Saturday, May 18, 2019

தற்செயலா? அப்படி ஒன்றும் இல்லை.

தற்செயலா? அப்படி ஒன்றும் இல்லை.

*************-******---********

"ஏங்க, கதையக் கேட்டீங்களா?"

.."கேட்கலிய! "

."நீங்க கேட்கலங்கிறது எனக்குத் தெரியும். இப்போதானே சொல்லப்போறேன்."

.."பிறகு எதுக்கடி 'கேட்டீங்களா'ன்னு ஒரு கேள்வி?"

."அது கேள்வி இல்ல. கேளுங்கன்னு அர்த்தம்.

காலையில எங்க போகிறதா சொல்லிட்டுப் போனேன்?"

.."அண்ணாச்சிமார் வீட்டுக்குப் போய்ட்டு வரப்போறதா சொல்லிட்டுப் போன."

."ஆனா அங்க போகல."

.."நல்லதா போச்சி."

."ஏன் அப்படிச் சொல்றீங்க?  உங்ககிட்ட சொல்லிட்டுத்தானே போனேன்."

.."நான் ஒண்ணும் தப்பாச் சொல்லலியே!  'எல்லாம் நன்மைக்கே'ன்னு  பெரியவங்க சொல்லிருக்காங்க."

."கரெக்டா சொன்னீங்க. 

நான் Bus standக்குள்ள நுழையும்போது ஆவுடையானூர் Bus வெளியேறிக்    கொண்டிருந்தது.

கையைக் காட்டினேன்.

Bus நிக்கல.

நான் ஒரு நிமிசம் பிந்திப் போனதினால

Busஅ Miss பண்ணிட்டேன்."

.."அதுவும் நன்மைக்கே."

."கரெக்ட்ங்க. எப்படிக் கண்டுபிடிச்சீங்க?"

.."இத நான் கண்டுபிடிக்கல.

கடவுள் நல்லவர்.

சர்வத்தையும் வழிநடத்துபவர் அவர்.

அவர் அனுமதி இன்றி எதுவும் நடக்காது.

நல்லவர் அனுமதியோடு நடக்கும் எல்லாம் நன்மைக்கே!"

."பாவம் கூடவா?"

.."ஆமா."

.."ஹலோ Husband!  Sin is an evil!
பாவம் தீமையானது.

ஒவ்வொரு நாளும் எத்தனை முறை தந்தையை நோக்கி,

'தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்'ன்னு  செபம் சொல்றீங்க.

அதுக்கு

'பாவத்திலிருந்து எங்களை இரட்சித்தருளும்'னுதான் அர்த்தம்.

பாவம் நல்லதுன்னு சொன்னா பாவம்."

.."ஹலோ Wife!

பாவம் நல்லதுன்னு நான் சொல்லவே இல்லையே!

Sin is an evil. அது கடவுளுக்கும் தெரியும்.

பாவம் மட்டும்தான் தீமையானது! 

'எல்லாம் நன்மைக்கே!'ன்னுதான் சொன்னேன்.

அதாவது தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்க கடவுளால் முடியும்.

God can bring out greater good from evil! "

."அதென்ன greater good?"

.."முந்திய நிலையைவிட

பிந்திய நிலை  சிறப்பாய் இருந்தால்,

முந்திய நிலை Good, 

பிந்திய நிலை greater good.

நமது முதல் முதல் பெற்றோர் பாவம் செய்யுமுன் அவர்களது நிலை சிறப்பானது.(Good)

அவர்கள் பாவம் செய்தவுடன் இறைவனின் உறவை இழந்தார்கள்.

ஆனால் அளவற்ற அன்புள்ள தேவன் அவர்களைக் கைவிடவில்லை.

பாவப் பரிகாரம் செய்வதற்காக

பாவம் செய்த மனுக்குலத்திலேயே இறைவன் மனிதனாய்ப் பிறக்கிறார்.

இறைமகனையே தன்மகனாகப்  (மனுமகனாகப்)பெறும் பாக்கியத்தை மனிதன் பெறுகிறான்.

இப்போது அவன் நிலை greater good."

."புரிகிறது மாதிரி தெரிகிறது, புரியாதது மாதிரியும் தெரிகிறது.

goodனது greater good ஆக பாவம் உதவினால் அது நல்லது என்கிறீர்களா?"

." பாவம்  தீமைதான்.

அதிலிருந்து இறைவன் நன்மையை வரவழைக்கிறார்.

ஒரு உதாரணம் கூறுகிறேன்.

ஒரு பையன் சைக்கிளில் போகும்போது விபத்து நடந்து சாகும் தருவாயில் இருக்கிறான்.

ஒரு பெரியவர் அவனைக் காப்பாற்றுகிறார்.
அவன் நல்ல சுகம் அடைகிறான்.

அவனை அவருக்குப் பிடித்து விட்டது.

தன்  மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்.

இப்போ கவனி. விபத்து நல்லதா? கெட்டதா? "

."கெட்டது."

."இப்ப கூர்ந்து கவனி.

அந்தப் பெரியவர்

கெட்டதாகிய விபத்தை,

அந்தப் பையனின் திருமணமாகிய

நல்ல காரியத்துக்குப் பயன்டுத்திக்கொண்டார்.

ஆனால் விபத்து கெட்டதுதான்.

அதேபோல்தான் பாவம் தீமையானதுதான்.

நமது நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தி கடவுளுக்கு எதிராக நாம் செய்யும் செயல்.

பாவம் கடவுளுக்குப் பிடிக்காது, ஆயினும் அவரே தந்த சுதந்திரத்தில் அவர் குறுக்கிடுவதில்லை.

ஆகவே நாம் பாவம் செய்யும்போது அவர் தடுப்பதில்லை,  அதைத்தான் அனுமதிக்கிறார் என்கிறோம்.

கடவுளுக்கு தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க முடியும்.

தனது  அளவுகடந்த ஞானத்தினால் நாம் நமது சுதந்திரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துவோம் என்பதை நித்தியகாலமாக முன்னறிந்த கடவுள்

அதன் அடிப்படையிலும்,

தனது சித்தத்தின் அடிப்படையிலும்

ஒவ்வொருவருடைய  வாழ்வுக்குமான நித்திய திட்டத்தை வகுக்கிறார்.

என்றும் மாறாத கடவுள் நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் தன் திட்டப்படியே செயலாற்றுவதால்

நம் வாழ்வின் எந்த நிகழ்ச்சியும் தற்செயலாக நடைபெறுவதில்லை.

'தற்செயலா உன்னைப் பார்த்தேன், அல்லது நான் நான் நினைத்தது நடந்திருக்காது',

'தற்செயலா வீட்டிலிருந்து வெளியே வந்தேன், வெளியே வந்த மறுவினாடி வீட்டிற்குள் விபத்து, நல்ல வேளை பிழைத்தேன்',

'தற்செயலா என் நண்பரைப் பார்த்தேன்,அவர் உதவியால் கல்லூரியில் Seat கிடைத்தது',

இதே மாதிரியான தற்செயல் நிகழ்ச்சிகள்பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம்.

ஆனால் எதுவும் தற்செயல் கிடையாது, எல்லாம் இறைவனது செயல்.

ஆகவே என்ன நடந்தாலும் இறைவனுக்கு நன்றிகூற வேண்டும்.

ஆமா, ஆவுடையானூர் பஸ்ஸை விட்டதினாலே என்ன நடந்தது? "

."பஸ்ஸை விட்டு விட்டு மேற்கே பார்த்தேன்.

ஆவுடையானூரிலிருந்து வந்த பஸ்ஸிலிருந்து மூவரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்."

.."வீட்டுக்குக் கூட்டிவரல? "

." கடைக்குப் போய்ட்டு வருகிறோம் என்றார்கள்.

அதோ பாருங்கள், வந்து விட்டார்கள்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment