வார்த்தையை வாழ்வாக்குவோம்
***********************************
உடல் பலம் பெற சத்தான உணவு சாப்பிடவேண்டும்.
சாப்பிட்ட உணவு சீரணமாகி, அதிலுள்ள சத்து நமது உடலோடு கலக்கவேண்டும்.
சீரணமாகாவிட்டால் சத்து உடலோடு கலக்காதது மட்டுமல்ல வயிற்றுவலிதான் ஏற்படும்.
சத்தான உணவைச் சாப்பிட்டதனால் எந்த பயனும் ஏற்படாதது மட்டுமல்ல எதிர்விளைவுகள் ஏற்படும்.
வார்த்தையான இறைமகனின் வார்த்தை நமது ஆன்மீக உணவு.
பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும்போது இறைவனின் வார்த்தையைத்தான் வாசிக்கிறோம்.
வேதாகமத்தை வாசிப்பதற்கும், மற்ற புத்தகங்களை வாசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
மற்ற நூல்களை அறிவை வளர்ப்பதற்காகவோ அல்லது வெறும் பொழுது போக்கிற்காகதான் வாசிப்போம்.
ஆனால் வேதாகமத்தை வாசிப்பதன் நோக்கம் அதை நமது வாழ்வாக்குவது.
வேதாகம அறிவு வளர்வதும் உண்மைதான்.
ஆனால் வார்த்தை சீரணமாகாமல் அதாவது நமது வாழ்வாக மாறாதிருந்தால்
சீரணமாகாத இவ்வுலக உணவினால் நமது உடலுக்கு ஏற்பட்ட அதைகதி
நமது ஆன்மாவிற்கும் ஏற்படும்.
அதாவது வாழ்வாகாத அறிவு நிறைய சேர்ந்து கர்வத்தில் முடியும்.
வாழ்வாகும் வார்த்தையால் தலையாய புண்ணியமாகிய தாழ்ச்சி ஏற்படும்.
லூசிபரது அறிவு கர்வத்தில்(Pride) முடிந்ததுபோல
வாழ்வாகாத வேதாகம அறிவும் கர்வத்தில், தலைக்கனத்திதான் முடியும்.
ஆகவே
வார்த்தையானவரின் வார்த்தையை
வாசிப்போம்,
யோசிப்போம்,
விசுவசிப்போம்,
வாழ்வாக்குவோம்,
நிலைவாழ்வு பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment