Wednesday, May 8, 2019

தோமையார் திரும்பவும் வருவாரா?

தோமையார் திரும்பவும் வருவாரா?
******************************

இன்று போல் போக்குவரத்து வசதிகள்  இல்லாத காலக்கட்டத்தில்

புனித தோமையார் இயேசுவின் நற்செய்தியைப் போதிப்பதற்கென்றே இந்தியாவிற்கு வந்தார்.

இவ்வளவுக்கும் இந்திய மொழி எதுவும் அவருக்குத் தெரியாது.

நற்செய்தியை அறிவிப்பதற்கென்றே மொழி கற்றார், மொழி அறிவுக்காக அல்ல.

அதே போல்தான் சவேரியார், அருளானந்தர், வீரமாமுனிவர் போன்றவகளும்.

அவர்கள் இங்கு வந்தது ஏற்கனவே இங்கு இருந்த கிறிஸ்தவர்களுக்குப் பங்குச் சாமியாராக அல்ல.

தோமையார் வரும்போது இங்கே கிறிஸ்தவர்களே இல்லை.

அவர்தான் கிறிஸ்துவை இந்தியாவுக்குக் கொண்டுவந்தார்.

அவர் எந்தக்கல்லூரியிலும் Degree எதுவும் வாங்கியிருக்கவில்லை.

Theology, philosophy யிலும் பட்டம் பெறவில்லை.

அவரது ஒரே ஆசிரியர் கிறிஸ்து.

தோமையாரும் சரி, அவருக்குப் பின்வந்த வேத போதகர்களும் சரி கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அவரை அறிவித்தார்கள்.

மனமாறியபின் அவர்களை கிறிஸ்தவத்தில் உறுதிப்படுத்தினார்கள்.

பள்ளிக்கூடங்களை நிருவியதே கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்காகத்தான்,

அரசுத் தேர்வுகளில், Centum result எடுத்துக்  காண்பிப்பதற்காக அல்ல!

ஆனால் இன்று,

நாம்

எத்தனை பிறமதத்தவர்களுக்கு
நற்செய்தியை அறிவிக்கிறோம்?

கிறிஸ்துவிடம் அனுமதி பெற்றுக்கொண்டு தோமையார் திரும்பவும் இந்தியாவுக்கு வந்தால் நலமாக இருக்கும்.

வருவாரா?

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment