Saturday, May 4, 2019

உள்ளத்தில் உறையும் உறவுகள்.

உள்ளத்தில் உறையும் உறவுகள்.
*********************************

"ஏங்க, ரொம்ப கவலையாய் இருக்கீங்க? இன்னும் Tea வரலியேங்கிற கவலையா? கொஞ்சம் வேலையாய் இருந்து விட்டேன். ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் பொறுங்கள்.
Special tea யோடு வருகிறேன்."

"இங்கே வா. teaயெல்லாம் ஒன்றும் வேண்டாம். கொஞ்சம் பேசணும், உட்கார்."

"என்னங்க ஒரு மாதிரி பேசரீங்க?"

"நம்மை நேசிக்கிறவர்கள்,

நம்மால் நேசிக்கப்படுகிறவர்கள்,

அன்புக் கயிற்றால் இறுக்கப் பிணைக்கப்  பட்டிருப்பவர்கள்

ஆகியோரைத் திடீரென்று மரணம் அள்ளிக்கொண்டு போய்விடுகிறது.

நம்மால் அவர்களை மறக்கமுடியவில்லை.

அன்பு அழியாதுன்னு சொல்வார்கள்.

அன்பர்கள்? "

"இங்கே பாருங்கள், அன்பர்ளும் அழியமாட்டார்கள்.

மரணத்தினால் அன்பர்களையும்,  அவர்களிடையே நிலவும் அன்பையும் பிரிக்க முடியாது.

நமக்குப் பிரியமானவர்கள் மரணத்தினால் நம்மை விட்டுப் பிரிந்துசென்றாலும்

விண்ணகத்திலும் நம்மை அன்பு செய்துகொண்டுதான் இருப்பார்கள்.

விண்ணகம் அன்பின் (கடவுளின்) இருப்பிடம்.

தண்ணீருக்குள் இருப்பவர்களால் நனையாமல் இருக்கமுடியுமா?

அன்பகத்தில்  இருப்பவர்களால் நம்மை அன்பு செய்யாமல் இருக்க முடியுமா?

அவர்கள் விண்ணகத்தில் இருக்கிறார்கள் என்றாலே

நம்மோடு, நமக்குள் இருக்கிறார்கள்  என்றுதான் பொருள்."

"எப்படி?"

"விண்ணகத்தில் இருக்கிறவர்கள் கடவுளுக்குள் இருக்கிறார்கள்.

கடவுள் நம்முள் இருக்கிறார்.

ஆகவே,

அவர்களும் நம்முள், நமது அரவணைப்பில்தான் இருக்கிறார்கள்.

நமது உள்ளத்தில்,  நமது உணர்வுகளோடு கலந்திருப்பதால்,

நாம் அவர்களோடு நம் எண்ணங்களால் பேசலாம்.

நமக்குள் அவர்கள் இருப்பதை உணரும்போது

நாமும் விண்ணக வாழ்வின் முன்சுவையை (Pretaste) அனுபவிக்கிறோம்.

நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அவர்கள் நமக்கு உதவுவதை உணர்கிறோம்.

ஒவ்வொரு வினாடியும் அவர்கள் இறைவனிடம் நமக்காகப் பரிந்து பேசுவதை உணர்கிறோம்.

இறைவன் நமது தந்தையாகையால் நாமே அவருடன் நேரடியாகப் பேசுகிறோம்.

"விண்ணில் வாழும் எங்கள் தந்தையே" என்று அவரை அழைத்து அவரோடு பேச

இறைமகனே நமக்குக் கற்றுத்தந்திருக்கிறார்.

அதோடு நமக்குப் பிரியமானவர்களும் நமக்காக அவரோடு பேசுகின்றார்கள்.

இதனால் அவரோடு நமக்குள்ள குடும்ப (தந்தை மகன்)  உறவு நெருக்கமாகிறது.

அவர்கள் நம்மைவிட இறைவனோடு அதிக நெருக்கம் உள்ளவர்களாக இருப்பதால்,

அந்நெருக்கத்தை

அவர்களது அன்பர்களாகிய நமக்காகப்பயன்டுத்தி

நமக்கு வேண்டிய ஆன்ம, சரீர நலன்களைப் பெற்றுத்தருகிறார்கள்.

இவ்வுலக வாழ்வைவிட்டுப் பிரிந்து சென்றாலும் ஆன்மீகரீதியில் அவர்கள் நம்மோடு இருப்பதால்,

அவர்களோடு நமது ஆன்மீக வாழ்வுபற்றி உரையாடி,

நமக்கான ஆன்மீக நலன்களை இறைவனிடமிருந்து பெற்றுத்தர அவர்களிடம் நாம் கேட்கவேண்டும்.

திருச்சபையால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல,

இறைவனோடு விண்ணகத்தில் வாழும் நமது அன்புக்கு உரியவர்களும் புனிதர்கள்தான்.

விண்ணில் இறைவனோடு வாழும் அனைவரும் புனிதர்கள்தான்.

One analogy :

மிக ஆழமான பள்ளத்தில் நிறையபேர் விழுந்துகிடக்கிறார்கள்.

மேலே தன்தரையிலிருந்து சிலர் பலமான வடத்தை மேலேயிருந்து கீழே தொங்கவிட்டு அதன் மூலம் ஒவ்வொருவராக மேலே இழுத்துக் காப்பாற்றுகிறார்கள்.

காப்பாற்றப்பட்டவர்கள் 'நாம் பிழைத்தது போதும்' என்று சென்றுவிடாமல்,

காப்பாற்றிக் கொண்டிருக்கும் மற்றவர்களோடு இணைந்து,

கயிற்றை இழுத்து கீழிருப்பவர்களைக் காப்பாற்றுகிறார்கள்.

இப்பணி எல்லோரும் காப்பாற்றப்படும் வரை தொடரும்.

அதேபோல,

உலகமாகிய மாபெரும் பள்ளத்திலிருந்து மோட்சமாகிய தன்தரைக்குச் செல்லக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் அன்பு  செய்யும் ஒருவர் ஒரு நாள் நம்மைவிட்டுப் பிரிந்து மோட்சத்திற்குச் சென்றுவிட்டார்.

அங்கிருந்துகொண்டு நாமும் மோட்சம் செல்ல உதவிக்கொண்டிருப்பார்.

மோட்சம் அன்பின் இருப்பிடம்.

அன்பின் ஒரே பணி அன்பு செய்வதுதான்.

அன்பு செய்வது வெறும் உணர்வினால் மட்டுமல்ல, செயலளவிலும்கூட.

மோட்சவாசிகள் இறைவனையும், அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் அன்புசெய்கின்னர்.

உலகில் விண்ணகப் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் நம்மை அன்பு செய்வதோடு,

நமது விண்ணணகப் பயணத்தில் உதவியும் செய்கின்றனர்.

நமக்கு உதவ சதா இறைவனிடம் வேண்டுகின்றனர்.

அவர்கள் நமக்கு முன்னால் இறைவனிடம்  சென்றதே

நாமும் இறைவனை அடைய

தங்கள் செபத்தின் மூலம்

நமக்கு உதவுவதற்காகத்தான்.

ஆகவே நாம் நம் உள்ளத்தில் உறையும் உறவுகளோடு உறவாடுவோம்.

அவர்களின் உதவியோடு உன்னத தேவனின் பாதம் சேருவோம்.

உறவுகள் உலகைவிட்டுப் போயிருக்கலாம்,

ஆனால் நம்மை  விட்டுப் போகவில்லை.

ஆகையால் கவலை வேண்டாம்.

அவர்கள் நம்மோடுதான் இருக்கிறார்கள்.

தங்கள் அன்புடன் இறைவன் அன்பையும் கலந்து நம்மீது பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

அன்புக்கு முடிவில்லை."

"என் செல்வம் என்றால் என் செல்வம்தான்!

இப்போ Tea கொண்டு வா."

"இதோ வருகிறேன்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment