Thursday, July 19, 2018

நாம் திருக்குடும்பத்தின் பிள்ளைகள்.


நமது குடும்பம் திருக்குடும்பம்.
******-**************************

மூன்று ஆண்டுகள் வாழ்ந்த பொதுவாழ்வின்போது

மக்களிடையே நிறைய பேசி நற்செய்தியை அறிவித்த இயேசு,

தம்மையே நமக்காக பலியாக்கியபோது சொன்ன கடைசி வாக்கியம்,

"எல்லாம் நிறைவேறிற்று."

அதற்கு முந்தைய வாக்கியம்

"இதோ! உன் தாய்."

இயேசுவின் கூற்றுப்படி,

அவரது அன்னையை நமது அன்னையாகத் தந்த பிறகுதான்

அவரது பணி நிறைவேறிற்று.

   இயேசு  மரியாளின் வயிற்றில் கருத்தரித்தபோது ஆரம்பித்த பணியை,

அவளை நம் அன்னையாகத் தந்துவிட்டு முடிக்கிறார்.

ஆக இயேசுவின் நற்செய்திப் பணியின் துவக்கமும், முடிவும் அன்னை மரியாள்தான்.

இயேசு நிருவிய கத்தோலிக்கத் திருச்சபையின்

நிருவாகப் பொறுப்பை  இராயப்பரிடம் ஒப்படைத்திருந்தாலும்,

அதன் குடும்பத் தலைவி அன்னை மரியாள்தான்.

அதாவது,

திருச்சபை என்ற

திருக்குடும்பத்தைச் சேர்ந்த
நமக்கு

தாய் அன்னை மரியாள்தான்.

இயேசு நமது இரட்சகர் மட்டுமல்ல,

நமது சகோதரர்.

"ஆகவே பறவைநாகம் பெண்மீது சினங்கொண்டு,

எஞ்சிய அவள் பிள்ளைகளோடு போர் தொடுக்கச் சென்றது.

அவர்கள் கடவுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து

இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்."
(திருவெளி.12:17)

திருவெளிப்பாட்டின் இவ்வசனப்படி

சாத்தானால் மரியாளை வெல்ல முடியவில்லை.

ஆகவே அவளுடைய பிள்ளைகளைத் தாக்க ஆரம்பித்தது.

யார் அவளது பிள்ளைகள்?

கடவுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து

இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட நாம்தான் அவளுடைய பிள்ளைகள்.

அதாவது,

கடவுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து

இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டால்தான்

அவளுடைய பிள்ளைகள் என்று உரிமை கொண்டாடலாம்.

வெற்றிவாகை சூடி விண்ணகத்தில் வாழ்பவர்களும்,

உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள உத்தரிக்கிற ஆன்மாக்களும்

நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

ஏனெனில்,  எல்லோரும் கிறிஸ்துவில் ஒன்றித்திருக்கிறோம்.

மரியாள் நமது தாய் மட்டுமல்ல,

மரியாள் விண்ணக, மண்ணக அரசியுங்கூட.

தாயைப் போல பிள்ளை என்கிறோம்.

நாம் எப்படி இருக்கிறோம்?

தாயைப்போல அவளுடைய எல்லா பண்புகளையும் நாமும் கொண்டிருந்தால்தான் அவளுடைய பிள்ளைகள் என்று பெருமை கொண்டாடலாம்.

நமது அன்னையைப்போல

நாம் கற்பு நெறி தவராமல்  வாழவேண்டும்,

இறைவன் சித்தத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழவேண்டும்,

இயேசுவின் சிலுவைப் பாதையில் நடக்கவேண்டும்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் நம் அன்னையைக் காணவேண்டும்.

அருள்நிறை அன்னைமரியே வாழ்க.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment