Wednesday, July 18, 2018

யாருக்காக வாழ்கிறோம்?


யாருக்காக வாழ்கிறோம்?
********************************

நாம் கத்தோலிக்கர்கள்.

இயேசுவால் நிருவப்பட்ட ஒரே திருச்சபையின் செல்லப் பிள்ளைகள்.

நமக்கு வெளியிலிருந்து ஆயிரம் தாக்குதல்கள்.

உள்ளிருந்தே ஆயிரம் தாக்குதல்கள்.

சாத்தான்   யாரை விழுங்கலாம் என்று

நம்மை வலம் வந்து கொண்டிருக்கிறது.  

இவ்வளவுக்கும் மத்தியில் நாம் தொடர்ந்து கத்தோலிக்கத் திருமறையில் நீடிக்கிறோம் என்றால் அதற்கு என்ன காரணம்?

'இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளுfம் உங்களோடு இருக்கிறேன்."
(மத். 28:20) என்று இயேசு அளித்த வாக்குறுதிதான் காரணம்.

வாக்குறுதி கொடுத்தது மட்டுமல்ல, அதைக் காப்பாற்றிவருகிறார்.

நம்முடனே, நமக்காக, திவ்ய நற்கருணைப் பேழையில் காத்திருப்பதோடு,

நமது ஆன்மீக உணவாக வந்து

நம்மை ஆன்மீக ரீதியாக வாழவைத்துக்  கொண்டிருக்கிறார்.

நமது முதல் பெற்றோருக்கு சாத்தான் பொய்யான வாக்குறுதி ஒன்றைத் தந்து ஏமாற்றியது.

"பாம்பு பெண்ணை நோக்கி: நீங்கள் உண்மையில் சாகவே மாட்டீர்கள்:"

என்று பொய் சொல்லி விலக்கப்பட்ட கனியைத் தின்ன வைத்தது.

சிலுவை மரத்தின்  கனியாகிய இயேசு,

"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு.

இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான் "(அரு.6:15)

என்ற மெய்யான வாக்குறுதி ,
கொடுத்து

சாத்தானை வென்றார்.

"நீங்கள் எப்போது அக்கனியைத் தின்பீர்களோ அந்நேரமே உங்கள் கண்கள் திறக்கப்படும். அதனால் நீங்கள் தெய்வங்கள் போல்" ஆவீர்கள்

என்று சாத்தான் பொய் சொல்லி ஏமாற்றியது.

அப்பொய்யை முறியடிக்க இயேசு

"என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்."

அதாவது, 'தெய்வமாகிய நான் உங்களில் வாழ்வேன்,  நீங்கள் என்னில் வாழ்வீர்கள்'

என உறுதியளித்தார்.

நற்கருணை உணவை உண்ட உடனேயே இறைவன் நம்மோடு ஒன்றித்துவிடுகிறார்,

நாம் அவரோடு ஒன்றித்துவிடுகிறோம்.

இது மோட்சவாழ்வின் முன்சுவை.

Pretaste of Heaven.

தனது சிலுவை மரணத்தினால் நமது ஆன்மீக மரணத்தை வென்ற

இயேசுவின் அருளால்தான் இவ்வளவு

இடைஞ்சல்களுக்கு மத்தியிலும்

திருமறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வெளியிலிருந்து நம்மீது சகதியை வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

நம்மிடையே வாழும்  நம்மவரில்கூட சில நவீனவாதிகள் மாற்றங்கள் என்ற பெயரில் ஏமாற்றங்களை வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நாம் கத்தோலிக்கர்களாய் இருப்பது இவர்களுக்காக அல்ல,

நம்மிடையே, நமக்காக வாழும் இயேசுவுக்காக மட்டும்தான்.

இயேசுவுக்காக வாழ்வோம்.

இயேசுவுக்காக மரிப்போம்.

மரணத்தை வென்றவர்

நித்திய வாழ்வைத் தருவார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment