே வாத்தியார். வாத்தியார் எப்படி பேசாம இருக்க முடியும்?''

''இறைவனது பண்புகளில
மூன்று பண்புகளை எடுத்துக்கொள்வோம்.

கடவுள் அன்பானவர்.
God is love.

கடவுள் நிறைவானவர்.
God is perfect.

கடவுள் மாறாதவர். 
God cannot change.

அன்புடன் தொடர்புடையது உறவு.

அன்பின்றி உறவில்லை.

உறவின்றி  அன்பில்லை.

பரிசுத்த தமதிருத்துவத்தின் மூன்று ஆட்களிடையே நிலவும் அன்பு  பரிபூரணமானது.

மனித அன்பு மற்றவர்கள் நம்மீது கொண்டுள்ள அன்பிற்கு ஏற்ப கூடும் அல்லது குறையும்.

ஆனால் இறைவனின் நிறைவான அன்பு கூடாது, குறையவும் செய்யாது.

Perfect love cannot beome more perfect or less perfect.

Perfection cannot change.

நாம் யாரையாவது அன்பு செய்தால்,   அவர் நம்மை அன்பு செய்தால் நமது அன்பு கூடும்.

அதாவது மற்றவர்கள் நம்மோடு நடந்து கொள்வதைப் பொறுத்து நம் அன்பு கூடும், குறையும்.

ஆனால், இறைவனது அன்பு நிறைவானதாக இருப்பதால்

அவரால் அன்பு செய்வதற்கென்றே படைக்கப்பட்ட நாம்

அவரை அன்பு செய்தாலும், செய்யாவிட்டாலும்

அவரது அன்பில் மாற்றம் இருக்காது.

நாம் இறைவனை அன்பு செய்தால் பயன்பெறப்போவது நாம்தான்.

அன்பு செய்யாவிட்டால் இழக்கப்போவதும் நாம்தான்.

நாம் எதைச் செய்தாலும் 'ஆண்டவரின்  அதிமிக மகிமைக்காகச்' செய்கிறோம்.

ஆண்டவரின்  அதிமிக மகிமைக்காக

நாம்  செய்யும் செயலால் பயன்பெறப்போவது
ஆண்டவர் அல்ல.

ஏனெனில், இறைவன் மகிமையிலும் நிறைவானவர்.

நாம் செய்யும் எந்தச் செயலாலும் இறைவனின் மகிமையைக் கூட்டமுடியாது.

இறைவனது மகிமைக்காக நாம் செய்யும்  செயல் நமக்கு மோட்ச மகிமையைப் பெற்றுத்தரும்.

இறைவன் பெயரால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலாலும் பயன்பெறப்போவது நாம்தான்.

நாம் ஏதாவது பொருள்  வேண்டி இறைவனிடம் செபித்தால்

அப்பொருள் நமக்குப் பயன்படுமானால் அதை நமக்குத் தருவார்.

பயனில்லா பொருளானால்  அதைத் தராமல் பயனுள்ள வேறொரு பொருளைத் தருவார்.

அதுபோக செபித்ததற்கான அருள்வரத்தையும் தருவார்.

கேட்கப்பட்ட பொருள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும்

கேட்டதற்காக,

இறைவன்மீது நம்பிக்கை வைத்ததற்காக

இறைவனைச் சார்ந்து இருந்தமைக்காக பலன் கிடைக்கும்.

இறைவனுக்காக நாம் செலவழிக்கும் ஒவ்வொரு வினாடிக்கும் விண்ணகத்தில் பலன் உண்டு.

செபிக்கும்போது நமது உள்ளம் இறைவனிடம் இருக்கிறது.

ஆகவே செபிப்போம்.

விண்ணவனின் அருளைப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment