பார்த்தால் மட்டும் போதுமா?
********************************
"ஏங்க! Teaயைக் குடிக்காமல் கையில வச்சி அழகு பார்த்துக் கிட்டிருக்கீங்க! "
"Teaக்குள்ள உன் முகம் தெரியுதான்னு பார்த்துக்கிட்டிருக்கேன்! "
"டீ மட்டும்தான் தெரியுது!"
"சினிமாவில மட்டும்தான் காதலிக்கிறவங்க முகம் தெரியும். நாம் வாழ்கிறது நிஜ வாழ்க்கை!
Graphicsல்லாம் போட முடியாது."
"நிஜ வாழ்க்கையிலேயும் முடியும். அது அவங்கவங்களுடைய அன்பின் ஆழத்தைப் பொறுத்தது.
இறைவன் படைத்த உலகைப் பார்க்கும்போது
உனக்கு உலகம் தெரிகிறதா?
அல்லது
இறைவன் தெரிகிறாறா?"
"நான் கவிஞி கிடையாது.
உலகைப் பார்க்கும்போது இறைவன் தெரியவேண்டும். அந்த அளவிற்கு பக்தி வளரவேண்டும்.
இங்க பாருங்க."
"உன்னைத்தானடி பார்த்துக் கிட்டிருக்கேன்"
."இல்ல டீயைப் பார்த்துக் கொண்டு இருக்கீங்க."
.."ஆமா பொண்டாட்டீய!"
."உலகைப் பார்க்கும்போது இறைவன் தெரியவேண்டும்.
அதாவது விசுவாசக் கண்ணுக்குத் தெரியவேண்டும்.
நமது விசுவாசத்தின் ஆழத்தைப் பொறுத்து இறைவனை உணரும்
தன்மையும் இருக்கும்."
.."அடியே, பேச்சோடு பேச்சாய் வினைச்சொல்லை மாற்றிவிட்டாய்!
முதலில் 'தெரிய' என்றாய்.
அப்புறம் 'உணர' என்றாய்.
எது கரெக்ட்?"
."இரண்டுமே கரெக்ட்தான்
உங்களிடம் உள்ள உங்கள் புகைப்படங்களில் எல்லாவற்றிலும், ஒரே மாதிரியா இருக்கீங்க?
ஒரு படத்தில குழந்தையாய் இருக்கீங்க.
ஒரு படத்தில பையனா இருக்கீங்க.
ஒரு படத்தில வாலிபனா இருக்கீங்க.
ஒரு படத்தில கிழவனா இருக்கீங்க.
இப்போ புகைப்படம் எடுத்தால் படுகிழமா இருப்பீங்க!
ஒவ்வொன்றும் ஒரு வளர்ச்சி நிலை.(Stage in growth).
முதல் நிலையில் பார்க்கிறோம். இரண்டாம் நிலையில் உணர்கிறோம்.
தண்ணீரைப் பார்ப்பதையும்,
அதைக் கோதி நம்மேல் ஊற்றும்பொது உணர்வதையும்
ஒப்பிட்டுப் பார்த்தால் நிலை வேறுபாடு புரியும்.
கடவுளைப் பற்றிக் கவலைப் படாதவன் ஒரு அழகான மலரைக் கண்டால் 'மலரின் அழகை' ரசிப்பான்.
கடவுள் பக்தியுள்ளவன் மலரின் அழகைப் படைத்த இறைவனை நினைத்து அவரது அழகை ரசிக்கிறான்.
உண்மையான ரசனை கடவுளை உணரும்போதுதான் கிடைக்கும்.
உணரவேண்டுமானால் உணரப்பட வேண்டிய பொருளை நாம் தொட (Touch) வேண்டும்.
குழந்தை அம்மாவைப் பார்ப்பதோடு திருப்தி அடைவதில்லை.
இரண்டு கரங்களையும் மேல் நோக்கி நீட்டுகிறது, தாய் தன்னை அள்ளி எடுத்து அரவணைக்க வேண்டுமென்று.
தாயின் அரவணைப்பில் கிடைக்கும் இன்பம் வேறெதிலும் கிடைக்காது.
நாமும் இறைவனை விசுவாசக் கண்ணால் பார்த்தால் மட்டும் போதாது.
இறைவனின் அரவணைப்பிற்குள் சென்று, அவர் நம்மைத் தொடுவதையும், நாம் அவரைத் தொடுவதையும் உணரவேண்டும்.
கடலுக்குள் நீந்தி விளையாடும் மீனை நினைத்துப் பாருங்கள்.
மீனைச் சுற்றிலும் நீர், மீனுக்குள்ளும்நீர்.
இறைவன் என்னும் கடலுக்குள் வாழும் நம்மைச் சுற்றிலும் இறைவன், நமக்குள்ளும் இறைவன்.
இந்த உண்மைமையைத் தியானித்தால், இறைவன் நம்மைத் தொடுவது மட்டுமல்ல, தனது அரவணைப்பில் வைத்திருக்கிறார் என்பதையும் உணர்வோம்."
.."நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், புனிதர்களுக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும்.
நம்மைப்போன்ற சாதாரண மக்களுக்கு வார்த்தை அளவில் புரிகிறது.
செயலளவில்?
ஒரு 'அருள் நிறைந்த' மந்திரம் சொல்வதற்குள் நமது மனது அமெரிக்காவை ஒரு முறைச் சுற்றி விட்டு வந்துவிடுகிறது.
மனதை இறைவனிடம் ஒருநிலைப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமா? "
." எல்லோருடைய பக்தி நிலையும் ஒரே அளவு இருக்காது.
பள்ளிக்கூடத்தில் படிக்கும் எல்லா மாணவர்களுமா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்கிறார்கள்?
நம்மால் இயன்ற அளவு இறைவனின் சந்நிதியில் வாழ்வோம்.
அலுவலகத்தில் பணி புரியும்போது நாம் அலுவலகத்தில் இருக்கிறோம் என்ற ஏண்ணம் இருக்கிறது அல்லவா?
அதேபோன்று நாம் இறைவனின் சந்நிதியில் இருக்கிறோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
பக்தியின் அளவு கூடும்போது இறைவனோடு நெருங்கி வாழும் உணர்வு அதிகம் ஆகும்.
பள்ளியில் சேர்ந்தவுடனே Ph.D ஆக முடியுமா?
L. K. G தான் ஆகமுடிம்.
ஆனால் L. K. G யில் சேர்ந்தால்தான், Ph.D ஆக முடியும்."
ஆன்மீகத்தில் வளர்ச்சி.
1.இறைவனைத் தேடுவோம்.
2.இறைவனைப் பார்ப்போம்.
3.இறைவனை உணர்வோம்.
4.இறைவனோடு இணைவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment